சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் 

Australia: IYSSE campaign pushes back Griffith University’s political censorship

ஆஸ்திரேலியா: க்ரீஃபித் பல்கலைக்கழகத்தின் அரசியல் தணிக்கையை IYSSE பிரச்சாரம் பின்னுக்குத் தள்ளுகிறது

By our correspondents
21 March 2015

Use this version to printSend feedback

குவின்ஸ்லாந்து மாநில தலைநகர் பிரிஸ்பனில் க்ரீஃபித் பல்கலைக்கழகத்தில் IYSSE இன் (சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு) ஒரு தீர்க்கமான பிரச்சாரம், அப்பல்கலைக்கழக வளாகத்தில் இந்த ஆண்டு ஒரு மன்றம் பதிவு செய்வதிலிருந்து IYSSEஐ தடுக்கும், அதன் அதிகாரிகளினது முடிவின் மீது அவர்களை ஓர் ஆரம்ப பின்வாங்கலுக்கு நிர்பந்தித்துள்ளது.

சோசலிச சமத்துவ கட்சியின் இளைஞர் அமைப்பான IYSSE, க்ரீஃபித் மாணவர்களிடம் இருந்தும், அத்துடன் அப்பல்கலைக்கழகத்தின் அப்பட்டமான அரசியல் தணிக்கைக்கு எதிராக போராடிய உலக சோசலிச வலைத் தள வாசகர்களிடமிருந்தும் பெரும் ஆதரவை வென்றது. IYSSE உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களது வளாக பிரச்சார நடவடிக்கைகளின் போது, நேத்தன் மற்றும் சவுத்பேங்க் வளாகங்கள் இரண்டினது மாணவர்களும் அம்மன்றத்தில் இணைய கையெழுத்திட்டனர், அதேவேளையில் WSWS வாசகர்கள் அந்த தடையைத் திரும்ப பெறுமாறு கோரி, அப்பல்கலைக்கழகத்தின் மன்றங்கள் மற்றும் சமூகங்களின் ஒருங்கிணைப்பாளருக்கு கடிதங்கள் அனுப்பினர்.

பெப்ரவரி 2 அன்று, Campus Life Clubs & Societies அலுவலகத்திற்கான மன்றங்கள் ஒத்துழைப்பு அதிகாரி டெப் டி சில்வா, IYSSEக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். அது, "முந்தைய முயற்சிகள், மாணவர்களிடையே ஆர்வத்தைப் பெற தவறியதால், இந்த அமைப்பை ஒரு மாணவர் மன்றமாக பதிவு செய்வதற்கு மேற்கொண்டு நாங்கள் நடவடிக்கை எடுப்பதாக இல்லை,” என்று அறிவித்தது. நிலைநோக்கு வாரத்தின் போது (Orientation Week) தகவல் மற்றும் கையெழுத்து முகாம் அமைப்பதற்கும் IYSSEக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதிகாரிகள் இரண்டு முறை IYSSE பிரச்சார மேசைகளை நீக்கி இருந்தனர்.

அந்த தடை அரசியல்ரீதியில்-உந்தப்பட்டது என்பதையும், ஆஸ்ரேலியா மற்றும் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களால் பின்பற்றப்பட்டு வருகின்ற போர் உந்துதல், சிக்கன நடவடிக்கை, சமூக சமத்துவமின்மை மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை ஒழிப்பதை எதிர்க்கும் ஒரு சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கை முன்னெடுக்கும் ஒரேயொரு மாணவர் மன்றத்திற்கு எதிராக அது திருப்பி விடப்பட்டது என்பதையும், தொடக்கத்திலிருந்தே, IYSSE உணர்ந்திருந்தது.

மாணவர்களுக்கு ஆர்வம்" இல்லை என்பதிலிருந்து வெகுதூரம் விலகி, “எட்வார்ட் ஸ்னொவ்டனைப் பாதுகாப்போம்! ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு சோசலிச பதில்,” “சிரிசாவிற்கு எதிரான யுத்தம் கூடாது!” “முதலாம் உலக போரின் பெருமைப்படுத்தலும் மூன்றாம் உலக போருக்கான தயாரிப்புகளும்" மற்றும் "உக்ரேனும், பாசிசம் மற்றும் போர் அபாயங்களும்" என்பன போன்ற தலைப்புகளில் க்ரீஃபித்தில் உள்ள IYSSE மன்றம் வழக்கமான கூட்டங்களையும் மற்றும் பிரச்சாரங்களையும் நடத்தியதற்கான இரண்டு ஆண்டுகால வரலாறைக் கொண்டிருக்கிறது.

பெப்ரவரி 21 அன்று, நிலைநோக்கு வாரத்திற்கு முன்னதாக, பல்கலைக்கழக நிர்வாகத்தின் முடிவைக் கண்டித்து IYSSE ஓர் அறிக்கை வெளியிட்டது. அதன் நூற்றுக் கணக்கான பிரதிகள் வளாகங்களில் வினியோகிக்கப்பட்டன. அந்த தடையானது அறைகள் பதிவு செய்வதிலிருந்து பல்கலைக்கழகத்தில் கூட்டங்கள் நடத்துவது வரையில் எல்லா மாணவர் அரசியல் மன்றங்களையும் தடுப்பதற்கான கடந்த ஏப்ரல் மாத முயற்சியின் தீவிரப்பாட்டை குறிப்பதாக அந்த அறிக்கை விவரித்தது. இந்த முற்றிலும் ஜனநாயக-விரோத நகர்வுக்கு எதிராக IYSSE பிரச்சாரம் செய்ததோடு, அதை அம்பலப்படுத்தியும் காட்டியது. இறுதியில் அறை பதிவு செய்வதன் மீதிருந்த தடையை நிர்வாகம் கைவிட நிர்பந்திக்கப்பட்டது.

மார்ச் 4 அன்று, தகவல் கூடங்கள் அமைப்பதிலிருந்து IYSSEஐ பல்கலைகழகம் தொடர்ந்து தடுத்ததற்குப் பின்னர், அத்தகைய நடவடிக்கைகளைக் கண்டித்து, ஒரு புதிய IYSSE உறுப்பினரை நேர்காணல் செய்தும் மற்றும் அத்தடையை நீக்க கோரி பல்கலைகழகத்திற்கு எழுதுமாறு வாசகர்களை வலியுறுத்தியும், உலக சோசலிச வலைத் தளத்தில் மற்றொரு கட்டுரை பிரசுரிக்கப்பட்டது.

பல்கலைக்கழகம் IYSSEஐ ஒரு மன்றமாக பதிவு செய்வதிலிருந்து தடுக்க முயல்கிறது என்பதை, மன்றங்கள் மற்றும் சமூகங்களின் ஒத்துழைப்பு அதிகாரி டி சில்வா, இப்போதும் மறுக்கின்ற அதேவேளையில், ஒரு மன்றம் உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கு முன்னதாக "ஆர்வ வெளிப்பாட்டை" (expression of interest) சமர்பிக்க வேண்டுமென கூறினார்—ஆனால் கோரியவாறு 15 உறுப்பினர்களின் பட்டியலை கடந்த ஆண்டு சமர்பித்து IYSSE தற்காலிக பதிவைப் பெற்றிருந்தது.

இறுதியாக அதுபோன்றவொரு ஆர்வ வெளிப்பாட்டைப் பதிவு செய்வதற்காக 15 உறுப்பினர்களின் ஒரு பட்டியலைத் தயாரிக்க, ஒவ்வொரு வளாகத்திலும் ஒன்றாக, இரண்டு கையெழுத்திடும் மேசைகளை அமைக்க IYSSEக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஒரு போலி இடது குழுவான Socialist Alternativeக்கு அது ஏன் முரண்பட்டுள்ளது என்பதையும் IYSSE விளங்கப்படுத்த வேண்டுமென டி சில்வா வலியுறுத்தினார். அவ்வளாகத்தில் அக்குழுவின் பிரசன்னத்தை, IYSSEஐ பதிவு செய்ய மறுப்பதற்கு ஒரு சாக்காக அப்பல்கலைக்கழகத்தால் பயன்படுத்த முடியும் என்பதை இந்நிபந்தனை எடுத்துக்காட்டியது.

இவ்வாண்டு நேத்தன் வளாகத்தில் நிறைய கூடங்களை அமைக்க அனுமதிக்கப்பட்டிருந்த Socialist Alternativeக்கும் சோசலிசத்திற்கும் என்னவாக இருந்தாலும் எந்த சம்பந்தமும் இல்லை. அது லிபியா மற்றும் சிரியாவில் அமெரிக்க தலைமையிலான தலையீடுகளை ஆதரித்துள்ளது; கிரீசில் முதலாளித்துவ-சார்பு சிரிசா அரசாங்கத்தைப் பகிரங்கமாக வரவேற்றுள்ளது; மற்றும் மற்றொரு தொழிற்கட்சி-பசுமை கட்சி அரசாங்கம் திரும்பி வருவதற்காக, முதுகுக்குப் பின்னால், அபோட் அரசாங்கத்தின் மீதான மக்கள் விரோதத்தை திசைதிருப்ப முனைந்துள்ளது.

IYSSE ஆல் சமர்பிக்கப்பட்ட "ஆர்வ வெளிப்பாடு", Socialist Alternativeக்கும் மற்றும் ஏனைய போலி "இடது" குழுக்களுக்கும் அதன் மன்றத்தின் நேரெதிரான எதிர்ப்பை தெள்ளத்தெளிவாக தெளிவுபடுத்தியது. அந்த மன்றத்தின் நோக்கங்கள் பின்வருமாறு அமைக்கப்பட்டிருந்தன:

1. ஏகாதிபத்திய போர் மற்றும் சமூக சமத்துவமின்மையை எதிர்ப்போம். ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவோம்.

2. உலக சோசலிச வலைத் தளத்தின் பகுப்பாய்வுகள் மீது முறையான விவாத கலந்துரையாடலை நடத்துவோம்.

3. மார்க்சிசத்தை உயர்த்திப் பிடிப்பதற்காக. மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், லுக்செம்பேர்க் மற்றும் ட்ரொட்ஸ்கியின் படைப்புகளை விவாதிப்பதற்காக.

இதற்கு விடையிறுப்பாக மார்ச் 18 இல் டி சில்வா ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். “வாழ்த்துக்கள்! க்ரீஃபித்தில் மன்றம் பதிவு செய்ய IYSSE அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது,” என்று அதில் அவர் குறிப்பிட்டார். IYSSE இன் மன்றம் அதன் தொடக்க நாளான ஏப்ரல் 14 செவ்வாயன்று இந்த ஆண்டின் அதன் முதல் கூட்டத்தை நடத்துவதற்கு, ஓர் அறை வேண்டுமென்று முறையீடு செய்திருந்ததையும் டி சில்வா ஏற்றுக் கொண்டார். ஆனால் அதேநேரத்தில், அப்பெண்மணி, ஒரு மன்றத்தைப் பதிவு செய்வதற்கான ஆவணத்தொகுப்பை சமர்பிக்க IYSSEக்கு இறுதிகெடுவாக, மார்ச் 27 மாலை 4 மணியை நிர்ணயித்தார்.

பல்கலைக்கழக நிர்வாகத்தின் வாரக்கணக்கிலான தடைகள் இருப்பதால், IYSSE இந்த இறுதிக்கெடுவை நீடிக்குமாறு கோரியது. மேலும் இந்த இறுதிகெடு அம்மன்றத்தின் முதல் கூட்ட தேதிக்கு முன்னதாகவே வருகிறது. பதிவு செய்வதற்கான ஆவணத்தொகுப்பின் பாகமாக அம்மன்றத்தின் ஆண்டு பொது கூட்டத்தின் விபரங்களைச் சமர்பிக்குமாறு கோரும் நிபந்தனையும் பதிவு செய்வதற்கான நிபந்தனைகளில் ஒன்றாகும் என்பதால் அது தெளிவாக அதை பூர்த்தி செய்ய முடியாதவாறு செய்தது.

மார்ச் 20 அன்று, டி சில்வா ஏப்ரல் 17 மாலை 4 மணி வரை ஒரு நீடிப்பை வழங்கி மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். க்ரீஃபித் அதிகாரிகளின் கடந்த ஆண்டு நடவடிக்கைகளின்படி பார்த்தால், அங்கே எல்லா கோரிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டாலும் கூட IYSSE மன்றத்தை அவர்கள் பதிவு செய்வார்களா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

ஏப்ரல் 14 அன்று மதியம் 12.30 இல் இருந்து 2.00 மணி வரையில் நேத்தன் வளாக விரிவுரை அறை எண் N53_0.59 (வெல்லெட் மத்திய கட்டிடம்) இல் IYSSE கூட்டத்திற்கு வருமாறு நாங்கள் க்ரீஃபித் மாணவர்களுக்கு அழைப்புவிடுக்கிறோம். அக்கூட்டம் கருத்துக்களைக் கேட்டறியும் என்பதுடன், ஜேர்மன் இராணுவவாதத்திற்கு எதிராக மற்றும் வலதுசாரி போர்-ஆதரவு பிரச்சாரத்தின் மையமாக ஹாம்போல்ட் பல்கலைக்கழகம் மாற்றப்படுவதற்கு எதிராக ஜேர்மனியின் அப்பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட IYSSE இன் ஒரு பிரச்சார காணொளியைக் காணுங்கள். 2015க்கான IYSSE இன் நிர்வாக குழுவையும் அக்கூட்டம் தேர்தெடுக்கும்.

அதேநேரத்தில், IYSSE ஒரு மன்றத்தைப் பதிவு செய்வதை அந்த பல்கலைக்கழகம் தடுக்க முனைவதை நிறுத்துமாறு கோரி தொடர்ந்து கடிதங்களை அனுப்புமாறு க்ரீஃபித் மாணவர்களையும் மற்றும் WSWS வாசகர்களையும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

கடிதங்களை இவருக்கு அனுப்பவும்: Wade Hurst, the Clubs Coordinator and Student Representative Council Liaison Officer

மின்னஞ்சல் முகவரி: w.hurst@griffith.edu.au

தபால் முகவரி: Griffith Sport and Activities, Nathan campus, Griffith University, 170 Kessels Road QLD 4111, Australia.