சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan foreign minister visits US to Strengthen ties

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் உறவுகளை வலுப்படுத்த அமெரிக்காவுக்கு விஜயம்

By Sanjaya Jayasekera
19 February 2015

Use this version to printSend feedback

ஜனவரி 8 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த இராஜபக்ஷவை தோற்கடித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பில் ஆட்சிக்கு வந்த பின்னர், கடந்த வாரம் இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவின் அமெரிக்காவுக்கான மூன்று நாள் பயணம், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளில் துரித மாற்றம் ஏற்படுவதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

சீனாவுடனான இராஜபக்ஷவின் நெருக்கமான உறவுகளுக்கு எதிரான ஒபாமா நிர்வாகம், சிறிசேன ஆட்சிக்கு வர துணை புரிந்தது. இராஜபக்ஷவின் அமைச்சரவையில் இருந்து பிரிந்தவர்கள் மற்றும் அமெரிக்க சார்பு ஐக்கிய தேசிய கட்சி (UNP) உட்பட பல கட்சிகளின் உடந்தையுடன் அவருடைய ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை சூழ இடம்பெற்ற பிரச்சாரம் முழுவதும், கொழும்பின் வெளியுறவுக் கொள்கையை பெய்ஜிங்கிடம் இருந்து வாஷிங்டன் நோக்கி மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட, ஒரு அமெரிக்க ஆட்சி மாற்ற நடவடிக்கையாகும்.
சிறிசேனவின் அரசாங்கம், சீனாவைக் கீழறுத்து யுத்தத்திற்கான தயாரிப்பில் அதை இராணுவ ரீதியில் சுற்றி வளைப்பதை இலக்காகக் கொண்ட, ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவில் முன்னிலை" கொள்கைக்கு ஏற்ப இலங்கை வெளிநாட்டுக் கொள்கையை திருப்பிக் கொண்டிருக்கின்றது. இலங்கை தேர்தலைத் தொடர்ந்து, அமெரிக்கா விரைவாக கொழும்பை அதன் “முன்னிலையுடன்” துரிதமாக ஒருங்கிணைக்க நகர்ந்து வருகிறது. ஒபாமா நிர்வாகம் இந்த மாத முற்பகுதியில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வாலை இலங்கைக்கு அனுப்பி வைத்தது.

சமரவீரவின் பயணம் வாஷிங்டனுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளும் முயற்சியாகும். அவர் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஜோன் கெர்ரி மற்றும் பிற மூத்த அதிகாரிகளை சந்தித்தார். பெப்ரவரி 12 அவர்கள் சந்திப்பதற்கு முன்னதாக நடந்த ஒரு கூட்டு செய்தியாளர் மாநாட்டின் போது, கெர்ரி இலங்கையின் "வரலாற்று தேர்தலை” பாராட்டினார். “உண்மையில் மாற்றத்துக்காக வாக்களிக்கப்பட்டுள்ளது, அது இலங்கை ஒரு புதிய திசையில் செல்வதற்கான வாக்களிப்பாகும்," என அவர் கூறினார்.

 சமரவீர பதிலளித்ததாவது: "நாங்கள் பல தசாப்தங்களாக அமெரிக்காவுடன் கொண்டிருந்த மிக வலுவான பிணைப்புக்களை மீண்டும் புதுப்பித்து வலுப்படுத்த எதிர்பார்க்கிறோம், ஆனால்... உண்மையில், அந்த உறவுகள் கடந்த சில ஆண்டுகளாக ஓரளவு முறிந்து போயிருந்தன. "

இதன் விளைவாக, சிறிசேன அரசாங்கம் சீனாவுடனான இராஜபக்ஷவின் திசையமைவை திட்டவட்டமாக துண்டிக்கும் என சமரவீர உறுதியளித்தார். "நான் நினைக்கிறேன், வரும் மாதங்களில் எமது உறவுகள் மீண்டும் முறியாதளவு சிறப்பான நிலையில் உறுதி செய்வதே என் வேலை... எமக்கு, புதிய நிர்வாகத்தைப் பொறுத்தளவில், அமெரிக்கா ஒரு அச்சுறுத்தல் அல்ல, மாறாக ஒரு பெரும் வாய்ப்பு ஆகும்," என அவர் கூறினார்.

பின்னர், வாஷிங்டனில் உள்ள தேசிய பத்திரிகையாளர் சங்கத்தில் உரையாற்றிய சமரவீர கூறியதாவது: "இந்த உறவுகளை நாம் விரிவுபடுத்தி வலுப்படுத்த வேண்டும் என்ற செய்தியுடன் நான் வந்துள்ளேன் மற்றும் நான் முன்னோக்கிய வழி பற்றி செயலாளர் கெர்ரி உடன் கலந்துரையாடினேன்." சமரவீர பத்திரிகையாளர் சங்கத்தில் பேச அழைக்கப்பட்டார் என்ற விடயம், அமெரிக்க அரசியல் ஸ்தாபனம் இலங்கையில் அரசாங்க மாற்றத்துக்கு கொடுத்துள்ள முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

அவரது பயணத்தின் முதல் நாள், பெப்ரவரி 11, சமரவீர ஒரு முக்கிய அமெரிக்க சிந்தனைக் குழாமானா சர்வதேச அமைதிக்கான கார்னிக் மானியத்தில் ஒரு பெரிய ஒன்று கூடலில் உரையாற்றினர். "அமெரிக்கா உடனான நம் உறவுகள் முடிந்தவரை விரிவானதாக, பல்வேறு பகுதிகளிலும் ஒத்துழைப்பை கொண்டதாக இருக்க" எமது அரசாங்கம் விரும்புகிறது என்று அவர் கூறினார். இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க மூலோபாய செயல்திட்டத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ள சிறிசேன அரசாங்கம் தயாராக உள்ளதை சமரவீர அடையாளம் காட்டினார்.

சமரவீரவின் அமெரிக்க விஜயத்தின் முக்கிய நோக்கம், இலங்கை மீது ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையை தாமதிக்க வாஷிங்டனின் உதவியை பெற்றுக்கொள்வதாக இருந்தது. சமீபத்திய ஆண்டுகளில், ஒபாமா நிர்வாகம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC), பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (LTTE) எதிரான தாக்குதலின் போது இராஜபக்ஷ அரசாங்கம் மற்றும் அதன் இராணுவம் செய்த போர் குற்றங்கள் தொடர்பாக தொடர் தீர்மானங்களை கொண்டவர அனுசரணை அளித்தது. இந்த தீர்மானங்கள் வாஷிங்டனின் சீன-விரோத "முன்னிலை"
கொள்கையின் வழிக்கு கொண்டு வர இராஜபக்ஷ அரசுக்கு நெருக்குவாரம் கொடுக்கும் முயற்சியாகும்.

.நா அறிக்கை, கடந்த மார்ச் மாதம் முன்வைக்கப்பட்ட அமெரிக்க அனுசரணையிலான தீர்மானத்திற்கு ஏற்ப நிறுவப்பட்ட ஒரு சர்வதேச விசாரணையின் விளைவு ஆகும். அது மார்ச் மாதம் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் தாக்கல் செய்யப்பட திட்டமிடப்பட்டிருந்தது. சிறிசேன அரசாங்கம், யுத்தக் குற்ற குற்றச்சாட்டுக்கள் பற்றி ஒரு "உள்ளக விசாரணை" நடத்த கொழும்பின் தயார் நிலையை மேற்கோள் காட்டி, இந்த தாமதத்தைக் கோரியது.

அவரது கார்னேஜ் என்டோவ்மென்ட் பேச்சின் போது, சமரவீர கூறியதாவது: "முந்தைய அரசாங்கம் போல், இத்தகைய மீறல்கள் நடைபெற்றிருக்கவில்லை என்று நாம் மறுக்கும் நிலையில் இல்லை... அத்தகைய மீறல்கள் நடந்தது என நாம் நம்புகின்றோம். இலங்கையில் மனித உரிமைகளை மீறியவர்களை நீதியின் முன் கொண்டு வருவோம் என்பதை உறுதி செய்யத் தயாராக இருக்கிறோம்."

எனினும், சிறிசேன போர்க் குற்றங்களுக்கு நேரடி உடந்தையாக இருந்தவர். அவர் இராஜபக்ஷவின் அமைச்சரவையில் ஒரு பிரதான நபராக இந்தது மட்டுமன்றி, பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட, புலிகளுக்கு எதிரான போரின் இறுதி வாரங்களில் அவர் மேலதிக பாதுகாப்பு அமைச்சராகவும் செயற்பட்டுள்ளார்.

 புதிய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை மறு சீரமைப்பை குறிப்பிட்டு, அமெரிக்க ஆளும் உயரடுக்கின் பிரிவுகள், போர் குற்ற பிரச்சினைகள் சம்பந்தமாக கொழும்புக்கு விட்டுக்கொடுப்புகளை கோருகின்றனர். இந்த அழைப்புகள், அமெரிக்க "மனித உரிமைகள்" பிரச்சினைகளை எழுப்புவது, அத்தகைய மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள், அல்லது அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான அக்கறையினால் அல்ல, மாறாக, அதன் பூகோள-மூலோபாய நலன்கள் அடிப்படையாகக் கொண்டதே ஆகும் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

புரூகிங்ஸ் நிறுவனத்துக்கு ஒரு "ஆலோசனை கட்டுரை" எழுதிய முன்னாள் கொழும்புக்கான அமெரிக்க தூதர் டெரேசிட்டா ஸ்சாப்பர், அரசாங்க மாற்றத்தை மேற்கோள் காட்டி, இலங்கையில் மனித உரிமை மீறல்கள் பற்றி "குரல் குறைத்துக்கொள்ள" வேண்டும் என அமெரிக்க அரசுத்துறைக்கு அழைப்பு விடுத்தார். நியூ யோர்க் டைம்சின் கடந்த வாரத் தலையங்கம் அறிவித்ததாவது: "சிறிசேன இலங்கை மிது ஒரு புதிய நம்பிக்கை அத்தியாயம் வரவேற்க வெகுவிரைவாக செயற்பட்டு வருகிறார்." அது ஐ.நா அறிக்கை ஒத்தி வைக்கப்படுவதற்கு ஆதரவளித்த அதே வேளை, ஐ.நா அறிக்கை வெளியிடப்படுவதை தாமதிப்பது "குறுகிய காலத்துக்கே" என்றும் கூறியுள்ளது.

பெப்ரவரி 16 அன்று, மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஆணையர், ஸெயிட் ராட் அல்-ஹுசைன், அறிக்கையை மார்ச்சில் இருந்து செப்டம்பருக்கு ஒத்தி வைக்க பரிந்துரைத்தார். இத்தகைய ஒத்திவைப்புக்கு தெளிவான அரசியல் கணக்கீடுகள் உள்ளன. தன் பங்கிற்கு, சிறிசேன அரசாங்கமானது 'வானவில் கூட்டணி' என சமரவீர வகைப்படுத்தியதை பாதுகாக்க விரும்புவதோடு, ஏப்ரலில் நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் இராஜபக்ஷ மீண்டும் ஆதரவு பெறும் வகையிலான எந்தவொரு பேரினவாத பிரச்சாரத்தில் இருந்தும் தலை தப்ப முயல்கின்றது.

சிறிசேன அரசாங்கத்தின் அமெரிக்க நோக்கிய கொள்கையில் விரைவான மாற்றத்தை ஏற்படுத்தியதில், அமெரிக்க நட்பு நாடுகள் மற்றும் மூலோபாய பங்காளிகளுடன் சிறந்த உறவை கட்டியெழுப்புவதும் அடங்கும். சமரவீரவின் முதல் வெளிநாட்டு பயணம் இந்தியாவுக்கானதாக இருந்தது. அமெரிக்க செல்லும் வழியில் அவர் லண்டனில் பிரிட்டனின் வெளியுறவு அலுவலக அமைச்சர் ஹ்யூகோ ஸ்வைர் ​​சந்தித்தார். ஸ்வைர் ​​ஜனவரி இறுதியில் கொழும்புக்கு விஜயம் செய்திருந்தார். சிறிசேன இந்த வாரம் ஜனாதிபதியாக தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டார்.

ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் இருந்து சீனாவிற்கு அத்தியாவசியமான எரிசக்தி மற்றும் மூலப் பொருட்களை கொண்டுவரும் பிரதான கடற் பாதையை துண்டித்து அதை மேலாதிக்கம் செய்வதையும் உள்ளடக்கிய வாஷிங்டனின் போர் ஏற்பாடுகளுடன் இலங்கை மேலும் நெருக்கமாக ஒன்றிணைந்துள்ளது. இந்த நிகழ்வுகள் வளர்ந்து வரும் போர் அபாயம் குறித்து, தெற்காசியா மற்றும் உலக முழுவதும் உள்ள தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு எச்சரிக்கையாகும்