சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Loss for Socialist Party expected in French local elections

பிரெஞ்சு உள்ளாட்சி தேர்தல்களில் சோசலிச கட்சியின் தோல்வி எதிர்பார்க்கப்படுகிறது

By Antoine Lerougetel
17 March 2015

Use this version to printSend feedback

மார்ச் 22 மற்றும் 29இல் நடக்கவுள்ள பிரான்சின் 101 பிராந்தியங்களின் கவுன்சிலர்களுக்கான இரண்டு சுற்று தேர்தல்கள், ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் மற்றும் பிரதம மந்திரி மானுவெல் வால்ஸின் ஆளும் சோசலிஸ்ட் கட்சிக்கு (PS) அவமானகரமான ஒரு புதிய தோல்வியை உருவாக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. மரீன் லு பென்னின் நவ-பாசிச தேசிய முன்னணி (FN) குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

2014இன் நகரசபை மற்றும் ஐரோப்பிய தேர்தல்களில் வாக்குப்பதிவு விகிதங்கள் சாதனையளவிற்கு குறைந்ததிருந்ததற்கு இடையே ஏற்பட்ட PSஇன் மிகப் பெரிய இழப்புகளையும், FNஇன் வரலாற்று வெற்றிகளையும் பின்தொடர்ந்து, இந்த உத்தேச கணிப்பீடுகள் வருகின்றன.

கருத்துக்கணிப்புகளோ வாக்களிப்பவர்களின் 30 சதவீதத்தினரின் மனோபாவம் FNஐ நோக்கி இருப்பதாக மற்றும் 28 சதவீதம் பழமைவாத UMP(முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் மக்கள் இயக்கத்திற்கான யூனியன்) அல்லது UDI(ஜனநாயகவாதிகள் மற்றும் சுயேட்சைகளின் யூனியன்) நோக்கியும், 20 சதவீதம் சோசலிஸ்ட் கட்சியை (PS) நோக்கி இருப்பதாக காட்டுகின்றன.

கம்யூனிஸ்ட் கட்சியின் இடது முன்னணி கூட்டணி மற்றும் ஜோன் லூக் மெலென்சோனின் இடது கட்சி ஆகியவை 8.6 சதவீதம் பெறுகின்றன, பசுமை கட்சி 4 சதவீதமும், போலி-இடது புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA) மற்றும் LO (தொழிலாளர்கள் போராட்டம்) 1.5 சதவீதமும் பெறுகின்றன. இது 2002 ஜனாதிபதி தேர்தல்களில் அவ்விரு போலி-இடது கட்சிகளும் பெற்ற ஒருங்கிணைந்த 10 சதவீத வாக்குகளை விட மிகவும் குறைவாகும். இது 2012இல் ஹோலாண்டிற்கான அவர்களது ஆதரவின் மீது ஏற்பட்ட பரந்த ஏமாற்றத்தைப் பிரதிபலிக்கிறது.

இடது கட்சியோ, சோசலிஸ்ட் கட்சிக்கான அவர்களது ஆதரவால் மதிப்பிழந்து போய், PS மீதான தொழிலாள வர்க்கத்தின் கோபத்திற்கு அஞ்சி, அது இந்த பிராந்திய தேர்தல்களில் பசுமை கட்சியினருடன் ஓர் கூட்டணியைப் பரிந்துரைத்து வருகிறது. இடது முன்னணி மற்றும் பசுமை கட்சி இரண்டினதும் சோசலிஸ்ட் கட்சி உடனான நீண்டகால கூட்டணியை மூடிமறைக்கவும் அது முயன்று வருகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்டதும், பிராந்திய கவுன்சில்கள் சோசலிஸ்ட் கட்சியால் கட்டளையிடப்பட்ட பள்ளிகள் மற்றும் சமூக வீட்டுத்துறை, முதியவர்கள் மற்றும் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவிகள், விளையாட்டுத்துறை மற்றும் கலாச்சாரத்துறை உதவிகள் ஆகியவற்றின் மீதான கடுமையான வெட்டுக்களை மேற்பார்வையிட வேண்டியதிருக்கும். சுகாதாரத்துறை வரவு-செலவு திட்டக்கணக்கு வெட்டுக்களில் 3 பில்லியன் உட்பட இத்தகைய வெட்டுக்களானது, 60,000 கட்டுமானத்துறை வேலைகள் மற்றும் 22,000 சுகாதாரத்துறை வேலைகளை வெட்டுவதற்கு இட்டுச் செல்லுமென மதிப்பிடப்படுகிறது.

போலி-இடது கட்சிகளின் ஆதரவுடன் சோசலிஸ்ட் கட்சி சிக்கன கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகையில், தொழிலாள வர்க்கத்திற்காக பேசும் ஒரு கட்சி இல்லாத நிலையில், அதிவலது FN, சிக்கன நடவடிக்கைகளுக்கான ஒரே எதிர்ப்பாக உணர்ச்சிகரமாக காட்டிக் கொள்ள முடியும். இந்த மிகையதார்த்த சூழலில், முதலாளித்துவ கொள்கைகளுடன் தீவிரமடைந்து வரும் தொழிலாள வர்க்க அதிருப்தி பெரிதும் குறைந்த வாக்குப்பதிவிற்கு இட்டுச் செல்லும், மற்றும் தேர்தல்களில் FNஇன் உயர்வில் அது பிரதிபலிக்ககூடும்.

UMP/UDI கூட்டணி 60 பிராந்தியங்கள் வரையில் கட்டுப்பாட்டை எடுக்கக்கூடுமென்றும், அதேவேளையில் சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் கூட்டணிகள் தற்போது வைத்திருக்கும் 60 துறைகளில் 20ஐ இழக்கக்கூடுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது சுற்றில் 1,000 உள்ளாட்சிகளில் (cantons) UMP-FN மற்றும் 700இல் UMP-PS உடனான போட்டியுடன், 300 உள்ளாட்சிகளில் FN-PS போட்டியும் இருக்குமென எதிர்நோக்கப்படுகிறது. ஆகவே பல்வேறு கட்சிகள் அவற்றின் வேட்பாளர்கள் முதல் சுற்றில் வெளியேற்றப்பட்டால், அடுத்த சுற்றில் யாரை அவர்கள் ஆதரிப்பது என்று விவாதித்து வருகின்றன.

பிரதம மந்திரி வால்ஸ் FNஐ குற்றஞ்சாட்டுவதன் மூலமாக வாக்காளர்களை PSக்குப் பின்னால் இழுக்க முயன்று வருகிறார். “அதிகாரத்தின் விளிம்பில்" இருக்கும் தேசிய முன்னணியால், எனது நாடு சின்னாபின்னமாகிவிடுமோ" என்று அவர் அஞ்சுவதாக தெரிவித்தார். பிரான்சிற்கு "ஒரு எழுச்சிமிக்க நனவு" அவசியப்படுகிறது, ஏனென்றால் FNஇன் வெற்றி "நாட்டிற்கு பேரழிவுகரமாக இருக்கும் என்பதோடு பிரெஞ்சு மக்களுக்கு நாசகரமாக இருக்குமென" அவர் தெரிவித்தார்.

இந்த அச்சமூட்டல் வாக்காளர்களை PS வேட்பாளர்களை நோக்கி ஒன்றுதிரட்டுமென எரிச்சலூட்டும் விதத்தில் வால்ஸ் நம்புகிறார். இருந்தாலுமே கூட அவர் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் அதன் மக்கள் விரோத, தொழிலாள வர்க்க விரோத கொள்கைகளை தொடருமென தம்பட்டம் அடித்து வருகிறார்.

சோசலிஸ்ட் கட்சி அதன் வாக்காளர்களை இரண்டாவது சுற்றில் FNக்கு எதிராக UMP/UDIக்கோ, “குடியரசு முன்னணி" என்றழைக்கப்படுவதற்கோ வாக்குகள் அளிக்குமாறு கோருமென்பதை அது தெளிவுபடுத்திவிட்டது. அதேபோல இரண்டாவது சுற்றில் PS-FNக்கான போட்டியில் PSக்கு வாக்களிக்க கோருமாறு வால்ஸ் UMPஐ கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த பிரச்சினை ஏற்கனவே கடந்த மாதம் Doubs பிராந்திய சட்டமன்ற இடைதேர்தலில் UMP வந்தபோது, அதில் ஒரு பிளவை உருவாக்கி இருந்தது. சோசலிஸ்ட் கட்சி FNஆல் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது; UMP வெளியேற்றப்பட்டது. UMP தலைவர் நிக்கோலா சார்க்கோசி FNக்கு எதிராக வாக்களிக்குமாறு அழைப்புவிடுத்தபோது, அவர் UMP தேசிய கமிட்டியின் சிறுபான்மையினருக்குள் தள்ளப்பட்டார். FN உடன் UMP உறுப்பினர் யாரேனும் கூட்டு சேர்ந்தால், அவர்கள் வெளியேற்றப்படுவார்களென அவர் எச்சரித்தார், ஆனால் பலர் அவ்வாறு செய்வார்கள் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

FNக்கு எத்தனை பிராந்தியங்கள் கிடைக்குமென்பது தெளிவாக தெரியவில்லை, இப்போதைக்கு அதற்கு ஒரேயொரு கவுன்சிலரே உள்ளார். Vaucluse, Aisne, Oise மற்றும் Var பிராந்தியங்களில் FN பெரும்பான்மை பெறும் சாத்தியக்கூறு உள்ள நிலையில், 100 FN கவுன்சிலர்களாவது தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கருதப்படுகிறது. அனேகமாக அங்கே பல தொங்கு கவுன்சில்கள் ஏற்படக்கூடும், அவற்றில் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கப்படுவதை தீர்மானிக்கும் வாக்குகளை FN வழங்கக்கூடும்.

"ஒரு நிர்வாகியைத் தேர்ந்தெடுக்க, சாத்தியமான கூட்டணிகளுக்காக நான்கு அல்லது ஐந்து நிபந்தனைகள்—வேலைத்திட்ட புள்ளிகளை" FN முன்வைக்குமென மரீன் லு பென் கடந்த வாரம் குறிப்பிட்டார்.

லு பென் ஒரு தேசிய அரங்கில் FNஐ ஸ்தாபிக்கும் வகையில் கவுன்சிலர்களின் ஒரு வலையமைப்பை உருவாக்க முயலவில்லை, மாறாக அவர் 2017 ஜனாதிபதி தேர்தல்களில் அதிகாரத்திற்கு வரும் முயற்சியாக கூட்டணிகளை உருவாக்க UMP உறுப்பினர்கள் மற்றும் வாக்காளர்களை அணுகி வருகிறார்.

கடந்த மாதம் FN இன் கௌரவ தலைவர் ஜோன்-மரீன் லு பென் பிராந்திய தேர்தல்களில் UMP மற்றும் FNக்கு இடையே கூட்டணியைக் கட்டமைக்க வாய்ப்பை வழங்கினார், ஆனால் சார்க்கோசி அதை நிராகரித்தார்.