சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Bellum Americanum: US imperialism’s delusions of world conquest

அமெரிக்காவின் போர்க்கோலம்: உலகை வெற்றிகொள்ளும் அமெரிக்க ஏகாதிபத்திய கனவுகள்

Joseph Kishore
21 March 2015

Use this version to printSend feedback

அக்டோபரிலிருந்து தொடங்க உள்ள வரவிருக்கும் நிதியியல் ஆண்டிற்கான பெடரல் வரவு-செலவு திட்டத்தின் மீது அமெரிக்க காங்கிரஸூம் வெள்ளை மாளிகையும் தற்போது விவாதங்களில் ஈடுபட்டுள்ளன. ஆளும் வர்க்க கொள்கை மீதான பல்வேறு தந்திரோபாய சர்ச்சைகளுக்கு இடையே, ஒரு விடயத்தில் அங்கே வாஷிங்டனில் அண்மித்தளவிற்கு நாடுதழுவிய உடன்பாடு நிலவுகிறது: அதாவது, ஏற்கனவே பிரமாண்டமாக கொழுத்து போயிருக்கும் பெண்டகன் போர் எந்திரத்திற்கு கணிசமான அளவிற்கு உடனடியாக நிதியுதவிகளை அதிகரிக்க வேண்டும் என்பதில்.

ஒபாமாவின் புதிய பாதுகாப்புத்துறை செயலர் அஸ்டொன் கார்டர் (Ashton Carter) உடன் சேர்ந்து, வெள்ளை மாளிகை இந்த பிரச்சாரத்திற்கான முன்னிலையை எடுத்துள்ளது. அவர் புதனன்று அறிவிக்கையில், 2011 இல் கொண்டு வரப்பட்ட இராணுவ செலவினங்கள் மீது "வரையறை" வரம்புகள் என்றழைக்கப்படுவதை நீக்காத எந்தவொரு வரவு-செலவு திட்டத்தையும், ஜனாதிபதி வீட்டோ அதிகாரம் கொண்டு தடுப்பார் என்று தெரிவித்தார். இத்தகைய வரம்புகளைத் தவிர்த்துக் கொள்வதற்கு கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ் பல்வேறு வழிகளைக் கையாண்டுள்ள போதினும், பெண்டகன் அவற்றை உத்தியோகபூர்வமாக நீக்க வலியுறுத்தி வருகிறது.

இந்த முறையீட்டிற்கு உந்துதல் அளித்துவரும் கவனிக்கத்தக்க அடிப்படை கருத்துக்களை அவரது உத்தியோகபூர்வ அறிக்கையில் கார்டர் விவரித்தார். “நமது இராணுவம் உலகின் மிகவும் ஆற்றல்படைத்த போரிடும் படையாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு, நாம் நிதியியல் இழுபறி சூழல்களை அகற்றுவது அவசியமாகும். அவை நமது திட்டங்களுக்கு தடையாக இருப்பதுடன், செயல்திறனற்ற விருப்பத் தெரிவுகளைத் திணிக்கின்றன. வழக்கமான வரவு-செலவு திட்டத்தை மீண்டும் நீண்டகாலத்திற்கு கொண்டு வருவதும், இந்நாட்டையும் மற்றும் உலகளாவிய ஒழுங்கமைப்பையும் பாதுகாக்கும் நமது பொறுப்புறுதிக்கு உகந்த … ஓர் உடன்படிக்கையும் நமக்கு அவசியமாகும்,” என்றார்.

இங்கே, மனித உரிமைகளைப் பாதுகாக்க அல்லது ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கிறது என்பது முற்றிலும் போலித்தனமானது என்பதுடன், அது அம்பலப்பட்டும் போயுள்ளது. அமெரிக்கா அதன் "உள்நாட்டை பாதுகாக்க வேண்டும்; உலகளாவிய அளவில் பாதுகாப்பை கட்டமைக்க வேண்டும்; பலத்தை எடுத்துக்காட்டி தீர்க்கமாக வெற்றி பெற வேண்டும்,” என்று பாதுகாப்புத்துறை செயலர் அறிவித்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்க இராணுவம் உலகை வெற்றி கொள்ளும் ஓர் இடத்தில் இருக்க வேண்டும், அதை செய்வதற்கு அது வரையறையில்லா நிதிகளைப் பெறுவதை முடிவு செய்யக் கூடியதாக இருக்க வேண்டும்.

அமெரிக்கா மேலும் மேலும் கூடுதலாக படைக்கல அரசிற்கு ஒத்திருக்கிறது, அதில் பெருந்திரளான நிதியானது ஒடுக்குமுறை மற்றும் போர் கருவிகளுக்கு நிதி வழங்குவதற்காகவே திருப்பி விடப்படுகின்றன. இன்று அமெரிக்க இராணுவத்தின் அளவு, ஓர் அரை நூற்றாண்டிற்கு முன்னர் ஜனாதிபதி டிவைட் ஐசன்ஹோவர் "இராணுவ-தொழில்துறை கூட்டுபிணைப்பின்" பலம் குறித்து எச்சரித்த போது அவரால் கற்பனை செய்யப்பட்ட எதையும் சிறியதாக்கி விடக்கூடும்.

ஒபாமாவின் வரவு-செலவு திட்டக்கணக்கு, "அடிப்படை" இராணுவ செலவினங்களுக்கு 561 பில்லியன் டாலர்களுக்கு அழைப்புவிடுக்கிறது. வரையறை வரம்பை விட 38 பில்லியன் டாலர் கூடுதலான இதில், வெளிநாட்டு அவசரகால நடவடிக்கைகளுக்காக (Overseas Contingency Operations - OCO) ஒதுக்கப்படும் 51 பில்லியன் டாலர் தொகுப்பு போர் நிதி உள்ளடங்காது. அவர்களது சொந்த வரவு-செலவு திட்டக்கணக்கு பரிந்துரையில் பிரதிநிதிகள் சபையின் குடியரசுக் கட்சியினர், செலவின உச்சவரம்பைக் கடைபிடிக்க உத்தியோகபூர்வமாக வலியுறுத்தி இருந்தனர், அதேவேளையில் அந்த இடைவெளியை சரிகட்டுவதற்காக OCOக்குள் பத்து பில்லியன் கணக்கான கூடுதல் நிதிகளைப் பாய்ச்சுவதற்கு முன்மொழிந்திருந்தனர்.

ஒப்பீட்டின்படி, ஒபாமாவினது வரவு-செலவு திட்டக்கணக்கு ஒட்டுமொத்த கல்வித்துறைக்கான விருப்புடை செலவுகளுக்கு 70 பில்லியன் டாலரும் மற்றும் ஊட்டச்சத்து உதவி தேவைப்படும் சுமார் 46 மில்லியன் மக்களுக்கு சேவை வழங்கும் உணவு மானிய வில்லைகளுக்கான பணத்தேவைக்கு 84 பில்லியன் டாலரும் மட்டுமே ஒதுக்க அழைப்புவிடுக்கிறது. அந்த வரவு-செலவு திட்டக்கணக்கு அவசரகால பேரிடர் மீட்சிக்கு சுமார் 7 பில்லியன் டாலரை ஒதுக்குகிறது.

அமெரிக்க போர் எந்திரத்திற்குள் அவர்கள் கூடுதலாக பில்லியன்களை பாய்ச்சுகிற போதினும், குடியரசுக் கட்சியினர் போல ஜனநாயகக் கட்சியினரும், மருத்துவ பராமரிப்பு (Medicare) மற்றும் சமூக பாதுகாப்பு போன்ற அத்தியாவசிய சமூக திட்டங்களுக்கான நிதிகள் வெட்டப்பட வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.

கார்டரின் தகவல்படி, இரண்டு மில்லியனுக்கு அண்மித்தளவில் துருப்புகளைக் கொண்ட ஒரு படைக்கு —தரைப்படை, கடற்படை, கடல்சார் படைப்பிரிவு மற்றும் விமானப்படைக்கு— அல்லது நெருக்கமாக ஒவ்வொரு 150 அமெரிக்க பிரஜைகளுக்கு ஒருவர் என்றளவில் உள்ள ஒரு படைக்கு நிதியளிப்பதை பெண்டகன் வரவு-செலவு திட்டக்கணக்கு அவசியமாக்குகிறது. இராணுவமோ அதன் ஏற்கனவே உள்ள பிரமாண்ட போர் எந்திரத்தை விரிவாக்குவதற்காக புதிய சாதனங்களின் ஒரு தொகுப்பை வாங்கவும் திட்டமிட்டு வருகிறது.

ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் நிலைநிறுத்துவதற்காக, கடற்படை, 1.5 பில்லியன் டாலரில் இருந்து 2 பில்லியன் டாலருக்கு இடையிலான மதிப்பில் ஒவ்வொன்றுக்குமென இரண்டு புதிய ஏவுகணை தகர்ப்பு தளவாடங்களை கோருகிறது. விமானப்படை ஒவ்வொன்றும் 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்பைக் கொண்ட நூற்றுக் கணக்கான புதிய F-35A போர் விமானங்களுக்குத் தூண்டில் போட்டு வருகிறது. மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா மீது குண்டுமழை பொழிவதற்கு பயன்படும், ஒவ்வொன்றும் பத்து மில்லியன் கணக்கான டாலர்கள் விலையிலான டிரோன்களை வாங்க, பில்லியன்கள் ஒதுக்கப்பட உள்ளன.

இராணுவத்திற்கு நிதியளிப்பதன் மீதான விவாதம், அமெரிக்காவில் யுத்தமானது ஆளும் வர்க்க கொள்கையின் மைய அம்சமாக மாறியுள்ளது என்ற அடிப்படை உண்மையை அடிக்கோடிடுகிறது. 1991இல் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பிற்கு முன்னதாக, ஜனாதிபதி ஜோர்ஜ் எச். டபிள்யு. புஷ் ஒரு "புதிய உலக ஒழுங்கமைப்பை" —ஒரு நிரந்தர சமாதான அமெரிக்கானாவை— அறிவித்தார்.

ஆனால் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி அமெரிக்க முதலாளித்துவத்தின் இறுதி வெற்றிக்கு சமிக்ஞை இடவில்லை. மாறாக, அது அமெரிக்க முதலாளித்துவத்தின் பொருளாதார மற்றும் தொழில்துறை மேலாதிக்கத்தால் நங்கூரமிடப்பட்டிருந்த இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய சர்வதேச சமநிலையின் உடைவையும் மற்றும் தேசிய-அரசின் பூகோளமயப்பட்ட நெருக்கடியின் ஒரு புதிய கட்டத்தையும் குறித்தது. அமெரிக்காவின் உலக பொருளாதார இடத்தின் நீடித்த வீழ்ச்சியே —இந்த நிகழ்வுபோக்கு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் தீவிரப்பட்டிருந்த நிலையில்— இதுவே, இந்த நெருக்கடியின் மையத்தில் இருந்தது.

சோவியத் ஒன்றியம் இருந்தபோது தடுக்கப்பட்ட உணர்வுகள் எதுவும் இல்லாமல், அமெரிக்க பெருநிறுவன மற்றும் நிதியியல் பிரபுத்துவம், அமெரிக்க உலக மேலாதிக்கத்திற்கு சவால்விடுக்க கூடியவர்களை அச்சுறுத்த, பீதியூட்ட, தாக்க, அவசியமானால், அழிக்க, இன்றும்-மேலாதிக்கம் கொண்ட அதன் இராணுவ சக்தியின் மீது சார்ந்திருப்பதன் மூலமாக, அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியைச் சரிக்கட்ட முனைந்தது.

சுமார் ஒரு கால் நூற்றாண்டுக்குப் பின்னர், அமெரிக்கா முடிவில்லாத தொடர்ச்சியாக அண்மித்தளவில் உலகின் ஒவ்வொரு மூலையிலும் படையெடுப்புகள், ஆக்கிரமிப்புகள், எதிர்-கிளர்ச்சி போர்கள் மற்றும் இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அது பூமிக்கு வெளிப்பரப்பையும் வெற்றிகொள்ள முனைந்து வருவதோடு, இணையவெளியிலும் போர் நடத்தி வருகிறது.

ஓர் எண்ணிக்கையின்படி, அமெரிக்க இராணுவம் அல்லது சிறப்பு நடவடிக்கை படைகள் கடந்த ஆண்டில் 133 நாடுகளில் —அதாவது இந்த பூமியில் உள்ள தேசிய அரசுகளில் 70 சதவீதத்தில்— நிலைநிறுத்தப்பட்டிருந்தன. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானைப் போன்ற பகிரங்க போர்கள்; மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆபிரிக்கா முழுவதிலுமான விரிவாக்கப்பட்ட "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்"; கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யாவிற்கு எதிரான பாரியளவிலான இராணுவ கட்டமைப்பு; சீனாவிற்கு எதிராக திருப்பிவிடப்பட்ட கூட்டணிகள் மற்றும் இராணுவ தளங்களின் ஒரு வலையமைப்பைக் கொண்ட "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு" ஆகியவை இதில் உள்ளடங்குகின்றன.

அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் நீண்டகால பொருளாதார வீழ்ச்சியை இராணுவ வழிவகைகளைக் கொண்டு எதிர்கொள்வதற்காக செய்யும் பயனற்ற மற்றும் முட்டாள்தனமான முயற்சி, ஒரு பேரழிவு மாற்றி ஒரு பேரழிவை உருவாக்கி உள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மைய நலன்களில் குறுக்கிடும் துரதிருஷ்டத்தைக் கொண்ட ஒவ்வொரு நாடும், குழப்பங்களுக்குள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இத்தகைய இரத்தந்தோய்ந்த நடவடிக்கைகளில் எதுவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சியையோ அல்லது சீனா போன்ற போட்டியாளர்களது எழுச்சியையோ தடுத்துவிடவில்லை.

இராணுவ வன்முறையில் தங்கியிருக்கும் வாஷிங்டனின் பொறுப்பற்றத்தன்மையில் இருந்து உண்டான தோல்விகள், ஆளும் வர்க்கத்தை அதன் இராணுவ நடவடிக்கைகளின் வீச்சை விரிவுபடுத்தவும், சாத்தியமான விரோதிகளின் பட்டியலை விரிவாக்கவும், மற்றும் உலக போருக்கு முற்றிலும் நனவுபூர்வமாகவும் மற்றும் திட்டமிட்டரீதியிலும் தயாரிப்பு செய்வதற்கு மட்டுமே உந்திச் சென்றுள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் எதிர்கொண்டுள்ள முரண்பாடுகள், இந்த மாதம் ஜேர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் இத்தாலி ஆகியவை, ஒபாமா நிர்வாகத்தின் நேரடியான முறையீடுகளுக்கு இடையிலும், சீனா முன்மொழிந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் இணைந்ததன் மூலம் அமெரிக்காவிற்கு ஒரு அவமானகரமான அடியை வழங்கிய போது வெளிப்பட்டன. அமெரிக்க மேலாதிக்கம் கொண்ட இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய ஒழுங்கமைப்பின் கட்டமைப்பிற்குள் அவர்களது நலன்களை முன்னெடுக்க நிர்பந்திக்கப்பட்ட பிரதான ஏகாதிபத்திய சக்திகள் மீள்இராணுவமயமாகி வருவதுடன், அவற்றில் சிலவற்றை —ஜேர்மனி? ஜப்பான்?— தவிர்க்கவியலாமல் அமெரிக்கா உடனேயே நேரடியான மோதலுக்குள் இழுக்கக்கூடிய ஒரு போக்கை வரைய தொடங்கி உள்ளன.

சமாதான அமெரிக்கானாவை போர்கோல அமெரிக்கா என்பதற்குள் மாற்றுவதில், அங்கே மற்றொரு காரணியும் ஆழ்ந்த முக்கியத்துவம் வகிக்கின்றது: அதாவது, அமெரிக்காவிற்கு உள்ளேயே நிலவும் பெரும் சமூக முரண்பாடுகள். நிதியியல் பிரபுத்துவத்தின் பேராசை கொண்ட சூறையாடல் மற்றும் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் முன்பினும்-அதிகரித்துவரும் முறையீடுகள் ஆகியவை ஒருங்கிணைந்து அமெரிக்க சமூகத்தை திவாலாக்கி உள்ளது. சமூக பதட்டங்கள் ஓர் உடையும் புள்ளியை எட்டியுள்ளன.

ஆகையால் ஆளும் வர்க்கம் ஒரு "முழு இராணுவ" வடிவத்திற்காக இராணுவ மற்றும் உளவுத்துறை அமைப்புகளுடன் பொலிஸை ஒருங்கிணைப்பதன் மூலமாக, உள்நாட்டில் சமூக எதிர்ப்பிற்கு எதிராக நேரடியாக முன்பினும் கூடுதலாக அதன் இராணுவ பலத்தை நிலைநிறுத்துகிறது.

அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடியானது —உள்ளேயும் சரி, வெளியிலும் சரி— அதிகரித்துவரும் அணுஆயுத போர் மற்றும் சர்வாதிகாரத்தின் அச்சுறுத்தல்களை எதைக் கொண்டு எதிர்க்க முடியுமோ, அந்த வழிவகையையும் குறித்துக் காட்டுகிறது: அதாவது அது வர்க்கப் போராட்டமும் சமூக புரட்சியும் ஆகும்.