சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா :  உக்ரேன்

Russian President Putin says Ukraine crisis threatens nuclear war

உக்ரேனிய நெருக்கடி அணுஆயுத போருக்கு அச்சுறுத்துவதாக ரஷ்ய ஜனாதிபதி புட்டின் கூறுகிறார்

By Alex Lantier
17 March 2015

Use this version to printSend feedback

ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் ஞாயிறன்று ஒளிபரப்பான ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் உடனான நேர்காணல்களை கொண்ட ஓர் ஆவணப்படத்தின்படி, கடந்த ஆண்டு பெப்ரவரி 21-22 இல் உக்ரேனிய தலைநகர் கியேவில் நடந்த மேற்கு-ஆதரவிலான ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னர், ரஷ்யா அணுஆயுத போருக்கு தயாரிப்பு செய்திருந்தது.

ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள் உடனான முழு-இரவு பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், புட்டின் பெப்ரவரி 23 அன்று அதிகாலை ரஷ்யாவிடம் கிரிமியா திரும்ப வருவதற்கு தயாரிப்புகளைச் செய்ய முடிவெடுத்தார். கிரிமியாவின் பெரிதும் இனரீதியிலான ரஷ்ய மக்களையும், செவஸ்டோபோலில் உள்ள மூலோபாய ரஷ்ய கடற்படை தளத்தையும் தீவிர வலது உக்ரேனிய தேசியவாத போராளிகள் குழுக்கள் தாக்கக்கூடும் என்று அஞ்சி, செவஸ்டோபோல் தளத்தின் மீது செய்யப்பட்டிருந்த ரஷ்ய ஒப்பந்த விதிமுறைகளின் கீழ் கிரிமியாவில் நிலைநிறுத்தி இருந்த படைகளை ரஷ்யா ஆயத்தப்படுத்தியது.

இறுதியில் கிரிமியா மக்கள் ரஷ்யாவுடன் மீண்டும் இணைய வாக்களித்தனர், கிரிமியாவில் இருந்த கியேவ்-ஆதரவு படைகளோ எதிர்ப்பு காட்டவில்லை என்பதோடு, கிரிமியா பாதிப்பில்லாமல் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது. “நாங்கள் நிலைமையைக் கண்காணித்தோம், எங்களது தளவாடங்களைக் உள்ளே கொண்டு வர வேண்டியிருந்தது,” புட்டின் தெரிவித்தார். “முதல் தாக்குதலிலேயே அவர்கள் துடைத்தழிக்கப்பட்டிருப்பார்கள்.”

எவ்வாறிருந்த போதினும் புட்டினின் கருத்துப்படி, கிரெம்ளினும் ரஷ்ய இராணுவமும் அவர்களது திட்டங்களை தொடங்கியபோது, நேட்டோ போருக்குள் இறங்குவதன் மூலமாக விடையிறுப்பு காட்டுமா என்பது அவர்களுக்குத் தெரியாது: “இதை உடனடியாக புரிந்து கொள்ள முடியாது. ஆகவே அந்த வேலையின் முதல் கட்டத்தில், சூழ்நிலைக்கேற்ப நான் எங்களது ஆயுத படைகளுக்கு வழிகாட்ட நிர்பந்திக்கப்பட்டேன். மேலும் வெறுமனே வழிகாட்டுவது மட்டுமல்ல, மாறாக சம்பவங்களின் எந்தவொரு அபிவிருத்திக்கும் ஏற்ப ரஷ்யாவின் சாத்தியமான நடவடிக்கை குறித்தும் மற்றும் எமது ஆயுதப் படைகளைக் குறித்தும் நேரடியான கட்டளைகள் மற்றும் குறிப்புகளையும் கூடத் தான்.”

சம்பவங்களின் மிக மோசமான அபிவிருத்திக்கும்" அவர் தயாராக இருந்ததாக புட்டின் தெரிவித்தார். அந்த நேர்காணல் தெளிவுபடுத்துவதைப் போல, இது நேட்டோவுடன் ஒரேயடியான அணுஆயுத போரை குறிப்பிடுவதாக இருந்தது. கிரெம்ளின் அதன் அணுஆயுத படைகளை ஆயுதமேந்த செய்ய தயாரிப்பு செய்திருந்தது, புட்டின் கூறினார்: “நாங்கள் இதை செய்ய தயாரிப்பு செய்திருந்தோம். நான் மேற்கத்திய சக அதிகாரிகளோடு பேசி வந்தேன். [கிரிமியா] வரலாற்றுரீதியில் எங்களது பிராந்தியம், அங்கே ரஷ்ய மக்கள் வாழ்கிறார்கள், அவர்கள் ஆபத்தில் இருந்தார்கள், அவர்களை எங்களால் கைவிட முடியாது என்பதை நான் அவர்களுக்கு கூறி வந்தேன்,” என்றார்.

அவர் பின்னர் தொடர்ந்து கூறுகையில், “எங்களது அணுஆயுத படைகளைப் பொறுத்த வரையில், எப்போதும் போலவே, அவர்கள் முழு தாக்குதலுக்குத் தயார் நிலையில் உள்ளனர்,” என்றார்.

எந்தவித சாத்தியமான அபிவிருத்திக்கும் ரஷ்ய இராணுவத்தை அவர் தயார் செய்திருந்ததாக கூறும் புட்டினின் அறிக்கையின் உள்நோக்கங்கள் நிலைகுலைய வைக்கின்றன. வாஷிங்டனோ, முதலில் அணுஆயுத தாக்குதலைத் நடத்த மாட்டோம் என்பதற்கு "முதல் பிரயோகம் இல்லை" என்ற உறுதிமொழியை அது ஒருபோதும் வழங்கி இருக்கவில்லை. ரஷ்யா மீது அமெரிக்க-தலைமையிலான நேட்டோ ஆணுஆயுத தாக்குதலுக்குரிய சமிக்ஞைகளுக்கே ஒரு முழு அளவிலான விடையிறுப்பு அளிக்க தயாராக, ரஷ்யாவின் அணுஆயுத படைகள் ஒரு மயிரிழையில் சுண்டிவிட நிறுத்தப்பட்டிருந்ததாக தான் இதை கருத வேண்டும்.

அந்த விபரங்கள் இயல்பாகவே இரகசியமானவை என்றபோதினும், உள்வரும் நேட்டோ ஏவுகணைகள் அதன் தரையைத் தொட்டு நிர்மூலமாக்குவதற்கு முன்னதாக, அதுபோன்றவொரு விடையிறுப்பு நிமிடங்களில் பாரியளவில் ரஷ்ய ஏவுகணைகள் ஏவப்படுவதை உள்ளடக்கி இருக்கும். ஆயிரக் கணக்கான ஏவுகணைகள் — 1945இல், நூறு ஆயிரக் கணக்கானவர்களைப் படுகொலை செய்த ஹிரோஷிமா மற்றும் நாகசாகியை அழித்த அமெரிக்க குண்டுகளை விட சக்தி வாய்ந்த அவை ஒவ்வொன்றும் — வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா எங்கிலும் இராணுவ தளங்கள் மீதும், தொழில்துறை உள்கட்டமைப்பு மீதும், தகவல் தொடர்புகள் மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் மீதும் மழையென பொழியும்.

உக்ரேன் நெருக்கடி முழுவதிலும் உலக சோசலிச வலைத் தளத்தால் செய்யப்பட்ட எச்சரிக்கைகளைப் புட்டினின் கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன. மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH17 தகர்க்கப்பட்டதற்குப் பிந்தைய அமெரிக்க ஆத்திரமூட்டல்களுக்கு இடையே, WSWS எழுதுகையில், “அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ரஷ்யாவிற்கு இடையே—அணுஆயுத போரின் சாத்தியக்கூறு உட்பட—போருக்கு நீங்கள் தயாரா? இந்த கேள்வியைத் தான் ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்ள வேண்டும்...” என்று எழுதியது.

ரஷ்ய-ஆதரவிலான ஜனாதிபதி விக்டொர் யானுகோவிச்சிற்கு எதிரான ஒரு ஆட்சிக்கவிழ்ப்பை ஆதரிப்பதிலும் மற்றும் கியேவில் ஒரு தீவிர வலது ஆட்சியை நிறுவுவதிலும் வாஷிங்டன் மற்றும் பேர்லினின் தலையீடே, ஆரம்பத்திலிருந்து உக்ரேனிய நெருக்கடியின் உந்துசக்தியாக இருந்துள்ளது. இது மனிதயினத்தின் உயிர்வாழ்வையே அச்சுறுத்தும் ஒரு அணுஆயுத மோதல் அபாயத்தை முன்னிறுத்தும் வகையில், யுரேஷியா முழுவதும் அமெரிக்கா மேலாதிக்கத்தை ஸ்திரப்படுத்துவதற்கான ஒரு பரந்த, ஆக்ரோஷமான நிகழ்ச்சி நிரலின் பாகமாக இருந்துள்ளது.

முதலாளித்துவ சொத்துடைமையை பாதுகாப்பதன் அடிப்படையிலும் மற்றும் தேசியவாதத்தின் அடிப்படையிலும், ஏகாதிபத்திய தாக்குதலுக்கு புட்டின் ஆட்சியின் விடையிறுப்பானது, பிற்போக்குத்தனமானதும் மற்றும் அரசியல்ரீதியில் திவாலானதுமாகும். 1991இல் சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ மீட்சியிலிருந்து எழுந்த ஊழல்பீடித்த ரஷ்ய வணிக செல்வந்த அடுக்கு, சர்வதேச அளவில் நிலவும் பாரிய போர் எதிர்ப்புக்கு முறையீடு செய்ய தகைமையற்றுள்ளது. அது அச்சுறுத்திவரும் அணுஆயுதப் போருக்கும் மற்றும் ஏகாதிபத்தியத்துடன் ஒரு சமரசத்தை எட்டுவதற்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

ஒரு மிகவும் ஆக்ரோஷமான நடவடிக்கை போக்கை எடுப்பதற்கு, ரஷ்ய இராணுவத்திடமிருந்து ஆரம்பத்தில் புட்டின் அழுத்தத்தை முகங்கொடுத்ததை அந்த தொலைக்காட்சி நேர்காணல் எடுத்துக்காட்டியது. தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வதற்கு ரஷ்யா தயாராக இருப்பதை எடுத்துக்காட்ட, "இருக்கும் எல்லா வழிவகைகளையும்" பிரயோகிக்குமாறு "இராணுவ வல்லுனர்கள்" பரிந்துரைத்த ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக அறிக்கைகளை அந்த ஒளிபரப்பு மேற்கோளிட்டது.

எவ்வாறிருந்த போதினும் அந்த நேர்காணலில், புட்டின் அந்நெருக்கடியைக் குறைத்துக் காட்டினார். “சூழ்நிலையின் சிக்கலானதன்மை மற்றும் வேகமான இயல்பு இருந்தாலும் கூட, பனிப்போர் முடிந்துவிட்டது, மேலும் கரீபியனில் ஏற்பட்ட ஒன்றைப் போல [1962 கியூபா ஏவுகணை நெருக்கடி] நமக்கு சர்வதேச நெருக்கடிகள் வேண்டியதில்லை. அனைத்திற்கும் மேலாக அதற்குப் பிந்தைய இப்போதைய நெருக்கடி அதுபோன்ற நடவடிக்கைகளுக்கான அவசியத்தை கொண்டு வந்திருக்கவில்லை, மேலும் அது நமது சொந்த நலன்களோடு முரண்படக்கூடும்,” என்றார்.

கியேவ் ஆட்சிக்கவிழ்ப்பிற்கு சதித்திட்டம் தீட்டியதாக வாஷிங்டனை புட்டின் குற்றஞ்சாட்டிய போதினும், நேட்டோவின் கரங்களில் அணுஆயுத நிர்மூலமாக்கல் குறித்த ரஷ்யாவின் அச்சங்களை விவரித்திருந்த போதும் கூட, அமெரிக்க அதிகாரிகளை அவர் "நமது அமெரிக்க நண்பர்களும் பங்காளிகளும்" என்று பொருந்தாத வகையில் குறிப்பிட்டார்.

உண்மையில், நிலைமை என்னவென்றால், பெரும்பான்மை பனிப்போர் காலத்தில் இருந்ததை விடவும் நிலைமை இப்போது மிகவும் ஆபத்தாக உள்ளது. கியேவ் ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னர் கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ இராணுவ கட்டமைப்புக்கு இடையே, நாற்பது "மிக அருகில் தவறிய" சம்பவங்கள் நேட்டோ மற்றும் ரஷ்ய விமானங்களை நேரடியான மோதலுக்கு மிக நெருக்கமாக கொண்டு வந்திருந்ததாக கடந்த ஆண்டு இலண்டனை மையமாக கொண்ட ஒரு சிந்தனை குழாமின் அறிக்கை ஒன்று குறிப்பிட்டது. ஜேர்மன் செய்தி இதழ் Der Spiegel மற்றும் முன்னாள் சோவியத் பிரதமர் மிக்கெல் கோர்பசேவ்வும் உலக போர் அபாயம் குறித்து எச்சரித்துள்ளனர்.

ஏகாதிபத்தியத்தின் ஆக்ரோஷமான பாத்திரம், ஆக்ரோஷமான அணுஆயுதப் போர் கொள்கை ஏற்பது குறித்து அமெரிக்க ஆளும் வட்டாரங்களில் நிலவும் விவாதங்களால் மேலுயர்த்திக் காட்டப்படுகிறது. இது கீர் லீபர் மற்றும் டார்ல் பிரஸ் ஆகிய இரண்டு பேராசிரியர்களால், 2006இல், அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் முன்னணி வெளியுறவு கொள்கை ஆய்விதழான Foreign Affairs இன் கட்டுரையில் தொகுத்தளிக்கப்பட்டிருந்தது.

ரஷ்யா மற்றும் சீனாவின் நீண்டதூர அணுஆயுதங்களை அனேகமாக அமெரிக்கா விரைவிலேயே ஒரே தாக்குதலில் அழிக்க வேண்டியதிருக்கும்,” என்று அவர்கள் எழுதினர். முதலாளித்துவ மீட்சிக்குப் பின்னர் ரஷ்ய உள்கட்டமைப்பு நிலைகுலைந்ததன் காரணமாக, ரஷ்யா ஒருசில அணுஆயுத ஏவுதளங்களையோ அல்லது இடம்விட்டு இடம் நகர்த்தக்கூடிய ஏவுகணை ஏவுகளங்களையோ தான் கொண்டிருக்கிறது; அதன் பெருந்தொலைவுக்குப் பாயும் ஏவுகணைகளை ஏவும் நீர்மூழ்கி கப்பல்களோ, பெரும்பாலான அவற்றின் நேரத்தை இயக்கமின்றி துறைமுகங்களிலே தான் செலவிட்டன. இவை அனைத்தும் ஒரு பாரிய, முன்கூட்டிய அமெரிக்க அணுஆயுத தாக்குதலால் அழித்துவிட முடியும்.

லீபர் மற்றும் பிரஸின் கருத்துப்படி, ரஷ்யா மற்றும் சீனாவை நிராயுதபாணியாக்க ஒரு முன்கூட்டிய அணுஆயுத தாக்குதலை வாஷிங்டன் இப்போது சிந்தித்து வரக்கூடும். அணுஆயுத போரின் கணினிமயப்பட்ட மாதிரிகளை எடுத்துக்காட்டி அவர்கள் எழுதுகையில், “ரஷ்யாவின் ஒவ்வொரு குண்டுவீச்சு தளத்தையும், நீர்மூழ்கி கப்பல் மற்றும் ICBMஐ அழிப்பதற்கு திடீர் [அணுஆயுத] தாக்குதல் ஒரு நல்ல வாய்ப்பைக் கொண்டிருக்கும்,” என்றனர். இடம்விட்டு இடம் நகர்த்தக்கூடிய தரைவழி அணுஆயுத ஏவுகணைகளோ அல்லது ஆற்றல்மிக்க பெருந்தொலைவு பாயும் ஏவுகணை நீர்மூழ்கி கப்பல்களோ இல்லாமல், சீனாவின் அணுஆயுத தளவாடங்கள் "ஓர் அமெரிக்க தாக்குதலுக்கு இன்னும் அதிக பலவீனத்துடன் இருப்பதையும்" அவர்கள் சேர்த்துக் கொண்டனர்.

இருப்பினும், அமெரிக்க வெளியுறவுத்துறை கொள்கையின் சில வட்டாரங்களில் அதுபோன்றவொரு கொள்கையைக் குறித்து கவலைகள் நிலவுவதையும் அவர்கள் குறிப்பிட்டனர்: “நிறைய ஏவுகணைகள், நீர்மூழ்கி கப்பல்கள், மற்றும் குண்டுவீசிகளை தயாரிப்பதன் மூலமாக; ஒவ்வொரு ஆயுதத்திலும் நிறைய வெடிகுண்டுகளை நிரப்புவதன் மூலமாக; சமாதானகாலங்களிலும் அவற்றின் அணுஆயுத படைகளை பெரும் எச்சரிக்கை மட்டங்களில் வைப்பதன் மூலமாக; மேலும் மயிரிழையில் சுண்டிவிட எதிர்நடவடிக்கை கொள்கைகளைக் கொண்டிருப்பதன் மூலமாக... ரஷ்யாவும் சீனாவும் அவற்றின் பாதிப்பைக் குறைத்துக் கொள்ள வேகமாக வேலை செய்யக்கூடும். எதிர்பாராவிதமாக, அங்கீகரிக்கப்படாத, அல்லது —குறிப்பாக நெருக்கடி சந்தர்ப்பங்களின் போது—திட்டமிட்டே செய்யப்பட்டதாக இருந்தாலுமே கூட அத்தகைய அணுஆயுத போரின் ஆபத்தானது, பல தசாப்தங்களாக பார்த்திராத மட்டங்களுக்கு கடுமையாக இருக்கும்.”

உக்ரேனிய நெருக்கடி மீதான புட்டினின் கருத்துக்கள், உண்மையில் அதுபோன்ற ஆபத்துக்கள் நெருங்கி வந்து கொண்டிருக்கின்றன என்பதைத் தெளிவுபடுத்துகிறது. அணுஆயுத போட்டி, போர் அபாயத்திற்கு ஒப்ப தீவிரமடைந்து வருகிறது.

அமெரிக்காவும் ரஷ்யாவும் அணுஆயுத குறைப்பு மீதான அவர்களின் ஒத்துழைப்பை முடித்துக் கொள்வதென ஜனவரியில் அறிவித்ததற்கு முன்னதாக, ஒபாமா நிர்வாகம் அமெரிக்க அணுஆயுத மேம்படுத்தலுக்கு 1 ட்ரில்லியனுக்கும் அதிகமாக செலவிடும் திட்டங்களைக் கடந்த ஆண்டு வெளியிட்டது.

ரஷ்யாவும் சீனாவும் அமெரிக்காவின் முதல் அணுஆயுத தாக்குதலைத் தடுக்கும் ஆற்றலை அபிவிருத்தி செய்யும் நம்பிக்கையில், பில்லியன் கணக்கிலான டாலர்களை அவற்றின் அணுஆயுத தளவாடங்களுக்குள் பாய்ச்சி வருகின்றன. ரஷ்யா அதன் அணுஆயுதங்களைப் பரந்தளவில் நவீனப்படுத்த தொடங்கியுள்ளது, அது அடுத்த தசாப்தத்தின் தொடக்கத்தில் பலன்கொடுக்கத் தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இடம்விட்டு இடம் நகர்த்தக்கூடிய ஏவுகளங்கள் மீது அமைக்கப்படும் அணுஆயுத ஏவுகணைகளின் விகிதாச்சாரம் 15 இல் இருந்து 70 சதவீதத்திற்கு போகுமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரஷ்யா அணுஆயுத ஏவுகணை கொண்ட புதிய Borei ரக நீர்மூழ்கிகப்பல்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

சீனா இடம்விட்டு இடம் நகர்த்தக்கூடிய ஏவுகளங்களில் அமைக்கப்படும் DF-31 பெருந்தொலைவு பாயும் ஏவுகணைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. அவை திட-எரிபொருள் கொண்டவை என்பதால், அவற்றை ஏவுவதற்கான தயாரிப்பு நேரம் வேகமாக இருக்கும். அது தென் சீனக் கடலின் ஹைனன் தீவில், புதிய Type-094 எனும் பெருந்தொலைவு பாயும் ஏவுகணை தாங்கிய நீர்மூழ்கிகப்பல் அமைந்துள்ள யூலின் கடற்படை தளத்தையும் கட்டியுள்ளது. அது நீர்மூழ்கிக்கப்பலில் இருந்து பெருந்தொலைவு பாயும் அணுஆயுத ஏவுகணைகளின் தூரத்தை அதிகரிக்க வேலை செய்து வருகிறது. அந்த ஏவுகணைகள் இன்னமும் தென் சீனக் கடல் ஏவுதளங்களில் இருந்து அமெரிக்காவிற்கு எதிரான எதிர்தாக்குதலில் அச்சுறுத்தும் தூரத்திற்கு செல்லக்கூடியதாக இல்லை.

இத்தகைய அபிவிருத்திகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொறுப்பற்ற மற்றும் பயங்கர நடவடிக்கைகளால் உருவாக்கப்பட்டு, ஒட்டுமொத்த உலக மக்களுக்கும் ஆழ்ந்த அபாயங்களை அடிகோடிடுகின்றன. அணுஆயுத போர் பற்றிய பிரச்சினை வெறுமனே பேச்சில் மட்டுமே சாத்தியம் என்பதல்ல, மாறாக அது அதிகரித்துவரும் உடனடி அபாயமாக உள்ளது. இந்த ஆபத்திற்கு, சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு சக்தி வாய்ந்த இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் மூலமாக மட்டுமே பதிலளிக்க முடியும்.