சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Strikes and protests begin in Greece against Syriza austerity programme

கிரீஸில் சிரிசாவின் சிக்கன திட்டத்திற்கு எதிராக வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் தொடங்குகின்றன

By Robert Stevens
7 November 2015

Use this version to printSend feedback

கிரீஸில் போலி-இடது சிரிசா அரசாங்கத்தின் சிக்கன திட்டத்திற்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக, கப்பல்துறை தொழிலாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், நிதியியல் உயரடுக்கின் சார்பாக சிரிசா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் திணிக்கப்பட்டு வரும் அவர்களது வேலையிட நிலைமைகள் மற்றும் வாழ்க்கை தரங்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக, கல்வி மற்றும் ஏனைய சேவைகளில் வெட்டுக்களுக்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திங்களன்று தொடங்கி புதனன்று காலை 6 மணிக்கு நிறைவுற்ற கப்பல்துறை தொழிலாளர்களது 48 மணிநேர வேலைநிறுத்தம், கிரீஸ் தீவுகளில் பத்தாயிரக் கணக்கானவர்களை இடம் நகரவிடாத அளவிற்கு, கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. விவசாய பண்டங்களின் நகர்வும் பாதிக்கப்பட்டது.

அந்த மாலுமிகள் Panhellenic Nautical கூட்டமைப்பின் அங்கத்தவர்களாவர். அவர்களது ஓய்வூதிய நிதி, ஓய்வூதிய வெட்டுக்கள் அழிக்கப்படுவதற்காகவும், கப்பலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய விதத்தில் பயணிகள் கப்பல்களின் பணியாளர் குழுக்களில் எண்ணிக்கையை குறைக்கும் திட்டத்திற்கு எதிராகவும், ஓய்வுபெற்ற மற்றும் பணியிலிருக்கின்ற கடல்துறைசார் பணியாளர்களுக்கான மருத்துவ மற்றும் சமூக காப்பீட்டு கொடுப்பனவுகளின் வெட்டுக்களுக்கு எதிராகவும் அவர்கள் போராடி வருகின்றனர்.

அந்த வேலைநிறுத்தத்தைத் தொடர வாக்கெடுப்பு நடத்திய பின்னர், அந்த தொழிற்சங்கம் ஏறத்தாழ உடனடியாக வெள்ளியன்று காலை வழமையான கப்பல்துறை சேவைகளைத் தொடங்குமாறு, எல்லா நடவடிக்கைகளையும் நிறுத்த அழைப்புவிடுத்தது.

செவ்வாயன்று மாலை, ஏதென்ஸ் மெட்ரோ, ISAP ரயில்வே மற்றும் டிராம், ஸ்ட்ரீட்கார் மற்றும் நகர ரெயில் தொழிலாளர்கள் ஒரு மறுசீரமைப்பு திட்டத்தின் பாகமாக அவர்களது சேவைகளை ஒரே சேவை வழங்குனரின் கீழ் ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டதை எதிர்க்க ஒரு அடையாள வேலைநிறுத்தம் நடத்தினர். ஒருங்கிணைப்புகளால் ஏற்படும் வரவு செலவு திட்டக்கணக்கு மற்றும் பணியாளர் வெட்டுக்கள் வெளிப்புற ஒப்பந்ததாரர்களை நியமிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துமென பணியாளர்கள் அஞ்சுகின்றனர்.

திங்களன்று அட்டிகா பகுதியிலிருந்து உயர்நிலை மற்றும் நடுநிலை பள்ளி மாணவர்கள், கல்விசார் வெட்டுக்களுக்கு எதிராக ஏதென்ஸில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நிறைய ஆசிரியர்களை நியமிக்குமாறும், புத்தகங்கள் மற்றும் ஏனைய அத்தியாவசிய ஆதாரவளங்கள் மீதான செலவுகளை அதிகரிக்குமாறும் முறையிட்டு வருகிறார்கள். ஆசிரியர்களின் தொழிற்சங்கமான OLME இன் அங்கத்தவர்கள் மாணவர்களுக்கு ஆதரவாக காலை 11 மணியிலிருந்து மதியம் 2 மணி வரையில் வெளிநடப்பு செய்து, அவர்களது பேரணியில் கலந்து கொண்டார்கள்.

வியாழனன்று, உயர்நிலை பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் வரவு செலவு திட்டக்கணக்கில் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் செய்யப்படும் 20 சதவீத வெட்டுக்களுக்கு எதிராக நாடுதழுவிய போராட்டம் நடத்தினர். அத்துடன் ஏதென்ஸில், இரண்டாவது மிகப்பெரிய நகரமான தெஸ்லலோனிகி இல் மற்றும் கீறேற்றா இன் தலைநகரம் இராக்லியோன் இல் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்பதோடு சேர்ந்து, மாணவர்கள் நிறைய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களை நியமிக்க வேண்டுமென கோருகின்றனர். ஏதென்ஸில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு மாணவர் கூறுகையில், பிரேயுஸ் இல் உள்ள தொழில்நுட்ப கல்வி பயிலக வெட்டுக்கள் பல துறைகளே செயல்படுவதை நிறுத்துவதில் போய் முடிந்துள்ளது என்றார்.

இந்த வார போராட்டங்கள் நவம்பர் 12 இல் திட்டமிடப்பட்டுள்ள ஒரு பொது வேலைநிறுத்தம் வரவிருக்கின்ற நிலையில் நடத்தப்பட்டுள்ளன. அந்த வேலைநிறுத்தம் GSEE (தனியார் துறை) மற்றும் Adedy (பொத்துறை) தொழிற்சங்க கூட்டமைப்புகளால் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

அந்த வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்து, சுமார் 650,000 அங்கத்தவர்களைக் கொண்டுள்ள Adedy தெரிவிக்கையில், “அரசாங்கம் வறுமையைப் பகிர்ந்தளிக்கும் பாத்திரத்தை ஏற்றுள்ளது என்பது தெளிவாகி விட்டது,” என்றது.

உண்மையில், வாழ்க்கைத்தரங்கள் மீது மேற்கொண்டு கடுமையான வெட்டுக்களின் அலையை நடைமுறைப்படுத்துபவராக சிரிசாவால் நடந்து கொள்ள முடிகிறதென்றால், அதற்கு தொழிற்சங்க அமைப்புகள் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டாததற்காக அதற்கு நன்றி கூற வேண்டும். கடந்த வாரங்களில், சிரிசா, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் சேர்ந்து, ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட மொத்தம் 86 பில்லியன் யூரோ மூன்றாண்டுகால கடனிலிருந்து வெறும் 2 பில்லியன் யூரோவிற்கு பிரதியீடாக பெரும் எண்ணிக்கையிலான வெட்டுக்களை நடைமுறைப்படுத்த இறுதி செய்தது.

வெள்ளியன்று அதிகாலை, கிரேக்க நாடாளுமன்றம் நிலுவையிலிருக்கும் பல்வேறு "முன்கூட்டிய நடவடிக்கைகளைத்" திணிக்கும் ஒரு சட்டமசோதாவை நிறைவேற்றியது, அந்த நடவடிக்கைகளை இந்த 2 பில்லியன் யூரோவை ஏதென்ஸ் பெறுவதற்கு முன்னதாக செயலுக்குக் கொண்டு வர வேண்டியிருந்தன. கிரீஸின் மிகப்பெரிய துறைமுகமான பிரேயுஸ் துறைமுகத்தை விற்பதில் உள்ள தடைகளை நீக்குவது, விவசாயிகளுக்கான வரி வரம்புகளை நீக்குவது, ஓய்வூதியங்களைக் கணக்கிடும் ஒரு புதிய முறையைக் கொண்டு வருவது, மற்றும் ஐரோப்பிய ஒன்றிய எரிசக்தி திறப்பாடு விதிமுறைகளுக்கு இணங்க கிரீஸை உறுதிப்படுத்தி வைப்பது ஆகியவையும் அந்த முறைமைகளில் உள்ளடங்கும்.

அந்த சட்டமசோதா 153 க்கு 118 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. சிரிசா பிரதிநிதிகள் மற்றும் அதன் கூட்டணி பங்காளிகள் என்பவர்கள், வலது-சாரி சுதந்திர கிரேக்கர்களின் ஒட்டுமொத்த வாக்குகளும் அதற்கு ஆதரவாக இருந்தன. பழமைவாத புதிய ஜனநாயகம், பாசிசவாத கோல்டன் டௌன், சமூக ஜனநாயக PASOK/DIMAR கூட்டணி மற்றும் கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சியின் (KKE) ஸ்ராலினிஸ்டுகள் எதிர்ப்பைக் காட்டும் ஒரு நாடகம் நடத்தினர்.

நவம்பர் 9 காலக்கெடு நெருங்குவதால், அலெக்சிஸ் சிப்ராஸ் அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தால் கோரப்பட்ட கூடுதல் சட்டதிருத்தங்களை வாரயிறுதியிலும் முடிவு செய்ய வேண்டியிருந்தது. அடமானக் கடன் தொகை செலுத்தாத 320,000 கிரேக்க குடும்பங்களை வெளியேற்ற அனுமதிக்கும் இறுக்கமான அதன் அடமானக் கடன் சட்டங்களும் அதில் உள்ளடங்கும்.

அந்த சட்டமசோதா நிறைவேறியதும் பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டது, “அதன் முதல் முன்மொழிவு பிணையெடுப்பு கண்காணிப்பாளர்களால் மிகவும் மேன்மையோடு நிராகரிக்கப்பட்ட பின்னரும், நிதி அமைச்சகம் முதல்முறையாக வீடு வாங்கியவர்களை வீட்டைவிட்டு வெளியேற்றுவதன் மீது ஒரு சமரசத்தை எட்டக் கோருகிறது, அவ்வாறான நடவடிக்கை அடமானக் கடன் வைத்திருக்கும் ஆயிரக் கணக்கானவர்களைப் பாதிக்கும்.”

அந்த பத்திரிகை இதையும் சேர்த்துக் கொண்டது, “வாரயிறுதியில் நாடாளுமன்றத்தின் ஒரு அவசர கூட்டத்தில் அந்த கூடுதல் முறைமைகளை சட்டமன்ற அங்கத்தவர்கள் ஒப்புக்கொண்டாலும் கூட, அரசாங்கத்திற்கு அங்கே நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. விவசாயிகளுக்கான வரி உயர்வு மற்றும் கூடுதல் ஓய்வூதிய வெட்டுக்கள் அடுத்து சீர்திருத்த பொதியில் உள்ளன, அவை சிரிசா அரசாங்கம் கடன் மீட்சி மீதான பேச்சுவார்த்தையை, அதன் 2016க்கான கொள்கை முன்னுரிமையை பேசத் தொடங்குவதற்கு முன்னதாக இந்த மாத இறுதிக்குள் நிறைவேற்றி ஆக வேண்டும்.”

ஜேர்மனியின் நிதி அமைச்சகத்தின் சார்பாக பேசுகையில், மார்ட்டின் ஜேகர் கூறினார்: “ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகிய முக்கூட்டு, அடுத்து 2 பில்லியன் [யூரோ] செலுத்துவதற்கு அவசியமான நிலைமைகளைக் கிரேக்க தரப்பில் எந்தளவிற்கு பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறது என்பதை இத்தருணத்தில் ஆராய்ந்து வருகிறது. அங்கே பூர்த்தி செய்யப்பட வேண்டிய இடைவெளிகள் இன்னும் நிறைய உள்ளன.”

கிரீஸிற்கு எந்த விட்டுக்கொடுப்பும் கிடைக்காது என்றவர் எச்சரித்தார்: “ஜூலையில், கிரேக்க அரசாங்கம் அதன் பங்காளிகளுடன் ஒரு குறிப்பிட்ட உடன்படிக்கை செய்திருந்தது.… எங்கள் பாதையை மாற்றுவதற்கு முற்றிலும் அங்கே எந்த காரணமும் இல்லை.”

எதுவுமே குறுக்கே வர அனுமதிக்காமல் சிப்ராஸ் சிக்கனத் திட்டத்தை அதிகரிக்க வேண்டுமென நிதியியல் உயரடுக்கு கோரி வருகின்றன.

இந்த ஆண்டு, போரால் பாதிக்கப்பட்ட மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆபிரிக்காவிலிருந்து நிராதரவான மற்றும் வறுமை-பீடித்த நூறாயிரக்கணக்கான அகதிகள் கிரீஸ் தீவுகளின் கடற்கரைகளில் வந்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரங்கள்படி, 218,394 பேர் கடந்த மாதம் அபாயகரமாக மத்தியத் தரைக்கடலைக் கடந்து வந்துள்ளனர், அனைவரும் இல்லையென்றாலும் கிட்டத்தட்ட 8,000 பேர் கிரீஸில் தரையிறங்கி உள்ளனர். இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 609,000 அகதிகள் கிரீஸை வந்தடைந்துள்ளனர். 350,000த்திற்கும் அதிகமானவர்கள் லெஸ்பொஸ் தீவை வந்தடைந்தனர், அதன் மொத்த மக்கள்தொகையே வெறும் 86,000 ஆகும்.

எவ்வாறிருப்பினும் ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவிகளுக்கான சிப்ராஸ் அரசாங்கத்தின் முறையீடுகள் தோள்களைக் குலுக்கி நிராகரிக்கப்பட்டுள்ளன.

வியாழனன்று ஊடகங்களில் பேசுகையில், ஐரோப்பிய ஆணைக்குழு பியர் மொஸ்கோவிச்சி கூறினார், “ஆணைக்குழுவிடம் ஒரேயொரு அளவுகோல் தான் உள்ளதுஅதாவது வளர்ச்சி மற்றும் ஸ்திரப்பாட்டு உடன்படிக்கை, அதற்காக சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆக வேண்டும்.”

கிரீஸ் மற்றும் ஏனைய நாடுகளுக்குக் கொடுக்கப்பட இருக்கிற உதவிகளில் அகதிகள் நெருக்கடிக்கான சுமையைத் தாங்குவதற்கான உதவிகளும் இருக்குமான என்று கேட்கப்பட்ட போது, மொஸ்கோவிச்சி பின்வருமாறு பதிலளித்தார், “கிரீஸைப் பொறுத்த வரையில், புரிந்துணர்வு உடன்படிக்கை மற்றும் [சிக்கனத்] திட்டத்தை ஏற்பது என்ற வேறொரு அளவுகோலை நாங்கள் கொண்டிருக்கிறோம். இந்த சீர்திருத்தங்களைத் தளர்த்த எதுவும் எங்களை அனுமதிக்காது.”

தொழிலாளர்களும் இளைஞர்களும் சிரிசா அரசாங்கத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும், அது முந்தைய புதிய ஜனநாயகம் மற்றும் பாசொக் அரசாங்கத்தால் திணிக்கப்பட்டதை விட ஆழ்ந்த வெட்டுக்களைப் பலவந்தமாக திணிக்க அது தீர்மானகரமாக இருப்பதை எடுத்துக்காட்டி உள்ளது.

தொழிற்சங்கங்களின் மீது நம்பிக்கை வைக்க முடியாது, அவை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை ஒரு விரோத சக்தியாக பார்க்கின்றன. அவை அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்களால் திணிக்கப்பட்ட சிக்கனத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பதில் கடந்த ஐந்தாண்டுகளைச் செலவிட்டுள்ளன. தொழிற்சங்க அலுவலக நிர்வாகமே பிரதானமாக சிரிசா, பாசொக், KKE மற்றும் எண்ணற்ற போலி-இடது கட்சிகளின் ஆதரவாளர்களால் அமைந்துள்ளது. அவை அழைப்புவிடுத்துள்ள தொடர்ச்சியான ஒருநாள் போராட்ட வேலைநிறுத்தங்கள் ஒருபோதும் தொழிலாள வர்க்கத்தின் கூட்டு பலத்தை ஒன்றுதிரட்டுவதற்காக அல்ல, மாறாக வெட்டுக்கள் திணிக்கப்படுகையில் எழும் கோபத்தைத் தணிப்பதற்கு வழிவகையாக அழைப்புவிடுத்துள்ளன.

2010 இல் இருந்து கிரீஸில் Adedy மற்றும் GSEE 30 க்கும் அதிகமான பொது வேலைநிறுத்தங்களுக்கு அழைப்புவிடுத்திருந்த போதினும், அடுத்த வாரத்தின் நிறுத்தம் ஏறத்தாழ ஓராண்டில் அவர்கள் அழைப்புவிடுத்துள்ள முதல் பொது வேலைநிறுத்தமாகும்: அவர்கள் சிரிசா முக்கூட்டுடன் அதன் சிக்கன உடன்படிக்கையை முடிவு செய்த போது ஒரு சுண்டுவிரலைக் கூட தூக்கவில்லை.