சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

EU Parliament votes nonbinding resolution to protect Edward Snowden

ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் எட்வார்ட் ஸ்னொவ்டனைப் பாதுகாக்க சட்ட கட்டுப்பாடற்ற தீர்மானத்தில் வாக்களிக்கிறது

By Alex Lantier
31 October 2015

Use this version to printSend feedback

எட்வார்ட் ஸ்னொவ்டனுக்குப் "பாதுகாப்பு" வழங்க ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளுக்கு அழைப்பிட்ட ஒரு சட்ட கட்டுப்பாடற்ற தீர்மானத்தின் மீது வியாழனன்று ஐரோப்பிய பாராளுமன்றம் மயிரிழையில் பெரும்பான்மையுடன் வாக்களித்தது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் "எட்வார்ட் ஸ்னோவ்டனுக்கு எதிரான எந்தவித குற்றகரமான குற்றச்சாட்டுக்களையும் கைவிட்டு, அவருக்குப் பாதுகாப்பு வழங்கும், அதன் விளைவாக இரகசியங்களை வெளியிட்ட ஒரு நபராக மற்றும் சர்வதேச மனித உரிமை பாதுகாவலராக அவரது அந்தஸ்தை அங்கீகரித்து, அவரை மூன்றாம் தரப்பினரிடம் ஒப்படைத்தல் அல்லது அயல்நாடுகளுக்கு அனுப்புதலைத் தடை செய்யும்" என்று 285க்கு 281 என்ற வாக்குகளைப் பெற்ற அத்தீர்மானம் பரிந்துரைக்கிறது.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பு நடத்திய உலக மக்கள் மீதான நீதிமுறைக்கு-அப்பாற்பட்ட பாரிய மின்னணு உளவுவேலைகளை மற்றும் ஐரோப்பா எங்கிலும் அதற்கு ஒத்தாசையாக இருந்த உளவு அமைப்புகளை அம்பலப்படுத்தியதன் மூலமாக, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்கள் முன்னிறுத்திய ஓர் அதிபயங்கர அச்சுறுத்தலுக்கு எதிராக ஸ்னோவ்டன் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்திருந்தார் என்பதையே அந்த வாக்குகள் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்துகின்றன.

வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே சர்வதேச கொள்கை மீது தீவிரமடைந்துவரும் பிளவுகளுக்கு இடையே, சட்டவிரோத அரசாங்க உளவுவேலை மீதான பரந்து பட்ட மக்களின் பாரிய கோபத்திற்கு ஐரோப்பிய பாராளுமன்றம் பரிவுணர்வு கொண்டதாக காட்டிக் கொள்கிறது.

அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தோரணை திவாலானதும், பாசாங்குத்தனமானதும் ஆகும், எப்படி இருந்தாலும்: அத்தீர்மானம் நிறைவேறியதால் ஸ்னோவ்டனின் சூழலில் எதுவும் மாறப்போவதில்லை. அந்த பாராளுமன்றத்திற்கு செயல்படுத்தும் அதிகாரம் கிடையாது, அது ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளின் தேசிய அரசாங்கங்களிடம் தங்கியுள்ளது, அவை ஸ்னோவ்டனைப் பிடித்து அமெரிக்க அரசாங்கத்திடம் ஒப்படைப்பதிலிருந்து எங்கேயும் நிற்க போவதில்லை என்ற அவற்றின் தீர்மானத்தைத் தெளிவுபடுத்தி உள்ளன.

கடந்த முறை ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் ஸ்னோவ்டன் ஐரோப்பிய சட்ட எல்லைக்குள் —2013இல் போலிவிய ஜனாதிபதி Evo Morales இன் விமானத்தில் ரஷ்யாவிலிருந்து ஐரோப்பா வழியாக இலத்தீன் அமெரிக்கா சென்று கொண்டிருப்பதாக சந்தேகித்த போது, அவை ஒருங்கிணைந்து Morales இன் விமானப் பாதையை அடைத்து வியன்னாவில் தரையிறங்க நிர்பந்தித்தனர், அங்கே அந்த விமானம் ஸ்டோவ்டனுக்காக அப்பட்டமாக சட்டவிரோதமாக தேடல் நடத்தப்பட்டது.

தற்போதைய தீர்மானத்தை வரையறுக்கையில், நியூ யோர்க் டைம்ஸ் குரூர திருப்தியோடு எழுதியது, “அத்தீர்மானம் திரு. ஸ்னோவ்டனுக்கு எந்த சட்ட நிர்பந்தமோ, மட்டுப்படுத்தப்பட்ட நடைமுறையோ விதிக்கவில்லை … திரு. ஸ்டோவ்டனுக்கு தஞ்சம் வழங்கலாமா வேண்டாமா என்பது அந்தந்த ஐரோப்பிய அரசாங்கங்களின் தனிப்பட்ட முடிவைப் பொறுத்தது, அவற்றில் எதுவுமே இதுவரையில் அவ்விதம் செய்யவில்லை.”

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆளும் வர்க்கங்களுக்கு இடையே பிளவுகள் அதிகரித்து வந்தாலும், அவை ஸ்னோவ்டனைத் தண்டிப்பதிலும் மற்றும் அவர்களது மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதிலும் ஒற்றுமையாக உள்ளன.

ஐரோப்பிய பிரஜைகளின் பேஸ்புக் தரவுகள் பேஸ்புக்கின் அயர்லாந்து துணை நிறுவனத்திலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பப்படுகிறது என்ற ஸ்னோவ்டனின் வெளியீடுகள் அடிப்படையில், நீதிக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் (European Court of Justice) முறையிட்ட ஓர் ஆஸ்திரிய பிரஜை Maximillian Schrems இன் வழக்கால் வியாழக்கிழமை அத்தீர்மானம் தூண்டிவிடப்பட்டது.

அக்டோபர் 6 இல், நீதிக்கான ஐரோப்பிய நீதிமன்றம் Schrems க்கு சார்பாக தீர்ப்பு வழங்கியது. அது Safe Harbor திட்டம் என்றழைக்கப்படுவதுடன் அமெரிக்க நிறுவனங்கள் இணங்கி இருக்க அனுமதிக்கும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் 2000ஆம் ஆண்டின் ஒரு தீர்ப்பை செல்லுபடியற்றதாக்கியது. அத்திட்டத்தின்கீழ் அமெரிக்க நிறுவனங்கள், குறிப்பாக பேஸ்புக் போன்ற இணைய பெருநிறுவனங்கள், அவற்றினது ஐரோப்பிய பயனர்களின் தனிநபர் தரவுகளை அமெரிக்க அரசாங்கத்திற்கு அனுப்புகின்றன.

இந்த அடிப்படையில், கடந்த ஆண்டு NSA உளவுவேலை மீது ஐரோப்பிய பாராளுமன்ற அறிக்கையை எழுதிய தொழிற் கட்சியைச் சேர்ந்த அவ்வமைப்பின் துணை தலைவரான Claude Moraes, ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு அவ்விடத்திலும் மற்றும் ஸ்னோவ்டனுக்கு அதன் ஆதரவுக் குரல் கொடுப்பதிலும் செயலற்றுக் கிடப்பதாக இயலாமையோடு விமர்சித்து ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். “அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் எல்லா தனிநபர் தரவுகளும், இன்றியமையாதரீதியில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உத்தரவாதம் வழங்குவதற்குச் சமாந்தரமான ஒரு நடைமுறை பாதுகாப்பு மட்டத்திற்கு உட்பட்டிருக்க அவசியமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு" ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவிற்கு அது அழைப்புவிடுத்தது.

உண்மையில் ஐரோப்பாவிலும் சரி அல்லது அமெரிக்காவிலும் சரி அங்கே தனிநபர் தரவுகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை: அவ்விரு கண்டங்களிலுமே, இணையம் அல்லது தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு அனுப்பப்படும் தனிநபர்களது எல்லா பரிவர்த்தனைகளையும் மற்றும் தரவுகளையும் உளவு அமைப்புகள் சேமிக்கின்றன.

நீதிக்கான ஐரோப்பிய நீதிமன்றம் (ECJ) மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்திடமிருந்து எரிச்சலூட்டும் விதத்தில் அரசியல்ரீதியில் பின்மண்டையில் தட்டும் நடவடிக்கை எதையும் அமெரிக்க ஆணையங்கள் நிராகரித்தன. அவ்விதத்தில் அவை அமெரிக்க ஆணையங்களின் உளவுபார்ப்பு நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஆணையங்களிடமிருந்து எந்தவிதமான சட்டபூர்வ சவால்களும் இருக்காது என்பதில் அவை நம்பிக்கையாக இருப்பதைத் தெளிவுபடுத்தி இருந்தன.

ECJ இன் தீர்ப்புக்குப் பின்னர் சிறிது நேரத்திலேயே, அமெரிக்க வர்த்தகத்துறை அது Safe Harbor திட்டத்தை —நீதிமன்றங்களால் சவால்விடுக்கப்படாததும், அமெரிக்கா மற்றும் சுவிஸ் அரசாங்கங்களால் தொடர்ந்து கூட்டாக நிர்வகிக்கப்படுவதுமான அமெரிக்க-சுவிஸ் திட்டம், மற்றும் இப்போது சட்டவிரோதமான அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய Safe Harbor திட்டம் இரண்டையுமே தொடர்ந்து செயல்படுத்தும் என்று அதன் வலைத் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

“ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கும் அந்தரங்க பாதுகாப்பு அணுகுமுறையிலிருந்து அமெரிக்கா எடுக்கும் அணுகுமுறை வித்தியாசமானது" என்று கூறி, வர்த்தகத்துறை குறிப்பிடுகையில், "Safe Harbor கட்டமைப்புக்கு சுய-சான்று சமர்பிக்கும் நிகழ்முறை உட்பட, Safe Harbor திட்டத்தை" அது "தொடர்ந்து பேணும். உங்களுக்கு கேள்விகள் இருந்தால், தயவுசெய்து அதற்குரிய ஐரோப்பாவின் தேசிய தரவு பாதுகாப்பு ஆணையத்தையோ அல்லது சட்டபூர்வ கவுன்சிலான ஐரோப்பிய ஆணைக்குழுவையோ தொடர்பு கொள்ளுங்கள்,” என்று குறிப்பிட்டது.

பிரெஞ்சு உளவுபார்ப்பு சட்டமும் மற்றும் இங்கிலாந்து பயங்கரவாத-தடுப்பு சட்டமசோதாவும் ஆளும் உயரடுக்கின் பரந்த ஆதரவோடு இந்தாண்டு நிறைவேற்றப்பட்ட நிலையில், ஐரோப்பிய அரசுகள் பாரியளவில் உளவுபார்ப்பு வேலைகளை அதிகரித்து வருவதால், ஐரோப்பிய அரசாங்கங்களும் மற்றும் உளவுத்துறை அமைப்புகளும் அதன் சொந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிரான எல்லா நகர்வுகளையும் தடுக்குமென வாஷிங்டன் கருதுகிறது.

மக்களின் முதுகுக்குப் பின்னால், நேட்டோ சக்திகள் ஒன்றுக்கு எதிராக மற்றொன்று நடத்திவரும் உளவுவேலைகள் மீது, எவ்வாறிருப்பினும், அவற்றிற்கு இடையே பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன.

ஜேர்மன் கூட்டாட்சி நிர்வாக ஓர் உயர்மட்ட அதிகாரியின் பிரத்யேக மடிக்கணினி, மிகவும் அதிநவீன ஓர் இரகசிய மென்பொருளான "Regin” (malware) ஆல் பாதிக்கப்பட்டிருந்ததாக கண்டறியப்பட்ட பின்னர், ஜேர்மன் கூட்டாட்சி அரசு வழக்கறிஞர் அலுவலம் NSA மீதும் மற்றும் பிரித்தானிய உளவு அமைப்பான அரசு தகவல்தொடர்புக்கான தலைமையகங்கள் (GCHQ) மீதும் ஒரு புதிய விசாரணையைத் தொடங்கியிருந்ததை அக்டோபர் 23 அன்று Der Spiegel வெளியிட்டது.

“Regin” இரகசிய மென்பொருள் கடந்த ஆண்டு பெல்ஜிய தொலைதொடர்பு நிறுவனமான Belgacom இன் கணினிகளில் கண்டறியப்பட்டது. காஸ்பர்ஸ்கி (Kaspersky) ஆய்வகத்தின் குறியீட்டு ஆய்வாளர்களது கருத்துப்படி, அது Flame, Duqu, மற்றும் Stuxnet நிரல்களிலிருந்து தருவிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான மென்பொருள்களைக் கொண்டுள்ளதுபிந்தையவை ஈரானிய அணுஉலைகளில் செயல்படும் கணினிகளில் தொற்றுக்களை உருவாக்க அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறையால் உருவாக்கப்பட்டு வெளியானவையாகும்.