சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US defense secretary threatens Russia and China

அமெரிக்க பாதுகாப்பு செயலர் ரஷ்யாவையும் சீனாவையும் அச்சுறுத்துகிறார்

By Patrick Martin
9 November 2015

Use this version to printSend feedback

அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் அஷ்டன் கார்ட்டர் தெற்கு கலிபோர்னியாவின் ரீகன் நூலக கலந்துரையாடல் சந்திப்பு ஒன்றில் சனிக்கிழமையன்று உரையாற்றுகையில் எதிர்கால போர்களைக் குறித்த ஒரு கூர்மையான எச்சரிக்கையை வழங்கினார். பெண்டகன் தலைவரின் அந்த பொறுப்பற்ற மற்றும் ஆத்திரமூட்டும் உரையின் குணாம்சம், உலகின் இராண்டாவது மிகப்பெரிய அணுஆயுத கிடங்கான ரஷ்யா மற்றும் மூன்றாவதாக உள்ள சீனாவுக்கு எதிராக அவரது போர்முரசு கொட்டும் நோக்கங்களை எடுத்துக்காட்டுகின்றது.

எதிர்வரவிருக்கும் ஆண்டுகளில் அமெரிக்க ஏகாதிபத்திய மூலோபாயவாதிகள் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்களைக் கையாள்வதற்கு இராணுவ-உளவுத்துறை எந்திரத்தை மறுசீரமைப்பதே அக்கலந்துரையாடல் சந்திப்பின் கருப்பொருளாக இருந்தது. கார்ட்டர் குறிப்பிட்டார், “கிளர்ச்சி-எதிர்ப்பு (counter-insurgency) மற்றும் பயங்கரவாத-எதிர்ப்பு (counter-terrorism) இன் 14 ஆண்டுகளுக்கு பின்னர், இவ்விரு ஆற்றல்களையும் நாம் தொடர்ந்து பேண விரும்புகிறோம் என்பதோடு, நமது எதிர்காலத்தை தீர்மானிக்கும் பாதுகாப்பு சவால்களுக்கு விடையிறுக்க, நாம் ஒரு மூலோபாய மாற்றத்தின் மத்தியில் உள்ளோம்.”

ஆப்கானிஸ்தானிலும் மற்றும் ISISக்கு (ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு) எதிரான அமெரிக்காவின் நீண்டகால போர்களைக் குறித்து சுருக்கமாக மட்டுமே குறிப்பிட்ட கார்ட்டர், "இந்த பகல்பொழுதில் எனது கருத்துக்களை எதிர்காலத்திற்கான வேறொரு புதுமாதிரியின் மீது ஒருங்குவிக்க" விரும்புவதாகவும், “அது என்னவென்றால் இன்றைய கொந்தளிப்புக்கு ஒரே மூலக்காரணமாக உள்ள ரஷ்யாவிற்கும், மற்றும் ஆசிய-பசிபிக்கில் ஒரு மாற்றத்தை உந்தி வருகின்ற சீன எழுச்சிக்கும், நாம் எவ்வாறு பிரதிபலிப்பைக் காட்டி வருகிறோம் என்பதைக் குறித்ததாகும்,” என்றார்.

ரீகன் நிர்வாகத்தின் (1981-1989) போர்வெறியூட்டலுக்கு கார்ட்டர் புகழரை வழங்கினார். அந்நிர்வாகத்தின் பாதுகாப்பு செயலர் காஸ்பர் வைன்பேர்கருக்கு (Caspar Weinberger) உதவியாளராக அவர் அவரது முதல் பெண்டகன் வேலையில் சேவையாற்றி வந்தார். சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைவதற்கு பங்களிப்பு செய்த இராணுவ ஆயத்தப்படுத்தலுக்காக, குறிப்பாக "ஆப்கானிஸ்தானில் முஹாஜிதீன்களுக்கான அமெரிக்காவின் ஆதரவுக்காக" ரீகனைப் பாராட்டினார். ஆனால் அந்த ஆதரவுதான் அல் கொய்தாவின் எழுச்சிக்கு காரணமானது குறித்து கார்ட்டர் இராஜாங்கரீதியில் வாய்திறக்கவில்லை.

அந்த பாதுகாப்பு செயலர் குறிப்பிடுகையில், இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய ஒட்டுமொத்த காலமெங்கிலும் அடுத்தடுத்து வந்த அமெரிக்க நிர்வாகங்கள் அமைத்த சர்வதேச ஒழுங்குமுறையின் அடித்தளங்களுக்கு, ரஷ்யா மற்றும் சீனா இரண்டுமே, வெவ்வேறு வழிகளில் சவால்விடுத்து வந்ததாக தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில், “பிரச்சினைகளுக்கான சமாதானமான தீர்மானங்கள், அச்சுறுத்தலில் இருந்து சுதந்திரம், நாடுகளின் இறையாண்மையை மதிப்பது, சுதந்திர கப்பல் போக்குவரத்து மற்றும் விமானங்கள் பறப்பதற்கான சுதந்திரம் உட்பட அந்த ஒழுங்குமுறையின் அடித்தளத்திற்குச் சேவை செய்த கோட்பாடுகள், வெறுமனே கருதுபொருள்கள் அல்ல அல்லது அவை எந்தவொரு நாட்டுக்கு எதிரான ஏறுக்குமாறான கருத்துக்களைக் கொண்ட விடயமோ அல்ல,” என்றார்.

உண்மையில் சோவியத் ஒன்றியத்தின் பொறிவிற்குப் பின்னரில் இருந்து, கால் நூற்றாண்டுக்கும் அதிகமாக, ஒரு போர் மாற்றி போரில் அமெரிக்காவே அந்த கோட்பாடுகளைத் திட்டமிட்டு மீறியுள்ளது. “கோட்பாடுகளுக்கு" மதிப்பளிப்பது அல்ல மாறாக சோவியத் ஒன்றியத்தின் இருப்பே, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சூறையாடல்களை கட்டுப்படுத்தி வைத்திருந்தது.

1991இல் இருந்து, வாஷிங்டன் அதிகரித்தளவில் கட்டுப்பாடின்றியும் மற்றும் பொறுப்பற்ற பாணியில் இராணுவ பலத்தைப் பிரயோகிக்க அதற்கு உரிமை கிடைத்துவிட்டதாக உணர்கிறது. அதன் மூலோபாயவாதிகள் உலக வரலாற்றில் "ஒருதுருவமுனைப்பட்ட தருணம்" என்று பகிரங்கமாக எழுதினர். போர்களும் ஏனைய இராணுவ தலையீடுகளும் பொஸ்னியா, கொசோவோ, ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சோமாலியா, ஹைட்டி, யேமன் மற்றும் இப்போது சிரியா என தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அத்துடன் ரஷ்யாவின் மேற்கு எல்லைகளை ஒட்டியும் மற்றும் சீனாவின் கடல்பிரதேச எல்லைகளை ஒட்டியும் அமெரிக்க படைகளின் நீண்டகால ஆயத்தப்படுத்தலும் சேர்ந்துள்ளன.

கார்ட்டர் அவரது உரையின் முடிவில் குறிப்பிடுகையில், “வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என ஒவ்வொரு களத்திலும், 450,000க்கும் அதிகமான ஆண்கள் மற்றும் பெண்களை வெளிநாட்டு சேவையில்" அனுப்புவதைக் குறித்து குறிப்பிட்டார். அந்த எண்ணிக்கை, உலகின் ஏனைய எல்லா நாடுகளும் அவற்றின் சொந்த எல்லைகளுக்கு வெளியே நிறுத்தியுள்ள மொத்த எண்ணிக்கையை விட அதிகமாகும். அந்த எண்ணிக்கையே கூட, 21ஆம் நூற்றாண்டு உலக அரசியலின் அடிப்படை யதார்த்தத்தை எடுத்துக்காட்டுகிறது: அதாவது, அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் மேலாதிக்கத்திற்கு எதிரான எந்தவொரு சவாலுக்கு எதிராகவும் எந்தவொரு நாட்டிலும் தலையீடு செய்ய, அதன் விருப்பத்திற்கேற்ப குண்டுவீச மற்றும் கொலை செய்ய உரிமை இருப்பதாக, தன்னைத்தானே உலகின் காவல்காரனாக கருதுகிறது.

கார்ட்டர் தெரிவித்ததன்படி, “ரஷ்யா அத்தகைய கோட்பாடுகளையும் மற்றும் சர்வதேச சமூகத்தையும் ஏளனப்படுத்துவதன் மூலமாக அவற்றை சீர்கெடுக்க நோக்கம் கொண்டிருப்பதாக தெரிகிறது. இதற்கிடையே, சீனா ஒரு எழுச்சியடையும் சக்தியாகி, அதன் நோக்கங்கள் மற்றும் தகைமைகள் மீதான அதன் ஆர்வம் அதிகரித்து வருகிறது.”

உக்ரேன் மற்றும் ஜோர்ஜியாவில் இறையாண்மையை மீறுவதற்காக" மற்றும் சிரியாவில் அதன் சமீபத்திய தலையீட்டுக்காக ரஷ்யாவைக் குற்றஞ்சாட்டிய பின்னர்அப்படியிருந்தாலும் கூட, இந்த நடவடிக்கைகள் அமெரிக்க படையெடுப்பு மற்றும் ஈராக் பேரழிவுகளுடன் ஒப்பிடுகையில் திவாலானதாகவும், மிக மிகச் சிறியளவிலும் உள்ளன என்ற நிலையில்கார்ட்டர் எதை "மாஸ்கோவின் அணுஆயுத போர்முரசு" என்று குறிப்பிட்டாரோ அதைக் குறித்த அபாயத்தை எழுப்பினார். அதைக் குறித்து அவர் தெரிவிக்கையில், “மூலோபாய ஸ்திரப்பாட்டிற்கு ரஷ்ய தலைவர்களின் கடமைப்பாடு மீதும், அணுஆயுதங்களின் பிரயோகத்திற்கு எதிரான விதிமுறைகளை அவர்கள் மதிப்பதன் மீதும், மற்றும் அணுஆயுதங்களைக் காட்டி பயமுறுத்துவதன் மீது அணுஆயுத-கால தலைவர்கள் காட்டிய ஆழ்ந்த எச்சரிக்கைகளை அவர்கள் மதிக்கிறார்களா என்பதன் மீதும் கேள்விகள் எழுவதாக" தெரிவித்தார்.

இப்போது 300 பில்லியன் டாலருக்கும் அதிகமானதென்று மதிப்பிடப்படுகின்ற ஒபாமா நிர்வாகத்தின் ஒரு திட்டத்தில் அமெரிக்கா அதன் சொந்த அணுஆயுதங்களைப் பரந்தளவில், உலகின் மிகப்பெரியது என்பதையும் கடந்து, விரிவாக்குவதை நியாயப்படுத்துவதற்காக இந்த நடப்பில் இல்லாத அபாயத்தைக் கார்ட்டர் பயன்படுத்தினார்.

பின்னர் அவர் ரஷ்யாவிற்கு எதிராக பயன்படுத்துவதற்கான புதிய ஆயுதங்களின் ஆற்றல்களைக் குறித்து உத்வேகத்துடன் சுட்டிக்காட்டினார். “புதிய ஆளில்லா உபகரண அமைப்பு, ஒரு புதிய நீண்ட-தூர குண்டுவீசி, மற்றும் மின்காந்த நீண்டதுப்பாக்கிகள் (railgun), லேசர்கள் போன்ற தொழில்நுட்பங்களில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் உண்மையிலேயே இங்கே என்னாலேயே வர்ணிக்க முடியாத ஒருசில ஆச்சரியமூட்டும் கருவிகள் உட்பட மின்னணு போர்முறை, விண்வெளி மற்றும் இணையவழி போர்முறைக்கான புதிய அமைப்புகள்" ஆகியவையும் அவற்றில் உள்ளடங்கும்.

பாதுகாப்புத்துறை செயலர் நேட்டோ சாசனத்தின் ஐந்தாவது ஷரத்திற்கு அமெரிக்கா பொறுப்பேற்றிருப்பதாக அழுத்தந்திருத்தமாக வலியுறுத்தினார். அந்த ஷரத்து, ரஷ்யாவுக்கும் மற்றும் பால்டிக் அரசுகள், லிதுவேனியா, லாட்வியா மற்றும் எஸ்தோனியா ஆகியவற்றில் ஒன்றுக்கும் இடையே ஏற்படும் எந்தவொரு மோதலிலும் நேட்டோ முழு போரில் இறங்க கோருகிறது. அந்த அரசுகளில், பெரிதும் ரஷ்ய மொழி பேசும் சிறுபான்மையினரைக் கொண்ட ரஷ்ய-எதிர்ப்பு வெறிபிடித்த தன்னலக்குழுக்கள் ஆட்சி செலுத்தி வருகின்றன. அமெரிக்காவில்அல்லது அவ்விடயத்தில் பிரிட்டன் அல்லது ஜேர்மனியில்சிலர் எஸ்தோனியா உடனான ஒரு எல்லை மோதல் சம்பவத்தில் அணுஆயுதமேந்திய ரஷ்யா உடன் போருக்கு அவர்கள் அரசாங்கங்கள் பொறுப்பேற்றிருப்பதாக உணர்கிறார்கள்.

கார்ட்டர் சமீபத்திய நேட்டோ பயிற்சிகளையும் புகழ்ந்துரைத்தார். கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நேட்டோ நாடுகளில் ஒன்றின் மீது ஒரு ரஷ்ய படையெடுப்பைக் கற்பனையாக உருவாக்கி நடத்தப்பட்ட Trident Juncture பயிற்சியும் அந்த புகழுரையில் உள்ளடங்கும், அப்பயிற்சியில் 4,000 அமெரிக்க துருப்புகள் பங்குபற்றின. அவர் குறிப்பிடுகையில், “கிழக்கு உக்ரேனில் ரஷ்ய ஆதரவிலான கிளர்ச்சியாளர்களை அந்நாடு எதிர்கொண்டிருப்பதால், உக்ரேன் இராணுவத்திற்கு உதவியாக [நாங்கள்] தளவாடங்கள் மற்றும் பயிற்சிகளை வழங்கி வருகிறோம்.” இதில் உக்ரேனிய இராணுவத்திற்குள் இப்போது உள்ளடக்கப்பட்டுள்ள நவ-நாஜி ஆயுத குழுக்களின் சக்திகளுக்குப் பயிற்சியளிப்பதும் உள்ளடங்குகிறது.

சீனா மீது, கார்ட்டர் பகிரங்கமாக மோதல்குறைந்த போக்கைக் காட்டினார். 2016 இல் பெய்ஜிங்கிற்கு விஜயம் செய்ய சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இன் அழைப்பை அவர் ஏற்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். எவ்வாறிருந்த போதினும், USS தியோடர் ரூஸ்வெல்ட் போர்க்கப்பலில் அவர் தோன்றியமை மிகவும் விளம்பரப்பட்டிருந்த நிலையில் நேரடியாக அவர் அங்கிருந்து வந்திருந்ததால், இராணுவ வனப்புரைகள் தேவைப்படவில்லை. அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பல்களில் ஒன்றான அது, மத்தியக் கிழக்கிலிருந்து பசிப்பிக்கில், ஒரு பாரிய இராணுவ ஆயுத்தப்படுத்தலுடன் சீனாவை எதிர்கொள்ள நோக்கங்கொண்ட ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவை நோக்கிய முன்னிலையின்" பாகமாக மீள்நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது.

அமெரிக்க போர்க்கப்பல் USS லாசென் தென் சீனக் கடலில் போர்க்கப்பல் நடவடிக்கை படையிலிருந்து வெகுதூரமில்லாமல் ஒரு தீவுக்கூட்டத்தைச் சுற்றி சீனக் கடலில் ஆத்திரமூட்டும் வகையில் பயணித்த பின்னர், விமானந்தாங்கி போர்க்கப்பலுக்கான இந்த விஜயம் நடந்திருந்தது. அத்தீவுக் கூட்டங்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டதோ அல்லது செயற்கையாக விரிவாக்கப்பட்டதோ இல்லை என்ற அடித்தளத்தில், அக்கடலில் சீனா அதன் தீவுக்கூட்டங்களைச் சுற்றி அறிவித்துள்ள பகுதிக்குள் 12 மைல் எல்லைக்குள் அமெரிக்கா வேண்டுமென்றே சவால்விடுத்தது.

சீனாவின் பிராந்திய உரிமைகோரல்களுக்கு விட்டுக்கொடுக்கக்கூடிய, சொல்பொருளிலில் கூறப்படும் "தீங்கின்றி கடந்து செல்லுதல்" அறியப்படும் ஒன்றில் அமெரிக்க கடற்படை ஈடுபட்டுள்ளதா அல்லது, அந்த கடல்பகுதி சீனாவினுடையது அல்ல சர்வதேச கடலைச் சார்ந்தது என்று வலியுறுத்தும் "கடல்போக்குவரத்து சுதந்திரத்தை நடைமுறைப்படுத்துவற்காக" தலையிடுகின்றதா என்ற ஊடக செய்திகளில் உள்ள கேள்விகளுக்கு விடையிறுக்கையில், கார்ட்டர் இரண்டாவதே காரணம் என்பதை தெளிவுபடுத்தினார்.

பசிபிக்கில் உள்ள அமெரிக்க இராணுவ உடைமைகளை மறுநிலைநிறுத்தம் செய்வதற்கும், அமெரிக்கா மற்றும் ஜப்பானால் மேலாதிக்கம் செலுத்தப்படும் சீனா-எதிர்ப்பு வர்த்தக அணியான பசிபிக் நாடுகளுக்கு இடையிலான கூட்டு-பங்காண்மை (Trans-Pacific Partnership -TPP) ஸ்தாபிக்கப்பட்டதற்கும் மற்றும் அப்பிராந்தியத்தில் அமெரிக்க கூட்டணிகளின் ஆயத்தப்படுத்தலுக்கும் இடையிலான தொடர்பை அவர் வலியுறுத்தினார். “நாங்கள் ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்கும், தாய்வானுக்கான எங்களது முறையான கடப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்கும், கூட்டாளிகளைப் பாதுகாப்பதற்கும், அப்பிராந்தியத்தில் பாரம்பரியரீதியில் நாங்கள் கொண்டுள்ள ஒரு பரந்தளவிலான திடீர் செலவுகளுக்கு தயாரிப்பு செய்வதற்காகவும், எங்களின் செயல்பாட்டுத் திட்டங்களையும் மற்றும் அணுகுமுறைகளையும் மாற்றி வருகிறோம்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

கார்ட்டர் உரையின் கட்டுக்கடங்கா இராணுவவாதம் எந்தளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறதோ, அதன் இருகட்சிசார்ந்த தன்மையும் அதேயளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறது. கார்ட்டர் அவரது வாழ்நாள் முழுவதும் ஜனநாயக கட்சியாளராக இருக்கிறார், ரஷ்யா மற்றும் சீனா குறித்த அவரது அச்சுறுத்தல்கள் அமெரிக்க ஆளும் உயரடுக்கின் தாராளவாத கன்னைகளின் முழு ஆதரவைக் கொண்டுள்ளன. அவரது கருத்துக்கள் முன்னேற்பாடற்றதோ அல்லது திடீரென தயாரிக்கப்பட்ட கருத்துக்களோ அல்ல, மாறாக லாஸ் ஏஞ்சல்ஸிற்கு வெளியே சிமி வேல்லியில் ஜனாதிபதி நூலகத்தைச் செயல்படுத்தி வரும் ரீகன் அமைப்பால் நடத்தப்படும் "எதிர்கால படை" என்ற ஒரு கலந்துரையாடலான திட்டமிட்ட இருகட்சிசார் நிகழ்ச்சிக்காக கவனமாக தயாரிக்கப்பட்டதாகும்.

கார்ட்டர் மற்றும் அவருக்கு கீழ் இருக்கும் ரோபர்ட் வோர்க் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு செயலர் ஜென் ஜோன்சன் ஆகியோர் ஒபாமா நிர்வாகத்தைப் பிரதிநிதித்துவம் செய்தனர். செனட்டின் ஆயுதச் சேவைகள் குழுவின் தலைவர் ஜோன் மெக்கெயின் மற்றும் பிரதிநிதிகள் சபை ஆயுதப்படை குழுவின் தலைவர் மேக் தோர்ன்பெர்ரி காங்கிரஸில் உள்ள குடியரசு கட்சியினருக்காகப் பிரதிநிதித்துவம் செய்தனர்.

வெள்ளை மாளிகையில் எந்த கட்சி இடம் பெறுகிறது என்பதைச் சார்ந்தில்லாமல், எப்போதும் தாக்குதல்களுக்கு அழைப்புவிடுக்கின்ற நிரந்தரமாகவுள்ள பாதுகாப்பு அமைப்பில், ஐந்து அங்கத்தவர்களில் முப்படை தலைமை தளபதிகளில் மூவருக்குக் குறைவின்றி பிரதிநிதித்துவப்படுத்திகின்றனர்.