சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Merkel draws a positive balance sheet on her eighth visit to China

மேர்க்கெல் அவரது சீனாவிற்கான எட்டாவது விஜயம் குறித்து சாதகமான இருப்பு நிலைக்குறிப்பை வழங்குகிறார்

By Ulrich Rippert
3 November 2015

Use this version to printSend feedback

கடந்த வாரயிறுதியில் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் சீனாவிற்கான அவரது சமீபத்திய பயணம் குறித்து ஒரு சாதகமான இருப்பு நிலைக்குறிப்பை வழங்கினார். அவ்விரு நாடுகளுக்கும் இடையே கூடுதல் பொருளாதார மற்றும் அரசியல் கூட்டுறவு அபிவிருத்தி அடையுமென அவர் நம்புவதாக செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார். மேலும் சீனா "சர்வதேச முரண்பாடுகள் மீதான தீர்மானங்களில் ஆக்கபூர்வமாக" இணையுமென்று அவர் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

மேர்க்கெல் சான்சிலராக இருக்கும் 10 ஆண்டுகளில் இது பெய்ஜிங்கிற்கான அவரது எட்டாவது விஜயமாகும். முந்தைய ஒவ்வொரு விஜயத்தின் போதும் உடன் சென்றதைப் போலவே, முன்னணி வணிக புள்ளிகளின் ஒரு பெரிய பரிவாரமும் அவருடன் சென்றது. முந்தையதைப் போலவே, சுமார் 20 பில்லியன் மதிப்பிலான பொருளாதார உடன்படிக்கைகள் முடிவு செய்யப்பட்டன. 130 ஏர்பஸ் விமானங்கள் வழங்குவது மற்றும் 100 மீட்பு ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்வதற்கான ஒரு கூட்டுறவு உடன்படிக்கைக்கான ஒப்பந்தங்களும் அவற்றில் உள்ளடங்கும்.

இருந்தபோதினும், மேர்க்கெலின் இந்த சமீபத்திய பயணம் முக்கியமான அளவிற்கு மாற்றமடைந்திருக்கும் நிலைமைகளின்கீழ் நடந்துள்ளது. முதலாவதாக உலக பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்துவரும் சீனப் பொருளாதார வளர்ச்சியின் தாக்கங்கள் மிகவும் கடுமையாகி உள்ளன. இந்த கோடையில், சீன நாணய மதிப்பிறக்கம் மற்றும் செலாவணி விகிதத்தைத் தீர்மானிக்கும் ஒரு புதிய இயங்குமுறையை உருவாக்கியமை ஆகியவை சர்வதேச நிதியியல் சந்தைகளை அதிர்ச்சிப்படுத்தியது.

ஆசியா எங்கிலுமான சந்தைகள் வீழ்ச்சியடைந்தன, சில நாணயங்கள் 1997-1998 ஆசிய நிதியியல் நெருக்கடிக்கு பிந்தைய மிகக் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சி அடைந்தன. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும், பங்குச் சந்தைகள் தற்காலிகமாக எதிர்வினை காட்டின ஆனால் குறிப்பிடத்தக்களவிற்கு இழப்புகள் இருந்தன. ரென்மின்பி (இது யுவான் என்றும் அறியப்படும்) யின் மதிப்பு குறைப்பானது சீனப் பொருளாதார நிலை முன்பு கருதப்பட்டதை விட மோசமடைந்திருக்கிறது என்பதையே சுட்டிக்காட்டுகிறது என்று நிதியியல் வல்லுனர்கள் தெரிவித்தனர்.

அக்டோபர் தொடக்கத்தில், உலக வர்த்தக அமைப்பு (WTO) 2015க்கான உலகளாவிய வர்த்தக வளர்ச்சி குறித்த அதன் முன்கணிப்பை 3.3 சதவீதத்திலிருந்து 2.8 சதவீதத்திற்கு குறைத்தது. சீனப் பொருளாதார வளர்ச்சியின் வீழ்ச்சியும் மற்றும் அதன் விளைவாக மூலப் பொருட்களின் விலைவீழ்ச்சியும் உலகளாவிய பின்னோக்கிய போக்குகளை பலப்படுத்தக்கூடுமென அது எச்சரித்தது.

பேர்லினில் உள்ள சீன ஆய்வுகளுக்கான மெர்காட்டர் பயிலகத்தின் (Mercator Institute for China Studies) செபஸ்தியான் ஹைல்மான், முதலீட்டால்-உந்தப்படும் வளர்ச்சி மாதிரியில் இருந்து நுகர்வால்-உந்தப்படும் வளர்ச்சி மாதிரிக்கு சீனப் பொருளாதாரத்தின் நிலைமாற்றம் ஜேர்மன் தொழில்துறையில் விளைவுகளை ஏற்படுத்துமென எச்சரித்தார். “ஜேர்மன் மூலதன பண்டங்கள் மற்றும் வாகனத்துறை சாதனங்களின்" “அதிக தேவையின் முந்தைய மட்டங்களுக்கு இனி எட்டுவது" சாத்தியமாகாது என்றவர் எழுதினார்.

அதேநேரத்தில் சீனப் பொருளாதாரத்தில் இந்த மாற்றம் "சர்வதேச நிதி மற்றும் அன்னியநாட்டு பங்குச் சந்தைகளை அணுகுவதற்கான தேவையை சீனாவிற்கு" ஏற்படுத்துகிறது, "மற்றும் சேவைத்துறை சார்ந்வற்றை பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டியதை" அதிகளவில் உயர்த்துகிறது. இந்த துறைகளில், எவ்வாறிருப்பினும், “ஜேர்மனியை விட" பிரிட்டன் "சிறப்பான இடத்தில்" உள்ளது. இது "ஐரோப்பிய-சீன உறவில் ஒரு மூலோபாய மாற்றம்" என்பது "பேர்லினை தொலைவிலும், இலண்டனை அருகாமையிலும்" நிறுத்துகிறது.

மேர்க்கெலின் பெய்ஜிங் விஜயத்திற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர்தான், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பக்கிங்காம் அரண்மனையில் சம்பிரதாயமான முறையில் வரவேற்கப்பட்டார். அங்கே அவர், ரென்மின்பி இல் அரசு பத்திரங்களை வர்த்தகம் செய்யும் ஒரு தளத்தைத் திறக்க, சீனாவிற்கு வெளியே அமையும் முதல் நிதியியல் மையமாக இலண்டன் தேர்ந்தெடுக்கப்படுமென உறுதியளித்தார்.

அதற்கு கைமாறாக, பிரிட்டிஷ் அரசாங்கம் தோற்றப்பாட்டளவில் பிரிட்டிஷ் பொருளாதாரத்தை சீனா கட்டுப்பாடின்றி அணுகுவதற்கு 100 பில்லியனுக்கும் அதிக மதிப்பிலான மிகப்பெரிய முதலீட்டு வாய்ப்புகளை வழங்கியது, அணுசக்தித்துறை போன்ற மூலோபாயரீதியில் முக்கிய துறைகளும் அதில் உள்ளடங்கும். இதற்கிடையே, பிரிட்டனின் இரண்டாவது மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக சீனா சேவையாற்றுகிறது, சீனாவிற்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஜேர்மனி இரண்டாம் இடத்திலும் அமெரிக்கா முதலிடத்திலும் உள்ளது. சீனாவிற்கான ஏற்றுமதிகள் கடந்த ஐந்தாண்டுகளில் இரண்டு மடங்கை விட அதிகமாகி உள்ளன.

ஜேர்மன்-சீன உறவுகள் மீது பலமாக பாதிப்பேற்படுத்தும் மூன்றாவதும் மிக முக்கியமான காரணியாக இருப்பது, அமெரிக்காவின் "ஆசியாவை நோக்கிய முன்னிலை" ஆல் சீனா மீது நிறுத்தப்பட்டிருக்கும் அதிகரித்த பொருளாதார மற்றும் இராணுவ அழுத்தமாகும். மேர்க்கெல் பயணத்திற்கு ஒரு நாள் முன்னதாக, தென் சீனக் கடலில் சீனா உரிமைகோரும் ஒரு தீவைச் சுற்றி 12 மைல் பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல் ஒன்று ஊடுருவியதுடன், அந்த நிகழ்வுபோக்கு ஓர் அபாயகரமான இராணுவ ஆத்திரமூட்டலை ஏற்படுத்தியது.

அதற்கு முன்னதாக அமெரிக்க அரசாங்கம் சீனாவைத் தனிமைப்படுத்தும் மற்றும் ஆசியாவில் அதன் செல்வாக்கைப் பலவீனப்படுத்தும் பிரதான நோக்கில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஏனைய ஆசிய நாடுகளுக்கு இடையே ஒரு வர்த்தக மற்றும் முதலீட்டு உடன்படிக்கையை (பசிபிக் இடையிலான கூட்டு உடன்படிக்கை-TPP) ஏற்படுத்தியது.

அமெரிக்காவிடமிருந்து அதிகரித்துவரும் பொருளாதார மற்றும் இராணுவ அழுத்தங்களின் கீழ், சீன அரசாங்கம் தீர்க்கமாக ஐரோப்பாவை நோக்கி திரும்பியது. வெறும் ஒருசில நாட்களின் இடைவெளியில், உயர்மட்ட சீன அரசியல்வாதிகளும் மற்றும் பிரிட்டன், ஜேர்மன் மற்றும் பிரான்சிலிருந்து அரசாங்க மற்றும் பொருளாதார பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தைகளுக்கு நுழைந்ததும் மற்றும் பரந்த நிதியியல் உடன்படிக்கைகளை இறுதி செய்ததும் தற்செயலானதல்ல.

ஞாயிறன்று மேர்க்கெல் குறிப்பிடுகையில், அவர் சீனாவில் அசாதாரண முறையில் சிறப்பாக வரவேற்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்தார். சீனத் தலைமை வெளிப்படையாகவே ஜேர்மன் சான்சிலருக்கு பெய்ஜிங் மற்றும் இலண்டனுக்கு இடையே அதிகரித்துவரும் பங்காண்மை, ஜேர்மனி உடனான சீனாவின் பங்காண்மையை எந்தவிதத்திலும் பாதிக்காது என்பதற்கு சமிக்ஞை காட்ட நீண்ட நேரமெடுத்துக் கொண்டது.

மூன்று முன்னணி கட்சி மற்றும் அரசு செயல்பாட்டாளர்கள், ஜனாதிபதி ஜி, பிரதமர் லி கெக்கியாங் மற்றும் ஜ்ஹாங் திஜியன்ஜ், தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு தலைவர் என அனைவரும், மேர்க்கெலை அவரது பயணத்தின் முதல் நாள் அன்று, அதேநாளில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் ஓர் அமர்வு கூடி வேண்டியிருந்த போதும் கூட, அவரை வரவேற்க சென்றனர்.

வியாழனன்று மாலை, ஜனாதிபதி ஜி மேர்க்கெலுக்கு அரசு இரவு விருந்தளித்தார். சான்சிலரை உபசரித்த அந்த சமயத்தில், அங்கே 21 குண்டு முழங்க மரியாதை அளிக்கப்பட்டதாகவும், பொதுவாக அரசு தலைவர்களுக்கு 19 குண்டுகள் மட்டுமே முழங்கும் நடைமுறை இருப்பதாகவும் பேர்லினில் பெருமதிப்போடு குறிப்பெடுத்துக் கொள்ளப்பட்டது.

மேர்க்கெலுக்கு ஒரு சிறப்பு கௌரவமும் வழங்கப்பட்டது. பிரதமர் லீ அவர் பிறந்த நகரான Hefei பார்வையிட அவருடன் இணையுமாறு மேர்க்கெலைக் கேட்டுக் கொண்டார். அவர் "சீனாவின் மிக அழகிய மலைச்சிகரங்களில் ஒன்றான" Huangshan அவருக்குக் காட்ட விரும்பினார். அவ்வாறு செய்வதன் மூலமாக, ஜேர்மனி மற்றும் சீனாவிற்கு இடையிலான உறவு எந்தளவிற்கு நெருக்கமாக மாறியிருக்கிறது என்றும், அதில் மேர்க்கெலுக்கு எந்தளவிற்கு மதிப்பளிக்கப்படுகிறது என்பதையும் அவர் காட்ட விரும்பியதாக லீ தெரிவித்தார். மேர்க்கெல் ஏற்கனவே எட்டு முறை சீனாவிற்கு வருகை தந்ததற்காக லீ மேர்க்கெலை புகழ்ந்துரைத்தார், அத்துடன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கூட்டு அரசாங்க கலந்தாலோசனைகள் மற்றும் Hangzhou இல் நடக்க உள்ள ஜி-20 உச்சிமாநாட்டிற்கும் அவர் மீண்டும் வரவேண்டுமென பணிவுடன் கேட்டுக் கொண்டார். அது, வேறெந்த அரசாங்க தலைவரையும் விட அதிகமாக, மேர்க்கெலின் 10வது விஜயமாக இருக்கும்.

வணிக கூட்டமொன்றில், பிரதமர் லீ தொழில்துறை நவீனமயமாக்கல் மற்றும் தொழில்நுட்பமயமாக்கலில் சீன-ஜேர்மன் கூட்டுறவை மேற்கொண்டு பலப்படுத்துவதற்கும் அழுத்தமளித்தார். ஜேர்மனியின் தொழில்துறை 2025” என்ற அதன் சொந்த அபிவிருத்தி பாதையோடு சீனாவை இணைக்கும் மற்றும் அதைப் பின்பற்ற செய்வதற்கான ஒரு எடுத்துக்காட்டாக, ஜேர்மனியின் எதிர்கால மூலோபாயம் "தொழில்துறை 4.0” என்பதை சீனா ஏற்றுக்கொள்ளக் கூடும். அவர் அரசாங்க மட்டத்தில் புதிய மற்றும் நெருக்கமாக இயங்கும் அமைப்பு ஒன்றை நிறுவ முன்மொழிந்தார்.

ஜேர்மனி இன்னமும் சீனாவின் மிக முக்கிய ஐரோப்பிய வர்த்தக பங்காளியாகும். ஐரோப்பிய ஒன்றியத்துடனான சீனாவின் வர்த்தக அளவில் 30 சதவீதம் ஜேர்மனியைச் சார்கிறது. இந்த ஆண்டு வர்த்தக அளவு 154 பில்லியன் யூரோ என்ற கடந்த ஆண்டின் அளவைத் தாண்டக்கூடும். அரசு புள்ளிவிபரங்களின்படி, 5,000 ஜேர்மன் நிறுவனங்கள் சீனாவில் செயல்பட்டு வருகின்றன. ஒப்பீட்டளவில், இந்தியாவில் 1,600 பேர் உள்ளன. இலண்டன் பங்குச்சந்தை உடன் கூட்டு-நடவடிக்கைகள் இருந்தாலும், மேர்க்கெல் விஜயத்தின் போது பிராங்க்பேர்ட் மற்றும் ஷாங்காய் இன் பங்குச்சந்தை மையங்களுக்கு இடையே ஒரு நெருக்கமான கூட்டுறவுக்கான ஓர் உடன்படிக்கையும் எட்டப்பட்டது.

ஐரோப்பா உடனான அதன் பொருளாதார உறவுகளைப் பலப்படுத்துவதில், சீனா அமெரிக்காவிடமிருந்து அதிகரித்த அழுத்தங்களுக்கு தனது பிரதிபலிப்பை காட்டி வருகிறது. மேர்க்கெலுக்கு விடைகொடுத்து அனுப்பிய பின்னர், சீன பிரதமர் ஓர் அரசு விஜயமாக தென் கொரியாவிற்கு பயணித்தார். அங்கே அவர், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக உறைந்து போயிருந்த, ஜப்பானிய பிரதம மந்திரி அபே மற்றும் தென் கொரிய ஜனாதிபதி பார்க் ஆகியோருடன் முத்தரப்பு கூட்டத்திற்குப் புத்துயிரூட்டினார். அமெரிக்காவினால் முன்னதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள TPP க்கு எதிர்பலமாக, பெய்ஜிங் அதன் அண்டைநாடுகளுடன் ஒரு சுதந்திர வர்த்தக மண்டலத்தைப் பேரம்பேச விரும்புகிறது.

அதே காரணத்திற்காக, பெய்ஜிங் தலைமை சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான ஒரு சுதந்திர வர்த்தக மண்டலத்தை ஆதரிக்குமாறும் மேர்க்கெலை வலியுறுத்தி வருகிறார். இலண்டன் ஏற்கனவே அதன் ஒப்புதலுக்கு சமிக்ஞை அளித்துவிட்டது. ஆனால் ஜேர்மன் சான்சிலர் அது மாதிரியான ஓர் உடன்படிக்கை அமெரிக்க அரசாங்கத்துடனான மோதலைத் தீவிரப்படுத்துமென அறிந்து, அவரது பயணத்தின் போது தவிர்த்துக் கொண்டார். விடைபெறுகையில், அவர் இராஜாங்கரீதியில் கூறுகையில், முதலில் அவர் 2016 இல் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனாவிற்கு இடையே ஒரு முதலீட்டு உடன்படிக்கையைத் நடைமுறைப்படுத்த விரும்புவதாகவும், அது ஐரோப்பிய ஒன்றிய-சீன சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு ஒரு முன்நிபந்தனையாக இருக்குமென்றும் தெரிவித்தார்.