சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: plantation companies unveil restructuring plan to tear up workers’ rights

இலங்கை: பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் உரிமைகளை கிழித்தெறிவதற்காக மறுசீரமைப்புத் திட்டத்தை வெளிப்படுத்துகின்றன

W.A. Sunil
31 October 2015

Use this version to printSend feedback

பெருந்தோட்ட கம்பனிகளை பிரதிநிதித்துவம் செய்யும் இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கமானது தொழில் உறவுகள் சம்பந்தமாக தற்போதுள்ள முறைமைகளை கவிழ்க்கும் திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்த திட்டமானது சம்பள முறைமையை பொடியாக்குவையும் தசாப்த காலங்களாக போராடிப் பெற்ற தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை அபகரிப்பதையும் இலக்காகக் கொண்டதாகும்.

கடந்த மார்ச்சில், முந்தைய இரண்டு ஆண்டுகால கூட்டு ஒப்பந்தம் காலாவதியான பின்னர் எந்தவொரு சம்பள அதிகரிப்பையும் தர பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம் மறுத்துவிட்டது. 1000 ரூபாய் (7 அமெரிக்க டொலர்) நாள் சம்பள அதிகரிப்புக்கான தொழிற்சங்கங்களின் பிரேரணையை பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம் கடுமையாக எதிர்த்து வருகின்ற நிலையில், புதிய கூட்டு ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகள் ஏழு மாதங்களாக இழுபட்டு வருகின்றன. தற்போது தொழிலாளர்கள் 680 ரூபாவை மட்டுமே நாள் ஒன்றுக்குப் பெறுகின்றனர். அதுவும் அவர்கள் மாதம் 25 நாட்கள் வேலைக்கு வந்து, நாளொன்றுக்கு பறிக்க வேண்டிய தேயிலைக் கொழுந்தின் அளவை பறித்திருந்தால் மட்டுமே கிடைக்கும்.

அக்டோபர் நடுப் பகுதியில், புதியவருமான-பங்கீடுதிட்டத்தை வெளியிட்ட பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக பெரும் ஊடக பிரச்சாரம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றது.

சம்பள முறைமைபொருத்தமற்ற மட்டத்துக்கு உழைப்புச் செலவு அதிகரிப்பை விளைவாக்கியுள்ளதுஎன அறிவித்த பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத் தலைவர் ரொஷான் இராஜதுரை, “சகல பங்குதாரர்களும் தமது கடந்தகால பழைய சிந்தனையில் இருந்து விலகி இன்றைய யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்என வலியுறுத்தினார்.

இந்தஇன்றைய யதார்த்தமானதுபுகோள பொருளாதார வீழ்ச்சி நிலைமைகளின் கீழ் பெருந்தோட்டத் தொழிற்துறை எதிர்கொண்டுள்ள நெருக்கடியின் முழு சுமையையும் கிட்டத்தட்ட 200,000 தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களில் தங்கியிருக்கும் ஒரு மில்லியன் குடும்பத்தவர்கள் மீதும் சுமத்துவதையே அர்த்தப்படுத்தும்.

பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத் திட்டத்தின் கீழ், தொழிலாளர்கள் ஓய்வுபெறும்போது தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியுடன் சேர்த்து நீண்ட கால நாள் சம்பள முறைமை சிதறடிக்கப்படும். இது, மோசமான மாத வருகை நிபந்தனையை தூக்கி வீசி மாத சம்பள முறைமைக்கான அவசர தேவையை தொழிலாளர்கள் எழுப்புகின்ற நிலைமையின் கீழேயே இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

கூட்டு பேரம்பேசல் முறைமையை அகற்றி தனிநபர் தொழி்ல் ஒப்பந்தத்தை பதிலீடு செய்வதற்கு பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம் விரும்புகிறது. ஊடக செய்திகளின் படி, ஒரு தொழிலாளிக்கு 1200 முதல் 1,500 வரையான தேயிலைச் செடிகள் ஒப்படைக்கப்படும். ஒவ்வொரு மாத முடிவிலும், உரம் மற்றும் ஏனைய சேர்க்கைகளுக்கான செலவுகள் உட்பட கம்பனி ஏற்றுக்கொள்ள வேண்டிய செலவுகள் அனைத்தும் தொழிலாளர்களின் வருமானத்தில் வெட்டிக் குறைக்கப்படும்.

அதே சமயம், தொழிலாளர்கள் காணிக்கு உரிமைகொண்டாட முடியாது. இந்த திட்டம் பண்னை முறையை ஒத்ததாக இருக்கும். காணி உரிமை கொண்டுள்ள கம்பனிகளுக்கு தொழிலாளர்கள் தமது வருமானத்தில் மிகப் பெரும் பகுதியை கொடுக்கத் தள்ளப்படுவார்கள். ஒழுங்கமைக்கப்பட்ட உழைப்புப் படையாக பேரம் பேசும் அதிகாரத்தை தொழிலாளர்கள் கொண்டிருக்க மாட்டார்கள்.

பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம் கூறிக்கொள்வதாவது: “வருமான-பங்கீடு முறை, உலகம் பூராவும் பெருந்தோட்டத் தொழிற்துறையில் பரந்தளவில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதுடன் இலங்கையில் கூட சாதகமான விளைவுகளைக் கொடுத்துள்ளது. நாட்டின் மொத்த கொழுந்தின் அளவில் கிட்டத்தட்ட 75 வீதத்தை உற்பத்தி செய்யும் நாட்டின் 400,000 சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் இதே அடிப்படையிலேயே இயங்குகின்றனர்.” 1992 மற்றும் 2012 இற்கும் இடையில் உற்பத்தி இரண்டு மடங்கை எட்டியுள்ளமை, இந்த முறைமையின்பொருத்தத்தைபிரதிபலிக்கின்றது எனக் கூறும் அந்த அறிக்கை, இந்த முறைமைஅவர்களது [சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள்] வாழ்க்கையின் தரத்தையும் சிறப்பாக்கியுள்ளதுஎன்றும் கூறிக்கொள்கின்றது.

இந்த கதை முற்றிலும் பொய்யானதாகும். சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் பல ஆண்டுகளாக அரசாங்க மானியத்திலேயே தங்கியிருக்கின்றனர். உலகப் பொருளாதார பின்னடைவு நிலைமையினாலும் குறிப்பாக மத்திய கிழக்கிலும் ஏனைய இடங்களிலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் கட்டவிழ்த்துவிட்டுள்ள இராணுவ மோதல்களினாலும் உலகச் சந்தையில் கேள்வி குறைந்த நிலைமையில், மாநியங்களில் தங்கியிருப்பது கடந்த தசாப்தத்தில் அதிகரித்துள்ளது.

அமெரிக்கா தூண்டிவிட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையின் விளைவாக, ஜனவரி ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அமைக்கப்ட்ட ஐக்கிய தேசியக் கட்சி (.தே..) அரசாங்கம், சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கான மாநியங்களை அதிகரித்ததோடு ஒரு கிலோ தேயிலைக் கொழுந்துக்கு 80 ரூபாய் கொடுக்கத் தொடங்கியது. ஆகஸ்ட் பொதுத் தேர்தல் முடிந்தவுடன், இந்த கொடுப்பனவு நிறுத்தப்பட்டதோடு சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் பெற்றுவந்த விலை 50 ரூபா அளவுக்கு வெட்டிக் குறைக்கப்பட்டது.

தமது திட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் ஆதரவளிக்க வேண்டும் என வலியுறுத்துவதற்காக தோட்டங்கள் மூடப்படும் என்ற அச்சுறுத்தலையும் கம்பனிகள் பயன்படுத்திக்கொள்கின்றன. பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத் தலைவர் இராஜதுரை ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது: “கடந்த காலத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வந்துள்ளன, ஆனால், தறபோதைய விவகாரத்தில் நாம் 20 மாதங்களாக கீழ்நோக்கி பயனித்துக்கொண்டிருப்பதோடு பிரகாசம் தென்படவே இல்லை.” “நெருக்கடி மிகவும் மோசமாக உள்ளது. எதிர்வரும் மாதங்களில் தேயிலை இரப்பர் விலைகள் அதிகரிக்காவிட்டால், சில தோட்டக் கம்பனிகள் வியாபாரத்தை மூடிவிடுவதைப் பற்றியும் சிந்திக்கின்றன,” என பிரகடனம் செய்தார்.

பெருந்தோட்ட உரிமையாளர் சங்க செயலாளர் எச்.எம். குணதிலக, “சுரங்கத்தின் முடிவில் வெளிச்சத்தைக் காண அவர்கள் தவறினால் முழுத் தொழிற்துறையும் பொறிந்து போகும்... உண்மையில், தற்போதைய முறையின் கீழ், எந்தவொரு அதிகரிப்பையும் எங்களால் கொடுக்க முடியாது, நாங்கள் ஏற்கனவே வழங்கிக்கொண்டிருக்கும் ஊதியத்தை வழங்கக் கூட எங்களால் முடியாமல் போகும்,” என தொழிற்சங்கங்களை எச்சரித்தார்.

தோட்டத் தொழிற்சங்கங்கள், தேயிலை தோட்டங்கள் மூடப்படுவதை தடுக்க வேண்டும் என்ற சாக்குப் போக்கின் கீழ், பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத்தின் நகர்வுகளை அணைத்துக்கொள்ள முன்நகர்கின்றன.

இன்னமும் மிகப் பெரிய பெருந்தோட்ட தொழிற்சங்கமாக உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரசின் (.தொ.கா.) தலைவர் முத்து சிவலிங்கத்தை உலக சோசலிச வலைத் தளம் தொடர்புகொண்ட போது, அவர் கூறியதாவது: “பிரேரணையை நாங்கள் இன்னமும் வாசிக்கவில்லை. கொள்கை ரீதியில் நாங்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. நாங்கள் அரசாங்கம் மற்றும் கம்பனிகளுடன் கலந்துரையாடிய பின்னர் முடிவெடுப்போம். ஏற்றுக்கொள்ளக்கூடிய நிபந்தனைகள் இருப்பின் நாங்கள் உடன்படுவோம்.” “தோட்டங்கள் மூடப்படுவதை விட இது சிறந்தது என நான் நினைக்கின்றேன். தற்போதைய நிலைமையில் தொழிலாளர்கள் தமது வேலையை இழக்க நேரிடும்,” என அவர் வலியுறுத்தினார்.

இதேபோன்று, மலையக மக்கள் முன்னணி (..மு.) பொதுச் செயலாளர் . லோரன்ஸ் தெரிவித்ததாவது: “சில தோட்டங்களில், இந்த முறைமை பரிசோதிக்கப்பட்டுள்ளது. எனவே நாங்கள் புதிய முறை பற்றி கற்க வேண்டியுள்ளது. அவர்கள் (கம்பனிகள்) ஓய்வூதிய முறைமையை அறிமுகப்படுத்த தயார் எனில், பிரேரணை தொழிலாளர்களுக்கு சாதகமானது எனில் நாம் அதைப் பற்றி ஆலோசிப்போம்.”

..மு. மற்றும் ஏனைய பல தொழிற்சங்கங்களும் தற்போதைய அரசாங்கத்தில் கூட்டணி பங்காளிகளாவர். .தொ.கா. உட்பட அவர்கள் அனைவரும், எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும், தொழிலாளர்களின் கோரிக்கைகளை விற்றுத் தள்ளுவதற்கு அதனுடன் சதிசெய்யும் நீண்ட வரலாறு கொண்டவை ஆகும்.

பொகவந்தலாவை பெருந்தோட்டத்தில் கொட்டகலை தோட்டத்தைச் சேர்ந்த எஸ். யோகராஜா என்ற ஒரு தோட்டத் தொழிலாளி, தொழிலாளர்கள் மத்தியில் வளர்ச்சியடையும் சீற்றத்தை வெளிப்படுத்தினார். அவர் உலக சோசலிச வலைத் தளத்துக்குத் தெரிவித்ததாவது: “உங்களிடம் இருந்தே முதல் தடவையாக இது பற்றி கேள்விப்படுகிறேன். தேயிலைத் தோட்டங்களை பிரித்து ஒரு ஹெக்டரை ஒரு தொழிலாளியிடம் குத்தகை அடிப்படையில் ஒப்படைக்கும் கம்பனிகளின் திட்டம் எங்களுக்கு நல்லது அல்ல. தொழிற்சங்கங்கள் எங்களுக்கு இதைப் பற்றி அறிவிக்கவில்லை. இது தொழிலாளர்களுக்கு பெரும் ஆபத்தான திட்டமாகும் என நான் நினைக்கின்றேன். எமது வருமானத்துக்கு இது உத்தரவாதம் கொடுக்காது.”

தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் தொழில், சம்பளம் மற்றும் சமூக நிலைமைகளை பாதுகாக்க எந்தவொரு போராட்டத்தையும் முன்னெடுப்பதில்லை. புதிய திட்டம் சம்பந்தமான அவர்களின்அக்கறை”, தொழிலாளர்களுக்கு அழிவுகரமான விளைவுகளுடன் அதை அமுல்படுத்துவதற்கு அவர்களின் தயார் நிலை பற்றிய நிச்சயமான அறிகுறியாகும்.

தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை காப்பதற்கான போராட்டத்தை முன்னெடுக்க, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக ஒவ்வொரு தோட்டத்திலும் நடவடிக்கை குழுக்களை அமைக்க முன்செல்ல வேண்டும். இந்தப் போராட்டத்துக்காக, எப்போதும் ஆழமடைந்து வரும் நெருக்கடியில் மூழ்கியுள்ள முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பு முறையை சோசலிச வேலைத்திட்டத்தால் பதிலீடு செய்யும் ஒரு மாற்றீட்டு வேலைத் திட்டம் தொழிலாள வர்க்கத்துக்கு அவசியமாகும்.