சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

US ramps up anti-China “pivot to Asia”

அமெரிக்கா சீன-விரோத "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பை" பலப்படுத்துகிறது

Peter Symonds
14 March 2015

Use this version to printSend feedback

“21ஆம் நூற்றாண்டின் வல்லரசுக்கான ஒரு கூட்டு-ஒத்துழைப்பு மூலோபாயம்: முன்னேறுதல், ஈடுபடுதல், தயாராக இருத்தல்,” என்ற நேற்று வெளியிடப்பட்ட சமீபத்திய அமெக்க கடல்சார் மூலோபாய ஆவணமானது, வாஷிங்டன் அதன் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பையும்", சீனாவிற்கு எதிரான இராணுவ ஆயத்தப்படுத்தலையும் முன்னோக்கி அழுத்தி வருவதைத் தெளிவுபடுத்துகிறது. இவ்வாறு செய்வதன் மூலமாக அமெரிக்கா, போர் அபாயத்தை உள்ளடக்கிய, கிழக்கு மற்றும் தெற்கு சீன கடல்களில் பதட்டங்களைத் தொடர்ந்து தூண்டிவிட்டு வருகிறது.

அமெரிக்க கடற்படை, கடல்சார் படைப்பிரிவுகள் (Marine Corps) மற்றும் கடல்ரோந்துப்படை (Coast Guard) ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டதும், மற்றும் CS21R என்று சுருக்கமாக அறியப்படுவதுமான அந்த ஆவணம், 2007க்குப் பின்னர் முதல் பிரதான கடல்சார் மூலோபாய புதுப்பிப்பாகும். “கொந்தளிப்பு, ஸ்திரமின்மை, சிக்கல் மற்றும் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் சார்புதன்மையால் குணாம்சப்பட்ட ஒரு உலகளாவிய பாதுகாப்பு சூழலைக்" குறிப்பிடுகையில், அது "இந்தோ-ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அதிகரித்துவரும் முக்கியத்துவத்தின்" மீது ஒருமுனைப்படுகிறது. அத்துடன் அது "இந்த பரந்த கடல்சார் பிராந்தியத்தின் பொருளாதார முக்கியத்துவமும், மூலோபாய நலன்களும் மற்றும் புவியியல் நிலப்பரப்பும், அமெரிக்க நலன்களைப் பாதுகாப்பதற்கு கடல் படைகளை அதிகளவில் சார்ந்திருக்க கட்டளை இடுவதாக" வலியுறுத்துகிறது.

முக்கிய அமெரிக்க நலன்களைப் பாதுகாக்கவும் மற்றும் "நம்முடைய விரோதிகள் நமக்கு எதிராக உலக கடல்பகுதிகள் மீது பலம்பெறுவதை" தடுக்கவும் அமெரிக்கா அதன் உலகளாவிய கடற்படை மேலாதிக்கத்தைப் பேணுவது "தவிர்க்கவியலாததாகும்" என்று CS21R வலியுறுத்துகிறது. “நமது கடல்பகுதிகளிலிருந்து வெகுதூரத்தில் இருக்கும் சர்வதேச கடல்பரப்புகளில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆற்றல், அமெரிக்காவிற்கு தனித்துவமான ஆதாயத்தைக் கொண்டுள்ளது,” என்று அந்த ஆவணம் குறிப்பிடுகிறது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பெரிதும் கடற்படை மேலாதிக்கத்தைப் பேணுவதற்கான அந்த அமெரிக்க மூலோபாயம் குறித்து கனிவாக கூறுவதற்கு அங்கே ஒன்றுமில்லை. சீனாவிற்கு எதிரான போருக்கான பெண்டகனின் திட்டங்கள், “AirSea Battle” என்றழைக்கப்படும் அவை, ஒரு பொருளாதார தடையுடன் சேர்ந்து, சீனாவின் இராணுவ மற்றும் உள்கட்டமைப்பு உட்பட சீன பெருநிலப்பகுதியின் மீது ஒரு பாரிய கடலோர வான் தாக்குதல் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்துவதற்கான ஆற்றலின் மீது தங்கியுள்ளது. “கடல் போக்குவரத்து சுதந்திரத்தைப்" பாதுகாப்பதற்காக என்ற சாக்கில், அமெரிக்க கடற்படை, சீனாவால் ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கிலிருந்து எரிபொருள் மற்றும் மூலப் பொருட்களை இறக்குமதி செய்ய பயன்படுத்தப்படும் இந்திய பெருங்கடல் எங்கிலுமான முக்கிய கடல்வழித்தடங்களை மறிக்கும் தகைமையைக் கொண்டிருப்பதை உறுதி செய்து வருகிறது.

அமெரிக்க கடற்படை மற்றும் விமானப்படைகளின் 60 சதவீதத்தை, 2020 வாக்கில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வைத்து "மறுசமநிலை" செய்யும் அமெரிக்க இராணுவத்தின் திட்டங்களை CS21R ஆவணம் மறுஉறுதி செய்கிறது. “கடற்படையானது ஒரு தாக்கும் கப்பல் படைப்பரிவு (Carrier Strike Group), கப்பல் வான்படைப்பிரிவு (Carrier Airwing) மற்றும் நீலத்திலும் நீரிலும் தாக்குதலுக்கு தயாராக இருக்கும் குழு (Amphibious Ready Group) ஆகியவற்றை ஜப்பானில் பேணும்; குவாமில் ஏற்கனவே உள்ள ஒரு தாக்கும் நீர்மூழ்கி கப்பலையும்... சிங்கப்பூரில் முன்னோக்கி நிறுத்தப்பட்டுள்ள லிட்டோரல் போர் கப்பல்களின் எண்ணிக்கையை நான்காக [அதிகரிப்பதையும்] அத்துடன் சேர்த்துக் கொள்ளவும்... தற்காப்பு தகைமை கொண்ட பலரக ஏவுகணை செலுத்தும் கப்பல்கள்; நீர்மூழ்கி கப்பல்கள்; மற்றும் உளவுவேலை கண்காணிப்பு, மற்றும் வேவுபார்க்கும் விமானங்கள் உட்பட அப்பிராந்தியத்திற்கு கடற்படை அதன் அதிநவீன போரில் சண்டையிடும் உபகரணங்களையும் வழங்கும்,” என்று அந்த ஆவணம் குறிப்பிடுகிறது.

அதேபோல, கடல்சார் படைப்பிரிவுகள் அப்பிராந்தியத்தில் ஒரு கடல்சார் சாகச படையைப் பேணும், அத்துடன் ஆஸ்திரேலியாவில் நவீன போர்விமானங்கள் மற்றும் நிலத்திலும் நீரிலும் செல்லும் வாகனங்கள் மற்றும் "அத்தகைய படைகளுக்கு இந்த பரந்த பிராந்தியத்திற்குத் தேவையான தூரம் அதிகரிக்கப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட தகைமைகளோடு கூடிய" ஊர்திகள் ஆகியவற்றுடன் ஒரு கடல்சார் சுழற்சிமுறை படையையும் பேணும்.

சீனாவிற்கு எதிராக இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதிலும் அதன் கூட்டணிகள் மற்றும் மூலோபாய பங்காளித்தனத்தைப் பலப்படுத்தும் அமெரிக்காவின் உந்துதலே, அந்த மூலோபாயத்தின் ஒரே "கூட்டு-ஒத்துழைப்பு" அம்சமாக உள்ளது. "கடல் எல்லை உரிமைகோரல்களை வலியுறுத்த ஏனைய இறையாண்மை நாடுகளுக்கு எதிராக அது படையையோ அல்லது மிரட்டலையோ பயன்படுத்தும் போது" பிரதான "சவாலாக" அந்த ஆவணம் சீனாவை முன்னிறுத்துகிறது.

உண்மையில், சீனாவிற்கு எதிராக ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகியவை அவற்றின் கடல் பிராந்திய உரிமைகோரல்களை ஆக்ரோஷமாக வலியுறுத்துமாறு அவற்றை ஊக்குவித்ததன் மூலமாக, மேற்கு பசிபிக்கில் வாஷிங்டன் தான் கடல்சார் பிரச்சினைகளைத் திட்டமிட்டு தூண்டிவிட்டுள்ளது.

ஜப்பானில் சென்காயு என்றும், சீனாவில் தியாவு என்றும் அறியப்படும் மக்கள்வாழாத கிழக்கு சீன கடலின் கடல்குன்றுகளைத் "தேசியமயமாக்க" 2012இல் ஜப்பானிய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட ஆத்திரமூட்டும் முடிவே, ஒரு அபாயகரமான மற்றும் தீவிரமான மோதலை இயக்கத்திற்கு கொண்டு வந்தது. “ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஒருமுறையேனும், ஜப்பானிய F-15 போர் விமானங்கள்" சர்ச்சைக்குரிய தீவுகளுக்கு அருகில் "பெரும்பாலும் சீனாவிலிருந்து வரும் அன்னியநாட்டு விமானங்களை இடைமறிக்க ஓடுபாதையிலிருந்து கிளம்பி விடுகின்றன" என்று நியூ யோர்க் டைம்ஸ் நாஹாவில் உள்ள ஜப்பானிய விமானப்படை தளத்தளத்திலிருந்து இந்த வாரம் செய்தி வெளியிட்டது. சீன போர்விமானங்களின் "விமான ஓட்டும் திறன்கள் மற்றும் சுய-கட்டுப்பாட்டுக்கான முட்டியை-முறுக்கும் சோதனைகளை" அவர்கள் சில நேரங்களில் முகங்கொடுப்பதாக அது குறிப்பிட்டது.

அந்த கடல் எல்லை பிரச்சினையில் பெயரளவிற்கு அமெரிக்கா அதன் நடுநிலைமையை அறிவித்துள்ள போதினும், ஜனாதிபதி ஒபாமா கடந்த ஆண்டு பகிரங்கமாகவே சென்காயு/தியாவு தீவுகள் மீது சீனாவுடன் ஒரு போர் ஏற்பட்டால் ஜப்பானை ஆதரிக்க உறுதியளித்தார். “தீவு பாதுகாப்புக்கான" ஜப்பானிய கடல்சார் படைப்பிரிவுகளுக்கு பயிற்சியளிப்பது மற்றும் ஓர் அணுஆயுத போரில் சண்டையிட அவசியமான ஏவுகணை-தடுப்பு அமைப்புமுறைகளை அபிவிருத்தி செய்வது உட்பட, அமெரிக்க ஜப்பானிய இராணுவ ஒத்துழைப்பு வேகமாக முன்னோக்கி நகர்ந்து வருகிறது. ஜப்பானிய இராணுவம் நாஹாவில் மற்றொரு F-15 போர்விமானத்தை நிறுத்த திட்டமிட்டு வருவதுடன், பல தசாப்தங்களுக்குப் பின்னர் அதன் முதல் புதிய இராணுவ தளமாக யோனாகுனி தீவில் ஓர் ராடார் இராணுவ தளத்தையும் கட்டமைத்து வருகிறது.

தென்சீனக் கடலில் பதட்டங்களோ இன்னும் அதிகமாக நிரம்பியுள்ளன. சீனாவின் உரிமைகோரல்கள் அந்த கடலில் சர்வதேச சட்டத்தை மீறுகிறது என்று அறிவித்த வெளியுறவுத்துறை அறிக்கை ஒன்றை பிரசுரித்து, கடந்த டிசம்பரில் வாஷிங்டன், அப்பிராந்தியத்தின் கடல்சார் பிரச்சினைகளில் நடுநிலைமை வகிக்கும் பாசாங்குத்தனத்தைக் கூட உதறிவிட்டது. தென் சீனக்கடலின் மீது பெய்ஜிங்கின் உரிமைகோரல்களுக்கு, அமெரிக்கா, பிலிப்பைன்ஸினது ஒரு சட்டப்பூர்வ சவாலை, வியட்நாமால் ஆதரிக்கப்பட்ட ஒன்றை, திரைக்குப் பின்னாலிருந்து ஆதரித்து வருகிறது.

கடந்த மாதங்களில், அமெரிக்க ஊடங்களும், இராணுவமும் மற்றும் அரசியல் ஸ்தாபகமும், தென்சீனக் கடலில் சீனாவால் நிர்வகிக்கப்படும் தீவுகள் மற்றும் கடல்திட்டுக்களில் அது செய்து வரும் கட்டுமான திட்டங்களைக் கண்டித்து, சீனாவின் மீது அழுத்தத்தை அதிகரித்துள்ளன. கடந்த பெப்ரவரியில் அமெரிக்க செனட்டிற்கான கருத்துக்களில், தேசிய உளவுத்துறை இயக்குனர் ஜேம்ஸ் கிளாப்பர் அறிவிக்கையில், மூலோபாய கடல்தடங்களின் மீது கட்டுப்பாட்டைப் பாதுகாக்க சீனா "ஆக்ரோஷமான" முயற்சிகளைச் செய்து வருவதாக தெரிவித்தார். அமெரிக்க கடற்படை அப்பகுதியை அணுக முடியாதவாறு தடுக்கும் விமானதளங்களையும் ஏவுகணை தளங்களையும் சீனா கட்டமைத்து வருகிறது என்று கூறி, குடியரசு கட்சி செனட்டர் ஜோன் மெக்கெயின் இன்னும் மேலதிகமாக தூபமிட்டார்.

கடல்வழி போக்குவரத்திற்கான சுதந்திரம்" என்ற போர்வையில், அமெரிக்கா சீனப் பெருநிலத்தை ஒட்டி மற்றும் சீன இராணுவ தளங்களுக்கு அருகில் ஆபத்தான கடல்பகுதியில் கணிசமான கடல் ஆயுதபலத்தை நிலைநிறுத்துவதற்கான அதன் "உரிமையைப்" பேண தீர்மானகரமாக உள்ளது. அவற்றின் கடல் எல்லை பிரச்சினைகளில் வாஷிங்டன் ஆதரிப்பது பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமை மட்டுமல்ல, தென் சீனக் கடலில் ஒரு பெரும் இராணுவ பிரசன்னத்தைப் பேண அது ஜப்பான் மற்றும் இந்தியாவையும் ஊக்குவித்து வருகிறது.

இந்த CS21R ஆவணம் அமெரிக்க வெளியுறவு மற்றும் இராணுவ கொள்கையின் பொறுப்பற்ற குணாம்சத்தை அடிக்கோடிடுகிறது. உலக முதலாளித்துவ உடைவிற்கு விடையிறுப்பாக, அமெரிக்க ஏகாதிபத்தியம், ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் ஆகட்டும் அல்லது கிழக்கு ஐரோப்பா ஆகட்டும், அணு ஆயுதமேந்திய சக்திகளுடன்—சீனா மற்றும் ரஷ்யா உடன்—தவிர்க்கவியலாமல் ஒரு மோதலுக்கு எரியூட்டும் ஒரு மூலோபாயத்தைப் பின்தொடர்ந்து கொண்டே, என்ன விலை கொடுத்தாவது அதன் உலகளாவிய மேலாதிக்கத்தைப் பேணுவதற்கும் மற்றும் பலப்படுத்துவதற்கும் தீர்மானகரமாக உள்ளது.

பிரிட்டனை மையமாக கொண்ட Economist இதழால் அணுஆயுத போர் அபாயம் மேலுயர்த்திக் காட்டப்பட்டது. இந்த மாதம் “புதிய காலம்" (The New Age) என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரை, "பனிப்போர் முடிந்து ஒரு கால் நூற்றாண்டில், உலகம் அதிகரித்துவரும் அணுஆயுத மோதலின் அச்சுறுத்தலை முகங்கொடுக்கிறது,” என்று முடித்திருந்தது.

உக்ரேன் குறித்த போர் அபாயங்கள் மீது ஒருமுனைப்பட்டிருந்த போதினும், அக்கட்டுரை ஆசியாவில் ஓர் அணுஆயுத போட்டி மற்றும் மோதலைக் குறித்து எச்சரித்தது. “ஒரு நெருக்கடி, தாய்வான் மீதானது என்று வைத்துக் கொள்வோம், அதுவே எச்சரிக்கையூட்டும் வகையில் தீவிரமடையக்கூடும்,” என்று குறிப்பிட்டு, அந்த இதழ் எழுதியது, “சீனாவின் பாரம்பரிய இராணுவ பலத்தைப் பார்த்து, ஜப்பான், அது நீண்டகாலத்திற்கு அதன் பாதுகாப்பிற்காக அமெரிக்காவைச் சார்ந்திருக்க முடியாதென்று உணரக் கூடும். அவ்வாறாயின், ஜப்பானும் தென் கொரியாவும் குண்டுகளை நோக்கி போகும்—அது அப்பிராந்தியத்தில் மற்றொரு மரத்துப்போகச் செய்யும் விரோதத்தை வட கொரியா உடன் உருவாக்குகிறது.”