சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் 

Australian spies assist Japan’s plans for intelligence agency

உளவுவேலை முகமைக்கான ஜப்பானிய திட்டங்களுக்கு ஆஸ்திரேலிய உளவாளிகள் உதவுகின்றனர்

By Peter Symonds
23 March 2015

Use this version to printSend feedback

அன்னிய நாடுகளை உளவுபார்க்கும் ஆஸ்திரேலிய முகமை, ASIS, ஜப்பானிய உளவாளிகளுக்கு பயிற்சியளிப்பதிலும், சிஐஏ அல்லது பிரிட்டனின் MI6க்கு ஒத்தவொரு மையப்படுத்திய அன்னியநாட்டு உளவுவேலை எந்திரத்தை ஜப்பானில் மறுஸ்தாபிதம் செய்யவும் உதவி வருவதாக Australian இதழ் முதல் பக்கத்தில் சனியன்று ஒரு கட்டுரை வெளியிட்டது.

அன்னிய நாடுகள் மீதான உளவுவேலை முகமை ஒன்றின் மறுஸ்தாபிதம் என்பது ஜப்பானிய இராணுவவாதத்தின் புதுப்பிப்புடன் பிணைந்துள்ளது, அது வாஷிங்டனால் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு" மற்றும் சீனாவிற்கு எதிரான இராணுவ கட்டமைப்பின் பாகமாக ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. ASIS இன் தலையீடானது, ஆசியாவில் பெரிதும் அதன் கூட்டாளிகளை, குறிப்பாக ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சார்ந்துள்ள, அமெரிக்க போர் திட்டங்களுடன் கான்பெர்ரா எந்தளவிற்கு நெருக்கமாக பிணைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

ஜப்பானிய அரசாங்கம் அன்னிய நாடுகள் சார்ந்த உளவுத்துறை அமைப்பு ஒன்றை உருவாக்குவதைத் தீவிரப்படுத்த விரும்புவதாக கடந்த மாதம் சமிக்ஞை காட்டி இருந்தது. ISIS (ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு) ஆல் இரண்டு ஜப்பானிய பிரஜைகள் கொல்லப்பட்டதைப் பிடித்துக் கொண்டு, பிரதம மந்திரி ஷின்ஜோ அபே அறிவிக்கையில், “அரசின் மூலோபாய முடிவெடுப்புகளுக்கு" தகவல் வழங்கும் வகையில் "அரசாங்கத்தின் உளவுவேலை நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டியது" இன்றியமையாததாகும் என்று அறிவித்தார்.

ஜப்பானின் இழிவார்ந்த இராணுவ உளவுத்துறை அமைப்புகளும் மற்றும் உள்நாட்டு இரகசிய பொலிஸூம் இரண்டாம் உலக போரைத் தொடர்ந்து அமெரிக்க ஆக்கிரமிப்பின் கீழ் கலைக்கப்பட்டன. இருப்பினும், சிஐஏ உடன் ஒருங்கிணைந்து, பல்வேறு அமைப்புகள் மூலமாக உளவுவேலை நடவடிக்கைகள் தொடர்ந்து வந்தன. எவ்வாறிருந்த போதினும், கடந்த இரண்டு தசாப்தங்களில் மையப்படுத்திய அமைப்பு ஒன்றிற்கான அழுத்தம் தொடர்ந்து இருந்து வந்தது. 2006 இல், அன்னிய நாட்டு உளவுசெய்திகளைச் சேகரிக்கவும் மற்றும் அத்துடன் மையப்படுத்திய உளவுசெய்தி பகுப்பாய்வை மேற்கொள்ளவும் ஜப்பானிய தூதரகங்களில் இருந்து செயல்படும் ஒரு புதிய அமைப்பிற்கு ஒரு நாடாளுமன்ற கமிட்டி அறிக்கை அழைப்புவிடுத்தது.

Australian இதழ் விவரித்தது: “ஜப்பானின் வேவுபார்க்கும் தகைமைகளை அது மெதுமெதுவாக கட்டமைக்கும் வகையில், 2008 க்கு பின்னரில் இருந்து, ஜப்பானிய தேசிய பாதுகாப்பு சமூகத்தின் உறுப்பினர்கள், ASIS இடம் இருந்து பயிற்சி பெற ஆஸ்திரேலியாவிற்கு பயணித்து வந்துள்ளனர்.” அப்பத்திரிகையின் செய்திப்படி, குறைந்தபட்சம் 20 ஜப்பானிய உளவாளிகள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளனர். உயர்மட்ட சிறப்பு வான்வழி சேவை (Special Air Service – SAS) பயிற்சி வழங்குனர்களது பயிற்சிமுறைகளைக் கொண்ட விக்டோரியாவின் ஸ்வான் தீவின் ASIS உயர் இரகசிய பயிற்சி மையத்தில் பலர் பயிற்சி பெற்றதும் இதில் உள்ளடங்கும்.

ஜப்பானிய உளவுதுறை எந்திரத்திடம், எல்லாவிதமான மோசமான உத்திகள் மற்றும் உளவு தந்திரம் என்றழைக்கப்படும் உபாயங்களில் பயிற்றுவிக்கப்பட்ட அன்னிய நாட்டு உளவாளிகள் இல்லை என்பதால், ASIS பயிற்சி ஜப்பானிய உளவுதுறை எந்திரத்திற்கு அதிமுக்கியமாக உள்ளது. "உளவுசெய்தி சேகரிக்கும் மனித தகைமை" முன்னுரிமையானது என்று ஜப்பானின் உளவுத்துறை மற்றும் ஆராய்ச்சிக்கான மந்திரிசபை அலுவலகத்தின் இயக்குனர் ஹிடேஷி மிடானி, அமெரிக்க வெளியுறவுத் துறையின் உளவுத்துறை அமைப்பின் தலைவர் ராண்டல் போர்டிற்கு தெரிவித்த, ஒரு 2008 உரையாடலை விக்கிலீக்ஸ் இரகசிய ஆவண வெளியீடு ஒன்று பதிவு செய்திருந்தது.

ஜப்பானியர்களுக்கு இதில் போதிய அறிவும், அனுபவமும் இல்லை என்பதோடு, போதிய உடைமைகள்/அதிகாரிகளும் இல்லை என்று அவர்கள் உணர்வதால், இந்த நிகழ்முறையை மிக மெதுவாக முன்னெடுத்துச் செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது. புதிய நபர்களுக்கான பயிற்சி நிகழ்முறை மிக விரைவில் தொடங்கப்படும்,” என்று அமெரிக்க இரகசிய ஆவண வெளியீடு குறிப்பிட்டது. ஐயத்திற்கிடமின்றி, சிஐஏ மற்றும் ஏனைய கூட்டு அமைப்புகளிடம் இருந்து ஜப்பானிய உளவாளிகள் பயிற்சி பெற்றுள்ளனர்.

அன்னிய நாடுகள் சார்ந்த உளவு அமைப்பு ஒன்றை மீள்-ஸ்தாபிதம் செய்வதற்கு ஜப்பானில் மக்களிடையே ஆழமான அதிருப்தி நிலவுகிறது. 1930கள் மற்றும் 1940களின் போது, இராணுவ உளவுத்துறை சேவைகள் ஜப்பானிய போர்களில் நெருக்கமாக சம்பந்தப்பட்டிருந்தன என்பதோடு, கொரியா, சீனா மற்றும் ஏனைய நாடுகளின் காலனித்துவ ஆக்கிரமிப்புக்கு எதிரான எதிர்ப்பை ஒடுக்குவதிலும் சம்பந்தப்பட்டிருந்தன. ஜப்பானிய இரகசிய பொலிஸ் டோக்கியோவில் இராணுவவாத ஆட்சிக்கு எதிரான உள்நாட்டு எதிர்ப்பை, குறிப்பாக தொழிலாள வர்க்கத்திடம் இருந்து வந்த எதிர்ப்பை, இரக்கமின்றி ஒடுக்கியது.

நீடித்த இராணுவவாத-விரோத உணர்வுகள்" புதிய உளவு அமைப்பு ஒன்றை ஸ்தாபிப்பதற்கு ஒரு பெரும் முட்டுக்கட்டையாக இருந்ததாக அமெரிக்க சிந்தனை குழாம் Stratfor குறிப்பிட்டது. “ஜப்பானிய அரசியலமைப்பு பிரபலமான ஒரு ஷரத்தை, 9 ஆவது சட்ட விதியை, கொண்டிருக்கிறது. அது சர்வதேச மோதல்களைத் தீர்ப்பதற்கு போரை உபயோகிப்பதை தடுக்கிறது. இரகசிய உளவுத்துறை சேவை ஒன்றை தடுக்கும் வகையில் ஷரத்து 9க்கு சமமான உளவுத்துறை சார்ந்த ஷரத்து அங்கே இல்லை என்றபோதினும், பொதுமக்களின் பார்வையில், உளவுத்துறையும் இராணுவவாதமும் ஆழமாக ஒன்றோடொன்று பிணைந்துள்ளன. இரண்டாம் உலக போரின் நினைவுகள் இன்னும் ஆழமாக ஓடிக் கொண்டிருக்கின்றன,” என்று அது குறிப்பிட்டது.

அபே அரசாங்கம் முற்றிலும் மீள்இராணுவமயமாக்கி வருகிறது. பதவிக்கு வந்த பின்னரில் இருந்து, அபே இராணுவ செலவினங்களை அதிகரித்துள்ளதோடு, வெளிநாட்டு கொள்கை மற்றும் மூலோபாய விவகாரங்களை மையப்படுத்த தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒன்றை ஸ்தாபித்ததோடு, ஜப்பானை அமெரிக்க போர்களில் பங்களிக்க அனுமதிக்கும் வகையில் சட்ட விதி 9க்கு "மீள்-பொருள்விளக்கம்" வழங்கினார். அத்துடன் அவர் இராணுவத்தின் மீதான எல்லா அரசியலமைப்பு தடைகளையும் முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறார். ஜப்பானிய உளவாளிகளுக்கான பயிற்சி ஆண்டுக்கணக்கில் நடந்து வருகின்ற அதேவேளையில், ஒரு மையப்படுத்திய அன்னிய நாட்டு உளவுத்துறை சேவையை மீள்-ஸ்தாபிதம் செய்யும் நகர்வுகளும் வேகமெடுக்கும்.

உளவுவேலை ஆராய்ச்சிக்கான மந்திரிசபை அலுவலகம், வெளியுறவு விவகாரங்களுக்கான அமைச்சகம், பாதுகாப்பு உளவுத்துறை தலைமையகம், தேசிய பொலிஸ் முகமை மற்றும் பொது பாதுகாப்பு உளவுத்துறை முகமை என தற்போது ஜப்பானிய உளவுத்துறை நடவடிக்கைகள் பல்வேறு அமைப்புகளுக்கு இடையே பரவலாக்கப்பட்டுள்ளன.

ஒரு பலம் வாய்ந்த உளவு அமைப்பை ஜோடிக்கும் அபேயின் அபிலாஷை, ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களைஅது அமெரிக்காவினது நலன்களுடன் பொருந்தி இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரிஅவற்றை ஆக்ரோஷமாக செயல்படுத்துவதற்கு வழிவகைகளைக் கொண்டிருக்க வேண்டுமென்ற அவரது தீர்மானத்துடன் பிணைந்துள்ளது. பனிப்போர் காலத்தின் போது அபிவிருத்தி செய்யப்பட்ட CIA மற்றும் ஏனைய மேற்கத்திய உளவுவேலை அமைப்புகளைச் சார்ந்திருக்கும் தற்போதைய டோக்கியோவின் நிலைமையை ஒரு ஜப்பானிய உளவுத்துறை எந்திரம் குறைக்க கூடும்.

Australian இதழின் கருத்துப்படி, “[ஜப்பானிய] உளவாளிகளைப் பயிற்றுவிக்கும் பரிந்துரை ASIS தலைவர் நிக் வார்னரால் கொண்டு வரப்பட்டு, முந்தைய தொழிற்கட்சி அரசாங்கத்தால் ஒப்புதல் வழங்கப்பட்டது.” ஆஸ்திரேலிய அரசாங்கங்கள், தொழிற்கட்சி மற்றும் கூட்டணிகள் மேலும் மேலும் நெருக்கமாக அமெரிக்காவின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்புக்குள்" ஒருங்கிணைந்துள்ள நிலையில், அமெரிக்காவும் அதன் இரண்டு மிக நெருக்கமான கூட்டாளிகளுக்கு இடையிலான நெருக்கமான இராணுவ மற்றும் மூலோபாய உறவுகளை ஊக்குவித்து வருகிறது.

கடந்த ஆண்டு டோக்கியோவிற்கு விஜயம் செய்திருந்தபோது, கூட்டணியின் பிரதம மந்திரி டோனி அப்போட் "இருதரப்பு பாதுகாப்பு மற்றும் இராணுவ உறவுகளை ஒரு புதிய மட்டத்திற்கு" உயர்த்துவதன் மீது விவாதங்கள் நடத்தினார். அபோட்டும் அபேயும் இராணுவ விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் தளவாடங்கள் மீது கூட்டாக ஒத்துழைப்பதன் மீது "ஒரு கட்டமைப்பு உடன்படிக்கையை" எட்ட தீர்மானித்தனர். அந்த உடன்படிக்கை பழையதாகி வரும் ஆஸ்திரேலிய நீர்மூழ்கி கப்பல்களை மாற்றியமைப்பதற்கு, பல பில்லியன் டாலர் மதிப்பில் ஜப்பானிய சோர்யு நீர்மூழ்கி கப்பல்களை வாங்க சாத்தியமான அளவிற்கு பாதையைத் திறந்து விடக் கூடியதாக இருந்தது.

அபோட் இன்னும் நெருக்கமான இராணுவ கூட்டு ஒத்துழைப்புகளை முன்னறிவித்தார். “நமது இராணுவங்கள் இன்னும் நிறைய ஒருங்கிணைந்து இயங்குவதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம். நமது இராணுவங்களுக்கு இடையே இன்னும் நிறைய ஒத்திகைகளை நாங்கள் காண விரும்புகிறோம், வருகின்ற காலத்தில் இன்னும் முக்கியமான உளவுவேலை கூட்டு-ஒத்துழைப்பை நாங்கள் பார்க்க விரும்புகிறோம்,” என்றார்.

Australian இதழின் வெளியுறவுத்துறை ஆசிரியர் கிரெக் ஷெரிடன், ஜப்பானிய உளவாளிகளுக்கு ASIS இன் பயிற்சியளிப்பு குறித்த அப்பத்திரிகையின் வெளியீடுகளது முக்கியத்துவத்தை குறைத்துக் காட்ட முனைந்தார். “ஜப்பான் அன்னிய நாடுகள் மீதான உளவுவேலை அமைப்பு ஒன்றைக் கட்டியமைத்து வருவதும், அதன் நபர்களுக்கு பயிற்சியளிப்பதில் முந்தைய தொழிற்கட்சி அரசாங்கம் ஆஸ்திரேலியாவின் ஒத்துழைப்பை வழங்கியது என்பதும் நல்ல செய்தியாகும் … இதில் கெட்ட நோக்கம் எதுவும் இல்லை,” என்றார்.

ஆனால் விடயம் எதிர்விதமாக உள்ளது. சீனா உடன் ஒரு போருக்கான அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா அத்துடன் ஏனைய கூட்டாளிகள் மற்றும் மூலோபாய பங்காளிகளின் மிக பரந்த தயாரிப்புகளில் இதுவும் ஒரு அம்சமாக உள்ளது. அத்தகையவொரு போர் ஆசியா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்திற்கு பேரழிவுகரமான விளைவுகளைக் கொண்டிருக்கும்.

கட்டுரையாசிரியர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

Japan pushes forward with plans for overseas intelligence agency