சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா :  உக்ரேன்

New Anti-capitalist Party calls for escalating intervention in Ukraine

புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி உக்ரேனில் தலையீட்டைத் தீவிரப்படுத்த அழைப்புவிடுக்கிறது

By Alex Lantier
11 March 2015

Use this version to printSend feedback

ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கை கட்டளைகளுக்கு அது சரணடைந்த நிலையிலும் கிரீஸின் சிரிசா அரசாங்கத்தைப் பாராட்டிய அதன் அறிக்கையை பிரான்சின் போலி-இடது புதிய முதலாளித்து எதிர்ப்பு கட்சி (NPA) வெளியிட்டதற்குப் பின்னர், அது மற்றொரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. இந்த முறை அது உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக திருப்பி விடப்பட்ட, .நா தலைமையிலான இராணுவ தலையீட்டிற்கு அறிவுறுத்துகிறது.

மீண்டுமொருமுறை, அந்த அறிக்கை உலக சோசலிச வலைத் தளத்தை (WSWS) பிரசுரித்து வரும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் (ICFI) பெயரில் மோசடியான ரீதியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. உலக சோசலிச வலைத் தளத்தில் பிரசுரிக்கப்படும் அறிக்கைகள் மட்டுமே ICFIக்காக பேசுகின்றன என்று ICFI ஆல் மீண்டும் மீண்டும் செய்யப்பட்ட எச்சரிக்கையை தான் ஒருவர் மீண்டும் வலியுறுத்த வேண்டியுள்ளது.

உக்ரேன் குறித்து நான்காம் அகிலத்தின் அறிக்கை" என்ற தலைப்பில் NPA இன் தற்போதைய அறிக்கை இவ்வாறு அறிவிக்கிறது: “அனைத்து இராணுவ தாக்குதல்களுக்கு எதிராக சர்வதேச கட்டுப்பாட்டின் கீழ் ஒரு போர்நிறுத்தத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் அனைத்து முயற்சிகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம். இந்த மோதலில் ஈடுபடாத மூன்றாம் நாடுகளிலிருந்து, .நா சமாதான காப்பாளர்களை நிலைநிறுத்துவது அவசியமாகும்.”

உக்ரேனில் ஏகாதிபத்திய தலையீட்டிற்கான திட்டங்களை ஒரு .நா சமாதான நடவடிக்கையின் போர்வையில் மூடிமறைக்கும் NPA இன் முயற்சி, ஓர் எரிச்சலூட்டும் மோசடியாகும். அதன் அனுமானத்தில் இருக்கும் ".நா சமாதான காப்பாளர்கள்", ரஷ்யா உடனான எல்லையை நேரடியாக அச்சுறுத்தி, கிழக்கு உக்ரேனை ஆக்கிரமிப்பார்கள். “எல்லா இராணுவ தாக்குதல்களுக்கு" எதிராகவும் அந்த பிராந்தியத்தை நிஜமாகவே இந்த துருப்புகள் தாங்கி பிடிக்க வேண்டுமானால், அவர்கள் ரஷ்ய இராணுவத்தின் ஒரு தாக்குதலைப் பின்வாங்க செய்யக் கூடியவர்களாகவும் மற்றும் அவசியமானால் அதை தோற்கடிக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். அதாவது, அவர்கள் நேட்டோவின் ஆதரவை, மற்றும் போர் ஏற்பட்டால், பிரதானமாக நேட்டோவின் அணுஆயுத படைகளின் ஆதரவைக் கொண்டிருக்க வேண்டும்.

.நா "சமாதான காப்பாளர்களைப்" பயன்படுத்துவது என்பது ஹைட்டி, பொஸ்னியா உட்பட மற்றும் ஆபிரிக்க கண்டத்தின் பல நாடுகளிலும், உலகின் பல்வேறு பாகங்களிலும் ஏகாதிபத்திய நலன்களைச் செயலாக்குவதற்கான ஒரு பொதுவான இயங்குமுறையாக மாறி உள்ளது.

நேட்டோ மற்றும் ரஷ்யா-ஆதரவிலான படைகளுக்கு இடையே ஏற்படும் அதுபோன்றவொரு மோதல் உலகப் போரின் அபாயத்தை முன்னிறுத்தும். இந்த அபாயத்தையுமே கூட முதலாளித்துவ அரசியல்வாதிகள் ஆமோதிக்கின்றனர். மேற்கொண்டு ஒரு தோல்வியிலிருந்து கியேவ் ஆட்சியைக் காப்பாற்ற வடிவமைக்கப்பட்ட போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்காக கடந்த மாதம் மின்ஸ்கிற்கு பயணித்திருந்த போது பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட், நேட்டோ சக்திகள் தன்னைத்தானே ரஷ்யாவுடன் ஒரு "முழு போரில்" காணக்கூடும் என்று எச்சரித்தார்.

ஆனால் ரஷ்யாவை ஆக்கிரமிப்பாளராக முத்திரை குத்தியும், போரைத் தூண்டிவிடுவதில் நேட்டோ வகிக்கும் பாத்திரம் குறித்து முற்றிலும் மௌனமாக இருந்தும், கியேவில் பாசிச தலைமையிலான ஆட்சிக்கவிழ்ப்பை ஆதரித்தும், சிஐஏ பிரச்சாரத்திலிருந்து வேறுபடாத கருத்துக்களோடும், NPA பொறுப்பற்ற விதத்தில் முன்னோக்கி அழுத்தம் அளித்து வருகிறது.

NPA எழுதுகிறது, “கிரிமியாவை அவர் இணைத்துக் கொண்டதை மற்றும் ரஷ்ய மொழி பேசும் மக்களைப் "பாதுகாக்க" அவசியமிருப்பதாக கூறுவதை சட்டரீதியில் நியாயப்படுத்துவதற்காக எதார்த்தத்தைத் திரித்து, புட்டின், மைதான் போன்ற ஒரு ரஷ்ய சமூக மற்றும் அரசியல் இயக்கத்திற்கு அஞ்சி, அவர் கியேவில் உள்ள யானுகோவிச்சிற்கு-பிந்தைய ஆட்சியை ரஷ்ய-விரோத பாசிசவாதிகளால் மேலாதிக்கம் கொண்ட ஆட்சியாக விவரிக்கிறார். 'உக்ரேனியர்கள்' பெரும்பாலும் 'பாசிசவாதிகளாகவே' அடையாளம் காணப்படுகிறார்கள் என்றபோதினும், மேற்கத்திய அமைப்புகளை நோக்கி அந்நாடு திரும்பியதைச் சீர்குலைக்க கிழக்கு உக்ரேனில் மாஸ்கோவால் கருவியாக பயன்படுத்தப்படும் 'கலப்பின போர்', உக்ரேனின் அரசியல் வாழ்வையே மாற்றியுள்ளது,” என்றது.

உக்ரேனில் மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் தலையீட்டை, மற்றும் அது பாசிச பினாமிகளைச் சார்ந்திருப்பதை, வெட்கமில்லாமல் இது மூடிமறைப்பதாகும். கியேவிற்கு விஜயம் செய்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளால் பகிரங்கமாக முட்டுக் கொடுக்கப்பட்ட பெப்ரவரி 2014 ஆட்சிக் கவிழ்ப்பை NPA இல் இணைந்துள்ள அமைப்புகள் ஆதரித்ததுடன், உண்மையில் அதில் பங்குபற்றின. அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி Right Sector போன்ற பாசிச போராளிகள் குழுக்களால் தலைமை தாங்கப்பட்டதுடன், வன்முறை நிறைந்த ஒரு வலதுசாரி ஆட்சியை அதிகாரத்திற்குக் கொண்டு வந்தது.

கியேவில் மேற்கு ஆதரவிலான அந்த ஆட்சிக்கவிழ்ப்பு ரஷ்ய-விரோத பாசிசவாதிகளால் தலைமை தாங்கப்பட்டது என்பதன் மீதான NPA இன் மறுப்புரைகள், அப்பட்டமான பொய்களாகும். அவை கியேவின் சுதந்திர சதுக்கத்தில் (மைதான்) நடந்த வலதுசாரி போராட்டங்களைக் குறித்த NPA இன் சொந்த விபரங்களோடே முரண்படுகின்றன.

கடந்த ஆண்டு, போலி-இடது ரஷ்ய சோசலிச இயக்கத்தின் (RSM) Ilya Budraitskis அந்த ஆட்சிக் கவிழ்ப்பிற்கு தலைமை கொடுத்தத்தில் நாஜி-சார்பு Right Sector வகித்த பாத்திரத்தை பாராட்டினார். அவர் எழுதினார், “Right Sector இல் இருந்து 'தேசிய சர்வாதிகாரத்தின்' ஓர் அதிதீவிர-வலது ஆதரவாளர்கள் இல்லாமல், அங்கே ருசெவ்ஸ்கொஹொ (Hrushevskoho) நோக்கிய எந்தவொரு தடைகளும் இருந்திருக்காது அல்லது பெறப்பட்ட அமைச்சகங்கள் 'புரட்சியின் தலைமையிடங்களாக' திரும்பி இருக்கும். அங்கே உண்மையில் 'கட்சி ஒழுங்கமைப்பை' ஒன்றுதிரட்டுவதைத் தடுத்த சம்பவங்கள் முற்றுபுள்ளியின்றி இருந்திருக்கும் மற்றும் மேலே இருந்து 'அவசரகால நிலைமை' ஸ்தாபிக்கப்பட்டிருக்கும்,” என்றார்.

உண்மையில் ரஷ்ய-ஆதரவிலான உக்ரேனிய ஜனாதிபதி விக்டொர் யானுகோவிச்சின் பெர்குட் கலக-தடுப்பு பொலிஸைத் தோற்கடித்து, Right Sector விரைவிலேயே கியேவில் அமெரிக்க ஆதரவிலான ஆட்சிக்குள் ஒருங்கிணைந்தது. இழிவார்ந்த ரஷ்ய-விரோத கண்ணோட்டங்களுக்காக, 2012 ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தில் உத்தியோகபூர்வமாக கண்டிக்கப்பட்ட, ஸ்வோபோடா கட்சியும் மூன்று ஆளும் கட்சிகளில் ஒன்றாகும்.

கிரிமியாவின் ரஷ்ய இணைப்பை ஓர் ஆக்கிரமிப்பு நடவடிக்கையாக காட்டும் NPA இன் சித்தரிப்பு மற்றொரு பொய்யாகும். பெரும்பான்மை ரஷ்யர்களைக் கொண்ட கிரிமியா போன்ற உக்ரேனிய பிராந்தியங்களில், அல்லது கிழக்கு உக்ரேன் போன்ற பெரும் சிறுபான்மையினரைக் கொண்ட பிராந்தியங்களில், மக்கள் கியேவ் ஆட்சியை அங்கீகரிக்க மறுத்து அந்த ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிர்வினை காட்டினர். உள்நாட்டு போர் வெடித்தபோது, அந்த மக்கள் எதிர்ப்பை இரத்தத்தில் மூழ்கடிக்க, கியேவ், Right Sector அல்லது Aidar படைப்பிரிவு போன்ற பாசிச அதிரடி துருப்புகளைக் கொண்ட ஒருசில இராணுவ பிரிவுகளை அனுப்பியது.

உலகப் போர் வெடிப்பை அச்சுறுத்தும் ஓர் ஏகாதிபத்திய கொள்கைக்கு NPA இன் ஆதரவானது, அதை தொழிலாள வர்க்கத்தின் ஒரு சமரசமற்ற எதிரியாக முத்திரை குத்துகிறது.

NPA அறிக்கை மேற்கொண்டு அறிவிக்கிறது: “உக்ரேனைக் கட்டுப்படுத்தவோ அல்லது அதை சிதைக்கவோ ரஷ்யாவிற்கு எந்த 'வரலாற்றுரீதியிலான' உரிமை இருப்பதாக நாங்கள் அங்கீகரிக்கவில்லைஅதேபோல 1991 இல் வார்ஷோ உடன்படிக்கை கலைக்கப்பட்ட பின்னர் நேட்டோவின் விரிவாக்கத்திற்கோ அல்லது எந்த விதமான மேற்கத்திய ஏகாதிபத்திய முயற்சிகளுக்கோ மற்றும் உக்ரேனிய அரசியல் விருப்பத்தெரிவுகளில் மேலாதிக்கம் செலுத்தும் வழிவகைகளுக்கோ எந்தவித சட்டபூர்வ அங்கீகாரம் இருப்பதாக நாங்கள் அங்கீகரிக்கவில்லை. ஆனால் மாபெரும் ரஷ்ய கொள்கைகளின் கடந்தகால அனுபவம், புட்டினது ஆட்சியின் ஒடுக்குமுறை இயல்பு, டோன்பாஸ் போர் மற்றும் கிரிமியாவின் இணைப்பு ஆகியவை தான் உக்ரேனிய மக்களின் அதிகரித்துவரும் பகுதியினரிடையே நேட்டோவின் சட்டபூர்வ அங்கீகாரத்தைக் கூடுதலாக பலப்படுத்துகிறது,” என்றது.

உக்ரேனில் ஏகாதிபத்திய நடவடிக்கைகளுக்கு NPA இன் ஆதரவை நியாயப்படுத்த இது எரிச்சலூட்டும் வாய்ஜாலமாகும். மைதானில் வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பை ஆதரித்த பின்னர், உக்ரேனிய தொழிலாளர்கள் மீது நேட்டோ சட்டபூர்வ தன்மையைக் கொண்டுள்ளது என்ற NPA இன் வாதமும் ஓர் அப்பட்டமான பொய்யாகும். அதன் தொழில்துறை மற்றும் நுகர்வோர் மானியங்கள் மீதான வெட்டுக்கள், அடிப்படை பொது சேவைகளை தனியார்மயமாக்கும் அதன் நகர்வுகள், மற்றும் கிழக்கில் சண்டையிட பத்து ஆயிரக் கணக்கான உக்ரேனியர்களை அனுப்புவதற்கான அதன் முயற்சி என இவற்றிற்கு எதிராக தீவிரமடைந்து வரும் போராட்டங்களை கியேவ் ஆட்சி முகங்கொடுக்கிறது. உள்ளுர் மேற்கு உக்ரேனிய அதிகாரிகளின் தகவல்படி, மக்களின் விடையிறுப்பு பரந்தளவில் ஒத்துழைக்க மறுப்பதாக உள்ளது.

சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச கலைப்பிற்குப் பின்னர், கிழக்கு ஐரோப்பாவிற்குள் "நேட்டோ விரிவாக்கத்தின் எந்தவித சட்டபூர்வ தன்மையையும்" அது அங்கீகரிக்கவில்லை என்று மறுப்பது ஒரு வஞ்சகமான மழுப்பலாகும். NPA அதன் விசுவாசங்கள் எங்கே தங்கியுள்ளன என்பதைக் கூற மறுத்து வருகிறது. உண்மையில் கியேவ் ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்ட அதிவலது சக்திகளை அது மௌனமாக ஆதரித்து வருவதுடன், உக்ரேனில் நேட்டோவின் கைப்பாவை ஆட்சியை ஆதரிக்க அதனால் ஆனமட்டும் அனைத்தையும் செய்து வருகிறது.

அங்கே ஐயத்திற்கிடமின்றி உக்ரேனிலும் மற்றும் கிழக்கு ஐரோப்பா எங்கிலும் புட்டின் ஆட்சியின் ரஷ்ய தேசியவாதத்திற்கு எதிர்ப்பு நிலவுகிறது, அதற்கு முந்தைய சோவியத் அதிகாரத்தின் மீதும் தான், அதிலிருந்து தான் இந்த ரஷ்ய வணிக செல்வந்த தட்டு 1991இல் சோவியத் ஒன்றியத்தின் முதலாளித்துவ மீட்சிக்குப் பின்னர் மேலெழுந்தது. ஆனால் NPA அதனிடம் வலதுசாரி அடித்தளத்தில் முறையிடுகிறது. அது நேட்டோ அதிகாரங்கள் மற்றும் ரஷ்ய செல்வந்த தட்டுக்கள் இரண்டிற்கும் எதிராக ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தை ஒரு சர்வதேச போராட்டத்தில் ஐக்கியப்படுத்துவதை எதிர்க்கிறது. அதற்கு மாறாக சிறிய சக்திகள் ரஷ்யாவிற்கு எதிரான ஏகாதிபத்திய பினாமிகளாக சுரண்ட, தீவிர வலது தேசியவாதத்தைத் தூண்டிவிட்டு வருகிறது.

ரஷ்யாவில் சோவியத்திற்குப் பிந்தைய முதலாளித்துவ செல்வந்த தட்டு மற்றும் புட்டின் ஆட்சியை நோக்கிய NPA இன் மனோபாவம் பிற்போக்குத்தனமானதாகும். அவர்கள் 1991 சோவியத் ஒன்றிய முதலாளித்துவ மீட்சியை விமர்சிப்பதில்லை, அத்துடன் முன்னாள் சோவியத் குடியரசு உக்ரேனில் இருந்த கியேவ் ஆட்சியின் ஜனநாயக-விரோத கொள்கைகளுக்கு முழுமனதோடு ஒப்புதல் அளிக்கிறார்கள். ரஷ்ய ஆட்சியைக் குறித்து அவர்களால் என்ன சகித்துக் கொள்ள முடியாமல் இருக்கிறதென்றால், அதன் முதலாளித்துவ சுபாவம் அல்ல, மாறாக ஓர் உலகளாவிய மோதல் அச்சுறுத்தல் அபாயத்துடனேயே கூட, அது ஆதரிக்க தயாராக உள்ள, ஏகாதிபத்திய வெளிநாட்டு கொள்கைக்கு அது ஒரு தடையாக முன்நிற்கிறதே என்ற உண்மையைத் தான் அதனால் சகித்துக் கொள்ள முடியவில்லை.