சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : துருக்கி

Turkish police storm opposition media in run-up to Sunday’s election

ஞாயிறன்று தேர்தலுக்கு முன்னதாக துருக்கிய பொலிஸ் எதிர்கட்சி ஊடகங்களை வேட்டையாடுகிறது

By Alex Lantier
29 October 2015

Use this version to printSend feedback

ஞாயிற்றுக்கிழமை பொதுத் தேர்தலுக்கு முன்னதாக எதிர்கட்சி ஊடகங்களை மௌனமாக்கும் ஒரு அப்பட்டமான முயற்சியில், துருக்கிய பொலிஸ் Koza-Ipek பெருநிறுவன தலைமையிடங்களை வேட்டையாடி, ஒளிபரப்புகளை நிறுத்தியதோடு, அந்த ஊடக நிறுவனம் அரசாங்க கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின்னரே அவர்களை மீண்டும் ஒளிபரப்பைத் தொடர அனுமதித்தது.

நேற்று அதிகாலை அந்த ஊடக நிறுவன பணியாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது பொலிஸ் நீர் பாய்ச்சிகளையும் மற்றும் கண்ணீர் புகைகுண்டுகளையும் பிரயோகித்தது, அத்துடன் கட்டிடங்களுக்குள் செல்லும் அவர்களது பாதையை தகர்த்தெறிந்து, Kanaltürk தொலைக்காட்சி, Bugün தொலைக்காட்சி மற்றும் ஏனைய Koza-Ipek நிறுவனங்களின் ஒளிபரப்பில் குறுக்கீடு செய்தது. பொலிஸ் ஒளிபரப்பை நிறுத்த முயன்ற நிலையில், பணியாளர்கள் தாங்களே கட்டிடங்களுக்குள் தடையரண்களை உருவாக்கி, சுமார் 10 மணி நேரம் தொடர்ந்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினர்.

ஒளிபரப்பு நிலையம் மீதான பொலிஸ் தாக்குதலை Bugün தொலைக்காட்சி ஒளிபரப்பாளர் வர்ணித்துக் கொண்டிருந்த போது, “அன்பின் நேயர்களே, அடுத்த சில நிமிடங்களில் எங்களது ஒளிபரப்புகூடத்திற்குள் நீங்கள் பொலிஸைக் கண்டால் ஆச்சரியமடைய வேண்டாம்,” என்று  தெரிவித்தார். எவ்வாறிருப்பினும், இறுதியாக தொலைக்காட்சி வடங்களை பொலிஸ் வெட்டியதும், Kanaltürk தொலைக்காட்சி “எங்கள் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது,” என்ற வாசகங்களை ஒளிபரப்பியது.

பொலிஸ் தாக்குதலில் குறைந்தபட்சம் இரண்டு செய்தியாளர்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர், ஒருவருக்கு உள்காயங்கள் ஏற்பட்டிருந்தன மற்றொருவருக்கு ஒரு கால் உடைந்தது.

ஞாயிறன்று தேர்தலில் வெற்றி பெறுவதற்காக போராடிவரும் ஆளும் நீதி மற்றும் வளர்ச்சி கட்சியின் (AKP) தலைவர் ரெசெப் தயிப் எர்டோகன், அவரது கட்சி எதிர்கட்சி ஊடகங்களை மிரட்டவும் மௌனமாக்கவும் முயல்வதைக் குறித்து எந்த இரகசியத்தையும் கொண்டிருக்கவில்லை.

அரசாங்க-ஆதரவு A Haber சானலுக்கு உரையாற்றுகையில், AKP இன் சட்டமன்ற அங்கத்தவர் Aydin Ünal பின்வருமாறு அறிவித்தார்: “நவம்பர் 1க்குப் பின்னர், நாங்கள் அவர்களைக் கணக்கில் கொண்டு வருவோம். Sözcü பத்திரிகை எங்களை அன்றாடம் அவமானப்படுத்துகிறது. துருக்கியில் எங்கள் மீது நிறைய அழுத்தம் உள்ளது. நாங்கள் ஏதேனும் கூறினால், பத்திரிகைகளில் குறுக்கிடுவதாக உலகம் எங்களை குற்றஞ்சாட்டுகிறது, ஆகவே நாங்கள் இப்போது ஒரு சௌகரியமான நிலைமையில் இல்லை, ஆனால் நவம்பர் 1 ஆம் தேதிக்குப் பின்னர், நாங்கள் அவர்கள் எல்லோருக்கும் தீர்வு காண்போம்,” என்றார்.

துருக்கிய தேர்தல், வன்முறைக்குள் சரிந்து வருகையில் Koza-Ipek மீதான இந்த பொலிஸ் வேட்டை நடந்துள்ளது. குர்திஷ் சிறுபான்மையை சிதைக்கும் AKP இன் "சமாதான அணுகுமுறை", அண்டைநாடான சிரியாவில் வாஷிங்டனின் பினாமி போரால் உந்தப்பட்டு ஓர் உள்நாட்டு போருக்குள் ஆட்டங்கண்டு போயுள்ள நிலையில், ஜூன் தேர்தலுக்குப் பின்னர் AKP ஆல், 2002 இல் இருந்து முதல்முறையாக, ஓர் ஆளும் கூட்டணியை உருவாக்க முடியாமல் போனதால் புதிய தேர்தல்களுக்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளது.

குர்திஷ்-ஆதரவு சமாதான மற்றும் ஜனநாயகக் கட்சி (HDP) 10 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று, நாடாளுமன்றத்திற்குள் நுழையும் விளிம்பில் உள்ளது. இதுவே தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு அதை இலக்கில் கொண்டு வந்துள்ளது. தியார்பகிரில் HDP இன் பொதுக்கூட்டம் ஒன்றில் ஜூன் 5ஆம் தேதி குண்டு வெடித்தது, அதில் நால்வர் உயிரிழந்தனர்; செப்டம்பரில் அங்காராவில் பொலிஸ் நின்று கொண்டிருக்கையிலேயே குண்டர்கள் HDP தலைமையிடத்தை தாக்கினர்; அக்டோபர் 9 அன்று அங்காராவில் HDP-தலைமையிலான கூட்டத்தில் ஒரு வெடிகுண்டு தாக்குதல் நடந்தது, அதில் 128 பேர் உயிரிழந்தனர்.

துருக்கிய அதிகாரிகள் அத்தாக்குதல்களுக்காக சிரியா எல்லை நெடுகிலும் குர்திஷ் போராளிகளுடன் சண்டையிட்டுவரும் இஸ்லாமிக் அரசு (IS) பயங்கரவாதிகள் மீது பழிசுமத்தினர். அதிகாரத்தைத் தக்க வைப்பதற்காக HDP ஐ நசுக்க இஸ்லாமிக் அரசுடன் AKP அணிசேர்ந்து வேலை செய்து வருவதாக பெரும் எண்ணிக்கையிலான துருக்கியர்கள் AKP ஐ குற்றஞ்சாட்டுகின்றனர்.

HDP, மெமலிஸ்ட் குடியரசு மக்கள் கட்சி (CHP) மற்றும் தீவிர வலது தேசியவாத இயக்க கட்சி (MHP) போன்ற எதிர்கட்சிகளுக்கான தேர்தல் பிரச்சாரத்தில் Koza-Ipek பிரதான ஊடகமாக எழுந்ததும், அது AKP இன் ஒரு முக்கிய இலக்கானது. சிரியாவில் இஸ்லாமிக் அரசு போராளிகளுக்கு AKP ஒத்துழைத்தது குறித்த ஒரு முதல்பக்க செய்தியை Bugün பத்திரிகை வெளியிட்ட பின்னர் செப்டம்பரில் துருக்கிய பொலிஸ் அதை சோதனையிட்டது.

ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற பெரும்பான்மை பெறுவதற்கான AKP இன் வாய்ப்புகள் முன்பினும் நலிவுற்றிருப்பதாக தெரிகின்ற நிலையில், அரசாங்கம் Koza-Ipek நிறுவனத்தை மூடுவதற்கு நகர்ந்தது. அக்டோபர் 26 அன்று, அங்காரா அரசு வழக்கறிஞர் Koza-Ipek மீது குற்றஞ்சாட்டுகையில் அது "பெதுல்லாஹிஸ்ட் (Fethullahist) பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டிருப்பதாக" தெரிவித்தார். நீதிமன்றங்கள் அந்த ஊடக நிறுவனத்தின் நடவடிக்கைகளை கண்காணிக்க AKP-ஆதரவு "அறங்காவலர்களின்" (“trustees”) பெயர்களைப் பட்டியலிட்டது. பொலிஸ், Koza-Ipek இன் கட்டிடத்தை வேட்டையாடிய பின்னர் நேற்று அதன் கட்டுப்பாட்டை அந்த அறங்காவலர்களிடம் ஒப்படைத்தனர்.

துருக்கிய எதிர்கட்சி அரசியல்வாதிகள், அந்த பொலிஸ் சோதனையை விமர்சிப்பதில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளோடு சேர்ந்து கொண்டனர். HDP துணை-தலைவர் Selahattin Demirtas கூறுகையில், “இது 'AKP இன் துருக்கியாகும்.' இந்த நடைமுறையை ஏற்கவியலாது. முதல் பார்வைக்கு அதுவொரு ஊடக நிறுவனம் மீதான ஒடுக்குமுறையாக தெரியும், ஆனால், உண்மையில், ஒட்டுமொத்த சமூகமும் அதன் இலக்காக உள்ளது,” என்றார்.

பல்வேறு CHP சட்டமன்ற அங்கத்தவர்கள் Koza-Ipekக்கு ஆதரவாக அதன் தலைமையிடத்தை சென்று பார்வையிட்டனர். அத்துடன் Baris Yarkadas அறிவிக்கையில்: “இன்று ஒரு வெட்கக்கேடான நாள். இம்முடிவெடுத்த ஒவ்வொருவரும், இதை நடைமுறைப்படுத்தியவர்களும் அவர்களது குற்றங்களுக்காக பதிலளிக்க வேண்டியிருக்கும்,” என்றார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜோர் கெர்பி, “விசாரணை முறை, கருத்து சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம், மற்றும், அத்துடன் நிச்சயமாக, ஊடகங்கள் மற்றும் தகவல்களை அணுகுவதற்கான சுதந்திரம் உட்பட அனைவருக்குமான ஜனநாயக மதிப்புகளை நிலைநிறுத்துமாறு" துருக்கிக்கு அழைப்புவிடுத்தார்.

ஐரோப்பிய ஒன்றியம் அதன் செய்தி தொடர்பு பெண்மணி காத்ரீனா ரே மூலமாக, துருக்கியில் "சட்டத்தின் ஆட்சி மற்றும் ஊடக சுதந்திரத்திற்கு" அழைப்புவிடுத்தார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அவற்றின் AKP கூட்டாளிக்குக் கூறும் விமர்சனங்கள், துர்நாற்றமெடுக்கும் பாசாங்குத்தனமாக உள்ளது. எர்டோகனைச் சுற்றி ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை கட்டமைப்பதற்கான AKP இனது முயற்சியின் பிரதான காரணி, ஆழ்ந்த சர்வதேச நெருக்கடியால் உண்டாக்கப்பட்ட அதன் சொந்த போர் மற்றும் சிக்கனத் திட்ட கொள்கைகளாகும்.

பொருளாதாரரீதியில், துருக்கிய முதலாளித்துவம் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன முறைமைகளது சுமையின் கீழ் ஐரோப்பாவில் அதன் பிரதான ஏற்றுமதி சந்தைகளின் பொறிவினால் சூழலப்பட்டுள்ளது.

மேலும் இரத்தவெறி பிடித்த அதன் கொள்கைகளுக்கு இடையிலும், AKP வாஷிங்டனின் முன்னுக்குப்பின் முரணான சிரியா கொள்கையின் வளைவு-சுளிவுகளோடு இணங்கிய விதத்தில் இருக்க தகைமையற்றிருப்பதை நிரூபித்துள்ளது. சிரியா ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திற்கு எதிராக இஸ்லாமிய போராளிகளை ஆயுதமேந்த செய்வதில் AKP ஒரு முக்கிய பாத்திரம் வகித்தது, ஆனால் IS ஈராக்கில் இருந்த அமெரிக்க கைப்பாவை ஆட்சியைத் தாக்கிய பின்னர், 2013 இன் கோடையில் அமெரிக்கா IS க்கு எதிராக திரும்பியதும் அதிர்சிக்கு உள்ளாகியது.

இந்த திடீர் மாற்றம் துருக்கியில் ஓர் ஆழ்ந்த நெருக்கடியை தூண்டியது. Gülen இயக்கத்தை நோக்கிய நடவடிக்கைகள் என்ற சாக்கில், ஊடக மற்றும் அரசியல் ஸ்தாபகத்தில் பெரியளவில் ஒரு துப்புரவாக்கலை தொடங்கிய AKP, அந்த இயக்கம் அமெரிக்க-ஆதரவில் எர்டோகனைப் பதவியிலிருந்து வெளியேற்ற முயல்வதாக குற்றஞ்சாட்டியது.

ஈராக்கில் IS க்கு எதிரான சண்டையில் வாஷிங்டன் குர்திஷ் போராளிகள் குழுக்களைச் சார்ந்திருக்க தொடங்கியதும் AKP பீதியுற்று, குர்திஷ் படைகள் துருக்கியின் குர்திஷ் பெரும்பான்மையினர் பகுதியில் பிராந்திய முறையீடுகளைக் கோரக்கூடும் என்று அஞ்சுகிறது.

குர்தியர்கள் வடக்கு சிரியா பகுதியைக் கைப்பற்றுவதை தடுக்க, துருக்கி அப்பகுதி மீது படையெடுக்கும் ஒரு திட்டத்தின் வடிவில், ஜூலையில், குர்தியர்கள் மீதான போருக்கு வாஷிங்டனிடமிருந்து அங்காராவிற்கு பச்சைவிளக்கு காட்டப்பட்டதாக தெரிந்தது. அச்சமயத்தில், ஈராக்கில் குர்திஷ் படைகளுடன் சண்டையிட தயாராகி வந்த மக்களை இலக்கில் வைத்து துருக்கிய நகரமான Suruç இல் நடந்த ஒரு குண்டுவீச்சில் 28 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 க்கும் அதிகமானவர்கள் காயமுற்றனர். அங்காரா அந்த குண்டுவெடிப்புக்கு IS ஐ பழிசாட்டியது, ஆனால் துருக்கிய மக்களின் பரந்த பிரிவுகள் அதை எர்டோகன் அரசாங்கத்தைச் சாடினர்.

சிரியா மீதான ஒரு துருக்கிய படையெடுப்புக்கான திட்டத்திலிருந்து வாஷிங்டன் விலகிக் கொண்டதாக தெரிகிறது, எவ்வாறிருப்பினும், இந்த தீவிரப்பாட்டின் அச்சுறுத்தல் காலந்தாழ்த்தாமல் சிரியாவில் ரஷ்ய இராணுவ தலையீட்டைக் கொண்டு வந்தது. அசாத்திற்கு எதிராக ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்க போரில் அதிரடி படைகளாக குர்தியர்களை ஆயுதமேந்த செய்ய போவதாக மீண்டும் இம்மாதம் வாஷிங்டன் திட்டங்களை அறிவித்துள்ளது.

சிரியா உள்நாட்டு போரில் சூழப்பட்டு, மில்லியன் கணக்கான அகதிகள் துருக்கி மற்றும் ஐரோப்பாவிற்குத் தப்பியோடி வருகின்ற நிலையில், துருக்கியே உள்நாட்டு போருக்குள் சரிந்து வருகிறது. அதுபோன்றவொரு மோதல் ஐரோப்பா உள்ளடங்கலாக கட்டுப்பாடின்றி பரவக்கூடும் மற்றும் மத்தியக் கிழக்கிலிருந்து இன்னும் அதிக எண்ணிக்கையிலான அகதிகள் வருவதற்கு நிர்பந்திக்கும் என ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தினுள் கவலைகள் அதிகரித்து வருகின்றன.

"[எர்டோகன்] செய்வதைப் போல, துருக்கியை ஒரு துருக்-குர்திஷ் உள்நாட்டு போரை நோக்கி தள்ளுவது என்பது, அந்நாட்டை பேரழிவை நோக்கி தள்ளுவதைக் குறிக்கிறது,” என்று அரசியல் விஞ்ஞானி மிக்கெல் நௌபால் L’Orient Le Jour க்குத் தெரிவித்தார். “அவர் குர்திஷ் சமூகத்துடன் சமாதானம் மற்றும் சமரச நடைமுறைகளைத் தொடங்கினால், அனேகமாக உள்நாட்டு நிலைமை ஸ்திரமாகலாம்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

பிரான்சின் சர்வதேச ஆராய்ச்சி மையத்தின் பே-ராம் பால்சி RTL தொலைக்காட்சிக்குத் தெரிவிக்கையில், “நான் நெருக்கடி-முழக்கங்களை தொடங்க விரும்பவில்லை, ஆனால் துருக்கி இரண்டாவது சிரியாவாக மாறாமல் இருப்பது நிஜமாகவே நமக்கு நல்லது. பின் ஐரோப்பாவில் நாம் சிரிய மற்றும் துருக்கிய புலம்பெயர்வோர் இருவரையும் கொண்டிருப்போம்,” என்றார்.