சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP condemns arrest of Frontline Socialist Party leader

முன்னிலை சோசலிசக் கட்சி தலைவர் கைது செய்யப்பட்டதை இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி கண்டனம் செய்கின்றது

By Socialist Equality Party (Sri Lanka)
10 November 2015

Use this version to printSend feedback

சோசலிச சமத்துவக் கட்சி (சோ...), முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரான குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டதை கடுமையாக கண்டனம் செய்வதோடு அவரது நிபந்தனையற்ற விடுதலையைக் கோருகின்றது. இந்த கைதானது தொழிலாள வர்க்கம் மற்றும் வறியவர்களின் ஜனநாயக உரிமைகளை மீது மிகப் பரந்த தாக்குதலுக்கு இலங்கை அரசாங்கம் தயாராவதற்கான இன்னொரு சமிக்ஞையாகும்.

குணரட்னம் நவம்பர் 4 அன்று அவரது சுகயீனமுற்றுள்ள தாயாரை பார்க்க கேகாலையில் அவரது வீட்டுக்குச் சென்றிருந்தபோது, நாட்டின் வீசா விதிகளை மீறியாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட அவர் நவம்பர் 18 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஆஸ்திரேலியாவுக்கு நாடுகடத்தப்படும் நிலையை எதிர்கொள்கின்றார்.

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பீ.) பிரதேச தலைவராக இருந்த குணரட்னம், 1988ல் ஐக்கிய தேசியக் கட்சி (.தே..) அரசாங்கம் அதன் பயங்கரப் பிரச்சாரத்தை முன்னெடுத்து, கொலைப் படைகளால் 60,000 ஜே.வி.பீ. உறுப்பினர்களும் கிராமப்புற இளைஞர்களும் கொல்லப்பட்டபோது இலங்கையை விட்டு வெளியேறினார். ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய அவர் பின்னர் அங்கு பிராஜா உரிமைப் பெற்றார்.

2012 ஏப்பிரலில் இலங்கைக்கு மீண்டும் வந்த குணரட்னம், முன்னிலை சோசலிசக் கட்சி உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக, இன்னொரு அரசியல் குழு உறுப்பினருடன் சேர்த்து பொலிசாரால் கைது செய்யப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். குணரட்னம் ஜனவரியில் மீண்டும் இலங்கைக்கு வந்து முன்னிலை சோசலிசக் கட்சியின் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

இலங்கை குடிவரவு குடியகல்வுத் திணைக்களம், சுற்றுலா வீசாவில் வந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்கும் பிற்போக்கு சட்டத்தின் கீழேயே குணரட்டனத்தை கைது செய்தது. பெப்பிரவரியில் அவர் தான் கைது செய்யப்படுவதையும் நாடுகடத்தப்படுவதையும் தடுக்கும் ஒரு நீதிமன்ற ஆணையைப் பெறுவதன் பேரில் வழக்குத் தாக்கல் செய்தார். எனினும், அவரது கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம், அவரது அடிப்படை உரிமை மீறப்படவில்லை என்றும் அவர் நாடு கடத்தப்படுவதற்குப் பொருத்தமானவர் என்றும் அறிவித்தது.

உண்மையில், “வீசா விதிகளை மீறியமைஎன்பது ஒரு சாக்குப் போக்கே ஆகும். குணரட்னத்தின் கைதானது கல்வி வெட்டுக்களுக்கு எதிராக இலங்கைப் பல்கலைக் கழகங்களில் மாணவர்களின் போராட்டங்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளமைக்கு எதிரான பின்னணியிலேயே இடம்பெற்றுள்ளது. அக்டோபர் 29 அன்று, மத்திய கொழும்பில் கணக்கியல் கற்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நடத்திய அமைதியான போராட்டத்தின் மீது பொலிசார் தண்ணீர் பீய்ச்சும் இயந்திரம், கண்ணீர் புகை மற்றும் பொல்லுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். குறைந்தபட்சம் 39 மாணவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த வன்முறைகள் பரந்த சீற்றத்தை தூண்டி விட்டது. மாணவர்கள் கிட்டத்தட்ட எல்லா பல்கலைக்கழகங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். நவம்பர் 3 அன்று சுமார் 10,000 பேர் பொலிஸ் தாக்குதலைக் கண்டனம் செய்து கொழும்பில் கூடியதோடு கல்வி வெட்டுக்களை நிறுத்துமாறுக் கோரினர். இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னிலை சோசலிசக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினால் (..மா..) அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

நவம்பர் 3 பாராளுமன்றத்தில் பேசிய உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, ஆர்ப்பாட்டத்தை தூண்டிவிட்டமைக்காகவெளிச் சக்திகளைகுற்றம் சாட்டியதோடு இந்த நிலைமையைப் பயன்படுத்திக்கொண்டற்காக எதிர் அரசியல் சக்திகளையும் குற்றம் சாட்டினார். மறுநாளே குணரட்னம் கைது செய்யப்பட்டார்.

உடனடி இலக்கு முன்னிலை சோசலிசக் கட்சியும் ..மா. ஒன்றியமுமாக இருந்த அதேவேளை, “வெளிச் சக்திகளைப்பற்றி கிரியெல்ல கூறுவது மிகவும் அச்சுறுத்தலான அர்த்தத்தைக் கொண்டுள்ளது. சமூக அமைதியின்மையை பற்றி விழிப்புடன் உள்ள அரசாங்கம், அரசியல் எதிர்ப்பு மற்றும் தொழிலாள வர்க்கம் மற்றும் வறியவர்களின் விரோதத்தை பரந்தளவில் நசுக்குவதை நியாயப்படுத்துவதற்காக இதே வாய்ச்சவாடலைப் பயன்படுத்திக்கொள்ளும்.

மாணவர்களின் போராட்டங்கள் தொடர்வதானது வளர்ச்சியடையும் வெகுஜன அதிருப்தி மற்றும் தொழிலாளர்களின் வரவிருக்கும் போராட்டங்கள் பற்றிய சமிக்ஞை ஆகும். வாஷிங்டனின் ஆதரவைப் பெற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த இராஜபக்ஷவை அகற்றுவதற்கு அவர் மீதான வெகுஜன எதிர்ப்பைச் சுரண்டிக்கொண்டதோடு சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டங்களை அமுல்படுத்துவதற்காக .தே.. தலைமையிலான அரசாங்கத்தை நியமித்தார்.

ஏற்கனவே வாழ்க்கைத் தரங்கள் மீதான தாக்குதல்கள் உழைக்கும் மக்களின் எதிர்ப்பைத் தூண்டிவிட்டுள்ளன.

*மார்ச்சில், வேலைச் சுமையை அதிகரித்தமைக்கு எதிராக வேலை நிறுத்தத்தை ஆரம்பித்த பின்னர் போலி காரணங்களின் அடிப்படையில் மத்திய மலையக மாவட்டமான மஸ்கெலியாவில் உள்ள டீசைட் தோட்டத்தில் எட்டு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

*யாழ்ப்பானத்தில் ஒரு பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கு எதிராக யாழ்ப்பான நீதிமன்றத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது பொலிஸ் கண்ணீர் புகை வீசியது. அது தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பு மீதான பரந்த எதிர்ப்பை வெளிப்படுத்தியது.

*அதே மாதம், ஒரு கொழும்பு புறநகர் பகுதியான மீதொடு முல்லையில் குப்பைகள் கொட்டப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த குடியிறுப்பாளர்களுக்கு எதிராக பொலிஸ் இதே நடவடிக்கையை எடுத்தது.

*அக்டோபரில், ஹம்பந்தோட்டைக்கு அருகில் பந்தகிரியவில் துப்புரவான தண்ணீர் கோரி ஆர்ப்பாட்டம் செய்த விவசாயிகள் மீது பொலிஸ் கண்ணீர் புகை அடித்தது. 12 கிராமத்தவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வரவு-செலவுப் பற்றாக்குறையை மொத்த தேசிய உற்பத்தியில் 6.8 வீதத்தில் இருந்து 2018 அளவில் 3.5 வீதமாக குறைக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கையை அரசாங்கம் அமுல்படுத்துகின்ற நிலையில் சமூக அமைதியின்மை மேலும் அதிகரிக்கும். சமூக செலவுகளை வெட்டிக் குறைக்கின்ற அதேவேளே, அது 306 பில்லியன் ரூபா பாதுகாப்புச் செலவுக்கும் மேலும் 60 பில்லியன் ரூபா பொலிசுக்கும் முன்னெப்போதும் இல்லாதளவு ஒதுக்கீடு செய்து அரச ஒடுக்குமுறை இயந்திரத்தை விரிவாக்கியுள்ளது.

குணரட்னத்தின் உடனடி நிபந்தனையற்ற விடுதலையைக் கோரும் அதே வேளை, சோசலிச சமத்துவக் கட்சியானது (சோ...) அவருக்கும் 2012ல் ஜே.வி.பீ.யில் இருந்து பிரிந்த போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சிக்கும் எந்த அரசியல் ஆதரவும் வழங்கவில்லை. ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் கூட்டணி அரசாங்கத்தில் பங்குபற்றியதாலும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராஜபக்ஷவின் புதுப்பிக்கப்பட்ட போருக்கு ஆதரவளித்ததாலும் ஜே.வி.பீ. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பரந்தளில் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளது.

எவ்வாறெனினும், ஜே.வி.பீ.யின் தேசியாத அரசியலுடன் முன்னிலை சோசலிசக் கட்சி எந்தவொரு அடிப்படை வேறுபாடுகளையும் கொண்டிராததோடு தன்னை கொழும்பு அரசியல் ஸ்தாபனத்துடன் இணைத்துக்கொள்ள முயற்சிக்கின்றது. ஜனவரி ஜனாதிபதி தேர்தலில், “இராஜபக்ஷ சர்வாதிகாரத்தைதோற்கடிப்பதற்கேமுன்னுரிமைகொடுக்க வேண்டும் எனப் பிரகடனம் செய்து, சிறிசேனவை ஆட்சிக்குக் கொண்டுவந்த அமெரிக்க-அணுசரனையிலான ஆட்சி மாற்றத்துக்கு முன்னிலை சோசலிசக் கட்சி சுற்றிவளைத்து ஆதரவளித்தது.

முன்னிலை சோசலிசக் கட்சி, அரசாங்கத்தின் சிக்கன கொள்கைகள் மீதான வளர்ச்சிகண்டுவரும் எதிர்ப்பை பாராளுமன்ற முட்டுச் சந்துக்குள் திசைதிருப்பி முதலாளித்துவ ஆட்சிக்கு முண்டு கொடுப்பதற்காக, நவ சம சமாஜக் கட்சி (....) மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சி போன்ற போலி-இடது குழுக்களுடன் சேர்ந்து கிரேக்கத்தில் சிரிசா மாதிரியிலான ஒன்றை அமைக்க முயற்சிக்கின்றது. ..மா.ஒன்றியமும் முன்னிலை சோசலிசக் கட்சியின் வழியில், மாணவர்கள் தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்பி பொதுக் கல்வியை பாதுகாக்க சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் போராடுவதை எதிர்க்கின்றது.

முன்னிலை சோசலிசக் கட்சி முழுமையாக இலங்கை சட்ட முறைமையின் வரம்புக்குள் இருந்தே குணரட்னத்தைப் பாதுகாக்கின்றது. முன்னிலை சோசலிசக் கட்சியின் முன்னணி உறுப்பினர்களில் ஒருவரான புபுது ஜாகொட அறிவித்ததாவது: “பாராளுமன்றத்தில் பிரேரிக்கப்பட்டது போல் திருத்தப்பட வேண்டிய உள்நாட்டுச் சட்டத்திற்கு குணரட்னம் உட்படுத்தப்படுவதையிட்டு எங்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை, அவர் இலங்கைப் பிரஜையாக கருதப்பட வேண்டும்.”

கடந்த நவம்பரில் சோ... எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தது: “சிறிசேன மற்றும் .தே.. [இராஜபக்ஷ] அரசாங்கத்தின் எதேச்சதிகார வழிமுறைகளை கண்டனம் செய்தாலும், தொழிலாள வர்க்கத்தின் மீது சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதில் இராஜபக்ஷவைப் போலவே ஈவிரக்கமற்றவர்களாக இருப்பர்.” ஒரு ஆண்டின் பின்னர் இந்த எச்சரிக்கை முழுமையாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

குணரட்னத்தின் கைதானது தயாராகி வரும் அரச ஒடுக்குமுறை பற்றிய இன்னொரு அறிகுறியாகும். முதலாளித்துவ வர்க்த்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து பிரிந்து, தெற்காசியாவிலும் உலகம் பூராவும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாளர்-விவசாயிகளின் அரசாங்கத்துக்காக போராடுவதற்கு அரசியல் படிப்பினைகளை பெற்றுக்கொள்ளுமாறு சோ... தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. நாம் எமது வேலைத் திட்டத்தை படிக்குமாறும் எதிர்வரவுள்ள போராட்டங்களுக்கு அவசியமான புரட்சிகரத் தலைமைத்துவமாக சோசலிச சமத்துவக் கட்சியையும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (.வை.எஸ்.எஸ்..) அமைப்பையும் கட்டியெழுப்ப அதில் இணைந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுக்கின்றோம்.