சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : சிரியா

US bombs kill oil workers in Syria

அமெரிக்க குண்டுகள் சிரிய எண்ணெய் நிறுவன தொழிலாளர்களை சாகடிக்கின்றன

By Bill Van Auken
10 March 2015

Use this version to printSend feedback

துருக்கியை ஒட்டிய எல்லைக்கருகில் ஒரு சிரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீதான அமெரிக்க விமான தாக்குதல் ஞாயிறன்று குறைந்தபட்சம் 30 பேரை கொன்றதாகவும், அவர்களில் பலர் எண்ணெய் நிறுவன தொழிலாளர்கள் என்றும் மனித உரிமைகளுக்கான சிரிய மேற்பார்வையகம் அறிவித்தது.

டெல் அபாயாத் நகரின் சற்று வடகிழக்கில் அமைந்துள்ள அந்த சுத்திகரிப்பு ஆலை வெளிப்படையாக இலக்கில் வைக்கப்பட்டிருந்தது, ஏனெனில் அப்பிராந்தியத்தில் வாஷிங்டனின் சமீபத்திய இராணுவ தலையீட்டிற்கான வெளிப்பார்வைக்குரிய இலக்காக உள்ள ISIS இன் (ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு) கட்டுப்பாட்டில் அது விழுந்திருந்தது.

சிரியாவின் எண்ணெய் உற்பத்தி குவிந்துள்ள வடக்கு மற்றும் கிழக்கின் பெரும் பகுதிகளை ISIS கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. கடந்த ஜூனில் அண்டைநாடான ஈராக்கிற்குள் அது எழுச்சி பெறுவதற்கு முன்னதாக, ISIS, ஜனாதிபதி பஷார் அல்-அசாத் அரசாங்கத்திற்கு எதிரான ஓர் ஆட்சி மாற்றத்திற்கான போரில் வாஷிங்டன் மற்றும் அதன் பிராந்திய கூட்டாளிகளால் ஆதரிக்கப்பட்ட பிரதான இஸ்லாமிய "கிளர்ச்சி" குழுக்களில் ஒன்றாக மேலெழுந்திருந்தது.

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் கொல்லப்பட்டவர்கள் குறித்து ராய்டர் செய்தி நிறுவனத்தின் ஒரு விசாரணைக்கு, ஈராக் மற்றும் சிரியாவில் தலையீட்டை மேற்பார்வையிடும் அமெரிக்க ஒருங்கிணைந்த கூட்டு செயற்படையின் ஒரு செய்தி தொடர்பாளர் பதிலளிக்கையில், அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவதன் மீது எப்போதும் கூறப்படும் அதே கருத்துடன் விடையிறுத்தார்.

அமெரிக்க படைகளால் அல்லது கூட்டணி படைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டு நம்பகமானரீதியில் கூறப்படும் போது, அந்த வாதம் எந்தளவிற்கு துல்லியமானது என்பதையும், அதைச் சுற்றிய அனைத்து சூழ்நிலைகளையும் தீர்மானிக்க ஒரு முழுமையான விசாரணை தொடங்கப்படும்,” என்றவர் குறிப்பிட்டார். “இலக்கில் வைக்கும் நடைமுறையின் போதும் சரி, நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதும் சரி, அப்பாவி மக்கள் பாதுக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளையும் மற்றும் ஒட்டுமொத்த சேதங்களையும் குறைக்க, கணிசமான அளவிற்கு சேத தவிர்ப்பு நடவடிக்கைகளை" அமெரிக்க இராணுவம் மேற்கொண்டு வருவதாக அவர் வாதிட சென்றார்.

ஏழு மாதகால அமெரிக்க விமான தாக்குதல்கள் ஈராக் மற்றும் சிரியாவில் 8,500க்கும் அதிகமான ISIS “போராளிகளைக்" கொன்றுள்ளதாக பெண்டகன் வாதிடுகிறது. ஆனால் எத்தனை பொதுமக்கள் இறந்துள்ளார்கள் என்பதைக் குறித்த எந்தவித மதிப்பீட்டையோ, அல்லது எவ்வாறு பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் இடையே துல்லியமாக அது வேறுபாடு காண்கிறது என்பதைக் குறித்த எவ்வித விளக்கத்தையோ அது வழங்கவில்லை.

ISISஇல் இறந்தவர்கள் குறித்த அந்த உடல் எண்ணிக்கையானது, வாஷிங்டனின் உயர்மட்ட இராணுவ அதிகாரியான பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் தலைமை அலுவலக தலைவர் மார்ட்டின் திம்ப்சே, பாக்தாத்திற்கு திங்களன்று மேற்பார்வையிட விஜயம் செய்த போது வழங்கப்பட்டது.

பாரசீக வளைகுடாவில் ஒரு பிரெஞ்சு போர்விமான தாங்கி கப்பலைப் பார்வையிட வருவதற்கு முந்தைய நாள், “கூடுதல் பாதிப்புகளைத்" தவிர்ப்பதற்காக தாக்குதல்கள் "மிகவும் துல்லியமாக" நடத்தப்பட்டிருந்ததாக கூறி, அமெரிக்க தலைமையிலான வான்வழி போரின் சேதங்களை மெச்சிய திம்ப்சே அதேவேளையில், “ஈராக் எங்கிலும் தீவிரமாக குண்டுவீசுவது பதிலாகாது" என்ற கண்ணோட்டத்திற்கு குரல் கொடுத்தார்.

ஆனால் அதற்கு பதிலாக என்ன அவசியமென்றால், அமெரிக்கா பயிற்சியளிக்கும் ஈராக்கிய இராணுவத்தை மீண்டும் கட்டுவதற்கு அமெரிக்க முயற்சியுடன் "மூலோபாய பொறுமையை" ஏற்பதே அவசியமென்று வலியுறுத்தினார். அந்த இராணுவம் தான் கடந்த கோடையில் ISIS இன் ஒரு தாக்குதலை முகங்கொடுத்து பொறிந்து போனது. “அடியிலிருக்கும் பிரச்சினைகள்" தீர்க்கப்பட வேண்டும் என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

ஈராக் பிரதம மந்திரி ஹைதர் அல்-அபாதி மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி கஹாலிட் அல்-ஒபெய்தியை திங்களன்று சந்தித்த பின்னர், திம்ப்சே கூறுகையில், இராணுவ ஆதரவிற்காக ஈராக்கிய ஆட்சி அதிகளவில் ஈரானை சார்ந்திருப்பது தான் வாஷிங்டனுக்கு மிகப்பெரிய கவலை அளிக்கும் "அடியிலிருக்கும் பிரச்சினைகளில்" ஒன்றாக உள்ளது என்பதை தெளிவுபடுத்தினார்.

ஈரானிடமிருந்து பெறும் உதவியை அவர்கள் அண்மித்த காலத்தில் எந்தளவிற்கு தழுவியுள்ளார்களோ அது, [ISIS ஆல் முன்னிறுத்தப்பட்ட] உயிர்வாழ்வதற்கான அச்சுறுத்தலுக்கு எதிர்வினையாக உள்ளதா, அல்லது அது நீண்டகாலத்திற்குரிய ஏதோவொன்றாக உள்ளதா, என்பதை தான் உண்மையில் நான் வகைப்படுத்த முயன்று வருகிறேன்,” என்று அசோசியேடெட் பிரஸ்ஸிற்கு திம்ப்சே தெரிவித்தார்.

முன்னதாக அவர் கூறுகையில், சவூதி அரேபியா மற்றும் கட்டார் போன்ற பிற்போக்குத்தனமான சுன்னி முடியாட்சிகளை உள்ளடக்கிய "கூட்டணியை", ISIS எதிராக "பேணுவது மிகவும் சிரமமாகி வருகிறது" என்ற அவரது கவலைகளை வெளியிட்டார். அவை, ISISக்கும் மற்றும் ஈரானிய ஆதரவிலான சிரிய ஆட்சி எதிராக சண்டையிடும் ஏனைய இஸ்லாமிய போராளிகள் குழுக்களுக்கும் நிதியுதவி வழங்குவதில் பிரதான ஆதாரங்களாக இருந்துள்ளன.

ஈராக் மீதான 2003 அமெரிக்க படையெடுப்பை அடுத்து பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டு, பின்னர் தூக்கிலிடப்பட்ட சதாம் ஹூசைனின் சொந்த ஊரான, பெரும்பான்மை சுன்னி மக்களைக் கொண்ட திக்ரித் நகரை மீட்டுப்பெறும் நோக்கம் கொண்ட ஒரு தாக்குதலில், பெருமளவில் ஈராக்கிய ஷியைட் போராளிகளை உள்ளடக்கிய, சுமார் 30,000 பேர் கொண்ட ஒரு படையை ஆதரிப்பதில் ஈரான் ஒரு மேலோங்கிய பாத்திரம் வகித்து வருகிறது. ஈரானிய ஆலோசகர்கள் நேரடியாக அந்த தாக்குதலுக்கு உதவி வருகிறார்கள் என்பதோடு, ஈரான் பீரங்கிப்படைகளையும் மற்றும் தாக்குதலுக்கான ஏனைய நேரடியான இராணுவ உதவிகளையும் வழங்கி உள்ளது, அதில் அமெரிக்க படைகள் எந்த நேரடி பாத்திரமும் வகித்து வரவில்லை.

திக்ரித் முற்றுகையானது, கடந்த கோடையில் ISIS வசம் வீழ்ந்த வடக்கில் உள்ள ஈராக்கின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான மோசூல் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஒரு இன்றியமையா மூலோபாய தயாரிப்பாக பார்க்கப்படுகிறது. திங்களன்று திக்ரித்தின் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கில் சண்டை நடந்ததாக செய்திகள் தெரிவித்தன.

ஞாயிறன்று ஈராக்கிய அரசு ஆதரவிலான படைகள் வசம் வந்த சிறுநகரங்களில் அல்பு அஜிலும் ஒன்றாகும். அங்கே சில சுன்னி பழங்குடியினர், அண்மையிலிருந்த தளத்திலிருந்து ஷியைட் இனத்தவரை பெரும்பான்மையாக கொண்ட நூற்றுக்கணக்கான இராணுவத்தினரை ISIS படுகொலை செய்ததில் பங்குபற்றியதாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தனர். போராளிகள் குழுவின் குறைந்தபட்சம் ஒரேயொரு தளபதியாவது, திக்ரித் தாக்குதலை பழிவாங்கும் ஒரு நடவடிக்கையாக சித்தரித்திருப்பார், மேலும் அங்கே வகுப்புவாத ஒடுக்குமுறை இருக்கலாம் என்ற அச்சங்களும் நிலவுகின்றன.

சுன்னி மக்கள் வசிக்கும் பகுதியில் பலர் தாக்குதலில் இருந்து தப்பிக்க சமாரா நகருக்கு வெளியேறி உள்ளனர். ஒரு 50 வயதான விவசாயி அபு அலாவுடன் AFP உரையாற்றுகையில் அவர் கூறியதாவது, “நான் எனது ஆடுகளையும், மாடுகளையும் விட்டு வந்துவிட்டேன். எங்களுக்கு [ISIS] உடன் எந்த தொடர்பும் கிடையாது, ஆனால் நாங்கள் ஒடுக்கப்படுகிறோம்,” என்றார். அங்கிருந்து வெளியேறியவர்கள் அவர்கள் பயணத்தைத் தொடர்வதற்கு அனுமதிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக ஷியைட் போராளிகளால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

திக்ரித் தாக்குதலில் ஈரான் ஈடுபடுவது வகுப்புவாத பிளவுகளைத் தீவிரப்படுத்துவதாக அமெரிக்க அதிகாரிகள் போலித்தனமாக எச்சரிக்கைகள் விடுத்துள்ள அதேவேளையில், அமெரிக்க போர் விமானங்களும் ஆலோசகர்களும் வடக்கில் உள்ள எண்ணெய் வளம் மிக்க கிர்குக்கிற்கு வெளியே ISISக்கு எதிரான குர்திஷ் போராளிகளின் ஒரு தாக்குதலை ஆதரித்து வந்தனர். கடந்த ஜூனில் ISIS தாக்குதலின் போது, ஈராக்கிய இராணுவம் சிதைந்து போன பின்னர், குர்திஷ் படைகள் அந்த நகரை கட்டுப்பாட்டில் எடுத்தன. அங்கே கிர்குக்கில் கூர்மையான வகுப்புவாத பதட்டங்கள் நிலவுவதோடு, அதன் எண்ணெய் ஆதாரங்களை கட்டுப்பாட்டில் பெறுவதற்கான போராட்டத்தால் அவை தீவிரமடைந்துள்ளன. அந்த மக்கள் குர்தியர்கள், அரேபியர்கள், அசீரியர்கள் மற்றும் துருக்கியர்கள் என பிளவுபட்டுள்ளனர்.

ஈராக்கிய இராணுவத்திற்கு மறுபயிற்சி அளிப்பதற்கு அமெரிக்க முயற்சிகள் இன்னும் தொடங்கவில்லை என்பதை திம்ப்சே ஒப்புக் கொண்டார். அமெரிக்க ஆக்கிரமிப்பின் கீழ் ஓர் ஈராக்கிய கைப்பாவை இராணுவத்திற்குப் பயிற்சியளிக்கும் முயற்சிகளை வழிநடத்திய அந்த தளபதி, பெண்டகனால் நம்பத்தகுந்தவர்களாக காண முடியாத ஈராக்கிய படை தளபதிகளை அது துப்புரவாக்க முயன்று வருவதாக குறிப்பிட்டார். அதேவேளையில் அமெரிக்கா பயிற்சி அளிப்பதற்கு அங்கே போதிய எண்ணிக்கையில் ஆட்கள் இல்லை என்பதையும் அவர் ஒப்புக் கொண்டார்.

இராணுவரீதியில், அங்கே இன்னமும் மாற்றப்பட வேண்டிய சில தலைவர்கள் இருக்கிறார்கள் என்பதில் நான் தெளிவாக உள்ளேன்.” “அங்கே இன்னமும் நியமனங்களில் பற்றாக்குறை உள்ளது. நியமிக்கப்பட்டவர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்படாத, மற்றும் முறையாக ஆயுதங்கள் வழங்கப்படாத சம்பவங்களும் இன்னமும் அங்கே உள்ளன,” என்றார்.

பயிற்சி அளிப்பதற்காக மற்றும் ஈராக்கிய படைகளுக்கு "ஆலோசனை" வழங்குவதற்காக கூடுதலாக அமெரிக்க துருப்புகளை அனுப்புமாறு காங்கிஸிற்குள் உள்ள உட்கூறுகளிடம் இருந்து வரும் அழைப்புகளை திம்ப்சே நிராகரித்தார். “நம்மிடம் பயிற்சி அளிப்பவர்களும் ஆலோசகர்களும் உள்ளனர். ஈராக்கிய பிரிவுகளில் சில வெளிப்படுத்தி காட்டுவதற்காக அவர்கள் காத்திருக்கின்றனர்,” என்றதன் மூலம் அவர், ஏற்கனவே அம்மண்ணில் உள்ள 2,500 அமெரிக்க துருப்புகளைக் குறிப்பிடுகிறார்.