சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

US escalates air and ground operations in Iraq and Syria

ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா விமானப்படை மற்றும் தரைப்படை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துகிறது

By Thomas Gaist
11 November 2015

Use this version to printSend feedback

வரவிருக்கும் ஆண்டுகளில் நடத்துவதற்கான இராணுவ நடவடிக்கைகளின் பாகமாக அமெரிக்கா சிரியாவிற்குள் புதிய தரைப்படைகளை அனுப்புவதற்குத் தயாரிப்பு செய்ய வேண்டுமென அமெரிக்க விமானப்படை செயலர் Deborah Lee James துபாய் விமான சாகச நிகழ்ச்சியில் செவ்வாயன்று தெரிவித்தார்.

“விமானப்படை பலம் அதிமுக்கியமானதாகும்,” ஜேம்ஸ் தெரிவித்தார். “அதைக் கொண்டு நிறைய செய்ய முடியும், ஆனால் எல்லாவற்றையும் அதைக் கொண்டு செய்துவிட முடியாது. அதைக் கொண்டு இறுதியாக பிராந்தியத்தை ஆக்கிரமிக்க முடியாது, மிகவும் முக்கியமாக அதைக் கொண்டு பிராந்தியத்தை ஆட்சி செலுத்த முடியாது,” என்றார்.

ஜேம்ஸ் தொடர்ந்து தெரிவித்தார்: “இந்த இடத்தில் தான் நமக்கு தரைப்படை அவசியப்படுகிறது. நமக்கு இந்நடவடிக்கையில் தரைப்படைகளும் அவசியமாகின்றன.”

சிரியா மற்றும் ஈராக்கில் அமெரிக்க போர் வெற்றி பெறுவதற்கு, "பல ஆண்டுகள்" ஆகலாம் என்று அப்பெண்மணி தெரிவித்தார்.

ஜேம்ஸ் இன் கருத்துக்கள் ஈராக் மற்றும் சிரியாவில் வாஷிங்டனின் போருக்கு அடியிலுள்ள நவ-காலனித்துவ நிகழ்ச்சிநிரலை சுட்டிக்காட்டுகிறது. அப்போர் பொது மக்களின் முன்னால் ISIS பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு போராக சித்தரிக்கப்படுகிறது. பயங்கரவாத எதிர்ப்பு என்ற மூடிமறைப்பின் கீழ், அமெரிக்க ஏகாதிபத்தியம் அப்பிராந்தியத்தில் ஈரானிய மற்றும், அனைத்திற்கும் மேலாக, ரஷ்ய செல்வாக்கை வேரூடன் களைந்தெறியவும் மற்றும் அதன் சொந்த மேலாதிக்க இடத்தை உறுதிப்படுத்தவும் வன்முறையானரீதியில் மத்திய கிழக்கை மறுகட்டமைப்பு செய்ய முயன்று வருகிறது.

சிரியாவில் அமெரிக்காவின் பிரதான நோக்கம், அது 2011 இல் ஓர் உள்நாட்டுப் போரைத் தூண்டி விட்டு அதைத் தொடங்கியதிலிருந்து எப்போதும் என்னவாக இருக்கிறதோ அதே நோக்கம் தான் நீடிக்கிறதுஅதாவது ரஷ்ய-ஆதரவிலான மற்றும் ஈரானிய-ஆதரவிலான ஜனாதிபதி பஷர் அல்-அசாத் ஐ நீக்கிவிட்டு, அமெரிக்க கைப்பாவையைக் கொண்டு பிரதியீடு செய்வது.

ஜேம்ஸின் கருத்துக்களே சுட்டிக்காட்டுவதைப் போல, அதன் நோக்கங்களை எட்டுவதற்காக அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளைக் கொண்டு சிரியா மற்றும் ஈராக்கை தூண்டாடி, வரவிருக்கும் ஆண்டுகளில், இன மற்றும் மத போராளிகளின் ஆதரவுடன் விரல்விட்டு எண்ணக்கூடிய எடுபிடிகள் ஆட்சி செலுத்தும் சிறிய அரசுகளாக அவற்றைச் சுருக்குவதை மேற்பார்வையிடுவதற்கு அது தயாரிப்பு செய்து வருகிறது.

சிரியா மற்றும் ஈராக்கில் போரின் ஒரு பொதுவான தீவிரப்படுத்தலின் பாகமாக புதிய அமெரிக்க இராணுவ நகர்வுகளுக்குச் சமிக்ஞை காட்டும் வகையில், சமீபத்திய நாட்களில் உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து வந்த கருத்துக்களில் இந்த விமானப்படை செயலரின் கருத்துக்கள் சமீபத்திய ஒன்று மட்டுமே ஆகும்.

சனியன்று, கலிபோர்னியாவின் சிமி வேல்லியில் ரீகன் தேசிய பாதுகாப்பு கலந்துரையாடல் கூட்டத்தின் அவரது முக்கிய உரையில் அமெரிக்க பாதுகாப்பு செயலர் அஷ்டன் கார்ட்டர், அவ்விரு நாடுகளிலும் தரைப்படை நடவடிக்கைகளைத் தொடங்க அமெரிக்கா தயாரிப்பு செய்து வருவதை குறித்த சமீபத்திய ஒப்புதல்களை மீண்டும் அழுத்தந்திருத்தமாய் வலியுறுத்தினார். அவர் அந்த கலந்துரையாடல் சந்திப்பில் கூறுகையில், “[ஈராக் மற்றும் சிரியாவில்] நாங்கள் நிறைய செய்யவிருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். நாம் விமானத் தாக்குதல்களையும் விட அதிகமானதை, மிக அதிகமானதைச் செய்ய வேண்டியுள்ளது,” என்றார்.

புதிய அமெரிக்க தரைப்படை நடவடிக்கைகளுக்கான தயாரிப்புகள் சிரியா மீதான அமெரிக்க வான்வழி போரின் தீவிரப்பாட்டுடன் சேர்ந்துள்ளது. பாதுகாப்புத்துறை தகவல்களின்படி, சிரியா மீதான அமெரிக்க வான்வழி தாக்குதல்களின் விகிதம் நவம்பர் முதல் வாரத்தின் போது அண்மித்தளவில் இரண்டு மடங்காகி இருந்தது.

கார்ட்டர் தெளிவுபடுத்தியதைப் போல, அதிகரிக்கப்பட்ட அமெரிக்க நடவடிக்கைகள் சிரியாவில் ரஷ்ய இராணுவ தலையீட்டுக்கு பிரதிபலிப்பாகும். கிழக்கு ஐரோப்பாவில் குற்றகரமான ரஷ்ய ஆக்கிரமிப்பு என்பதைக் குறிக்கும் வகையில் “கடந்த ஆண்டில் ரஷ்யாவினது தவறான திருப்பம்" என்று கண்டித்ததற்குப் பின்னர் உடனடியாக, கார்ட்டர் அறிவிக்கையில், “[ரஷ்ய ஜனாதிபதி] புட்டின் சிரியாவில் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை யோசிக்கவே இல்லை" என்றார். “ஏற்கனவே அபாயகரமாக எரிந்து கொண்டிருக்கும் தீயில் எண்ணெய் ஊற்றுவதாக" ரஷ்யா மீது அவர் குற்றஞ்சாட்டினார்.

ABC சேனலின் "இந்த வாரம்" நிகழ்ச்சியில் ஞாயிறன்று தோன்றிய கார்ட்டர், அமெரிக்கா புதிய தரைப்படை நடவடிக்கைகளுக்கு "முற்றிலுமாக" பொறுப்பேற்றிருக்கிறது என்பதை உறுதிப்படுத்தினார். வார்த்தையளவில் "ஆலோசகர்களை" அனுப்பியிருப்பதாக கூறினாலும், அமெரிக்க தரைப்படை துருப்புகள் "தங்களைத்தாங்களே சண்டையில் காணும்,” என்றார்.

கலிபோர்னியாவில் கார்ட்டர் உரைக்கு ஒருநாள் முன்னதாக, அமெரிக்கா துருக்கிய-சிரிய எல்லையில் போர்விமான சண்டைக்கான F-15C போர்விமானங்களை அனுப்ப தொடங்கி இருந்ததை செய்திகள் உறுதிப்படுத்தின. F-15 போர்விமானங்கள் வானிலிருந்து வானில் சண்டையிட வடிவமைக்கப்பட்டவையாகும். அமெரிக்காவின் சிரியா, ஈராக் அல்லது ஆப்கானிஸ்தானிய போர் பகுதிகளில் இதற்கு முன்னர் அவற்றை அது ஒருபோதும் அனுப்பியதில்லை. தற்போதைய சூழல்களின் கீழ், அவை வந்தடைந்திருப்பது தெளிவாக மாஸ்கோவிற்கு எதிரான ஓர் அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. மாஸ்கோவின் MiG போர்விமானங்கள் F-15 ஐ எதிர்கொள்ள வடிவமைக்கப்பட்டவையாகும்.

துருக்கியின் Incirlik இராணுவ தளத்தில் இப்போது நிலைநிறுத்தப்பட்டுள்ள F-15C, வரவிருக்கும் நாட்களில் கூடுதலாக F-15E விமானங்களின் ஒரு அணிவகுப்புடன் சேர்க்கப்படுமென பெண்டகனின் செய்தி தொடர்பாளர் கேப்டன் ஜெஃப் டேவிஸ் திங்களன்று ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

“நாங்கள் ஆதரித்துவரும் சக்திகளுடன், அங்கே தரைப்படை நடவடிக்கைகளின் வேகத்தை நாங்கள் அதிகரித்துள்ள நிலையில், இன்னும் நிறைய இலக்கிற்கான வாய்ப்புகளைக் நாங்கள் காணவிருக்கிறோம்,” என்று டேவிஸ் தெரிவித்தார்.

அசாத் ஆட்சியின் கூறுபாடுகளைச் சேதமுறாமல் வைத்துக் கொண்டே அவரை அதிகாரத்திலிருந்து நீக்கும் ஒரு சாத்தியமான அரசியல் தீர்மானத்தின் மீது ரஷ்யா, ஈரான், ஐரோப்பிய அதிகாரங்களும் மற்றும் சவூதி அரேபியா, துருக்கி மற்றும் கடார் போன்ற அப்பிராந்திய அமெரிக்க கூட்டாளிகளும் சம்பந்தப்பட்டுள்ள பேரம்பேசல்கள் இந்த அமெரிக்க தீவிரப்பாட்டுடன் சேர்ந்து நடந்து வருகின்றன.

18 மாதகாலங்களில் புதிய ஜனாதிபதி தேர்தல்களுக்கு இட்டுச் செல்லும் வகையில், சிரியாவில் எதிர்கட்சிகளின் கூறுபாடுகளைக் கொண்ட ஓர் அரசியல் மாற்றத்திற்கான பரிந்துரைகளை ரஷ்ய அரசாங்கம் வரைந்திருப்பதைக் காட்டும் ஆவணங்கள் கிடைத்திருப்பதாக செவ்வாயன்று ராய்டர்ஸ் அறிவித்தது. அதுபோன்ற ஆவணங்கள் இருப்பதை ரஷ்ய அரசாங்கம் மறுத்துள்ளது.

இந்த அமெரிக்க இராணுவ தீவிரப்பாடு, ஒபாமா நிர்வாகம் மற்றும் அமெரிக்க அரசிற்குள் நெருக்கடி அதிகரித்துவரும் பின்புலத்தில் வருகிறது. ஒபாமா நிர்வாகமும் அமெரிக்க அரசும் சிரியா மற்றும் பரந்த மத்தியக் கிழக்கு கொள்கை மீதான பிளவுகளால் பிளவுபட்டுள்ளன. சிரிய அரசாங்க படைகளின் நிலைமையைப் பலப்படுத்தி உள்ளதும் மற்றும் பெரும்பகுதி அல் கொய்தாவுடன் இணைப்பு கொண்ட அமெரிக்க ஆதரவிலான இஸ்லாமிய "கிளர்ச்சியாளர்களைப்" பலவீனப்படுத்தி உள்ளதுமான ரஷ்ய தலையீடு, அத்தகைய பிளவுகளை முன்னுக்குக் கொண்டு வந்துள்ளது.

வெளிப்படையாக இராணுவத்திடமிருந்து வரும் அழுத்தங்களின் கீழ், மத்தியக் கிழக்கில் மற்றொரு அமெரிக்க தரைப்படை போரைத் தவிர்க்கும் என்ற அதன் வாக்குறுதிகளிலிருந்து ஒபாமா நிர்வாகம் படிப்படியாக பின்வாங்கி வருகிறது. சிரியாவில் தரைப்படை நடவடிக்கைகளை நடத்துவதற்காக அமெரிக்க சிறப்பு படைகளை அனுப்புவதற்கு அவர் ஒப்புதல் வழங்கிவிட்டதாக அக்டோபர் மாத இறுதியில் ஒபாமா அறிவித்தார்.

செவ்வாயன்று அமெரிக்க பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் பீட்டர் குக், ISIS க்கு எதிரான அமெரிக்க-ரஷ்ய கூட்டு நடவடிக்கைகளுக்கான சாத்தியக்கூறுகளை ஆணித்தரமாக நிராகரித்தார். அமெரிக்க இராணுவம் "ISIS க்கு எதிரான சண்டையில் ரஷ்யர்களுடன் ஒத்துழைப்பதில் மற்றும் ஒருங்கிணைப்பதில் ஒரு வாய்ப்பைக் காணவில்லை" என்று குக் அறிவித்தார்.

அடிப்படை யதார்த்தம் என்னவென்றால் பூமியின் இரண்டு மிகப்பெரிய அணுஆயுத சக்திகளுக்கு இடையே ஒரு இராணுவ மோதலைத் தூண்டிவிடக்கூடிய சாத்தியமுள்ள ஒரு தீவிரமான பினாமி போரில் வாஷிங்டனும் மாஸ்கோவும் ஈடுப்பட்டுள்ளன.