சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

US warplanes attack targets in center of Tikrit

அமெரிக்க போர் விமானங்கள் திக்ரிட் மையத்தில் உள்ள இலக்குகளைத் தாக்குகின்றன

By Patrick Martin
27 March 2015

Use this version to printSend feedback

அமெரிக்க போர்விமானங்கள் புதனன்று இரவு திக்ரிட்டின் மையத்தில் உள்ள இஸ்லாமிய அரசினது நிலைகளின் மீது விமான தாக்குதல்களைத் தொடங்கின. மறைந்த ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹூசைனின் சொந்த ஊரான அந்த ஈராக்கிய நகரில் நடக்கும் இரத்தந்தோய்ந்த சண்டையில், அமெரிக்க படைகள் ஈடுபடுவது இதுவே முதல்முறையாகும்.

கடந்த ஆகஸ்டில் ஈராக்கில் அமெரிக்கா இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியதற்குப் பின்னர் நடந்த மிகவும் மூர்க்கமான குண்டுவீச்சுகளில் ஒன்றில், குறைந்தபட்சம் 180 இலக்குகள் தாக்கப்பட்டதாக இராணுவ ஆதாரங்கள் தெரிவித்தன. டஜன் கணக்கான ISIS போராளிகள், திக்ரிட்டில் இறுதிமூச்சு தற்காப்பு தாக்குதலை நடத்தி கொண்டிருப்பவர்களும், தற்போது சுற்றி வளைக்கப்பட்டிருப்பவர்களில் கணிசமான விகிதத்தினர், புதனன்று இரவு கொல்லப்பட்டதாக உள்ளூர் ஈராக்கிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரானுடன் அணிசேர்ந்த ஷியைட் போராளிகள் படைகளின் —இவை திக்ரிட்டைச் சுற்றிய தரைப்படை சண்டையில் பெரும் சுமையை தாங்கியுள்ள நிலையில்— இவற்றின் தலைவர்கள் உள்ளடங்கலாக ஏனைய ஈராக்கிய அதிகாரிகளின் மேலோங்கிய ஆட்சேபனைகள் இருந்தபோதினும், ஈராக்கிய பிரதம மந்திரி ஹைதர் அல் அபாதி புதனன்று காலை உத்தியோகபூர்வமாக அமெரிக்க தலையீட்டைக் கோரினார்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அந்த கோரிக்கைக்கு ஒப்புக் கொண்டார்; சில மணிநேரங்களில் விமானத் தாக்குதல்கள் தொடங்கின. இந்த மாத தொடக்கத்தில் ஈராக்கிய படைகள் அங்கே சிக்கிக் கொண்டதற்குப் பின்னர், சில காலமாகவே திக்ரிட் மீது தாக்குதல் நடத்த பெண்டகன் திட்டமிட்டு வந்துள்ளது என்பதை அந்த விடையிறுப்பின் வேகம் எடுத்துக்காட்டுகிறது.

அந்த விமான தாக்குதல்களுக்கான அரசியல் தயாரிப்பும் சில நாட்களுக்கு முன்னதாக தொடங்கி இருந்தது, திக்ரிட் மீதான தாக்குதலை ஒழுங்கமைப்பதிலும், முன்னிலை வகிப்பதிலும் பிரதான பாத்திரம் வகித்த ஈரானிடமிருந்து ஈராக்கிய அரசாங்கத்தையே விலக்கி வைப்பதற்காக தொடர்ந்து அமெரிக்க போர்முரசு கொட்டப்பட்டு வந்தது. “மூலோபாய செல்வாக்கு மற்றும் நீண்டகால செல்வாக்கு செலுத்துவதற்காக அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போராட்டத்தின்" காட்சியரங்கமாக ஈராக் உள்ளது என்று "மூத்த ஒபாமா நிர்வாக அதிகாரி" ஒருவர் வாஷிங்டன் போஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப்படையின் குத்ஸ் பிரிவு தலைவரும் மற்றும் ஈராக்-சிரியா பிராந்திய நடவடிக்கைகளுக்கான ஈரானின் தலைவருமான குவாசெம் சுலைமான் செவ்வாயன்று திக்ரிட்டை விட்டு வெளியேறினார். அதேநாளில் தான் அமெரிக்க வான்வழி உளவுபார்ப்பு விமானங்கள் அந்நகரின் மீது பறக்க தொடங்கின, மற்றும் அதற்கு ஒரு நாள் முன்னர் தான் உண்மையிலேயே வான்வழி தாக்குதல்கள் தொடங்கி இருந்தன.

கடந்த ஒன்பது மாதங்களாக ISIS இன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திக்ரிட்டுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் மார்ச் 1 அன்று தொடங்கியது. அப்போது பரந்த பெரும்பான்மை ஷியைட் போராளிகளைக் கொண்ட 25,000க்கும் கூடுதலான துருப்புகள், வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கில் இருந்து அந்நகரைச் சுற்றி குவிந்திருந்தனர்.

வெறும் பத்து நாட்களில், பக்கவாட்டு படையணிகள் அந்நகரை முற்றிலுமாக சுற்றி வளைத்ததோடு, அதன் புறநகர் பகுதிகள் அனைத்தையும் கைப்பற்றின. வலையில் சிக்கியதைப் போல, சில நூறு ISIS போராளிகள் சதாம் ஹூசைனின் ஜனாதிபதி மாளிகையிலும் மற்றும் அந்நகரின் மையங்களில் உள்ள சில ஏனைய இடங்களிலும் தோண்டிய குழிகளுக்குள் பதுங்கி இருப்பதாக நம்பப்பட்டது.

இருந்தும் தற்கொலை படையின் எதிர்ப்பு மற்றும் பத்து ஆயிரக் கணக்கான கண்ணிவெடிகள் மற்றும் திடீரென வெடிக்கக்கூடிய வெடிகுண்டு சாதனங்கள் ஆகியவற்றை முகங்கொடுத்த நிலையில், அந்த தாக்குதல் முடங்கி போயிருந்தது. ஈராக்கிய படைகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததுடன், ISIS இன் கடைசி எச்சசொச்சங்களை எரித்து சாம்பலாக்க அங்கே அமெரிக்க விமானப்படை தாக்குதல்களைக் கோர வேண்டுமா என்பதன் மீது ஷியைட் போராளிகள் குழு தலைவர்களுக்கும் மற்றும் அபாதி அரசாங்கத்திற்கு இடையே அங்கே பகிரங்கமான மோதல் நிலவியது.

அவர்களது ஆட்சேபனைகளுக்கு இடையிலும், அவர் அமெரிக்க வான்வழி தாக்குதலுக்கு ஒப்புதல் வழங்கியதை பிரதம மந்திரி அபாதி, ஷியைட் போராளிகள் குழுக்களுக்கு எழுத்துபூர்வமாக தெரிவித்திருந்ததாக திக்ரிட்டை உள்ளடக்கிய சலாஹூதின் மாகாண ஆட்சிக்குழுவின் துணை தலைவர் ஜஸ்செம் அட்யா தெரிவித்தார். அபாதி உத்தரவு வழங்கினார், “ஏனென்றால் திக்ரிட் சண்டை முடிக்கப்பட வேண்டும், அதன்மூலமாக தான் பாதுகாப்பு படைகளை", ஈராக்கில் ISIS இன் பிரதான மையங்களாக உள்ள "அன்பார் மற்றும் மோசூலுக்கு நகர்த்தலாம்,” என்று அட்யா போஸ்ட்க்கு தெரிவித்தார்.

அமெரிக்க இராணுவ செய்தி தொடர்பாளர்கள், "அந்நகரிலிருந்து ISILஐ வெளியேற்றுவதற்காக நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் ஈராக்கிய பாதுகாப்பு படைகளுக்கு நேரடியான ஆதரவாக" அந்த வான்வழி தாக்குதல்களை முன்வைத்தனர். ஆனால் அந்த சண்டை குறித்த பத்திரிகை செய்திகளோ, 20,000 ஷியைட் இராணுவ போராளிகள், 1,000 சுன்னி பழங்குடியின போராளிகள், மற்றும் வெறும் 4,000 ஈராக்கிய இராணுவ துருப்புகள் இருந்ததாக பாக்தாத்-ஆதரவு படையின் உள்விபரங்களை குறிப்பிட்டன.

ISISக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளின் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஜேம்ஸ் எல். டெர்ரி கூறுகையில், அந்த தாக்குதல்கள் "திக்ரிட்டின் அருகில் படைத்துறை நடவடிக்கையானது, மேற்கொண்டு [ISIS] தோற்கடிக்க ஈராக்கிய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஈராக்கிய படைகளுக்கு கூடுதலாக உதவும்" என்றார். மேலும் அவை "தரைப்படையுடன் புதுப்பிக்கப்பட்ட முயற்சிகளினூடாக" ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

புதனன்று இரவு நடந்த அமெரிக்க தாக்குதல்களைத் தொடர்ந்து வியாழனன்று பகலில் இன்னும் கூடுதலான மட்டுப்படுத்தப்பட்ட ஈராக்கிய வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மாற்றிமாற்றி பகல்-இரவு என ஒருதொடர்ச்சியான தாக்குதல்கள் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஈராக்கிய விமானப்படை தளபதி ஜெனரல் அன்வர் ஹமீத் தகவலின்படி, குறைந்தபட்சம் ஐந்து ரஷ்ய-தயாரிப்பு ஈராக்கிய சுகோய்-25 குண்டுவீச்சு விமானங்கள் திக்ரிட்டின் இலக்குகள் மீது ஒவ்வொன்றும் நான்கு தாக்குதல்களை நடத்தியதாக தெரிவித்தார்.

அந்நகருக்கான "இரட்சிப்பு நேரம்" வந்துவிட்டதாக கூறி, திக்ரிட்டில் தரைப்படை தாக்குதல் மீண்டும் நடத்தப்படுமென புதனன்று இரவு அபாதி தேசிய தொலைக்காட்சியில் அறிவித்தார். அவர் அமெரிக்க விமான தாக்குதல்களைக் குறித்து குறிப்பிடவில்லை, ஆனால் "நேச நாடுகள் மற்றும் சர்வதேச கூட்டணிகளிடமிருந்து" ஈராக்கிற்கு "ஒத்துழைப்பு கிடைத்தது" என்று கூறி, மறைமுகமாக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் நன்றி தெரிவித்தார்.

ஈராக்கிய படைகளுக்கு ஆயுதங்கள், உளவுசெய்திகள் மற்றும் இராணுவ ஆலோசனைகளை வழங்கிய ஈரானின் உபகாரத்தின் விளைவாக ஒரு வேகமான வெற்றி கிடைத்த பின்னர், திக்ரிட் தாக்குதல் ஒரு இரத்தந்தோய்ந்த குழப்பத்திற்குள் மாற்றப்பட்டதை அமெரிக்க அதிகாரிகள் வரவேற்றனர் என்பதற்கு அங்கே குறிப்பிடத்தக்க சான்று உள்ளது.

ஈராக்கில் போராளிகள் குழுவின் ஆபத்து" என்று தலைப்பிட்ட மார்ச் 22 தலையங்கம் ஒன்றில், வாஷிங்டன் போஸ்ட் இந்த கண்ணோட்டத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியது. அது “திக்ரிட்டில் இருந்த திணறலை "பாதியளவிற்கு தீய செய்தியாக" சித்தரித்தது, ஏனெனில் அது ஈராக்கில் ஈரானின் கூட்டாளிகளுக்கு ஒரு பின்னடைவாகும் என்று வர்ணித்தது. அந்த தலையங்கம் தொடர்ந்து குறிப்பிடுகையில், “ஒரு சுன்னி பிராந்தியத்தைக் கைப்பற்றுவதற்கான அவர்களது முயற்சியில் ஷியைட் போராளிகள் குழுவை பரிசோதிப்பது, இறுதியில் சில சாதகமான விளைவுகளைக் கொண்டிருக்கலாம்,” என்று எழுதியது.