சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Syriza leader Tsipras meets with Left Party leaders in Berlin

சிரிசா தலைவர் சிப்ராஸ் பேர்லினில் இடது கட்சி தலைவர்களை சந்திக்கிறார்

By Johannes Stern
26 March 2015

Use this version to printSend feedback

சிரிசா தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பின்னர் பேர்லினில் அலெக்சிஸ் சிப்ராஸின் முதல் உத்தியோகபூர்வ விஜயம், அக்கட்சியின் மற்றும் அதன் ஜேர்மன் கூட்டாளிகளின் வலதுசாரி போக்கை அம்பலப்படுத்துகிறது. புதிய சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு வாக்குறுதி அளிக்க ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் உடனான அவரது திங்கட்கிழமை சந்திப்புக்குப் பின்னர், கிரேக்க பிரதம மந்திரியும் சிரிசா தலைவருமான சிப்ராஸ் செவ்வாயன்று இடது கட்சி தலைவர்களைச் சந்தித்தார்.

பேர்லினின் ஆடம்பர மேரியாட் ஹோட்டலில் ஒரு மணி நேர சந்திப்பிற்குப் பின்னர், இடது கட்சி தலைவர்கள் காட்ஸா கிப்பிங் மற்றும் கிரிகோர் கீசி ஆகியோர் அது "நண்பர்களுக்கு இடையிலான ஓர் உரையாடல்" என்று தெரிவித்தனர். இருவருமே மேர்க்கெல் உடனான சிப்ராஸின் சந்திப்பை வெளிப்படையாக ஆதரித்ததன் மூலமாக, கிரீஸிற்கான மற்றும் ஒட்டுமொத்தமாக ஐரோப்பாவிற்கான ஜேர்மனியின் சிக்கன கொள்கைக்கு ஒப்புதல் வழங்கி உள்ளனர். இந்த கொள்கை இப்போது பேர்லின் அரசாங்கத்துடனான நெருக்கமான கூட்டு-ஒத்துழைப்புடன் சிரிசாவினால் தீவிரப்படுத்தப்பட உள்ளது. கீசி, அவரது வழக்கமான எரிச்சலூட்டும் பாணியில், சிப்ராஸ் "ஐரோப்பாவிற்கான வரப்பிரசாதம்" என்றார். சான்சிலர் உடனான சிப்ராஸின் இரவு விருந்து, மற்றும் மேர்க்கெல் உடனான ஐந்து மணிநேர பேச்சுவார்த்தைகளின் போது, “சூழல்" “விரும்பத்தகாததாக இருக்கவில்லை" என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

சிப்ராஸ் மற்றும் மேர்க்கெல் இடையிலான "மிகவும் இரகசியமான கருத்து பரிவர்த்தனைகளை" கிப்பிங் பாராட்டினார். அது "கிரீஸின் நிலைமைகளை இன்னும் கூடுதலாக புரிந்து கொள்வதற்கு" பங்களிப்பு செய்திருக்கும். அப்பெண்மணி, சிரிசாவினால் பரிந்துரைக்கப்பட்ட வெட்டுக்களுக்கு அவரது உறுதியான ஆதரவை வெளிப்படுத்தும் அளவிற்குச் சென்றார். “கிரீஸ் உறுதியான சீர்திருத்த பரிந்துரைகளைச் செய்திருக்கவில்லை என்பது மேலோட்டமாக கூட தவறானது,” என்று அவர் வலியுறுத்தினார். கிரேக்க அரசாங்கம் "சிக்கலான சூழ்நிலைகளின்" கீழ் விடையிறுத்து வருகிறது. அந்நாட்டின் பணப்புழக்க பிரச்சினைகளுக்கு தீர்வானது, கிரீஸிற்கு மட்டுமல்ல, மாறாக யூரோ மற்றும் ஜேர்மனியின் ஸ்திரப்பாட்டிற்கும் கூட மிக முக்கியமானது என்றவர் தெரிவித்தார்.

மேர்க்கெலுக்கும் சிப்ராஸிற்கும் இடையிலான சந்திப்பிற்கு முன்னதாக ஜேர்மன் ஊடகங்கள் சிரிசாவின் தொழிலாள வர்க்க விரோத நடவடிக்கைகளை பாராட்டி இருந்தன. அந்த கிரேக்க கட்சி ஏனைய நடவடிக்கைகளோடு "முந்தைய அரசாங்கத்தின் வெறுக்கப்பட்ட தனியார்மயமாக்கும் திட்டத்தைப் புதுப்பிக்கவும்" திட்டமிட்டுள்ளதாக Spiegel Online குறிப்பிட்டது. ஓய்வு வயதை 67 ஆக ஆக்குவது மற்றும் நீண்டகால தாக்கம் கொண்ட கட்டமைப்பு சீர்திருத்தங்கள் —அதாவது கிரேக்க பொருளாதாரத்தை மற்றும் தொழிலாளர் சந்தையை மேற்கொண்டும் தாராளமயமாக்குவது ஆகியவை— கூடுதல் நடவடிக்கைகளில் உள்ளடங்குகின்றன. முந்தைய சமூக ஜனநாயக மற்றும் பழமைவாத அரசாங்கங்கள் இந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த இயலாமல் இருந்தன.

செவ்வாயன்று, ஜேர்மன் மற்றும் கிரேக்க பத்திரிகைகள் மேர்க்கெல் மற்றும் சிப்ராஸ் இடையிலான சந்திப்பைக் குறித்து கருத்துரைத்தன. தாராளவாத இதழ் Die Zeit எழுதியது: “செவ்வாயன்று காலை வேளையில் அங்கேலா மேர்க்கெல் உடன் சிப்ராஸ் மணிக் கணக்கில் பேசினார். கிரேக்க தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் திட்டவட்டமாக நிராகரித்திருந்த சீர்திருத்தங்கள் மீது, அதாவது ஓய்வூதிய வயதை அதிகரிப்பது மற்றும் கிரேக்க விடுமுறை தீவுகளுக்கான மதிப்பு கூட்டு வரிகளை [VAT] உயர்த்துவது ஆகியவற்றின் மீது அவர் பேரம்பேசினார்.”

சமூக ஜனநாயக PASOK கட்சிக்கு நெருக்கமான கிரேக்க நாளிதழ் Ta Nea எழுதியது: “மேர்க்கெல் சிவப்பு கம்பளம் விரித்திருந்தார்,” மேலும் சிப்ராஸ் "அவரது நிஜமான அரசியலை வெளிப்படுத்தி" இருந்தார். “ஒரு வித்தியாசமான அரசியல் கலவை அவசியப்படுவதை தெளிவுபடுத்திய அவர், “கிரீஸின் மீது கடன் வழங்குனர்களால் திணிக்கப்பட்ட சீர்திருத்தங்கள் நேர்மறையான விளைவுகளையும் உருவாக்கி உள்ளன" என்பதை அவர் ஒப்புக் கொண்டிருந்தார். இதை "ஒதுக்கிவிட" முடியாது. ஜேர்மன் அரசாங்கத்தின் போக்கையும் மற்றும் முக்கூட்டின் சிக்கன கொள்கையையும் —அதாவது, இந்த கொள்கை தான் மில்லியன் கணக்கான கிரேக்க தொழிலாளர்களைக் கடந்த ஐந்தாண்டு காலத்தில் வறுமைக்குள் தள்ளி உள்ளது என்ற நிலையில்— அவற்றை அவர் நிபந்தனையின்றி ஏற்றுக் கொள்கின்ற இந்தப் புள்ளியில், துல்லியமாக இடது கட்சி சிப்ராஸை பலமாக ஆதரிக்கிறது என்ற உண்மை ஆச்சரியத்திற்கிடமின்றி வருகிறது. பெப்ரவரி இறுதியில், இடது கட்சியின் பாரிய பெரும்பான்மை நிர்வாகிகள் கிரீஸிற்கான உதவி திட்டம் என்றழைக்கப்படுவதை நீடிப்பதற்கு நாடாளுமன்றத்தில் வாக்களித்தனர். அவ்விதத்தில் அவர்கள் வங்கிகளால் கோரப்பட்ட சிக்கன நடவடிக்கைகளை பகிரங்கமாக ஆதரித்தனர்.

இடது கட்சி நேரடியாக அரசாங்கத்தின் ஓர் ஆலோசகராக மற்றும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் விரிவுபட்ட படைக்கலமாக செயல்படுகிறது. இப்போது அது ஜேர்மன் ஆளும் வர்க்கத்தின் பொருளாதார மற்றும் அரசியல் நலன்களை நடைமுறைப்படுத்த புதிய கிரேக்க அரசாங்கத்துடன் நெருக்கமாக வேலை செய்து வருகின்றது.

பேர்லினுக்கு சிப்ராஸின் விஜயத்திற்கு முன்னதாக, இடது கட்சி துணை தலைவர் டீற்மார் பார்ட்ஷ், ஜேர்மன் பொருளாதாரத்தைப் பாதிக்காமல் இருக்க வேண்டுமானால், கிரீஸை நோக்கிய அதன் தொனியைக் குறைத்து வைக்குமாறு ஜேர்மன் அரசாங்கத்திற்கு அழைப்புவிடுத்தார். “ஒவ்வொரு நாளும், அங்கே தற்செயலாகவோ அல்லது திட்டமிட்டோ 'வெளியேறுதல்' [Grexit] நடக்கலாம் என்ற அனுமானம், முற்றிலும் உதவாது, ஏனென்றால் அது கிரீஸில் முதலீடு செய்வதிலிருந்து முதலீட்டாளர்களை அதைரியப்படுத்துகிறது.” ஆகவே "அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களை நீங்கள் அதிகமாக தீவிரப்படுத்தினால், அனேகமாக எந்த தீர்வும் கிடைக்காமல் போகலாம் என்பதால், தீவிரத்தைக் குறைக்க" அவர் ஆலோசனை வழங்கினார்.

ஜேர்மன் அரசாங்கமும் மற்றும் ஜேர்மன் ஊடகங்களும் இந்த விமர்சனத்தை நிச்சயமாக இதயத்தானத்தில் எடுத்துக் கொண்ட போதினும், கீசி மீண்டும் சிப்ராஸ் உடனான சந்திப்பிற்குப் பின்னர் இவ்வாறு எச்சரித்தார்: “நிஜமாகவே யூரோ உடைகிறது என்றால், பின் ஜேர்மன் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்படும். பின்னர் நம்மால் விளையாட்டை விளையாட முடியாத அளவிற்கு நமது ஏற்றுமதிகள் பொறிந்து போகும்,” என்றார்.

ஜேர்மனியில் இடது கட்சி நேரடியாக (இப்போது) அரசாங்கத்தின் பாகமாக இல்லை என்ற போதினும் கூட, சிப்ராஸின் விஜயம் மீண்டுமொருமுறை இதை மிகவும் தெளிவுபடுத்துகிறது: அதாவது, அதன் சகோதரத்துவ கிரேக்க கட்சியுடன் பொதுவான முறையில், ஜேர்மன் இடது கட்சி தொழிலாளர்களின் தரப்பில் நிற்கவில்லை, மாறாக பெரு வணிகங்கள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வங்கிகளின் நலன்களையே பாதுகாத்து நிற்கிறது.