சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Major strike by Indian plantation workers for better pay

ஊதிய உயர்வு கோரி இந்திய தோட்டத் தொழிலாளர்களின் மாபெரும் வேலை நிறுத்தம்

By Arun Kumar and Sathish Simon
3 October 2015

Use this version to printSend feedback

கேரளாவில், மாநில அரசிற்கு சொந்தமான மற்றும் தனியார் தேயிலை மற்றும் இரப்பர் தோட்டங்களில் பணிபுரியும் கிட்டத்தட்ட 300,000க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்களால் திங்கட்கிழமை முதல் தொடங்கப்பட்ட காலவரையற்ற வேலைநிறுத்தத்தால் தென்-இந்திய மாநிலப் பகுதிகளில் நடைபெறும் அனைத்து தோட்டத் தொழில்களும் முடக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் முழுவதிலும் பெரும்பாலான தோட்டத் தொழில் நகரங்களில் வியாழக்கிழமை அன்று தோட்டத் தொழிலாளர்கள் சாலைமறியல் மற்றும் தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டனர். தோட்டத் தொழிலாளர்கள் அவர்களது தற்போதைய தினக்கூலி 232 ரூபாவை (3.55 அமெரிக்க டாலர்கள்) 500 ரூபாவாக உயர்த்தவும், வருடாந்திர போனஸ் தொகையினை அவர்களுடைய கூலியில் 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தவும் கோருகின்றனர்.

கேரளாவில், தோட்டத் தொழிலாளர்கள் இந்திய தொழிலாளர் பிரிவினரிடையே மிகவும் வறிய நிலையில் உள்ளனர். தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் 1250 ரூபாவும், சாதாரண தொழிலாளர்கள் 700 ரூபாவும் தினக்கூலியாக பெறுகின்ற நிலையில், தோட்டத் தொழிலாளர்கள் மட்டுமே 232 ரூபாவை தினக்கூலியாக பெற்றுவருகின்றனர்.

திங்கட்கிழமை வெளிநடப்புக்கு தொழிற் சங்கங்களின் கூட்டு சபை அழைப்பு விடுத்திருந்தது. இதில், இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) இல் இணைந்த அனைத்து இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (ஏஐடியுசி) மற்றும் இந்திய மார்க்சிச கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) இல் இணைந்த மத்திய இந்திய தொழிற்சங்கங்களின் மையம்; (சிஐடியு), காங்கிரஸ் கட்சியுடன் இணைந்த இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (ஐஎன்டியுசி) மற்றும் இந்து மேலாதிக்க பாரதீய ஜனதாக் கட்சியுடன் (பாஐக) இணைந்த பாரதீய தொழிலாளர் சங்கம் (பிஎம்எஸ்) போன்றவை அடங்கும்.

தொழிற் சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது, தொழிலாளர்களின் கூலி மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை பாதுகாப்பதற்காக அல்ல, மாறாக தொழிற் சங்க அமைப்புக்கள் மற்றும் அவற்றுடன் இணைந்த அரசியல் கட்சிகள் மீதான தொழிலாளர்களின் விரோதப் போக்கினை சிதறடிப்பதற்கான முயற்சியாகும். இந்திய மார்க்சிச கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டும், கேரள அரசின் எதிர்கட்சியான இடது ஜனநாயக முன்னணியின் அங்கமாகும். கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) அரசாங்கத்தை காங்கிரஸ் கட்சி வழிநடத்துகிறது.

மூணாறு கண்ணன் தேவன் மலைத் தோட்ட தொழில் நிறுவனத்தின் (KDHPL) தொழிலாளர்கள் கிட்டத்தட்ட 6000 பேர் கடந்த மாதம் நடத்திய ஒன்பது நாட்கள் வேலை நிறுத்தத்திற்கு மக்கள் ஆதரவு கிடைத்த நிலையில், தொழிற் சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர். தோட்டத் தொழிலாளர் குழுவில் (PLC) 10 சதவீதம் போனஸாக வழங்குவது பற்றி முத்தரப்பு ஒப்பந்தம் இயற்றப்பட்டதை எதிர்த்து முக்கியமாக பெண் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தோட்டத் தொழிலாளர் குழுவில் தோட்ட உரிமையாளர்கள், தொழிற் சங்கங்கள் மற்றும் மாநில அரசாங்கமும் உள்ளன.

கண்ணன் தேவன் மலைத் தோட்டத் தொழிலாளர்கள், அவர்களுக்கு தினக்கூலி 500 ரூபாவும் இருபது சதவீதம் போனசும் கோரினர். சங்க அலுவலகங்களை தாக்கினர் மற்றும் சங்க அலுவலர்களை தங்களது கூட்டங்களில் கலந்துகொள்ள விடாமல் தடுக்கவும் செய்தனர். இந்த கிளர்ச்சி ஆளும் கட்சி, எதிர் கட்சி மற்றும் கட்சிகளுடன் இணைந்த தொழிற் சங்கங்களை அதிர்ச்சியடையச் செய்தது.

கேரள முதலமைச்சர் உமன் சாண்டி, தனிப்பட்ட முறையில் இவ்விஷயத்தில் தலையிட்டு வேலை நிறுத்தத்தினை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக தோட்டத் தொழிலாளர் குழுவுடன் பேசி, “அனுதாபத்தின் பேரில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார். கண்ணன் தேவன் மலைத் தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக் கோரிக்கை குறித்த பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது, தோட்ட உரிமையாளர்கள் இருபது சதவீத போனஸ் தொகை வழங்க உடன்பட்டனர்.

மூணாறு வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும் நிலையில், கேரளாவிலுள்ள மற்ற தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் போனஸ் உயர்வு கோரி தெருக்களில் மறியல் போராட்டங்களை ஆரம்பித்தனர். இம்முன்னேற்றங்களினால் பீதியடைந்த சங்கத் தலைவர்கள், இச்சூழ்நிலையை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த சனிக்கிழமையன்று மாநில அரசு அலுவலர்கள் மற்றும் தோட்ட உரிமையாளர்களுடன் தோட்டத் தொழிலாளர் குழுவில் ஊதிய உயர்வு பற்றி பேசும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தோட்ட உரிமையாளர்கள் எவ்வித தினக்கூலி உயர்வும் தர இயலாது என மறுத்தபோது, தொழிற் சங்கங்களின் கூட்டு சபையானது, தங்களது அரசியல் கட்டுப்பாட்டை மீறிய, வெகுஜன தொழில்துறை நடவடிக்கைகள் வெடிக்கலாம் என அஞ்சி மாநில அளவிலான வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்க முடிவு செய்தனர். தோட்டத் தொழிலாளர் குழுவின் மற்றொருகட்ட பேச்சு வார்த்தையினை அடுத்த திங்கட்கிழமை அன்று நடத்த தீர்மானித்தது.

தொழிற் சங்க அதிகாரத்தின் பேரில் அழைப்பு விடுக்கப்பட்டதனால், கண்ணன் தேவன் மலைத் தோட்டத் தொழிலாளர்கள் முதலில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ள தயங்கிய போதும், புதன் கிழமை அன்று நடைபெற்ற வெளிநடப்பில் கலந்து கொண்டனர்.

தோட்ட உரிமையாளர்கள் 500 ரூபா தினக்கூலி உயர்வுக்கு மிகக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். தென்னிந்திய ஒருங்கிணைந்த தோட்டக்காரர்கள் சங்க (UPASI) தலைவர் என்.தர்மராஜ் இக்கோரிக்கையை மறுத்ததுடன் ஊடகங்களில், “மிதமிஞ்சிய வரி மற்றும் தீர்வைச் சுமையுடன் கூடிய தற்போதைய பொருளாதார யதார்த்தங்களினால்;" இது “நடைமுறைச் சாத்தியமற்றது எனத் தெரிவித்தார்.

கேரள தொழில்துறை அமைச்சர், சிபு பேபி ஜான் மூணாறு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தினை, 2011ம் ஆண்டில் எகிப்து மற்றும் துனிசிய அரசுகளுக்கு எதிராக வெடித்த “ஜாஸ்மின் புரட்சியுடன் ஒப்பிட்டார். ஊதிய உயர்வுக்கு முற்றிலும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், தினக்கூலியினை 500 ரூபாவாக உயர்த்துவதால் கேரள தேயிலைத் தோட்ட தொழிலானது ஸ்தம்பித்துவிடும் எனவும் தெரிவித்தார். “கைத்தட்டல்களை பெறுவதற்காக நடைமுறைச் சாத்தியமற்ற அறிவிப்புக்களை விடுக்க நான் தயாராக இல்லை எனவும் தெரிவித்தார். தோட்டத்துறையினை அழிக்கும் விதமாக தனது காங்கிரஸ் தலைமையிலான அரசு எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளாது என கேரள முதலமைச்சர் உமன் சாண்டி தெரிவித்தார்.

தோட்ட தொழிற்துறை அதிகரித்துவரும் உலக அளவிலான நெருக்கடியை எதிர்கொள்வதுடன், சர்வதேச சந்தை பங்கிற்காக கழுத்தை நெரிக்கும் போராட்டத்திலும் தோட்ட உரிமையாளர்கள் சிக்கியுள்ளனர், ஒவ்வொருவரும் அற்ப ஊதியத்தையும் குறைத்தல் மற்றும் தொழிலாளர்கள் மீது கடுமையான உற்பத்தி இலக்குகளை திணிப்பது என்ற வகையில் செலவினை குறைக்கவே வழி தேடுகின்றனர்.

கேரள தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை மற்றும் சிறந்த நிலைமைகளுக்கான போராட்டமானது அவர்களை முதலாளித்துவ இலாப அமைப்புடன் நேரடியாக மோதலுக்கு கொண்டு வந்துள்ளது. தொழிலாளர்கள் வெறும் தோட்டத்துறை நிறுவனங்களை எதிர்ப்பது என்பது மட்டுமல்லாமல், இந்திய மத்திய, மாநில, அரசாங்கங்கள் மற்றும் முதலாளிகளுக்கு முகவர்களாக இயங்கும் தொழிற்சங்கங்களுக்கும் எதிராக போராட, சுயாதீனமான அரசியல் மூலோபாயம் அவசியமாகும்.

ஸ்ராலினிச இந்திய மார்க்சிச கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உட்பட இந்திய அரசியல் நிறுவனத்துடன் ஆழமாக ஒருங்கிணைந்துள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றுடன் இணைந்துள்ள அரசியல் கட்சிகளிலிருந்து தொழிலாளர்கள் விலக வேண்டும். 1991 முதல் 2008 வரையிலும், இந்திய மார்க்சிச கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அவற்றின் இடது முன்னணி அடுத்தடுத்து வந்த; முதாளித்துவ அரசாங்கங்களை தக்கவைத்தனர், இவற்றில் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சி தலைமையிலானவை. ஸ்ராலினிஸ்டுகள் தாம் ஆட்சியமைத்த மேற்கு வங்கம், கேரளா மற்றும் திரிபுரா போன்ற மாநிலங்களில் “முதலீட்டாளர் சார்பு திட்டங்கள் என்று தாமே விவரித்த திட்டங்களை அமல்படுத்தினர்.

தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் தோட்டங்கள் தேசியமயமாக்கம், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்கான போராட்டம் உட்பட, சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் தங்களது சொந்த சுயாதீன நடவடிக்கை குழுக்களை தொழிலாளர்கள் உருவாக்க வேண்டும்.