சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

NATO begins military manoeuvres in Black Sea

கருங்கடலில் நேட்டோ இராணுவ பயிற்சிகளைத் தொடங்குகிறது

By Johannes Stern
10 March 2015

Use this version to printSend feedback

நேட்டோவின் Standing Maritime Group 2 (SNMG 2) திங்களன்று கருங்கடலில் பயிற்சிகளைத் தொடங்கியது. அமெரிக்க கடற்படை போர்கப்பல் USS விக்ஸ்பேர்க் தலைமையில் பொதுவான நீர்மூழ்கி கப்பல்-எதிர்ப்பு ஒத்திகைகள் மற்றும் போர்விமான-எதிர்ப்பு ஒத்திகைகளும் அதில் உள்ளடங்கும்.

நேட்டோ ஆதாரங்களின்படி, பங்கெடுக்கும் ஏனைய கப்பல்களில் கனேடிய, துருக்கிய மற்றும் ரோமானிய சிறு போர் வேவுகலங்களும் மற்றும் ஜேர்மனியின் எண்ணெய் நிரப்பும் கப்பல் ஸ்பெஸ்சார்டும் (Spessart) உள்ளடங்கும். "முக்கிய கடல்களின் மீது கட்டுப்பாடு, நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு மற்றும் வான்வழி போர் எதிர்ப்புமுறை ஆகியவற்றிற்கான தகைமைகளைக் கொண்ட ஒரு சாத்தியமான நேட்டோ கடற்படையாக" SNMG 2 குழுவை நேட்டோ வலைத் தளம் ஒன்று விவரிக்கிறது.

அந்த ஒத்திகைகள் தொடங்குவதற்கு முன்னதாக, அக்குழுவின் தளபதி அமெரிக்க ரியர் அட்மிரல் பிராட் வில்லியம்சன் கூறுகையில், “கருங்கடலில் எங்களது கூட்டாளிகளுடன் நாங்கள் நடத்தவிருக்கும் பயிற்சிகளும் ஒத்திகைகளும், கூட்டு பாதுகாப்பிற்கான நேட்டோவினது கடமைப்பாடுகளைப் பூர்த்தி செய்ய அவசியப்படும் எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்க எங்களைத் தயார் செய்கிறது,” என்றார்.

இந்த ஒத்திகை, மாஸ்கோவிற்கு எதிரான மற்றொரு ஆத்திரமூட்டலாக உள்ளது என்பதோடு, அது மேற்கத்திய அதிகாரங்களுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போர் அபாயங்களை அதிகரிக்கிறது. கடந்த ஆண்டு கியேவில் நடந்த மேற்கத்திய ஆதரவிலான ஆட்சிக் கவிழ்ப்பு சதி மற்றும் அதையடுத்து ரஷ்யாவுடன் கிரிமியா இணைக்கப்பட்டமை ஆகியவற்றிற்குப் பின்னர், கிழக்கு ஐரோப்பாவில் ஒரு திட்டமிட்ட இராணுவ ஆயத்தப்படுத்தலின் பாகமாக இது உள்ளது.

SNMG 2 என்பது, பெப்ரவரி தொடக்கத்தில் நேட்டோ பாதுகாப்பு மந்திரிகளால் 30,000 சிப்பாய்களாக அளவில் இரட்டிப்பாக்கப்பட்ட, துரித தலையீட்டு படை என்றழைக்கப்பட்ட நேட்டோ விடையிறுப்பு படையின் (NRF) பாகமாகும்.

அந்த ஒத்திகைக்கு முன்னதாக, ரஷ்ய கப்பல்களும் விமானங்களும் நேட்டோ போர் கப்பல்களுக்கு நெருக்கமாக அப்பகுதியில் தென்பட்டன. ஆனால் அவை "அனைத்தும் சர்வதேச விதிமுறைகளுக்கு கீழ்படிந்திருந்ததாக" வில்லியம்சன் தெரிவித்தார்.

பல்கேரிய துறைமுகம் வார்னாவில் USS விக்ஸ்பேர்க் தளத்தில் நடந்த ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் ரியர் அட்மிரல் கூறுகையில், “அவர்கள் (ரஷ்யர்கள்) அவர்களது திட்டங்களைத் தொடர்கிறார்கள், நாங்கள் எங்களது திட்டங்களைத் தொடர்கிறோம்,” என்றார்.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக செய்தியின்படி, சுமார் 2,000 ரஷ்ய சிப்பாய்கள் கருங்கடலுக்கு அருகில் தெற்கு ரஷ்யா மற்றும் வடக்கு காகசஸில் ஏப்ரல் 10 வரையில் வான்வழி பாதுகாப்பு ஒத்திகைகளில் ஈடுபட இருக்கிறார்கள். அதற்கு கூடுதலாக அதில், அர்மேனியாவில் உள்ள ரஷ்ய இராணுவ தளங்கள் மற்றும் ஜோர்ஜியாவின் ரஷ்யாவை ஆதரிக்கும் பிரிவுகளும் உள்ளடக்கப்படும்.

இந்த இராணுவ ஒத்திகைகள், கிழக்கு உக்ரேனிய மின்ஸ்க் போர்நிறுத்த உடன்படிக்கை ஆட்டங்கண்டு போயுள்ள சூழலில், மற்றும் கியேவில் உள்ள மேற்கு ஆதரவிலான ஆட்சியினது மற்றும் புரூசெல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைமையகங்களிலும் வாஷிங்டனிலும் உள்ள அதன் ஆதரவாளர்களது தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களுக்கு இடையே நடக்கின்றன.

கடந்த வியாழனன்று உக்ரேனிய நாடாளுமன்றம் ஜனாதிபதி பெட்ரோ பொறோஷென்கோவின் முன்மொழிவு ஒன்றை நிறைவேற்றியது. அது கிழக்கு உக்ரேனிய மக்களுக்கு எதிராக நிலைநிறுத்தப்பட்ட இராணுவத்தை மூன்று மடங்காக, 250,000 ஆக உயர்த்த உத்தரவிடுகிறது.

மேற்கின் இந்த நடவடிக்கைகளை மாஸ்கோ கூர்மையாக விமர்சித்தது. உக்ரேனுக்கு உயிர்பறிக்கும் ஆயுதங்கள் வழங்குவதென்ற அமெரிக்காவிடமிருந்து வரும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு எதிர்வினை காட்டி ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரியின் ஒரு செய்தி தொடர்பாளர் கூறுகையில், “டமாஸ்கஸில் உள்ள மக்கள் அமெரிக்க ஆயுதங்களால் கொல்லப்பட்டால், ரஷ்ய-அமெரிக்க உறவுகள் கடுமையாக பாதிக்கப்படும்,” என்று எச்சரித்தார்.

ரஷ்ய எல்லையோரங்களுக்கு நெருக்கமாக நகர்வதற்கு உக்ரேனிய நெருக்கடியை சாக்காக பயன்படுத்துவதாக நேட்டோ உறுப்பு நாடுகளை ரஷ்ய துணை பாதுகாப்பு மந்திரி அனாடோலி அன்டோனொவ் குற்றஞ்சாட்டினார்.

வாரயிறுதி வாக்கில் Welt am Sonntag பத்திரிகைக்கு அளித்த ஒரு நேர்காணலில், ஐரோப்பிய ஒன்றிய கமிஷன் தலைவர் ஜோன்-குளோட் ஜூங்கர் ரஷ்யாவை இராணுவரீதியில் எதிர்த்து நிற்க தகைமை கொண்ட ஓர் ஐரோப்பிய இராணுவத்தை ஸ்தாபிக்க அழைப்புவிடுத்தார். ஜூங்கரின் கருத்துப்படி, இது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு உறுப்பு நாட்டின் அல்லது அண்டை நாடுகளின் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், அதற்கு நம்பகமானரீதியில் விடையிறுக்க ஐரோப்பிய ஒன்றியத்தை அனுமதிக்குமாம்.

ஓர் ஐரோப்பிய இராணுவத்தை உடனடியாக ஆயத்தப்படுத்த முடியவில்லை என்றாலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் மதிப்புகளைப் பாதுகாப்பதில் நாம் தீவிரமாக உள்ளோம் என்ற ஒரு தெளிவான சேதியை அது ரஷ்யாவிற்கு அனுப்பும்,” என்று ஜூங்கர் தெரிவித்தார்.

ஜூங்கரின் முறையீடானது, பிரெடெரிக் எபேர்ட் அமைப்புடன் ஒத்துழைக்கும் சிந்தனை குழாமான ஐரோப்பிய கொள்கையின் ஆய்வு மையத்தால் சமீபத்தில் பிரசுரிக்கப்பட்ட ஒரு மூலோபாய ஆய்வறிக்கையை அடிப்படையாக கொண்டிருந்தது. முன்னாள் நேட்டோ துணை தளபதிகள் (Secretary Generals) ஜாவியர் சோலானா மற்றும் ஜாப் டு ஹூப் ஷேஃபார் தான் அந்த ஆய்வறிக்கையின் பிரதான எழுத்தாளர்களாவர். நேட்டோ உடனான கூட்டணியில் சுயஅதிகாரம் கொண்ட ஒரு கூட்டு ஐரோப்பிய பாதுகாப்பு கொள்கைக்காக, அந்த எழுத்தாளர்கள் உக்ரேனுக்கு எதிரான ஆக்கிரமிப்புக்காக ரஷ்யாவே குற்றவாளி என்றும், மாஸ்கோ ஒட்டுமொத்த ஐரோப்பாவிற்கும் ஓர் அச்சுறுத்தலை நிலைநிறுத்துவதாகவும் மீண்டும் அதே பொய்யை ஒரு போலிக்காரணமாக கொண்டு வந்தனர்.

எவ்வாறிருப்பினும் உக்ரேனில் ரஷ்யாவின் ஊடுருவல்களும் மற்றும் உறுப்பு நாடுகளின் நிலம், நீர் மற்றும் வான்வழி பாதுகாப்புகளுக்கு எதிரான ஆத்திரமூட்டல்களும், ஐரோப்பாவின் பனிப்போருக்குப் பிந்தைய பாதுகாப்பு ஒழுங்குமுறைக்கு ஒரு அடியாக உள்ளன என்பதோடு, அவை ஐரோப்பிய ஆக்கிரமிப்பு மற்றும் இராணுவ தாக்குதலின் சாத்தியக்கூறு குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் விழிப்புணர்வை மீட்டுயிர் பெற செய்துள்ளன,” என்று அந்த ஆய்வறிக்கை குறிப்பிட்டது.

சோலானா மற்றும் டு ஹூப் ஷேஃபார் கருத்துப்படி, ஒரு கூட்டு ஐரோப்பிய பாதுகாப்பு கொள்கை மற்றும் இராணுவ ஆயதப்படுத்தலை ஸ்தாபிப்பதானது, "நிதியியல், தொழில்நுட்ப மற்றும் தொழில்துறை சவால்களை" முன்னிறுத்துகிறது. நிரந்தர மற்றும் சிறப்பு துரித விடையிறுப்பு துருப்புகளை உருவாக்குவது மற்றும் ஆயுதமேந்திய படைகளை நிலைநிறுத்துவது உட்பட ஆவணத்தில் உள்ள அனைத்து பரிந்துரைகளும், “பெரும்பாலான உறுப்பு நாடுகளுக்கு இராணுவ செலவினங்களை கூர்மையாக உயர்த்துவதை இன்றியமையாததாக ஆக்குவதோடு, நேட்டோவின் வேல்ஸ் உச்சி மாநாட்டில் 2014 வாக்கில் GDP இல் 2 சதவீதத்தை நோக்கி நகர்வதென்ற வாக்குறுதியையும் கடந்து செல்கிறது.”

இந்த காரணத்திற்காக மட்டுமாவது, உறுப்பு நாடுகளினது இராணுவங்களின் தேசிய திறன்களை ஒருங்கிணைப்பது அவசியமாவதாக அவ்வறிக்கை குறிப்பிட்டது.

ஜூங்கரின் பரிந்துரை அனைத்தினும் மேலாக ஜேர்மன் அரசாங்கத்தால் வரவேற்கப்பட்டது. துணை செய்தி தொடர்பாளர் கிறிஸ்டியான விர்ட்ஸ் மூலமாக, ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் (கிறிஸ்துவ ஜனநாயக யூனியன், CDU) “ஐரோப்பாவில் தீவிர இராணுவ ஒத்துழைப்பிற்கு" அழைப்பு விடுத்தார்.

ஜேர்மன் வெளியுறவுதுறை மந்திரி பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையரும் (சமூக ஜனநாயக கட்சி - SPD) மற்றும் பாதுகாப்பு மந்திரி ஊர்சுலா வொன் டெர் லெயெனும் (CDU) ஐரோப்பிய இராணுவத்திற்கு சார்பாக பேசினர். “SPD பொறுத்த வரையில், ஐரோப்பிய இராணுவம் மீதான நீண்டகால இலட்சியம் ஒரு முக்கிய அரசியல் பிரச்சினையாகும். மேலும் பல ஆண்டுகளாக அது கட்சி வேலைத்திட்டத்தின் பாகமாக இருந்து வருகிறது,” என்று பேர்லினை மையமாக கொண்ட Tagesspiegelக்கு ஸ்ரைன்மையர் தெரிவித்தார்.

நமது சமாதானமான ஐரோப்பிய ஒழுங்குமுறைக்கு வரும் புதிய அபாயங்கள் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு" “கூட்டு ஐரோப்பிய பாதுகாப்பு மூலோபாயத்தை வேகமாக சரிசெய்வதும் நவீனமயமாக்குவதும்" அவசியப்படுகிறது என்று ஸ்ரைன்மையர் தெரிவித்தார். “நான் அதற்கு தான் அழுத்தம் அளித்து வருகிறேன். இது தொடர்பாக புரூசெல்ஸிற்கு எமது கருத்துக்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்,” என்றார்.

ஜேர்மன் அரசாங்கம் இதை பகிரங்கமாக வெளிப்படுத்தவில்லை என்றபோதினும், பேர்லின் அதன் பொருளாதார மேலாளுமைக்கும் கூடுதலாக ஐரோப்பாவில் இராணுவ மேலாளுமையை எட்டுவதற்கும் மற்றும் ஒரு கூட்டு ஐரோப்பிய பாதுகாப்பு படையின் போர்வையில் ஜேர்மனியை இராணுவமயப்படுத்துவதற்கும் ஒரு சந்தர்ப்பமாக ஜூங்கரின் முன்மொழிவை பார்க்கிறது.

Deutschlandfunkக்கு வழங்கிய ஒரு நேர்காணலில், வொன் டெர் லெயென் அறிவிக்கையில், “என்றாவது ஒரு நாள் ஐரோப்பிய இராணுவத்தைக் கொண்டிருக்கும் கண்ணோட்டத்துடன், இராணுவங்களை ஒருங்கிணைப்பது தான் என்னைப் பொறுத்தமட்டில் எதிர்காலமாக உள்ளது,” என்றார்.

ஜேர்மன் இராணுவமயமாக்கல், இந்த நிகழ்ச்சிநிரலுடன் தான் நெருக்கமாக பிணைந்துள்ளது என்பதை அப்பெண்மணி தெளிவுபடுத்தினார். “உண்மையில் அது செய்ய வேண்டிய பணிகளை முன்னெடுக்க தகைமை கொண்ட ஜேர்மன் இராணுவத்தை இக்கூட்டணியில் நாம் கொண்டுள்ளோம் என்பது முக்கியமானதாகும். அதாவது அது காகிதத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை, மாறாக அதன் முக்கிய நடவடிக்கைகளிலும் அவற்றை பூர்த்தி செய்வதை அது குறிக்கிறது. அதனால் தான், ஒரு நாடு தீவிரமாக பாதுகாப்பை விரும்பினால், அது தீவிரமாக முதலீடு செய்ய வேண்டியுள்ளது. அதனால் தான் [பாதுகாப்பு] வரவு-செலவு திட்டங்கள் குறித்த இத்தகைய விவாதங்கள் நிஜமாகவே, நாங்கள் விரும்பும் விடயங்களும் சாராம்சத்துடன் ஆதரிக்கப்பட வேண்டியவை என்ற உண்மையைத் தாங்கி உள்ளன,” என்றார்.