சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Obama backs $607 billion Pentagon bill that bars Guantanamo closing

குவண்டனாமோ மூடுவதைத் தடுக்கும் $607 பில்லியன் பெண்டகன் சட்டமசோதாவை ஒபாமா ஆதரிக்கிறார்

By Bill Van Auken
12 November 2015

Use this version to printSend feedback

பெண்டகன் செலவின சட்டமசோதா ஒன்றை சட்டமாக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கையெழுத்திடுவாரென வெள்ளை மாளிகை செவ்வாயன்று குறிப்பிட்டது. அச்சட்டமசோதா அமெரிக்க போர் எந்திரத்தின் ஆதார வரவு செலவு திட்டக்கணக்கைக் கணிசமானளவிற்கு உயர்த்துகிறது, அதேவேளையில் கியூபாவின் குவண்டனாமோ வளைகுடா கடற்படை தளத்தில் உள்ள சிறை முகாமை மூடுவதை அல்லது அதன் கைதிகளை அமெரிக்க இடங்களுக்கு மாற்றுவதைத் தடுக்கிறது.

அந்த தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டம் (NDAA), ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியாவில் நடந்துவரும் இராணுவ நடவடிக்கைகள் மீதான செலவினங்கள் அல்லாமல், ஆதார பெண்டகன் வரவு செலவுத் திட்டக்கணக்கிற்கு $548 பில்லியன் வழங்குகிறது. இது பனிப்போர் காலம் முடிந்த பின்னர் எந்த ஆண்டையும் விட மிக மிக அதிகமாகும்.

ஆதார வரவு செலவுத் திட்டக்கணக்கிற்குக் கூடுதலாக, அந்த நிதி மசோதாவில் "அவ்வப்போதைய வெளிநாட்டு நடவடிக்கைகளுக்காக" $50.9 பில்லியன் உள்ளடங்கி உள்ளது. கடந்த நிதியாண்டின் $64.2 பில்லியனிலிருந்து குறைக்கப்பட்டிருந்த அது, ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா மற்றும் வேறு இடங்களில் நடந்துவரும் இராணுவ தலையீடுகளுக்காக வழங்கப்படும். ஒருசில சிறிய அதிகரிப்புகளோடு சேர்ந்து, இது மொத்தமாக அக்போடர் 1 இல் தொடங்கும் நிதியாண்டுக்கான இராணுவ செலவுகளை $607 பில்லியனுக்குக் கொண்டு வருகிறது.

ஒபாமா புஷ்ஷைப் பிரதியீடு செய்தமை, ஈராக் போர் படிப்படியாக பலவீனமடைந்த பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டமை, ஆப்கானிஸ்தான் போர் தீவிரப்படுத்தப்பட்டு பின்னர் குறைக்கப்பட்டமை என கடந்த 15 ஆண்டுகளுக்கும் அதிகமாக, ஆதார பெண்டகன் வரவு செலவுத் திட்டம் படிப்படியாக அதிகரித்து 42.7 சதவீத அளவிற்கு உயர்ந்துள்ளது.

ஒபாமா அந்த சட்டமசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவார் என்பதை வெள்ளை மாளிகை சுட்டிக்காட்டியது. “NDAA மேசைக்கு வருகையில் ஜனாதிபதி அதில் கையெழுத்திடுவதை நீங்கள் பார்க்கலாம் என்றே நான் கருதுகிறேன்,” வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜோஸ் ஏர்ன்ஸ்ட் பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றில் தெரிவித்தார்.

வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்ட 2016 நிதியாண்டுக்கான இராணுவ வரவு செலவுத்திட்டக்கணக்கு செவ்வாயன்று அமெரிக்க செனட் சபையில் 91-3 என்ற பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது, அதற்கு முன்னதாக பிரதிநிதிகள் சபையில் கடந்த வாரம் 370-58 என்ற வித்தியாசத்தில் அதேபோன்றவொரு சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது. இவை, வாஷிங்டனின் இழிவார்ந்த வெளிநாட்டு தடுப்புக்காவல் முகாமைத் திறந்து வைத்திருக்க தெளிவாக இருகட்சிகளது ஆதரவும் உள்ளது என்று முறையிட காங்கிரஸில் உள்ள குடியரசு கட்சியினரை அனுமதிக்கின்றன.

வரவு செலவு திட்டக்கணக்கைக் கருத்தில் கொள்வதே அவரது முதல் கவலை, இராணுவ கொள்முதலில் உள்ள பற்றாக்குறை சீர்திருத்தங்கள் அவரது இரண்டாவது கவலை மற்றும் குவண்டனாமோ மூடல் மீதான தடை மூன்றாவதாக மட்டுமே இருக்கும் என்று குறிப்பிட்டு, ஒபாமா அந்த சட்டமசோதாவின் முந்தைய வரைவை தனியதிகாரத்தின் மூலமாக கடந்த மாதம் நிராகரித்திருந்தார்.

செலவின வரம்பு (sequester) என்றறியப்பட்ட 2011 வரவு செலவு திட்டக்கணக்கு வெட்டு முறைமையில் திணிக்கப்பட்ட செலவின வரம்புகளையே பேண முயன்ற அதேவேளையில், குடியரசு கட்சி தலைமை, வெளிநாடுகளில் நடந்துவரும் அமெரிக்க இராணுவ தலையீடுகளுக்குக் கொடுக்க பயன்படும் அவ்வப்போதைய வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கான (OCO) தனி ஒதுக்கீட்டு நிதியிலிருந்து அதிகளவில் எடுத்து இதற்கு மாற்றிவிடுவதன் மூலமாக பெண்டகனின் நிஜமான வரவு செலவுத்திட்டக்கணக்கை அதிகரிக்க விரும்புகிறது.

வெள்ளை மாளிகை மற்றும் காங்கிரஸிற்கு இடையே முடிவு செய்யப்பட்ட இரண்டாண்டுகால வரவு செலவுத்திட்ட உடன்படிக்கையின் கீழ், அந்த வரம்புகள் செலவினங்களின் இரண்டு பகுதிகளிலேயுமே அதிகரிக்கப்பட்டிருந்தது. $496 பில்லியனிலிருந்து 2016 நிதியாண்டில் $548 பில்லியனாக உயர்த்தி, பெண்டகனின் ஆதார வரவு செலவுத் திட்டக்கணக்கில் அண்மித்தளவில் 7.7 சதவீத உயர்வு அனுமதிக்கப்பட்டிருந்தது.

இராணுவ செலவுகளில் அதிகரிப்பானது, மற்றொரு பிரதான சக்திக்கு எதிராக; முதல் சான்றாக ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிராக, போருக்கு தயாரிப்பு செய்யும் நோக்கில் புதிய ஆயுத அமைப்பு கொள்முதல் செய்வதில் பெருகியளவில் உந்தப்படுகிறது.

இந்த வரவு செலவுத்திட்டக் கணக்கு அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் விலைமதிப்பான ஆயுத கொள்முதல் திட்டத்தைத் தொடரும் விதத்தில், லோக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்திடமிருந்து மற்றொரு 44 F-35 கூட்டு போர்விமானங்கள் வாங்க விமானப்படைக்கு $5.7 பில்லியனை வழங்கும்.

கடற்படை 12 புதிய அணுஆயுத ஏவுகணை தாங்கி நீர்மூழ்கி கப்பல்களை ஒவ்வொன்றையும் $6 பில்லியனில் கட்டமைக்கும் ஒரு திட்டத்துடன் முன்நகர்ந்து வருகிறது. கடற்படையால் முன்வைக்கப்பட்ட போர்ப்பட்டை கப்பல்களைக் கட்டுவதற்கான ஒட்டுமொத்த திட்டமும் மதிப்பிடப்பட்ட அளவில் ஆண்டுக்கு $20 பில்லியனுக்கும் அதிக செலவுகளோடு, கடந்த 30 ஆண்டுகள் செலவை விட அடுத்த 30 ஆண்டுகளில் மூன்றுமடங்கு அதிகமாக செலவு செய்ய அழைப்புவிடுக்கிறது.

பெண்டகன் வரவு செலவுத் திட்டக்கணக்கில், சுமார் 80 நாடுகளுக்கு சுமார் 71,000 அதிரடிப்படையினரை அனுப்புவதை உள்ளடக்கிய இராணுவத்தின் சிறப்பு கூட்டு நடவடிக்கைகள் கட்டளையகத்திற்கான அண்மித்தளவில் $11 பில்லியனும் உள்ளடங்கி உள்ளது. இத்தகைய கொலைப்படைகள் சென்றடைவதை அதிகரிப்பதற்காக, “இலக்கில் வைத்து கொல்லுதல்" அதாவது படுகொலைகளில் பயன்படுத்தப்பட்ட புதிய தலைமுறை ஆயுதமேந்திய ரீப்பர் டிரோன் விமானங்களை வாங்குவதற்கான நிதியும் வரவு செலவு திட்டக்கணக்கில் உள்ளடக்கப்படுகிறது.

உக்ரேனில் நவ-பாசிசவாத படைகளிடமிருந்து நேரடியாக பெறப்பட்ட துணைப்படைகளை உள்ளடக்கிய பாதுகாப்பு படைகளுக்குத் தொடர்ந்து அமெரிக்கா பயிற்சியளிப்பதற்காக மற்றும் "கவச-தகர்ப்பு ஆயுத அமைப்புகள், சிறுபீரங்கிகள், குழுக்களாக பயன்படுத்தக்கூடிய ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள், வெடிகுண்டு வீசிகள் மற்றும் தளவாடங்கள், சிறு ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் போன்ற உயிர்கொல்லும் ஆயுத உதவி" வழங்குவதற்காக வலதுசாரி, அந்நாட்டின் ரஷ்ய-விரோத ஆட்சிக்கு இராணுவ உதவியாக மற்றொரு $300 மில்லியனும் NDAA இல் சேர்க்கப்பட்டிருந்தது.

மிக முக்கியமாக பெண்டகன் அந்த நிதி மசோதா, இராணுவம் மீதான படைத்துறைசாரா கட்டுப்பாட்டை மேற்கொண்டும் அழிக்கும் வகையில், ஆயுத திட்டங்கள் மற்றும் கொள்முதல்கள் மீதான கணிசமான கட்டுப்பாட்டை பாதுகாப்பு செயலரிடமிருந்து ஆயுத சேவைகளின் சீருடையணிந்த தலைமைகளிடம் மாற்றும் ஏற்பாடுகளையும் உள்ளடக்கி உள்ளது.

அமெரிக்க இராணுவ செலவுகள் ஏற்கனவே சீனாவை விட மூன்று மடங்கிற்கு அண்மித்தும், ரஷ்யாவை விட ஏழு மடங்கிற்கு அதிகமாகவும் உள்ள நிலைமைகளின் கீழ் தான், பெண்டகன் வரவு செலவுத்திட்டத்தின் இந்த உயர்வு தொடங்கப்படுகிறது. 2015 இல், வாஷிங்டனின் இராணுவ செலவு அதற்கடுத்துள்ள ஏழு நாடுகளின்—இவற்றில் ஐந்து அமெரிக்க கூட்டாளிகளாகும்—மொத்த செலவுகளை விட அதிகமாக உள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகளவில் ஒரு பிரதான இராணுவ ஆக்ரோஷ தீவிரப்படுத்தலுக்குத் தயாரிப்பு செய்து வருகிறது என்பதே அதுபோன்றவொரு கட்டமைப்பிற்கான ஒரே விளக்கமாகும்.

அமெரிக்க இராணுவவாதத்தின் இந்த வெடிப்பானது, பெண்டகன் சட்டமசோதாவிற்கு ஒரு தர்க்கரீதியிலான நியாயப்பாடாக குவண்டனாமோ சிறை முகாமைப் பேணுவதற்கு வகைமுறைகளைச் செய்தளித்து, அடிப்படை ஜனநாயக கோட்பாடுகள் மற்றும் உரிமைகள் மீதான தாக்குதலுடன் கை கோர்த்து செல்கிறது.

அந்த செலவின சட்டமசோதாவிலிருந்து குவண்டனாமோ வகைமுறைகளை நீக்குவதற்கு தவறுவதில் ஒபாமா அவரது "மரபுரிமை" மீதே ஒரு சவாலை எதிர்கொண்டிருப்பதாக ஊடகங்களால் நிறைய இட்டுக் கட்டப்படுகின்றன.

அவர் பதவியேற்ற முதல் நாள் அன்று, அந்த ஜனநாயக கட்சி ஜனாதிபதி ஓராண்டுக்குள் அந்த சிறை முகாமை மூட ஒரு நிறைவேற்று ஆணை பிறப்பிப்பதாக வாக்குறுதியை அறிவித்தார். அதுபோன்றவொரு மூடல் இல்லாமல், அவர் கையெழுத்திட்டுள்ள பெண்டகன் வரவு செலவுத் திட்டக்கணக்கு வரிசையில் இது ஆறாவதாக இருக்கும். வரையறைகள் முதலில் ஜனநாயக கட்டுப்பாட்டிலான பிரதிநிதிகள் சபையிலும் மற்றும் செனட் சபையிலும் தான் கொண்டு வரப்பட்டிருந்தன.

இந்த சமீபத்திய சட்டமசோதா அமெரிக்காவிற்குக் கைதிகளை மாற்றுவதை மட்டும் தடுக்கவில்லை, மாறாக அவர்களை லிபியா, சிரியா, யேமன் மற்றும் சோமாலியா உட்பட மூன்றாம் நாடுகளுக்கு அனுப்புவதையும் தடுக்கிறது.

அவரது இரண்டாம் பதவிக்காலம் முடிவுக்கு வரவிருக்கின்ற நிலையில், ஒபாமா இதுவரையில் குவண்டனாமோவை மூடுவதற்கு காங்கிரஸிற்கு எந்த திட்டதையும் அனுப்பவில்லை, மேலும் காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல் கைதிகளின் தலைவிதியைத் தீர்மானிக்கும் வகையில், அவர் "முப்படைகளின் தளபதியாக" அவரது அதிகாரத்தைப் பிரயோகித்து ஒரு நிறைவேற்று ஆணை பிறப்பிக்கக்கூடும் என்ற ஊகங்களும் நிலவுகின்றன.

கடந்த ஏழு ஆண்டுகளாக காங்கிரஸ் கட்டுப்பாடுகளுக்கு ஒபாமா ஆளாகியிருந்த நிலையில், அத்தகையவொரு ஆணையை நீதிமன்றங்கள் மேலுயர்த்திப்பிடிக்குமா என்பது கேள்விக்கிடமாக உள்ளது. கூட்டாட்சி நீதிமன்றங்கள் ஆவணமற்ற புலம்பெயர்வோரை திருப்பியனுப்பவதைக் கட்டுப்படுத்தும் அவரது நிறைவேற்று ஆணையைச் சமீபத்தில் தடுத்தன.

அனைத்திற்கும் மேலாக, நவம்பர் 2016 தேர்தலுக்கு முன்னதாக குவண்டனாமோ குறித்து ஒபாமா ஏதேனும் செய்வாரென பெரிதும் எதிர்பார்க்க முடியாததாக உள்ளது.

இன்னமும் குவண்டனாமோ சிறைகளில் 112 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். ஏதேச்சதிகாரமான முறையில் வழங்குகளோ அல்லது குற்றச்சாட்டுக்களோ இல்லாமல் மற்றும் சித்திரவதைகளின் கீழ் விசாரணை நடத்துவதற்காக அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறை அமைப்புகளால் சட்டத்திற்குப் புறம்பாக வைத்திருக்கும் ஒரு வெளிநாட்டு இடமாக, 2001 இல் அது திறக்கப்பட்டதற்குப் பின்னர் அச்சிறைச்சாலை முகாம்களில் 800 அதிகமானவர்கள் அதில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

அங்கே இப்போது இருப்பவர்களில் வெறும் பத்து பேர் மட்டுந்தான் இராணுவ ஆணைக்குழுக்களின் முன் குற்றகரமான குற்றச்சாட்டுக்களை முகங்கொடுத்துள்ளனர். மற்ற 102 பேர் மீது ஒருபோதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை, அதேவேளையில் சிலர் 13 ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் கடந்த ஆண்டுகளில் 53 பேர் விடுவிக்கப்பட உத்தரவு உள்ளது, அவர்களில் பெரும்பாலானவர்கள் யேமனைச் சேர்ந்தவர்கள், ஆனால் அவர்களால் எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்று வாஷிங்டனே ஒப்புக்கொள்கின்ற போதினும் கூட அவர்கள் அங்கே சிறைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

ஏனையவர்களில் “காலத்திற்குமான கைதிகள்" என்றழைக்கப்படுபவர்களும் உள்ளனர், அவர்களை அமெரிக்கா எந்தவொரு படைத்துறைசாரா நீதிமன்றத்திலும் விசாரணைக்குக் கொண்டு வர முடியாது ஏனென்றால் அவர்களுக்கு எதிரான சாட்சியங்கள் என்று கூறப்படுபவை சித்திரவதை மற்றும் ஏனைய சட்டவிரோத அணுகுமுறைகளைக் கொண்டு சேகரிக்கப்பட்டவை ஆகும்.

இத்தகைய கைதிகளை அமெரிக்காவின் அதிகபட்ச பாதுகாப்பு சிறைகூடங்களுக்கு, அதாவது நடைமுறையளவில் ஒரு "வடக்கு குவண்டனமோ"க்கு மாற்ற வேண்டுமென்பதே ஒபாமாவின் பரிந்துரையாக உள்ளது. லெவன்வொர்த், கன்சாஸ், கொலொராடோ மற்றும் ஏனைய இடங்களிலும் மாற்று இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அதுபோன்று மாற்றுவது ஏதோவிதத்தில் அமெரிக்க "மதிப்புகளுக்கு" பொருந்தி இருக்கும் என்ற ஒபாமாவின் வாதங்கள் முற்றிலும் பாசாங்குத்தனமானவை ஆகும். யதார்த்ததில் அது அமெரிக்க குடிமக்களையும் சேர்த்து காலவரையின்றி தடுப்புக்காவலில் வைக்க முன்னுதாரணத்தை அமைத்து, அமெரிக்க மண்ணிலேயே சட்டவிரோத ஏதேச்சதிகார சிறைக்கூட அமைப்பு ஒன்றை மேற்கொண்டு நிறுவனமயப்படுத்தும் விளைவைக் கொண்டிருக்கும்.