சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

New defeat for Socialist Party in second round of French local elections

பிரெஞ்சு உள்ளாட்சி தேர்தல்களின் இரண்டாம் சுற்றில் சோசலிஸ்ட் கட்சிக்கு புதிய தோல்வி

By Alex Lantier
30 March 2015

Use this version to printSend feedback

பிரான்சின் ஆளும் சோசலிஸ்ட் கட்சி (PS) மாவட்ட தேர்தல்களின் இரண்டாம் சுற்றில் மிகமோசமாக இழப்புகளைச் சந்தித்து, நேற்று மற்றொரு படுதோல்வியை அனுபவித்தது. பிரான்சின் 101 மாவட்டங்களில் 34 இல் சோசலிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. அதாவது வாக்கெடுப்புக்கு முன்னர் அது வைத்திருந்த 60 மாவட்டங்களில் பாதி மாவட்டங்களின் மீது அது கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

வலதுசாரி UMP (மக்கள் இயக்கத்திற்கான யூனியன்) 67 மாவட்டங்களின் சபைகளைக் கட்டுப்பாட்டில் எடுக்க உள்ளது. தேசிய முன்னணி (FN) ஒரு மாவட்டத்தையும் கட்டுப்பாட்டில் கொள்ளவில்லை. முதல் சுற்று தேர்தல்களைப் போலவே, வாக்களிக்காதோர் 50 சதவிகிதம் ஆகும்.

மே 2012 ஜனாதிபதி தேர்தல்களில் சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் பிரான்சுவா ஹோலாண்டின் வெற்றி மற்றும், அதற்கு சில வாரங்களுக்கு பின்னர் சட்டமன்ற தேர்தல்களில் சோசலிஸ்ட் கட்சியின் வெற்றி ஆகியவற்றிற்குப் பின்னர் நடந்த, இடைத் தேர்தல்களில் இது தொடர்ந்து நான்காவது தோல்வியைக் குறிக்கிறது. வேலைவாய்ப்பின்மையின் தீவிர அதிகரிப்பு மற்றும் ஊதிய உயர்வுகளின் முடக்கம் ஆகியவற்றிற்கு தலைமை தாங்குவதற்காக ஹோலாண்ட் பரவலாக வெறுக்கப்படுகிறார். அவரது சிக்கன நடவடிக்கை மற்றும் போர் கொள்கைகள், இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய பிரான்சின் மிகவும் செல்வாக்கிழந்த ஜனாதிபதியாக அவரை ஆக்கி உள்ளன. ஹோலாண்டின் சொந்த Corrèze மாவட்டத்தையே கூட சோசலிஸ்ட் கட்சி இழந்தது.    

எந்தளவிற்கு பெருமளவிலான வாக்காளர்கள் அவர்களை தேர்தல்களில் நிராகரித்தாலும் பரவாயில்லை, அவரது சிக்கன கொள்கைகளை மாற்றப் போவதில்லையென, மாவட்ட தேர்தல்கள் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், ஹோலாண்ட் உறுதியாக வலியுறுத்தி இருந்தார். அங்கே "நடைமுறைப் போக்கிலோ அல்லது பிரதம மந்திரி விடயத்திலோ எந்த மாற்றமும் இருக்காது,” என்று வணிக சஞ்சிகை Challengesக்கு அவர் தெரிவித்தார்.

அவரது கொள்கைகள் மீது நிலவும் பாரிய கோபத்தை மூர்க்கமாக உதறிவிட்டு அவர் கூறுகையில்: “அரசியல் போக்கு தெளிவாக உள்ளது, அது பலனைக் கொடுக்க தொடங்கியுள்ள போது நான் ஏன் அதை மாற்ற வேண்டும்?” என்றார்

சோசலிஸ்ட் கட்சி அதன் செல்வாக்கிழந்த கொள்கைகளையே தொடரும் என்பதை அப்பட்டமாக அறிவிப்பதற்கு பிரதம மந்திரி வால்ஸை அனுப்பி, அதன் தோல்விக்கு சோசலிஸ்ட் கட்சி எதிர்வினை காட்டியது. அவர் உவகையோடு அறிவித்தார்: “பொருளாதாரம் சிறப்பாக செல்கிறது, நமது வணிகங்களின் நலன்களுக்காக நாம் செயல்படுத்திய சீர்திருத்தங்களுக்குத்தான் நன்றி கூற வேண்டும்”. பல்வேறு சோசலிஸ்ட் கன்னைகளும் மற்றும் அவற்றின் பசுமை கட்சி மற்றும் போலி-இடது கூட்டாளிகளும் "கூட தோற்று போயிருக்கிறார்கள்", அனைவரும் ஒன்றிணைந்து பிரச்சாரம் செய்திருக்க வேண்டும் என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து இன்னும் கூடுதல் சுதந்திரமான ஒரு நிதியியல் கொள்கைக்கு அழைப்புவிடுத்து கடந்த இலையுதிர் காலத்தில் அரசாங்கத்தை விட்டு வெளியேறிய சோசலிஸ்ட் கட்சியின் "கிளர்ச்சி" (frondeurs) கன்னை என்றழைக்கப்படுவதன் நிர்வாகிகள், அரசாங்கத்துடன் நெருக்கமாக உடனுழைக்க அழுத்தமளித்து வருகின்றனர். (பார்க்கவும்: சிக்கன கொள்கைகள் மீது அதிகரித்துவரும் கோபத்தின் மத்தியில் பிரெஞ்சு அரசாங்கம் பொறிகிறது) கடந்த இரவு அவர்கள் "எங்களையும் ஒருங்கிணைக்க ஓர் ஒப்பந்தத்தைக் கொண்டு வருமாறு" பரிந்துரைத்து அவர்களது வலைத் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

சோசலிஸ்ட் கட்சி ஐக்கியத்திற்கான இத்தகைய அழைப்புகளை எதிரொலித்து, கல்வித்துறை மந்திரி நாஜாத் வாலோத்-பெல்கசெம் கூறுகையில், அங்கே சோசலிஸ்ட் கட்சியின் சிக்கன நடவடிக்கைகள் கைவிடப்படாது என்று தெரிவித்தார். இப்போது திக்கு தெரியாமல் போவதென்பது 2012 இல் இருந்து நாம் செய்துள்ள எல்லா முயற்சிகளையும் வீணடிப்பது என்று அர்த்தமாகும்,” என்று அப்பெண்மணி தெரிவித்தார்.    

UMP தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான நிக்கோலா சார்க்கோசி அவரது கட்சியின் வெற்றியைக் கொண்டாடினார். “வெளிப்படையாக ஜனநாயக-சார்பு வலதும் மற்றும் மத்தியமும் மாவட்ட தேர்தலை வென்றுள்ளன. [1958 இல் தொடங்கிய] 5 ஆம் குடியரசின் கீழ் நாம் ஒருபோதும் இந்தளவிற்கு மாவட்டங்களை வென்றதில்லை அதன் பொய்கள், எதார்த்தத்திலிருந்து ஒளிந்து கொள்வது மற்றும் திராணியின்மையே இன்று அதை தண்டித்துள்ளது,” என்று அறிவித்தார்.    

உண்மையில், அதன் தேர்தல் வெற்றி இருந்தாலும் கூட, UMP இன் வலதுசாரி கொள்கைகளுக்கு அங்கே எந்தவொரு பரந்த ஆதரவும் இல்லை என்பதுடன், அக்கொள்கைகள் தோற்றப்பாட்டளவில் ஹோலாண்டினது கொள்கைகளிலிருந்து வேறுபட்டதில்லை. சார்க்கோசியே பெரிதும் சர்ச்சைக்குரிய ஒரு பிரபலமாவார். 2012 தேர்தல்களில் அவர் ஹோலாண்டால் தோற்கடிக்கப்படும் வரையில் அவரது கொள்கைகள் அவரை பிரான்ஸ் வரலாற்றில் மிகவும் மதிப்பிழந்த ஜனாதிபதியாக செய்திருந்தன என்பதோடு, அதற்கு பின்னர் கணித்துக்கணிப்புகளில் சார்க்கோசியின் மதிப்பு முன்னர் இருந்ததை விட வீழ்ச்சி அடைந்தன.

தேசிய அரசிடமிருந்து உள்ளூர் அதிகாரங்களுக்கு வழங்கப்படும் மானியங்களில் சோசலிஸ்ட் கட்சி 11 பில்லியன் யூரோ வெட்டி இருப்பதால், UMP நகரசபை தலைவர்கள் பதவியேற்றதும், அந்த மக்கள்விரோத பில்லியன் கணக்கான யூரோ வெட்டுக்களைச் செய்ய அவர்கள் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள்.   

UMP மற்றும் PS இன் ஒரேமாதிரியான சாதனைகளால், பிரதானமாக தீவிர வலது தேசிய முன்னணியே (FN) ஆதாயமடைகிறது. சோசலிஸ்ட் கட்சியுடன் அணி சேர்ந்துள்ள புதிய முதலாளித்துவ எதிர்ப்பு (NPA) கட்சி போன்ற பிரான்சின் போலி-இடது கட்சிகளது பிற்போக்குத்தனமான மற்றும் திவாலாகிப்போன குணாம்சத்தின் காரணமாக, தேசிய முன்னணியால் வீராவேசமாக பிரான்சின் ஒரே எதிர்கட்சியாக காட்டிக் கொள்ள முடிகிறது.  

நேற்று இரவு தேசிய முன்னணி தலைவர் மரீன் லு பென், பிரான்ஸ் எங்கிலும் தேசிய முன்னணியைச் சேர்ந்த 31 வென்றவர்கள் ஜோடியின்  வெற்றியை, “நாளைய மாபெரும் வெற்றிகளுக்கான அடித்தளங்கள்" என்று பாராட்டியதோடு, அரசியல் ஸ்தாபகத்தின் எஞ்சியவற்றில் "எங்கள் வேட்பாளர்கள் மீது வர்க்க அலட்சியம்" இருந்ததாக கண்டித்தார்.

இப்போது நிலவும் அரசாங்கத்திற்கு ஒரே உண்மையான எதிர்ப்பு இயக்கத்தை நானே தலைமை கொடுக்கிறேன்,” என்று அப்பெண்மணி அறிவித்தார். வரிச்செலுத்தும் ஏழைகள் மீதான வரிச்சுமையை குறைக்க அரசு அதிகாரிகளின் ஓய்வூதியங்களை வெட்டுவதற்கும் மற்றும் பகல்நேர குழந்தைகள் காப்பகங்களில் முஸ்லீம்கள் முக்காடு அணிவதைத் தடுப்பதற்கும் அவர் அழைப்புவிடுத்தார்.

உள்ளூர் தேர்தல்களில் தேசிய முன்னணிக்கு ஒரு சிறிது பின்னடைவு ஏற்பட்டுள்ளது, சில ஊடகங்கள் அதற்கு அதிகபட்சமாக ஐந்து மாவட்டங்களின் —Vaucluse, Gard, Aisne, Oise மற்றும் Pas-de-Calaisகட்டுப்பாட்டை குறிப்பிட்டிருந்தன. இருந்தபோதினும் அந்த தீவிர-வலது கட்சி பிரான்ஸ் முழுவதிலும் ஒரேயொரு மாவட்ட சபை தலைவரைக் கொண்டிருந்ததில் இருந்து 62 பேரை கொண்டிருக்கும் அளவிற்கு சென்று, அதன் உயர்வைத் தொடர்ந்து கொண்டிருப்பதுடன், அந்நாடு முழுவதிலும் அதன் பரந்த செல்வாக்கை எடுத்துக்காட்டி கொண்டிருக்கிறது.

France-2 இல் தோன்றிய லு பென் இன் ஆலோசகர் புளோரியான் பிலிப்போட் குறிப்பிடுகையில், தேசிய முன்னணி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியிருந்த 2,054 உள்ளாட்சிகளில் 1,100இல் அது சராசரியாக 40 சதவீத வாக்குகளைப் பெற்றது என்பதைக் குறிப்பிட்டார். இது நவ-பாசிசவாதிவாதிகளின் அதிகரித்துவரும் தேர்தல் வெற்றியை அடிக்கோடிடுகிறது.