சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

Leaders of Japan, China and South Korea meet in Seoul

ஜப்பான், சீனா மற்றும் தென் கொரியாவின் தலைவர்கள் சியோலில் சந்திக்கின்றனர்

By Ben McGrath
2 November 2015

Use this version to printSend feedback

ஜப்பான், சீனா மற்றும் தென் கொரியாவின் அரசியல் தலைவர்கள் மூன்று ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்தில் அவர்களது முதல் முத்தரப்பு உச்சிமாநாட்டில் ஞாயிறன்று சந்தித்தனர். அக்கூட்டம் தென் சீனக் கடலில் சீனா-உரிமைக்கோரும் பிராந்தியத்திற்குட்பட்ட 12 கடல்தூர எல்லைக்குள் அமெரிக்கா போர்கப்பல் ஒன்றை அனுப்பிய ஆத்திரமூட்டும் முடிவைத் தொடர்ந்து ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பதட்டங்கள் அதிகரித்துள்ளதற்கு இடையே நடந்தது.

ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்ஜோ அபே மற்றும் சீன பிரதமர் லீ கெக்கியாங் (Li Keqiang) தென் கொரிய ஜனாதிபதி Park Geun-hye ஐ சந்திக்க சியோலுக்கு பயணித்து, இரண்டு மணிநேர பேச்சுவார்த்தை நடத்தினர். பார்க் மற்றும் அபே அவர்களது கூட்டு விவாதங்களுக்கு முன்னதாக லீ உடன் தனித்தனியாக சந்திப்பு நடத்தினர். பார்க் இன்று ஜப்பானிய தலைவரைச் சந்திக்க உள்ளார், அது அவர்கள் பதவியேற்றதற்குப் பிந்தைய அவர்களது முதல் இருதரப்பு கூட்டமாக இருக்கும்.

குறிப்பிடத்தக்க வகையில், தென் சீனக் கடலில் அமெரிக்க நடவடிக்கைகளைக் குறித்தோ அல்லது ஜப்பானில் சென்காயு என்றும் சீனாவில் தியாயு என்றும் அறியப்படும் கிழக்கு சீனக் கடலின் கடல்பாறை குன்றுகள் மீது பெய்ஜிங் மற்றும் டோக்கியோவிற்கு இடையே நடந்துவரும் எல்லை பிரச்சினையைக் குறித்தோ பகிரங்கமாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.

சீன வெளியுறவு மந்திரி வாங் யி (Wang Yi), இவரும் அவரது ஜப்பானிய சமதரப்பை சந்திக்க சியோலில் உள்ளார், இவர் சனியன்று டோக்கியோ கலந்து கொண்டிருப்பதைக் குறித்து வீண்பேச்சுக்களை வெளியிட்டார்: தென் சீனக் கடலில் ஜப்பான் என்ன செய்யுமென எனக்கு ஆச்சரியமாக உள்ளது. எவ்வாறிருப்பினும், வாங் அல்லது லீ இருவரில் யாருமே தற்போது முதல்முறையாக தென் சீனக் கடலில் நடந்துவரும் அமெரிக்க-ஜப்பானிய கூட்டு கடற்படை ஒத்திகைகளைக் குறித்து குறை கூறவில்லை.

ஏவுகணை தாங்கிய போர்கப்பலான USS லாசென் கடந்த செவ்வாயன்று ஸ்பார்ட்லி தீவுகளில் சீனக் கட்டுப்பாட்டிலுள்ள தீவுக்கூட்டங்களைச் சுற்றி 12 கடல்மைல் எல்லைக்குள் நுழைந்து வெறும் ஒரு நாளைக்குப் பின்னர், அணுஆயுதமேந்திய விமானந்தாங்கி போர்க்கப்பல் USS தியோடர் ரூஸ்வெல்ட் மற்றும் ஜப்பானின் போர்க்கப்பலான பியுஜூகி அப்பிராந்தியத்தில் போர்னியோவின் சற்று வடக்கே அவற்றின் ஒத்திகைகளைத் தொடங்கின. அந்த போர்பயிற்சிகள் இரண்டு வாரகாலம் நீடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல 1930கள் மற்றும் 1940களின் போது ஆசியாவில் ஜப்பானிய ஏகாதிபத்திய குற்றங்களை அது மூடிமறைத்ததை குறித்து அபே அரசாங்கத்தை தென் கொரியா மற்றும் சீனா எதையும் குறிப்பிடாததும் முக்கியத்துவம் பெறுகிறது. வரலாற்று பிரச்சினைகள் முன்னதாக ஒரு முட்டுக்கட்டையாக இருந்த நிலையில், அபே வை சந்திக்க லீ மற்றும் பார்க் விரும்பிய உண்மையே கூட அவர்களது பாகத்தில் ஒரு முக்கிய விட்டுக்கொடுப்பாக இருந்தது. "வரலாற்று நேர்மையை முகங்கொடுத்திருப்பது மற்றும் எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவது" குறித்த ஒரு பொதுவான குறிப்புகள் மட்டுமே அவர்களது கூட்டு அறிக்கையில் இடம் பெற்றிருந்தது.

அக்கூட்டத்தில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை நெருக்கமான உறவுகள் மீது ஒருங்குவிந்திருந்தது. அது குறிப்பிட்டது: அப்பிராந்தியத்தில் நிரந்தர சமாதானம், ஸ்திரப்பாடு மற்றும் கூட்டு-வளமையைக் கட்டமைப்பதற்கும் மற்றும் அசைக்க முடியாதவாறு முத்தரப்பு கூட்டுறவைத் தொடர்ந்து அபிவிருத்தி செய்வதற்கும், ஒன்றோடொன்று பிணைந்த பொருளாதாரமும் மற்றும் அரசியல்/பாதுகாப்பு பதட்டங்களும் ஒன்றுசேர்ந்துள்ள இச்சூழலைக் கடந்தாக வேண்டும்.

அந்த மூன்று தலைவர்களும் கடல்சார் எல்லைகள் மற்றும் வரலாற்று பிரச்சினைகள் மீதான சச்சரவுகளுக்கு இடையே 2010 இல் நிறுத்தப்பட்ட உயர்மட்ட பொருளாதார பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க உடன்பட்டனர். சீனா அழுத்தமளித்து கொண்டு வந்த பிராந்தியளவிலான பரந்த பொருளாதார பங்காண்மை என்றறியப்படும் 16-நாடுகளது வர்த்தக உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திடுவதற்கு முயற்சிகளை அதிகரிக்கவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். அவர்கள் அம்மூன்று நாடுகளுக்கிடையே ஒரு பொருளாதார உடன்படிக்கைக்கான திட்டங்களை மீட்டமைக்கவும் விருப்பம் தெரிவித்தனர். அம்மூன்று நாடுகளது பொருளாதாரம் உலக பொருளாதாரத்தில் சுமார் 20 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

அம்மூன்று பொருளாதாரங்கள் ஒவ்வொன்றும் பெரும் பிரச்சினைகளை முகங்கொடுத்துள்ள நிலையில் தான், மிகப்பெரும் பொருளாதார கூட்டுறவுகளை ஸ்தாபிப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன. சீனா தொடர்ந்து மெதுவாகி வருகிறது, அதேவேளையில் ஜப்பானோ மந்தநிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. தென் கொரிய பொருளாதாரம், அரசாங்கத்தின் ஊக்கப்பொதி முறைமைகளின் காரணமாக மட்டுமே, இந்த மூன்றாம் காலாண்டில் ஐந்தாண்டுகளிலேயே மிக அதிகபட்ச வளர்ச்சி விகிதமாக 2.6 சதவீதத்தை எட்டியது. ஜப்பானும் சரி தென் கொரியாவும் சரி அவற்றின் மிகப்பெரிய வர்த்தக பங்காளி சீனாவிற்கான ஏற்றுமதி வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.

சீனாவுடன் பொருளாதார பேச்சுவார்த்தைகளில் ஜப்பான் ஈடுபடுவது, கடந்த மாதம் பசிபிக் இடையிலான கூட்டு உடன்படிக்கை (TPP) முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து வருகிறது. TPP உடன்படிக்கையை அமெரிக்கா, சீனாவை ஓரங்கட்டவும் மற்றும் ஆசிய பசிபிக் பகுதியில் வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான விதிமுறைகளை அமைப்பதற்கும் வழிவகையாக காண்கிறது. TPP க்கான டோக்கியோவின் ஆதரவைப் பெற்றுள்ள வாஷிங்டன், சியோலில் நடந்த நேற்றைய முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் ஆசியாவில் அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதி செய்யும் அதன் முயற்சிகளைப் பலவீனப்படுத்தாதவாறு உறுதிப்படுத்த கவலை கொள்ளும்.

டோக்கியோவும் சியோலும் வட கொரியா விடயத்தில் ஒதுங்கி கொள்வதாக தெரிகிறது என்றும் ஒபாமா நிர்வாகம் கவலைக் கொள்ளக்கூடும். நேற்றைய கூட்டறிக்கை கொரிய தீபகற்பத்தில் அணுஆயுதமயமாக்கலைக் குறைப்பதற்கும் (denuclearization) ஆதரவை வெளியிட்டிருந்தது, அத்துடன் வட கொரியாவின் அணுசக்தி திட்டத்தின் மீது "அர்த்தமுள்ள" ஆறு-தரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு திரும்பும் முயற்சிகளுக்கும் அழைப்புவிடுத்தது.

அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் இரண்டு கொரியாவும் சம்பந்தப்பட்ட, மற்றும் சீனாவால் முன்மொழியப்பட்ட, ஆறு-தரப்பு பேச்சுவார்த்தைகள் ஒபாமா பதவிக்கு வந்த பின்னரில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் முன்னதாகவே வட கொரியா அதன் அணுசக்தி ஆலைகளையும் ஏற்கனவே இருக்கும் அணுஆயுதங்களையும் களைவதை நோக்கி பெரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று அமெரிக்கா வலியுறுத்துகிறது. வடகிழக்கு ஆசியாவில் பிரதானமாக சீனாவிற்கு எதிராக திருப்பிவிடப்பட்ட அதன் இராணுவ கட்டமைப்பை நியாயப்படுத்த ஒபாமா நிர்வாகம் வட கொரியாவின் அணுசக்தி திட்டங்களைப் பாவித்து வருகிறது.

சீனாவிற்கு எதிராக நோக்கம் கொண்ட ஒபாவின் "ஆசியாவை நோக்கிய முன்னிலையை" அபே முழுமையாக ஆதரித்தாலும், அவரது அரசாங்கம் ஜப்பானை மீள்இராணுவமயமாக்க, அனைத்திற்கும் மேலாக அதன் சொந்த ஏகாதிபத்திய நலன்களைப் பின்தொடர உள்நோக்கம் கொண்டுள்ளது. இவை நிச்சயமாக அமெரிக்காவின் நோக்கங்களுடன் பொருந்தி வராது. டோக்கியோ அதன் கரத்தை அது இராணுவரீதியில் பலப்படுத்துகையில், அதிகரித்தளவில் ஆசியாவிலும் மற்றும் உலகளவிலும் அதன் சொந்த போக்கைப் பின்தொடரும்.

வாஷிங்டன் தென் கொரியா குறித்தும் கவலைக் கொண்டுள்ளது. அக்டோபர் 16 இல் வாஷிங்டனில் ஒபாமா உடனான பார்க் இன் கூட்டத்தின் போது, அமெரிக்க ஜனாதிபதி தென் சீனக் கடல் பிரச்சினையில் சீனாவிற்கு எதிராக சியோல் ஒரு பலமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென அவர் எதிர்பார்ப்பதைத் தெளிவுபடுத்தினார். இரண்டாம் உலக போர் முடிந்து 75 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் வகையில் பெய்ஜிங்கில் நடந்த ஓர் இராணுவ அணிவகுப்பில் அப்பெண்மணி சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுக்கு அருகே தோன்றிய போது, அமெரிக்க ஊடகங்கள் பார்க் ஐ பகிரங்கமாக கண்டனம் செய்தன.

சனியன்று லீ உடனான பார்க் இன் ஒருவருக்கு-ஒருவர் சந்திப்பின் போது தென் சீனக் கடல் குறித்து விவாதிக்கப்படவில்லை. அதற்கு மாறாக அவ்விருவரும் வணிகம் சார்ந்த 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, பொருளாதார பிரச்சினைகள் மீது ஒருங்குவிந்தனர். அவர்கள் கொரிய தீபகற்பத்தின் மறுஐக்கியம் குறித்தும், வட கொரியாவின் அணுஆயுத திட்டம் குறித்தும் மற்றும் அந்நாட்டிற்கு சீனாவின் பொலிட்பீரோ நிலைக்குழுவின் ஓர் அங்கத்தவரான Liu Yunshan இன் சமீபத்திய விஜயம் குறித்தும் விவாதித்தனர்.

இன்று பார்க் மற்றும் அபே முதல்முறையாக இருதரப்பு உச்சிமாநாட்டுக்காக சந்திப்பார்கள். அப்பிராந்தியத்தில் அதன் இரண்டு கூட்டாளிகளுக்கு இடையிலான பிரச்சினை அதன் சீனா-விரோத "முன்னிலையைப்" பாதித்து வருவது மட்டுமே கோபப்படுத்துவதாக கடந்த திங்கட்கிழமை பேச்சுவார்த்தைகளில் பார்க் அறிவுறுத்தினார், மிகவும் அனேகமாக இது வாஷிங்டனின் வலியுறுத்தலாக இருக்கலாம். கொரியாவின் "ஆற்றுப்படுத்தும் பெண்களை" ஜப்பான் இராணுவத்திற்கான பாலியல் அடிமைகளாக போர்காலத்தில் பயன்படுத்தியதைக் குறித்து பகுதியாக அக்கூட்டம் கவனம் செலுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது, இப்பிரச்சினை அவ்விரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான உறவுகள் அபிவிருத்தி அடைவதற்குப் பெரும் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.