சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

European Central Bank bond-buying program fuels financial turbulence

பங்குபத்திரங்கள் வாங்கும் ஐரோப்பிய மத்திய வங்கியின் திட்டம் நிதியியல் கொந்தளிப்பிற்கு எரியூட்டுகிறது

By Nick Beams
12 March 2015

Use this version to printSend feedback

அடுத்த 16 மாதகால போக்கில் நிதியியல் அமைப்புமுறைக்குள் குறைந்தபட்சம் 1 ட்ரில்லியன் யூரோ செலுத்த உள்ளதும், திங்களன்று தொடங்கியதுமான ஐரோப்பிய மத்திய வங்கியின் பங்குபத்திரங்கள் வாங்கும் திட்டத்தை அதன் தலைவர் தலைவர் மரியோ திராஹி பலமாக நியாயப்படுத்துகிறார்.

பிராங்க்பேர்ட்டில் நேற்று பொருளாதார மற்றும் நிதியியல் ஆய்வாளர்களின் ஒரு மாநாட்டில் பேசுகையில், திராஹி, அந்த திட்டத்தின் பலன்கள் நுகர்வோர்களுக்கும் வணிகங்களுக்கும் கொண்டு செல்லப்படுவதுடன், கிரீஸின் கொந்தளிப்பிலிருந்து யூரோ மண்டலத்தின் எஞ்சிய பகுதிகள் பாதுகாக்கப்படுகின்றன என்றார்.

அபிவிருத்திகள் சரியான திசையில் நடந்து வருகின்றன,” என்றார்.

அந்த கொள்கையில் சில அபாயங்கள் உள்ளன, ஏனென்றால் அது அரசு பத்திரங்களின் இலாபங்களைக் குறைக்கிறது என்பதுடன், முதலீட்டாளர்களை ஆபத்தான நடவடிக்கைகள் எடுக்க தள்ளுகிறது என்பதை ஒப்புக் கொண்ட அதேவேளையில், இத்தகைய அபாயங்கள் "கட்டுப்படுத்தப்படும்" என்றார்.

சொத்து கொள்முதல்கள் "வழக்கத்திற்கு மாறானவை" (unconventional) தான் என்றபோதினும், அவை "மரபுமீறவில்லை" (unorthodox) என்று கூறி, ஐரோப்பிய மத்திய வங்கியினது நகர்வின் முக்கியத்துவத்தைத் திராஹி குறைத்துக் காட்ட முயன்றார். “உண்மையில் அவை குறிப்பிடத்தக்க அளவிற்கு மரபுரீதியிலானவையே,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

அந்த வலியுறுத்தல், ஏதோவொரு விதத்தில் மறுஉத்தரவாதம் வழங்கும் நோக்கில், பரந்த மக்கள் ஏற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்தது, ஏனென்றால் உலகளாவிய நிதியியல் அமைப்புமுறைக்குள் குறைந்தபட்சம் 5 ட்ரில்லியன் டாலர் பாய்ச்சி உள்ள, உலகின் பிரதான மத்திய வங்கிகளின் சொத்து வாங்கும் திட்டம் போன்ற எதையும் வரலாற்றில் இதுவரையில் பார்த்திருக்க முடியாது என்பது பார்வையாளர்களில் ஒவ்வொருவருக்கும் நன்கு தெரியும்.

குறைந்தபட்சம் அடுத்த ஆண்டு செப்டம்பர் வரையில், ஐரோப்பிய மத்திய வங்கி உத்தியோகபூர்வமாக "அத்திட்டத்திற்கு எந்த கால நிர்ணயமும்" வரையறுக்கவில்லை என்பதால், சாத்தியமானால் அதற்கும் மேலாக, மாதத்திற்கு 60 பில்லியன் யூரோ மதிப்பில் பத்திரங்கள் வாங்கும் அதன் நோக்கத்திற்கு பொருந்திய வகையில், அது அத்திட்டத்தின் முதல் நாளன்று 3.4 பில்லியன் யூரோ மதிப்பிலான பத்திரங்களை வாங்கியது.

அது அறிவிக்கப்பட்டு சில நாட்களுக்குள்ளேயே, அந்த கொள்முதல் திட்டம் நிதியியல் சந்தைகளின் மீது கணிசமான தாக்கத்தைக் கொண்டிருப்பதுடன், பெரும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் தொடர்ச்சியான நிகழ்வுபோக்குகளுக்கு களம் அமைத்து, திராஹியின் மறுஉத்திரவாதங்களுக்கு முரண்பட்டு நிற்கிறது.

அமெரிக்க டாலருக்கு எதிராக யூரோ மதிப்பில் ஏற்பட்டுள்ள வேகமான வீழ்ச்சி, இதுவரையிலான மிகவும் முக்கிய விளைவுகளில் ஒன்றாகும். உலகளாவிய நிதியியல் நெருக்கடியின் மத்தியில், 2008இன் மூன்றாம் காலாண்டில் பதிவான 10.6 சதவீத சரிவையும் தாண்டி, இந்த ஆண்டு யூரோவின் மதிப்பு 12.8 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது

நேற்று 1.05 டாலருக்கு சற்று அதிகமாக சரிந்த பின்னர், யூரோ அமெரிக்க டாலருக்கு நிகராக நோக்கிச்செல்கிறது என்ற கணிப்புகளோடு, பத்திரங்கள் வாங்கும் திட்டம் தொடர்கின்ற நிலையில், அது இன்னமும் வீழ்ச்சி அடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தைக்குள் ஐரோப்பிய மத்திய வங்கி நுழைந்ததன் விளைவாக பத்திரங்களின் விலைகள் உயர்வதற்கு தள்ளப்பட்டதால், அவற்றிலிருந்து கிடைக்கும் இலாபங்கள் மேற்கொண்டு சரிந்தமை மற்றொரு பிரதான விளைவாகும். இந்த ஆண்டில் 0.5 சதவீதத்தில் தொடங்கிய பத்தாண்டுகால ஜேர்மன் பத்திரத்தின் இலாபம், 0.199 சதவீதத்திற்குச் சரிந்தது. அதற்கும் அதற்கு நிகரான பத்தாண்டுகால அமெரிக்க கருவூல பத்திரத்திற்கும் இடையிலான இடைவெளி, 25 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய அளவாக உள்ளது. ஜேர்மன் ஐந்தாண்டுகால பத்திரங்களின் இலாபம், 1.6 சதவீதத்தில் இருந்த அவற்றிற்கு நிகரான அமெரிக்க கருவூல பத்திரங்களின் வருவாய் உடன் ஒப்பிடுகையில் -0.125 சதவீதமாக சாதனையளவிற்கு வீழ்ச்சி அடைந்தது.      

பிரெஞ்சு பத்தாண்டுகால பத்திரங்களின் இலாபங்களும் 0.5 சதவீதத்திற்கு கீழே சென்றன, மேலும் ஸ்பெயின், இத்தாலி, பின்லாந்து மற்றும் ஆஸ்திரியாவின் அரசு கடன் பத்திரங்கள் மீதான இலாபங்களும் சாதனை அளவிற்கு குறைந்து வீழ்ச்சி அடைந்தன.

திராஹியின் கருத்தின்படி, வட்டிவிகிதங்களைக் குறைப்பதன் மூலம், சொத்து வாங்கும் திட்டம் நிஜமான பொருளாதாரத்தில் வணிக முதலீட்டிற்கு புத்துயிரூட்டும் நிலைமைகளை உருவாக்க வேண்டும். ஆனால் உண்மையில் ஐரோப்பிய மத்திய வங்கியின் தலையீடு பாரிய ஊக வணிகத்திற்கு நிதி வழங்கி வருகிறது, அதில் முதலீட்டாளர்கள் அவர்கள் வாங்கும் பத்திரங்களின் விலைகள் சாதனையளவிற்கு அதிகமாக (அதேவேளையில் இலாபங்கள் அதற்கேற்ப சாதனையளவிற்கு குறைவாக) இருந்தாலும் கூட, இந்த அதிக விலைக்கு வாங்கிய பத்திரங்களை விற்பதனால் கிடைக்கும் மூலதன ஆதாயங்கள் மூலமாக அவர்களால் பணம் ஈட்ட முடியுமென காண்கின்றனர்.

ஐரோப்பிய மத்திய வங்கியின் திட்டம் எல்லா பிரதான உலகளாவிய செலாவணிகளுக்கு எதிராகவும் அமெரிக்க டாலரை மேலுயர்த்துகிறது. டாலர் மதிப்பு உயர்வானது, அமெரிக்க பெருநிறுவனங்களின் சர்வதேச போட்டி நிலைமையை மோசமாக்கி அவர்களின் அடிப்படை போக்கையே பாதிப்பதாக அங்கே கவலைகள் அதிகரித்து வருகின்றன

இலாபத்தைக் குறித்த கவலைகள், சமீபத்திய வோல் ஸ்ட்ரீட் சரிவுக்கு பின்னால் இருப்பதாக தெரிகிறது. அத்துடன் அவை கடந்த வெள்ளியன்று வெளியான, வெளிப்பார்வைக்கு சாதகமாக தெரிந்த, வேலைகள் குறித்த அமெரிக்க அறிக்கை பெடரலின் உத்தியோகபூர்வ வட்டி விகிதங்களை அவற்றின் தற்போதைய சாதனை அளவிலான குறைந்த 0.25 சதவீத மட்டத்திலிருந்து உயர்த்துவதை ஊக்குவிக்குமென்ற அச்சங்களோடு சேர்ந்து கொண்டன. நிஜமான பொருளாதாரத்திற்கு அபிவிருத்தி அளிப்பதற்கு ஒரு அறிகுறியாக இருக்க வேண்டியது, பங்கு சந்தை வீழ்ச்சியை அதிகரிக்கின்ற ஒரு "விசித்திரமான மாய சூழலுக்குள்" நிதியியல் சந்தைகள் நுழைந்துள்ளன என்பதற்கு ஓர் அறிகுறியாகி உள்ளது

எழுச்சி பெற்றுவரும் சந்தைகள் என்றழைக்கப்படுபவை, நிதியியல் பிரச்சினைகளை முகங்கொடுக்கக்கூடும் என்ற அச்சங்களையும் டாலர் மதிப்பின் இந்த உயர்வு மீண்டும் உயிரூட்டுகிறது. ஏனென்றால் டாலர் மதிப்பின் உயர்வானது, டாலர் மேலாளுமை கொண்ட கடன்களின் வட்டிச்சுமையை அதிகரித்து நிஜமான கடனை அதிகரிக்கிறது. 2013 இல், அமெரிக்க பெடரல் ரிசர்வ் அதன் சொத்து வாங்கும் திட்டத்தைக் கைவிட போகிறது என்ற அறிகுறிகளைத் தொடர்ந்து, இத்தகைய எழுச்சி பெற்றுவரும் சந்தைகளின் செலாவணிகள் கூர்மையாக வீழ்ச்சி அடைந்தன. இப்போது மீண்டும் "பணம் பாய்ச்சுவதைக் குறைக்கும் எழுச்சி" ஏற்படுவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.

அமெரிக்க வேலைகள் குறித்த சமீபத்திய புள்ளிவிபரம் வெளியானதும், கடந்த வாரம், எழுச்சி பெற்றுவரும் சந்தை செலாவணி ஜேபி மோர்கன் குறியீடு சாதனையளவிற்கு சரிந்தது. ஜேபி மோர்கனின் ஒரு பகுப்பாய்வாளர் பைனான்சியல் டைம்ஸிற்கு கூறுகையில், அமெரிக்கா மற்றும் எழுச்சி பெற்றுவரும் பொருளாதாரங்களுக்கு இடையே செலாவணி கொள்கையில் நிலவும் விரிசல்கள் வரவிருக்கும் மாதங்களில் இன்னும் அதிக பொருத்தமாக மாறக்கூடும். கடந்த இரண்டு ஆண்டுகளாக எழுச்சி பெற்றுவரும் சந்தைகளுக்குள் பாய்ந்துள்ள பணம், பெடரல் வட்டி விகிதங்களை உயர்த்தினால், வேகமாக வெளியேறும் போட்டியில் இறங்கும் என்றார்.

கடந்த வாரம், துருக்கிய லிரா மற்றும் மெக்சிகன் பெசோ இரண்டுமே அமெரிக்க டாலருக்கு எதிராக சாதனை அளவிற்கு சரிந்தன. டாலருக்கு எதிராக பிரேசிலிய ரீல் பத்தரை ஆண்டுகளில் இல்லாத சரிவில் உள்ளது, அதேவேளையில் தென் ஆபிரிக்காவின் ராண்ட் 14 ஆண்டுகளில் அதன் மிகக் குறைந்த புள்ளியை எட்டி வருகிறது. இந்தோனேஷிய ருப்பைய்யா 1997-98 ஆசிய நிதிய நெருக்கடியில் கடைசியாக பார்க்கப்பட்ட மட்டங்களுக்கு வர்த்தகமாகி வருகிறது.

இந்த போக்குகள் அனைத்தும் ஐரோப்பிய மத்திய வங்கியின் சொத்து வாங்கும் திட்டத்தால் மேலும் பலப்படுத்தப்படும். அங்கே பிரதான ஐரோப்பிய நிதியியல் அமைப்புகளுக்கான அபாயங்களும் அதிகரித்து வருகின்றன. இதை திங்களன்று பைனான்சியல் டைம்ஸ் கட்டுரையாளர் வொல்ஃப்காங் முன்சௌவ் ஒரு கட்டுரையில் உயர்த்திக் காட்டினார். அதில் அவர் ஆயுள் காப்பீட்டு துறை மீதான அதன் தாக்கங்களைக் குறிப்பிட்டார்.

காப்பீட்டு திட்டங்களை மற்றும் ஆண்டு வைப்பு தொகை முறைகளை விற்பது, பின்னர் காப்பீட்டுதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை பத்திரங்களில் முதலீடு செய்வது, அதாவது அரசு மற்றும் பெருநிறுவன பத்திரங்களில் இருந்து கிடைக்கும் சராசரி வருவாய், அவை காப்பீட்டுதாரர்களுக்கு செலுத்தும் விகிதத்தை விட அதிகமாக இருக்கும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் ஆயுள் காப்பீட்டு வணிக முறை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பூஜ்ஜிய விகிதங்கள் என்றால், “மொத்தமாக அந்த தொழில்துறை, பணத்தைத் திரும்ப செலுத்தும் நிலையில் இருப்பதே மிகவும் சிரமமாகும்.”

முன்சௌவ் ஜேர்மன் மத்திய வங்கி பணியாளர்களால் நடத்தப்பட்ட பாவனை கணிப்புகளை மேற்கோளிட்டுக் காட்டினார். அவை, வட்டி விகிதங்கள் நீண்ட காலத்திற்கு குறைந்தே இருந்தால், பின், ஒரு சந்தர்ப்பத்தில், 2023 வாக்கில் 85 ஜேர்மன் காப்பீட்டு நிறுவனங்களில் 12 திரும்ப செலுத்தவியலா நிலைமையில் இருக்கும் என்பதோடு, மற்றொரு கடுமையான சூழலில், அந்த எண்ணிக்கை 32 நிறுவனங்களாக அதிகரிக்கும். அதற்கும் கூடுதலாக, பல ஜேர்மன் நிறுவனங்களால் செயல்படுத்தப்படும் குறைந்த-நிதி ஓய்வூதிய திட்டங்கள் (under-funded pension schemes) சிக்கலில் சிக்கும் என்பதை எடுத்துக்காட்டின.

சம்பவங்களின் துல்லியமான போக்கை முன்கணிப்பது சாத்தியமில்லை, ஆனால் ஒரு பரந்த முன்னோக்கிலிருந்து இந்த கண்டுபிடிப்புகள் முக்கியமானவையாக உள்ளன. ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின், ஓய்வூதிய நிதியங்களின் மற்றும் ஏனைய நீண்டகால நிதிய முதலீட்டாளர்களின் நடவடிக்கைகள், ஒரே சீரான, குறைந்த அபாயம் கொண்ட வருவாய்களை கோருகின்றன என்பதுடன், அவை பல தசாப்தங்களாக நிதியியல் அமைப்புமுறைக்கு ஓர் அடித்தளத்தை வழங்கி உள்ளன. ஆனால் இப்போது இத்தகைய அடித்தளங்கள், ஸ்திரப்பாட்டை பேணுவதற்கு பொறுப்பானவையாக கருதப்படும் அதே மத்திய வங்கிகளால் சிதறடிக்கப்பட்டு வருகின்றன. இது ஏதோ தீயணைப்பு துறையின் பொறுப்பில் தீயை எரியூட்டும் வெறியர்களையே நியமித்திருப்பதைப் போன்றுள்ளது.