சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Hundreds attend lecture introducing German edition of The Russian Revolution and the Unfinished Twentieth Century

ரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும் நூலின் ஜேர்மன் பதிப்பு அறிமுக உரையில் நூற்றுக் கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்

By our correspondents
17 March 2015

Use this version to printSend feedback

கடந்த வெள்ளியன்று லைப்சிக் புத்தக கண்காட்சியில் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசியர் குழு தலைவர் டேவிட் நோர்த், ரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும் எனும் அவரது நூலின் ஜேர்மன் மொழிபெயர்ப்பை வெளியிட்டார். 450 பேர் கலந்து கொண்ட அந்த விரிவுரை, அக்கண்காட்சியில் நடந்த மிக வெற்றிகரமான கூட்டங்களில் ஒன்றாக இருந்தது.

http://www.wsws.org/asset/5e90baed-f2df-4831-bc79-0f1e61d100dC/leipzig04.jpg?rendition=image320
அந்த புத்தக கண்காட்சிக்கு வந்திருந்த தொழிலாளர்கள் மற்றும் பார்வையாளர்களோடு சேர்ந்து, லைப்சிக் பல்கலைக்கழகத்தின் பல மாணவர்களும் பங்குபற்றினர். அந்த விரிவுரை மீண்டும் மீண்டும் எழுந்த கரகோசத்தால் நடுநடுவே தடைபட்டு தொடர்ந்தது
.

இந்நூல் இருபதாம் நூற்றாண்டு வரலாற்றிற்கு ஒரு முக்கிய பங்களிப்பு என்பது மட்டுமல்ல, இது அந்த வரலாற்றின் பாகமாகவே உள்ளது,” Mehring Verlag பதிப்பகத்தின் சார்பில் அக்கூட்டத்தை அறிமுகப்படுத்திய கிறிஸ்தோப் வாண்ட்ரியர் தெரிவித்தார். அந்த கட்டுரைகள் வெறுமனே கல்வித்துறையைக் கவனத்தில் கொண்டு எழுதப்படவில்லை, மாறாக சோவியத் ஒன்றியத்தின் பொறிவைத் தொடர்ந்து மேலெழுந்த பிற்போக்குத்தனமான போக்குகளுக்கு எதிராக ஒரு தொடர்ச்சியான தர்க்க விவாதத்தின் பாகமாக எழுதப்பட்டன என்றார்.

வாண்ட்ரியர் கூறுகையில், “அந்நூல் கடந்த 30 ஆண்டுகளாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தலைமையில் நடந்த அரசியல் போராட்டங்களின் விளைபொருளாகும்,” என்றார். அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஒரு தலைவராகவும் WSWS ஆசிரியர் குழுவின் தலைவராகவும் இருந்து, “டேவிட் நோர்த் அத்தகைய போராட்டங்களில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தவர் ஆவார்.”

அவரது உரையில் டேவிட் நோர்த் விவரிக்கையில், அந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைகளும் விரிவுரைகளும் "உள்ளூர ஒருங்கிணைந்த ஒரே வேலையாகும். அதன் 15 அத்தியாயங்களும் சுமார் 20 ஆண்டு காலத்தில், 1989 மற்றும் 1991க்கு இடையே, கிழக்கு ஐரோப்பிய ஸ்ராலினிச ஆட்சிகளின் பொறிவு மற்றும் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பிற்குப் பின்னர் மேலெழுந்த வரலாற்று, தத்துவார்த்த மற்றும் அரசியல் பிரச்சினைக்களுக்கு விடையிறுப்பாக எழுதப்பட்டன,” என்றார். (முழு அறிக்கையை இங்கே பார்க்கவும்: “சோசலிசமும், வரலாற்று உண்மையும்")

அந்த ஆட்சிகள் திடீரென காணாமல் போனது, இருபதாம் நூற்றாண்டின் ஒட்டுமொத்த போக்கையுமே குறித்த அடிப்படை கேள்விகளை உயர்த்தின,” நோர்த் தெரிவித்தார். “சம்பவங்களைக் குறித்த பொருள்விளக்கத்தின் மீது மட்டும் முரண்பாடுகள் எழவில்லை, மாறாக உண்மைகளை வழங்கிய விதத்தின் மீதும் எழுந்தன. மேலும் இருபதாம் நூற்றாண்டின் அனைத்து சம்பவங்களிலும், மிகவும் கடுமையான மோதலுக்குரிய விடயமாக 1917 ரஷ்ய புரட்சி மாறி இருந்தது.”

நோர்த் விவரித்தார், வரலாறை பொய்மைப்படுத்தவும், அக்டோபர் புரட்சியை மதிப்பிழக்க செய்யவும் அங்கே ஒரு திட்டமிட்ட பிரச்சாரம் இருந்தது. அது குறிப்பாக பேர்லின் பேராசிரியர் ஜோர்ஜ் பார்பெரோவ்ஸ்கியின் படைப்பில் தெளிவாக வெளிப்பட்டது, அது "பின்நவீனத்துவம், அரசியல் பிற்போக்குதனம், உள்ளவாறே உண்மைகளைக் கூறுவது மற்றும் நேர்மையான மேதமைக்குரிய மிக அடிப்படை அம்சங்கள் மீதான வெறுப்பார்ந்த புறக்கணிப்பு ஆகியவற்றிற்கு இடையிலான" தொடர்பை எடுத்துக்காட்டுகிறது என்று நோர்த் குறிப்பிட்டார்.

அவ்வறிக்கையின் கருப்பொருள்கள் அந்த விரிவுரையைத் தொடர்ந்து நடந்த விவாதத்தில் விவரிக்கப்பட்டன.

கடந்த 25 ஆண்டுகளின் பிற்போக்குத்தனமான அபிவிருத்திகள் தவிர்க்கவியலாதவாறு முதலாளித்துவத்திற்கு ஒரு மாற்றீட்டின் அவசியத்தை முன்னிறுத்துவதாக நோர்த் தெரிவித்தார். அதிகரித்துவரும் உலக போர் ஆபத்து மற்றும் படுபயங்கரமான சமூக சமத்துவமின்மை மட்டங்கள் மக்கள் கோபத்தையும் எதிர்ப்பையும் தூண்டிவிட்டு வருகின்றன. நோர்த் ஊடகங்களின் போர் பிரச்சாரத்தை தாக்கியபோது, பார்வையாளர்களிடமிருந்து வந்த கரவொலியால் அவர் பேச்சு தடைபட்டது.

முதலாளித்துவத்தின் மாற்றீடுகள் குறித்த விவாதம், அடிப்படை வரலாற்று கேள்விகளை மேலுயர்த்துகிறது. “ரஷ்ய புரட்சியின் துன்பியலான கதியை விளங்கப்படுத்தாமல் ஒருவரால் எவ்வாறு முதலாளித்துவத்திற்கு சோசலிசத்தை ஒரு மாற்றீடாக கூற முடியும்?” என்றவர் வினவினார். இந்த கதியைக் குறித்து புரிந்துகொள்ள வேண்டுமானால், ஸ்ராலினிசத்திற்கு எதிரான இடது எதிர்ப்பின் மற்றும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் போராட்டத்தை ஆராய்வது அவசியமாகும்.

ஆளும் வர்க்கமும் வரலாறின் முக்கியத்துவத்தில் நனவுபூர்வமாக உள்ளது என்று நோர்த் வாதிட்டார். குறிப்பாக 2008 நிதியியல் பொறிவுக்குப் பின்னர், வரலாற்று பொய்மைப்படுத்தல் மிரட்சியூட்டும் வடிவங்களை ஏற்றுள்ளது. “ஒரு ஜேர்மன் பேராசியர் [பார்பெரோவ்ஸ்கி] வரலாற்றில் இருந்து தெரிந்து கொள்ள ஒன்றுமில்லையென கூறுகிறார் என்றார், பின் அவர் 1914இல் இருந்து எதையும் தெரிந்து கொள்ளவோ, மூன்றாம் குடியரசிலிருந்து எதையும் தெரிந்து கொள்ளவோ ஒன்றுமில்லையென கூறுகிறார்.” பார்பெரோவ்ஸ்கி போன்றவர்களின் நிலைப்பாடுகளுக்கும் மற்றும் ஜேர்மன் இராணுவவாதத்தின் புதுப்பிப்புக்கும் இடையிலான தொடர்பு மறுக்க முடியாததாகும்.

1917 ரஷ்ய புரட்சியைக் குறித்து புரிந்து கொள்வது மட்டுமல்ல, மாறாக 1933 இல் ஜேர்மனியின் எதிர்புரட்சியைக் குறித்து புரிந்து கொள்வதும் தொழிலாளர்களுக்கு முக்கியமாகும். பாசிசம் என்பது, ஜேர்மன் மக்களின் ஆன்மாவில் வேரூன்றி ஆழமாய் பொதிந்திருந்த யூத-எதிர்ப்புவாதத்தின் விளைபொருள் அல்ல, மாறாக அக்டோபர் புரட்சிக்கு ஆளும் வர்க்கத்தின் எதிர்வினையாகும். நோர்த்தின் நூலில் விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கும் டானியல் கோல்ட்ஹாகெனின் "ஹிட்லரின் தன்னார்வமிக்க தண்டனை-நிறைவேற்றுனர்கள்" (Hitler’s willing executioners) என்ற ஆய்வுரை, தொழிலாள வர்க்கத்திற்குள் இருந்த பாசிச எதிர்ப்பை முற்றிலுமாக புறக்கணிக்கிறது. அதன் விளைவாக, சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மற்றும் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் (KPD) காட்டிக்கொடுப்பின் அளவு மூடிமறைக்கப்படுவதுடன், அது பாசிசத்தைப் புரிந்து கொள்வதையே சாத்தியமில்லாமல் செய்கிறது என்று நோர்த் தெரிவித்தார்.

ஒரு சர்வதேச தொழிலாள வர்க்க கட்சியை இன்று எவ்வாறு கட்டமைப்பது என்று பார்வையாளர்களில் ஒருவர் கேள்வி எழுப்பினார். விவகாரங்களின் நடப்பு நிலையோடு அதிருப்தி கொண்டவர்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பதன் மூலமாக அனைத்துலகக் குழு (IC) ஓர் இயக்கத்தைக் கட்டமைக்க முயலவில்லை. மாறாக, இருபதாம் நூற்றாண்டின் மைய வரலாற்று அனுபவங்களின் ஒரு புரிதலின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவது அவசியமாகும் என்று குறிப்பிட்ட நோர்த், “ஸ்ராலினிசம், பாசிசம் மற்றும் தேசிய சுதந்திர போராட்டங்கள் உடனான அனுபவங்கள் போன்ற மாபெரும் வரலாற்று பிரச்சினைகளை குறித்து தெளிவுபடுத்துவதன் அடிப்படையில் மட்டுந்தான் அதை செய்ய முடியும்,” என்றார்.

இதை என்னால் ஒரேயொரு வார்த்தையில் நிரூபிக்க முடியும்,” நோர்த் தொடர்ந்தார்: “சிரிசா.” சமீபத்திய கிரேக்க தேர்தல்களுக்கு வெகுநாட்களுக்கு முன்னரே, அது [சிரிசா] ஒரு மாற்றீட்டை பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்றும், அது அதன் வாக்குறுதிகள் அனைத்தையும் முறிக்கும் என்றும் எடுத்துரைத்த அனைத்துலகக் குழுவின் பகுப்பாய்வு மீது பலருக்கு கோபம் இருந்தது. “மூன்று வாரங்களுக்குள், சிரிசா துல்லியமாக நாங்கள் என்ன கூறினோமோ அதை செய்தது. எங்களிடம் எந்த மந்திரக்கோளமும் இல்லை, ஆனால் இதுமாதிரியான குட்டி-முதலாளித்துவ போக்குகளின் குணாம்சம் எங்களுக்குத் தெரியும். இருபதாம் நூற்றாண்டு முழுவதும் அவர்களால் நிரம்பியுள்ளது.”

ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலையும், ஏன் நிதி மந்திரி வொல்ஃப்காங் சொய்பிளவையும் மெச்சி இருந்த சிரிசாவின் தலைவர்கள், ஆனால் ஒருபோதும் ஜேர்மன் தொழிலாளர்களிடம் முறையிடவில்லை. அவர்கள் ஜேர்மனியில் ஒரு கூட்டத்திற்கு ஒருபோதும் அழைப்புவிடுக்கவில்லை. “அவர்கள் ஒருபோதும், 'எங்களுக்கு உங்கள் ஆதரவு வேண்டும். நாங்கள் கிரீஸை மாற்ற வேண்டுமானால், நீங்கள் உங்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட வேண்டும். பிரச்சினைகளை கிரீஸிற்குள் தீர்க்க முடியாது,' என்று அறிவிக்கவில்லை.” நோர்த் இந்த வார்த்தைகளைப் பேசியதும், அங்கே உடனடியாக கரகோசம் எழுந்தது.

ஜேர்மன் தொழிலாளர் வர்க்கத்திடம் ஏன் சிரிசா முறையிடவில்லை என்பதற்கு அங்கே ஒரு காரணம் உண்டு என்று நோர்த் தொடர்ந்தார். சிரிசா முதலாளித்துவத்தைப் பாதுகாக்கிறது. அது வெறுமனே உயர்மட்டத்தில் ஒரு நியாயமான வருவாய் பகிர்வை விரும்பும் சமூகத்தின் உயர்மட்ட 10 சதவீதத்திற்காக பேசுகிறது.

அங்கே பங்குபற்றி இருந்த இளைஞர் ஒருவர், புரட்சியில் சம்பந்தப்பட்டுள்ள பெரும் அபாயங்களைக் குறித்து கேள்வி எழுப்பினார். ஒரு சமூக முன்னேற்றத்திற்கான ஏனைய எல்லா சாத்தியக்கூறுகளையும் உண்மையில் அனைத்துலகக் குழு தவிர்த்துவிடுகிறதா: அதாவது ஒருவேளை புரட்சியைத் தவிர அங்கே வேறேதும் மாற்றீடு இல்லையா? என்றார்.

இல்லை,” நோர்த் உறுதியாக பதிலளித்தார். கடந்த இருபத்தைந்தாண்டு ஆண்டுகால அபிவிருத்திகள், முதலாளித்துவம் மீண்டுமொருமுறை சர்வாதிகாரம் மற்றும் போரை நோக்கி முன்நகர்ந்து வருவதை நிரூபிக்கின்றன. “புரட்சிகள், மாபெரும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிவகைகளாகும்,” என்றார். ஒரு புரட்சிகர மக்கள் இயக்கத்தைக் கொண்டு ஆளும் வர்க்கத்தைத் தூக்கியெறியவதைத் தவிர அங்கே வேறெந்த மாற்றீடும் இல்லை.

இதற்கு, ஒரு நனவுபூர்வமான அரசியல் தலைமை அவசியப்படுகிறது. நோர்த் எகிப்தின் அனுபவத்தைச் சுட்டிக் காட்டினார். அங்கே மில்லியன் கணக்கானவர்கள் புரட்சிகர போராட்டங்களில் பங்குபற்றினர், ஆனால் ஒரு புரட்சிகர தலைமை இல்லாமல் போனதால், இராணுவம் அதன் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. “அதனால் தான் நீங்கள் ஜேர்மனியில் சோசலிச சமத்துவ கட்சியை மற்றும் உலகெங்கிலும் நான்காம் அகிலத்தைக் கட்டமைக்க செயலூக்கத்துடன் இருக்க வேண்டி உள்ளது,” என்றார். வரலாற்று சம்பவங்களின் அடித்தளத்தில் தொழிலாள வர்க்கத்தைக் கல்வியூட்டுவதே தீர்க்கமாக முக்கியத்துவம் கொண்டது. “ஆகவே நீங்கள் உங்கள் அரசியல் கல்விக்கு இந்த நூலைப் பயன்படுத்த வேண்டும் என்பதோடு, இதை ஏனையவர்களோடும் விவாதியுங்கள்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

அந்த கூட்டத்திற்குப் பின்னரும், அந்த இலக்கிய அரங்கிலும், அரங்க நடைபாதையிலும் சில நேரத்திற்கு விவாதங்கள் தொடர்ந்தன. பலர் அந்நூலாசிரியரின் கையெழுத்திட்ட அவர்களது நகலைப் பெறும் வாய்ப்பைப் பெற்றனர். Mehring Verlag ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த கூட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருந்த, சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பால் ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்கள் குறித்தும் மற்றும் வாசகர் குழுக்கள் குறித்தும் தகவல் அளிக்குமாறு பங்குபற்றிய டஜன் கணக்கானவர்கள் அவர்களது தொடர்பு விபரங்களை வழங்கிச் சென்றனர்.

அக்கண்காட்சியில் நடக்கும் ஒரு கல்வித்துறைசார் புத்தக விவாத கூட்டத்தின் பாகமாக, சனியன்று, சுமார் 150 பார்வையாளர்களுடன் அந்நூலின் மற்றொரு அரை மணிநேர விளக்கவுரை நடைபெற உள்ளது.

ரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும் நூலின் ஆங்கில-மொழி பதிப்பை மெஹ்ரிங் பதிப்பகத்திலிருந்து இங்கே வாங்கலாம். ஜேர்மன் மொழி பதிப்பை இங்கே வாங்கலாம்.