சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

German Airbus crash in southern France kills 150

தெற்கு பிரான்சில் நடந்த ஜேர்மன் ஏர்பஸ் விமான விபத்தில் 150 பேர் பலி

By Stefan Steinberg
25 March 2015

Use this version to printSend feedback

செவ்வாயன்று தெற்கு பிரான்சில் நடந்த, ஸ்பெயினில் இருந்து ஜேர்மனிக்கு சென்று கொண்டிருந்த, ஓர் ஏர்பஸ் விமானம் விழுந்து நொறுங்கியமை சமீபத்திய ஜேர்மன் வரலாற்றிலேயே படுபயங்கரமான விமான பேரிடராகும்.

செவ்வாயன்று நண்பகலில் அந்த விமானம், திடீரென அது பறந்து கொண்டிருந்த உயரத்திலிருந்து கட்டுப்பாட்டை இழந்து, ஒரு தொலைதூர பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைப்பகுதியின் தரையில் மோதிய போது, அந்த விமானத்தில் இருந்த 144 பயணிகள் மற்றும் ஆறு விமானக்குழு உறுப்பினர்கள் உட்பட, மொத்தம் 150 பேரும் இறந்து போயினர். மீட்பு ஹெலிகாப்டர்கள் விபத்து நடந்த பகுதியில் தரையிறங்கி உள்ளன. அங்கே யாரும் உயிர்பிழைத்திருக்கவில்லை என்பதையும், ஆனால் விமானத்தின் தகவல் பெட்டியை (black box) மீட்க முடிந்திருப்பதையும் அந்த ஹெலிகாப்டர் குழுவினர் உறுதிப்படுத்தினர்.

Germanwings நிறுவன கருத்துப்படி, லூப்தான்ஸாவினால் செயல்படுத்தப்படும் மலிவு கட்டண விமானத்தில் பலியானவர்களில் வெஸ்ட்பாலியன் நகரமான ஹால்டெர்னிலிருந்து சென்ற 16 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் உட்பட 67 ஜேர்மானியர்களும் இருந்தனர். 16 வயதான அந்த மாணவர்களும் அவர்களது ஆசிரியர்களும் ஸ்பெயினுடனான மாணவர் பரிவர்த்தனை திட்டத்தின் பாகமாக சென்று ஜேர்மனிக்குத் திரும்பி கொண்டிருந்தனர். மேட்ரிட் அரசாங்க கருத்துப்படி, பலியானவர்களில் 54 ஸ்பெயின் பயணிகளும் உள்ளனர்.

அந்த விமானம், 4U 9525, உள்ளூர் நேரம் காலை 10.01 மணிக்கு பார்சிலோனாவிலிருந்து ஜேர்மனியின் Dusseldorfக்கு புறப்பட்டது. காலை 10.45க்கு அந்த விமானம் அதன் வழக்கமான பயண உயரமான 38,000 அடி (11.5 கிலோமீட்டர்) உயரத்தை எட்டியது. அதற்கு ஒரு நிமிடத்திற்குப் பின்னர், அது செங்குத்தாக கீழே விழத் தொடங்கியது. Germanwings நிறுவன தலைமை செயலதிகாரி தோமஸ் வின்கெல்மான் கருத்துப்படி: “எட்டு நிமிடங்கள் அது கீழ் நோக்கி இறங்கியது. விமானத்திற்கும் பிரெஞ்சு ராடார் மற்றும் தரைக்கட்டுப்பாட்டு அறைக்கும் இடையிலான தொடர்பு, சுமார் 6,000 அடி உயரத்தில், காலை 10.53 மணிக்கு துண்டிக்கப்பட்டது. பின் அந்த விமானம் விபத்தில் நொறுங்கியது.” விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளின் கருத்துப்படி, விமானஓட்டி அந்த விமானம் திடீரென கீழிறங்க தொடங்கியதைக் குறித்து தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் அளிக்கவில்லை.

பிரெஞ்சு போக்குவரத்துத்துறை செயலர் அலென் விடாலியஸின் கருத்துப்படி, விமானம் ஒரு "அசாதாரண நிலைமையில்" இருப்பது குறித்து அந்த விமானஓட்டி காலை 10.47க்கு ஒரு அவசர அழைப்பை அனுப்பி இருந்தார். அதற்கடுத்த சில நிமிடங்களில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. காலை 11.15க்கு ஒரு பிரெஞ்சு பொலிஸ் ஹெலிகாப்டர், Alpes-de-Haute-Provence பிராந்தியத்தின் Digne-les-Bainsக்கு அருகிலிருந்த பகுதியில் ஒரு புகை மண்டலத்தைக் கண்டது.

24 ஆண்டு பழைய ஏர்பஸ் A320 ரக விமானமான அது, பெப்ரவரி 6, 1991 இல் லூப்தான்ஸாவிற்கு வழங்கப்பட்டதாகும். அது முதன்முதலில் நவம்பர் 1990 இல் பறக்கவிடப்பட்டதுடன், ஏர்பஸ் வரிசையில் செயல்படும் விமானங்களிலேயே அது மிகவும் பழைய ஒன்றாகும். லூப்தான்ஸாவின் கருத்துப்படி, அந்த விமான கேப்டன் 10 ஆண்டுகள் விமானச்சேவை அனுபவம் கொண்டவர். காலநிலை நன்றாகவே இருந்ததாகவும், அந்த விபத்தில் காலநிலை எந்த வெளிப்படையான பாத்திரமும் வகிக்கவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகளாவிய விமானசேவைகளுக்கான மிகவும் பிரபலமான விமானங்களில் ஏர்பஸ் A320உம் ஒன்றாகும், அத்துடன் அதுவே பெரிதும் கணினிமயப்பட்ட fly by wire தொழில்நுட்பத்துடன் நிறுவப்பட்ட முதல் விமானமும் ஆகும். கடந்த தசாப்தங்களின் போது அந்த விமானம் சம்பந்தப்பட்ட பல விபத்துக்கள், fly by wire தொழில்நுட்பத்துடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுடன் தொடர்புபடுத்தப்பட்டு உள்ளன.

Spiegel Online இல் வெளியான ஓர் அறிக்கை குறிப்பிடுகையில், சமீபத்திய விபத்தில் தொழில்நுட்ப பிரச்சினை ஒரு முக்கிய பாத்திரம் வகித்திருக்கக்கூடும் என்றது. அந்த செய்தியின்படி, Germanwings நிறுவன அந்த ஏர்பஸ் தொழில்நுட்ப பிரச்சினைகளால் பல மணிநேரங்கள் AOG என்றழைக்கப்படும் (“விமானம் தரையில் நிற்கும் நிலை) நிலையில் Dusseldorf விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. விமானத்தின் முன் சக்கரம் (nose wheel) கீழே இறங்கி இருக்கும்போது விமானத்தின் மையப்பகுதியை (fuselage) திறக்கும் மற்றும் மூடும் விமானத்தின் இறங்கும் முன்கதவில் அங்கே ஒரு பிரச்சினை இருந்ததை லூப்தான்ஸா உறுதிப்படுத்தியது.

Dusseldorf மற்றும் Stuttgart விமான நிலையங்கள் இரண்டிலும் இருந்த சில Germanwings நிறுவன விமான சிப்பந்திகள், செவ்வாயன்று அவர்களது விமானங்களில் செல்ல மறுத்திருந்தனர் என்பதோடு, ஜேர்மன் ஏர்பஸ்கள் சார்ந்த பல விமானங்களது பயணங்கள் இரத்து செய்யப்பட்டன. அவரவர்களது விமானங்களின் "விமான தயார்நிலையை" விவாதிக்க விமான சிப்பந்திகள் பின்வாங்கிவிட்டதாக, விமானங்களுக்காக காத்திருந்த பயணிகளுக்கு தரைக்கட்டுப்பாட்டு அதிகாரிகளால் தகவல் அளிக்கப்பட்டன. Germanwings நிறுவன விமான சிப்பந்திகள் "தனிப்பட்ட காரணங்களுக்காக" அவர்களது வேலையிடத்தை எடுக்கவில்லையென ஒரு லூப்தான்ஸா செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

லூப்தான்ஸா விமானஓட்டிகளுக்கும் மற்றும் நிறுவன நிர்வாகத்திற்கும் இடையே ஒரு நீண்டகால தொழில்துறை பிரச்சினை இருந்த நிலையில், இந்த சமீபத்திய விபத்து நடந்துள்ளது. அந்த பிரச்சினை தொடங்கிய பின்னரில் இருந்து, கடந்த வாரம் தான் ஜேர்மன் விமான ஓட்டிகள் சங்கம் Cockpit ஒரு தொடர்ச்சியான கவனமான வேலைநிறுத்த நடவடிக்கைகளில் இருபதாவது நடவடிக்கையை எடுத்திருந்தது.

Cockpit சங்க செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், செவ்வாய்கிழமை விபத்தின் பின்புலத்தில், அந்த சங்கம் அண்மித்த எதிர்காலத்திற்கு மேற்கொண்டு தொழில்துறை நடவடிக்கைக்கான எந்த திட்டங்களையும் தள்ளி வைப்பதாக அறிவித்தார்.

விமானஓட்டிகள் அந்நிறுவனத்தின் கடுமையான செலவு குறைப்பு மூலோபாயத்தின் பாகமாக, ஓய்வூதியங்களைக் குறைக்கும் திட்டங்கள் மற்றும் வேலையிட நிலைமைகளை மோசமாக்கும் திட்டங்களுக்கு எதிராக போராடி வருகின்றனர். அயர்லாந்து நிறுவனம் Ryanair போன்ற ஏனைய மலிவு கட்டண விமானச்சேவைகளுடன் ஒரு கட்டணக் குறைப்பு போட்டியில் ஈடுபடுவதற்காக, அதன் மலிவு கட்டண துணை நிறுவனங்களான Germanwings மற்றும் Eurowings விரிவாக்கும் அதன் நோக்கத்தை லூப்தான்ஸா அறிவித்துள்ளது.