சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

US intensifies pressure on Iran at nuclear talks

அமெரிக்கா அணுஆயுத பேச்சுவார்த்தைகளில் ஈரான் மீது அழுத்தத்தைத் தீவிரப்படுத்துகிறது

By Peter Symonds
16 March 2015

Use this version to printSend feedback

ஈரானின் அணுஆயுத திட்டங்கள் மீது ஓர் உடன்பாட்டை எட்டுவதில் காலம் கடந்து கொண்டிருக்கையில், அமெரிக்கா இந்த வாரம் சுவிட்சர்லாந்தின் லோசானில் நடந்த பேச்சுவார்த்தைகளில் கணிசமான விட்டுக்கொடுப்புகளை வழங்க தெஹ்ரான் மீது அழுத்தத்தைத் தீவிரப்படுத்தி வருகிறது. நேற்றைய கருத்துரைகளில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி கூறுகையில், அதன் முறையீடுகளை ஈரான் பூர்த்தி செய்யவில்லையானால் பேச்சுவார்த்தை நடத்தும் மேசையிலிருந்து வெளிநடப்பு செய்ய அமெரிக்கா தயாராக உள்ளதைத் தெளிவுபடுத்தினார்.

ஓர் உடன்படிக்கையின் முக்கிய உட்கூறுகளை முடிவு செய்வதற்கான மார்ச் 31 இறுதிகெடுவிற்கு முன்னதாக, “முக்கிய இடைவெளிகள்" தீர்க்கப்பட வேண்டுமென கெர்ரி ஊடகங்களுக்கு தெரிவித்தார். “வெறுமனே எந்தவொரு உடன்பாட்டையும் எட்டுவது மட்டுமே" நோக்கமல்ல, “சரியான உடன்படிக்கை எட்டப்பட வேண்டும். நேரம் மிகவும் இன்றியமையாதது, கடிகார முள் ஓடிக் கொண்டிருக்கிறது, [ஈரானால்] முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டி உள்ளது,” என்றவர் தெரிவித்தார்.

கெர்ரி இன்று ஈரானிய வெளியுறவு மந்திரி மொஹம்மது ஜாவத் ஜரிப்பைச் சந்திக்க உள்ளார். அவர் இன்று மாலை பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அவரது சமதரப்பினரைச் சந்திக்க பயணிக்க திட்டமிட்டுள்ளார்.

ஈரானின் அணுசக்தி ஆலைகள் மீது அமெரிக்கா கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வலியுறுத்தி வருகிறது, அவை தளர்த்தப்படுவதற்கு முன்னதாக குறைந்தபட்சம் ஒரு தசாப்தமாவது நீடிக்கும் என நியூ யோர்க் டைம்ஸிற்கு கசிந்த அந்த பேரம்பேசுதல்களின் விபரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. "முறித்துக் கொள்ளும்" கால அவகாசத்தை குறைந்தபட்சம் ஓராண்டாவது உத்தரவாதப்படுத்தி வைப்பது வாஷிங்டனின் நோக்கமாக உள்ளது—அதாவது, இவை ஓர் அணுஆயுதத்திற்கு போதிய எரிபொருளை ஈரான் 12 மாதங்களாவது தயாரிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்தி வைக்கும் தடைகளாகும்.

அணுஆயுதம் தயாரிக்கும் எந்த திட்டமும் அதனிடம் இல்லை என்பதை தெஹ்ரான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி உள்ளது. அனைத்திற்கும் மேலாக, அணுஆயுத பரவல்தடை உடன்படிக்கையில் (NPT) கையெழுத்திட்டுள்ள நாடான அது, அதன் அனைத்து யுரேனிய செறிவூட்டும் ஆலைகளும், அணுசக்தி ஆலைகளும் மற்றும் சேமிப்பு கிடங்குகளும் ஏற்கனவே சர்வதேச அணுசக்தி முகமையால் (IAEA) உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

நியூ யோர்க் டைம்ஸின் செய்திப்படி, அணுசக்தி சார்ந்த நடவடிக்கை குறித்த சந்தேகத்தின் பேரில், இராணுவ தளங்கள் உட்பட அனைத்து தளங்களையும் உடனடியாக அணுகுவது உள்ளடங்கிய உத்தியோகபூர்வ உடன்படிக்கையை இறுதி செய்யப்படுவதற்கு அப்பாற்பட்டு, அமெரிக்கா ஓர் உயர்மட்ட அனுமதியில்லா ஆய்வையும் வலியுறுத்தி வருகிறது. NYT குறிப்பிட்டதைப் போல, இந்த "சரிபார்ப்பு" வழிமுறையானது, "எந்தவொரு நாட்டிலும் [IAEA] ஆய்வாளர்களால் பிரயோகிக்கப்படும் கடுமையான முறைமைகளையும் கடந்து" செல்கிறது.

இந்த முறையீடு வாஷிங்டனின் முழு போலித்தனத்தை உயர்த்திக் காட்டுகிறது. NPTஇல் கையெழுத்திட்டுள்ள ஒரு நாட்டிற்கு அவசியாகும் முறைமைகளை விட பெரிதும் கூடுதலான முறைமைகளுக்கு ஈரான் உடன்பட வேண்டுமென அது கோருகின்ற அதேவேளையில், இஸ்ரேலை நோக்கி அமெரிக்கா கண்களை மூடிக் கொள்கிறது. அந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டிராத இஸ்ரேல், ஏற்கனவே கணிசமான அணுஆயுதங்களை உற்பத்தி செய்து வைத்துள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரையில், அமெரிக்கா முற்றிலும் NPTஐ ஒன்றுமில்லாமல் ஆக்கும் ஓர் உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த உடன்படிக்கையோ தடை செய்யப்பட்ட அதன் அணு ஆயுதங்களின் சேமிப்புகளை வைத்திருக்க இந்தியாவை அனுமதிக்கிறது.

2011க்குப் பின்னரில் இருந்து அதன் எண்ணெய் ஏற்றுமதிகளைப் பாதிக்கும் அதிகமாக குறைக்க செய்து ஈரானிய பொருளாதாரத்தை முடமாக்கி உள்ள சர்வதேச தடைகளையும், சர்வதேச வங்கியியல் மற்றும் நிதியியலை அணுகுவதைத் தடுக்கும் தடைகளையும் உடனடியாக நீக்க வேண்டுமென்ற ஈரானின் முறையீடுகளையும் கெர்ரி நிராகரித்துள்ளார். உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பின்மை குறைந்தபட்சம் 13 சதவீதமாக உள்ள அதேவேளையில் ஏனைய மதிப்பீடுகள் அந்த புள்ளிவிபரங்களை 20 சதவீதத்தில் நிறுத்துகின்றன. பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கான ஓர் ஆரம்ப உடன்படிக்கை, மட்டுப்படுத்தப்பட்ட தடைநீக்கங்களை வழங்கியதற்கு முன்னர், 2013இன் மத்தியில் அதன் ஆண்டு பணவீக்க விகிதம் 50 மற்றும் 70 சதவீதத்திற்கு இடையே இருந்தது. அமெரிக்கா படிப்படியாக தடைகளை நீக்க பரிந்துரைக்கிறது.

அணுசக்தி உடன்படிக்கை மீது வாஷிங்டனில் ஆழ்ந்த வெடிப்புகள் உண்டாகி உள்ளன. கடந்த வாரம் ஒரு முன்னுதாரணமற்ற நகர்வாக, குடியரசு கட்சி செனட்டர்கள், எந்தவொரு அணுசக்தி உடன்படிக்கையும் அடுத்த ஜனாதிபதியால் விட்டொழிக்கப்படும் அல்லது காங்கிரஸ் நடவடிக்கை மூலமாக மாற்றப்படும் என்று எச்சரித்து தெஹ்ரானுக்கு ஒரு கடிதம் எழுதினர். ஒரு கூட்டு காங்கிரஸ் அமர்வில் ஈரானிய-விரோத வசை உரைகளை வழங்க இஸ்ரேலிய பிரதம மந்திரி பென்ஜமின் நெத்தெனியாகுவிற்கு ஒருதலைபட்சமாக அழைப்புவிடுத்த அக்கடிதம், அந்த பேச்சுவார்த்தைகளை வீணடிக்க மற்றும் ஒபாமா நிர்வாகத்தைப் பலவீனப்படுத்த ஒரு வெளிப்படையான முயற்சியாக இருந்தது.

கெர்ரி இந்த வாரயிறுதியில் திருப்பி தாக்கினார். பேச்சுவார்த்தைகளில் "நேரடியாக குறுக்கீடு செய்யும் கணக்குடன் பொய்யான தகவல்களைக்" குடியரசு கட்சியினர் திரித்து விடுவதாக அவர் CBSஇல் உரையாற்றுகையில் குற்றஞ்சாட்டியதோடு, ஏற்கனவே ஓர் உடன்படிக்கை செய்யப்பட்டுவிட்டதாக கூறும் எந்தவொரு கருத்தையும் நிராகரித்தார். செனட்டின் பெரும்பான்மை தலைவர் மிட்ச் மெக்கொன்னல், “நாங்கள் எதை மிகவும் மோசமான ஓர் உடன்படிக்கையாக கருதுகிறோமோ அதை ஜனாதிபதி முடிவு செய்ய உள்ளார்,” என்று நேற்று திரும்ப தாக்கினார்.

ஈரான் மீதான அமெரிக்க தடைகளை நீக்கும் ஒரு தீர்மானம் குறித்து அமெரிக்கா, ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் ஏனைய நிரந்தர உறுப்பு நாடுகளுடனும் —அதாவது பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனாவுடன்— பேச்சுவார்த்தைகளைத் தொடங்கி உள்ளது. அதுபோன்ற ஒரு நடவடிக்கை ஈரானுடன் ஓர் உடன்படிக்கையை தடுப்பதை அமெரிக்க காங்கிரஸிற்கு கடுமையாக்கும், ஏனெனில் எல்லா தடைகளும் இல்லையென்றாலும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தடைகளில் பல தற்போதைய ஐ.நா தீர்மானங்களின்படி செருகப்பட்டுள்ளன.

அந்த விவாதத்தில் நிலவும் வெறுப்புணர்ச்சி, ஈரான் உடனான ஓர் உடன்படிக்கை மீது அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்திற்குள் நிலவும் கூர்மையான கருத்து வேறுபாடுகளை எடுத்துக்காட்டுகிறது. அது சில பகுப்பாய்வாளர்களால் சீனா உடனான 1972 அமெரிக்க சமரசத்துடன் தொடர்படுத்தப்படுகிறது. அங்கே அமெரிக்க-சீன உறவுகளில் வெளிவந்திருக்கும் வெளிப்படையான கருத்துவேறுபாடுகள் உள்ளன என்றபோதினும், லோசானில் நடக்கும் பேச்சுவார்த்தைகள் வெறுமனே ஈரானிய அணுசக்தி திட்டங்கள் குறித்தது அல்ல. ரஷ்யா மற்றும் சீனாவுடன் வாஷிங்டன் அதன் மோதல்களைத் தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில், மத்திய கிழக்கில் வாஷிங்டனின் நலன்களைப் பாதுகாப்பதில் தெஹ்ரானின் உதவியைப் பெற ஒபாமா நிர்வாகம் முனைந்து வருகிறது.

சிரியாவில் ஓர் இடைமருவு ஆட்சியை ஸ்தாபிப்பதன் மீது சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் உடன் வாஷிங்டன் பேச்சுவார்த்தைத் தொடங்க பரிசீலிக்கக்கூடுமென நேற்று கெர்ரி சுட்டிக் காட்டினார்—இதுமாதிரியான ஒன்றை முன்னதாக வாஷிங்டன் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது என்பதோடு, அமெரிக்க வெளியுறவுத்துறையும் பின்னர் மறுத்திருந்தது. ஆனால் சிரியா உடனான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான ஒரு புதுப்பிக்கப்பட்ட அமெரிக்க இராஜாங்க நகர்வை கெர்ரி சுட்டிக்காட்டினார். மத்திய கிழக்கில் அசாத்தின் ஒரே கூட்டாளியான ஈரானைக் கெர்ரி பெயரிட்டு குறிப்பிடவில்லை என்றபோதினும், சிரிய ஜனாதிபதியை பேரம்பேசும் மேசைக்கு வர செய்வதில் அமெரிக்கா வெளிப்படையாக தெஹ்ரானின் உதவியை எதிர்பார்த்து வருகிறது.

இஸ்ரேல், சவூதி அரேபியா மற்றும் வளைகுடா அரசுகள் உட்பட மத்திய கிழக்கில் உள்ள நீண்டகால அமெரிக்க கூட்டாளிகளோ, ஈரானுடன் அதன் நீண்டகால மோதல்நிலையை முடித்துக் கொள்வதற்கான எந்தவொரு நகர்வுகளுக்கும் ஆழ்ந்த விரோதமாக உள்ளன. இஸ்ரேலும் சரி சவூதி அரேபியாவும் சரி இரண்டுமே ஈரானை அப்பிராந்தியத்தின் மேலாதிக்கத்திற்கு ஒரு அபாயகரமான விரோதியாக கருதுகின்றன. தெஹ்ரான் உடனான வாஷிங்டனின் உறவுகள், மத்திய கிழக்கில் அமெரிக்க மூலோபாயத்திற்கு மத்தியமாக இருந்த ஷா ரிஜா பாஹ்லாவியைப் பதவியிலிருந்து வெளியேற்றிய 1979 ஈரானிய புரட்சிக்குப் பின்னர் முறிந்து போயின. 2003இல் புஷ் நிர்வாகம் ஈராக் மீது படையெடுத்து, அதன் அடுத்த இலக்கு ஈரானில் ஆட்சி மாற்றம் என்று சமிக்ஞை காட்டிய பின்னர் உறவுகள் மேற்கொண்டும் மோசமடைந்து போயின.

குடியரசுக் கட்சியினரின் விமர்சனங்கள் இருந்தாலும் கூட, ஒபாமா நிர்வாகமோ, ஈரானுடனான எந்தவொரு உடன்பாடும் அமெரிக்க நிபந்தனைகளின் மீதே இருக்குமென்பதை மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளது. 2009இல் பதவி ஏற்றதற்குப் பின்னர், ஒபாமா “எல்லா சாத்தியக்கூறுகளும் மேசையின் மீது இருப்பதாக" வலியுறுத்தி உள்ளார்—அதாவது, ஈரானுக்கு எதிரான இராணுவ தாக்குதல்களும் அதில் உள்ளடங்கும். கெர்ரி சாத்தியமுள்ளதாக குறிப்பிட்டதைப் போல, தற்போதைய பேச்சுவார்த்தைகளில் இருந்து அமெரிக்கா "வெளிநடப்பு" செய்தால், குடியரசு கட்சியினர் மேலாளுமை செலுத்தும் காங்கிரஸிலிருந்து வரும் நடவடிக்கை எடுப்பதற்கான அமளிக்கு இடையே, இராணுவ சாத்தியக்கூறே மீண்டும் பெரிதாக அதிகரிக்கும்.

நேற்று வாஷிங்டன் போஸ்டில் பிரசுரிக்கப்பட்ட “ஈரானை தடுத்து நிறுத்த போர் ஒன்றே ஒரேவழி" என்று தலைப்பிட்ட ஒரு கருத்துரையில் நவ-பழமைவாதி ஜோஸ்னா முராவ்சிக் குறிப்பிடுகையில், ஈரானிய எதிர்நடவடிக்கைகள் விளைந்தாலும் கூட அதைத் தாக்குவதைத் தவிர ஒபாமா நிர்வாகத்திற்கு வேறு மாற்றீடு இல்லை என்றார். “ஆம், அங்கே இராணுவ நடவடிக்கைக்கான அபாயங்கள் நிலவுகின்றன. ஆனால் ஈரானின் அணுசக்தி திட்டமும் தற்பெருமை பேசும் அபிலாஷைகளும் உலகை மிகவும் அபாயகரமான இடமாக மாற்றியுள்ளன. ஒரு குண்டை தயாரிப்பதில் அது வெற்றியடைந்தால் அந்த அபாயம் பல மடங்கு அதிகரிக்கப்படும். ஐயோ, தடைகளும் உடன்படிக்கைகளும் கூட இதை தடுக்காது,” என்று அவர் முடித்தார்.

பாரிய பேரழிவுகர ஆயுதங்கள் குறித்த பொய்களின் அடிப்படையில் அமெரிக்க தலைமையிலான சட்டவிரோத 2003 ஈராக் படையெடுப்பிற்கு வக்காலத்துவாங்கியவர்களில் ஒருவர், இவ்விதத்தில் ஈரானிய அணுகுண்டுகள் குறித்த ஆதாரமற்ற வாதங்களின் அடிப்படையில் ஒரு புதிய ஆக்ரோஷ போரை முன்மொழிகிறார். ஈரானுக்கு எதிராக போர் தொடுப்பதில் ஒபாமா நிர்வாகத்திற்கு எந்த அடிப்படை ஆட்சேபனையும் இல்லை, ஆனால் அது அணுஆயுதமேந்திய ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிராக மேலதிகமாக இரக்கமற்ற மற்றும் அபாயகரமான மோதல்களுக்குத் தயாரிப்பு செய்து வருகின்ற நிலையில், தெஹ்ரானை நடுநிலையாக்கவோ அல்லது அதன் அணியில் ஒன்று திரட்டவோ விரும்புகிறது.