சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பர்மா

Burma’s “democracy icon” seeks talks with military

பர்மாவின் "ஜனநாயக அடையாளம்" இராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முனைகிறது

By Peter Symonds
12 November 2015

Use this version to printSend feedback

ஞாயிறன்று நடந்த பர்மா தேர்தல்களில் எதிர்கட்சி தலைவர் ஆங் சான் சூ கி இன் தேசிய ஜனநாயக கழகத்தின் (NLD) பெரும் வெற்றியை அடுத்து, அவர், அதிகாரத்தின் முக்கிய விசைகளைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இராணுவத்துடன் தொழிற்பாடு உறவுகளுக்கு முயல்கிறார்.

பர்மாவில் ஜனநாயகத்தின் ஒரு புதிய சகாப்தம் தொடங்குவதிலிருந்து வெகுதூரம் விலகி, NLD இராணுவத்துடன் அதன் கூட்டு நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்த, அதாவது வாஷிங்டன் மற்றும் அதன் கூட்டாளிகளுடன் நெருக்கமான பொருளாதார மற்றும் மூலோபாய அணிசேர்க்கையுடன் இணைந்த வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க மேற்கொண்டு சந்தை-சார்பு மறுகட்டமைப்பைச் செய்ய, அதனுடன் நெருக்கமாக ஒத்துழைக்கும்.

"தேசிய நல்லிணக்க உணர்விற்காக" சூ கி அந்நாட்டின் ஜனாதிபதி தெயின் சென் (Thein Sein), இராணுவ மூத்த தலைமை தளபதி Min Aung Hlaing மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் Shwe Mann ஆகிய ஒவ்வொருவருடனும் பேச்சுவார்த்தை நடத்த அழைப்புவிடுத்த கடிதங்களைச் செவ்வாயன்று தனித்தனியாக அவர்களுக்கு அனுப்பினார். ஜனாதிபதியும் சரி இராணுவமும் சரி NLD இன் வெற்றிக்காக அதற்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அவரை சந்திப்பதற்கான அவர்களது விருப்பத்தையும் சுட்டிக்காட்டினர்.

தெயின் சென், அவரே கூட ஒரு முன்னாள் தளபதியாவார், “அரசு மக்களின் விருப்பத்தேர்வு மற்றும் முடிவை மதித்து பின்பற்றும், மற்றும் காலஅட்டவணைக்கேற்ப அதிகாரத்தை அமைதியாக மாற்றுவதற்காக வேலை செய்யும்,” என்று அறிவித்தார். 1962 இல் இருந்து பர்மாவை ஆட்சி செய்து வந்துள்ள இராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிரான அவர்களது விரோதத்தைக் காட்ட வாக்காளர்கள் அதை வாய்ப்பாக எடுத்துக்கொண்ட நிலையில், இராணுவ-ஆதரவிலான அவரது ஐக்கிய ஒருமைப்பாடு மற்றும் வளர்ச்சி கட்சி (USDP) நடைமுறையளவில் துடைத்தழிக்கப்பட்டிருந்தது.

அதிகாரத்தை அமைதியாக மாற்றிக் கொடுக்க உடன்பட்ட இராணுவத்தின் விருப்பம், 2011 க்குப் பின்னர் நடந்து வந்துள்ள ஒரு மாற்றத்துடன் பிணைந்துள்ளது. ஏற்கனவே அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் முடமாக்கும் பொருளாதார முற்றுகையை எதிர்கொண்டிருக்கின்ற நிலையில், இராணுவ ஆட்சிக்குழு அது சீன முதலீட்டைச் சார்ந்திருப்பதைக் குறித்து கவலைக் கொண்டிருந்தததுடன், சீனாவிற்கு எதிராக ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவை நோக்கிய முன்னிலையின்" விளைவுகளைக் குறித்து அச்சமுற்றிருந்தது.

2011 இல், பர்மாவின் இராணுவ ஆட்சிக்குழு படைத்துறைசாரா ஒரு முகப்பாக காட்டிக்கொள்ள தெயின் சென் ஐ ஜனாதிபதியாக நிறுத்தியதுடன், அது பாரியளவிலான சீன நிதியாதார Myitsone அணைத்திட்டத்தைக் கைவிட அறிவித்ததன் மூலமாக வாஷிங்டனுடன் இணங்கி இருக்கும் அதன் விருப்பத்தைச் சமிக்ஞை செய்தது. டிசம்பர் 2011 இல் பர்மாவிற்கான அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டனின் விஜயம் இருதரப்பு உறவுகள் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டதைக் குறித்தது. தடையாணைகள் தளர்த்தப்பட்டு, நெருக்கமான இராணுவ-இராணுவ உறவுகள் அதை தொடர்ந்தன.

வாஷிங்டனின் சிடுமூஞ்சித்தனமான "மனித உரிமைகள்" பிரயோகம் மீண்டுமொருமுறை அரங்கேறி இருந்தது. அமெரிக்க பிரச்சாரத்தில், இரவோடு இரவாக, பர்மா "ஒரு தான்தோன்றித்தனமான அரசு" என்பதிலிருந்து "அபிவிருத்தி அடைந்துவரும் ஜனநாயகம்" என்று மாற்றப்பட்டது. அமெரிக்காவிற்கு பர்மா மக்களின் ஜனநாயக உரிமைகள் குறித்து எந்த அக்கறையும் அல்ல, மாறாக அது அமெரிக்க பெருநிறுவனங்களுக்கு அந்நாட்டைத் திறந்துவிடுவதற்கும் மற்றும் அனைத்திற்கும் மேலாக சீனாவிற்கு எதிரான அதன் "ஆசியாவை நோக்கிய முன்னிலைக்குள்" அதை இழுக்க அக்கறைக் கொண்டுள்ளது.

2008 அரசியலமைப்பின் கீழ், அந்த இராணுவம் இப்போதும் கணிசமான அளவிற்கு அரசியல் அதிகாரங்களைக் கொண்டுள்ளது, பாதுகாப்புத்துறை, உள்துறை மற்றும் எல்லை விவகாரங்களுக்கான அமைச்சர்களை நியமிப்பதும் அதில் உள்ளடங்கும். நாடாளுமன்ற ஆசனங்களில் ஒரு கால் எண்ணிக்கை இராணுவ நியமனங்களுக்காக ஒதுக்கப்படுகிறது, நடைமுறையில் இது அரசியலமைப்பு மாற்றங்களைத் தடுக்கும் அதிகாரத்தை (வீட்டோ அதிகாரம்) இராணுவத்திற்கு வழங்குகிறது. அதற்கும் கூடுதலாக, தேவையின்றி தேசிய அவசரகால நெருக்கடி என்று வரையறுக்கப்படும் சமயத்தில் இராணுவம் அதன் முழு அரசியல் கட்டுப்பாட்டை ஏற்க முடியும். சூ கி இன் குழந்தைகளும் மற்றும் மறைந்த அவரது கணவரும் வெளிநாட்டு பிரஜைகள் என்பதால் ஜனாதிபதி ஆவதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறிருப்பினும், ஒரு NLD அரசாங்கத்தை ஏற்க இராணுவம் தயாராக இருப்பதென்பது அனைத்திற்கும் மேலாக ஏனென்றால் இரண்டு தரப்பும் எல்லா அடிப்படை பிரச்சினைகளிலும் உடன்படுகின்றன. தேசியளவில் ஒழுங்குமுறைப்படுத்தப்பட பொருளாதாரத்தின் மீதான இராணுவக் கட்டுப்பாட்டால் ஓரங்கட்டப்பட்டு கோபமடைந்துள்ள மற்றும் வெளிநாட்டு முதலீட்டிற்கும், வாஷிங்டன் மற்றும் அதன் கூட்டாளிகளை நோக்கி திரும்புவதற்கு திறந்துவிட வக்காலத்துவாங்கும் பர்மா முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு கன்னையை சூ கி மற்றும் NLD  பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

கடந்த நான்காண்டுகளுக்கும் அதிகமாக, இராணுவ ஆதரவிலான அரசாங்கம் அதன் சந்தை-சார்பு சீர்திருத்தங்களை நடத்துவதில் NLD உடன் நெருக்கமாக ஒத்துழைத்துள்ளது. “ஜனநாயகத்தின் அடையாளம்" என்று பெரிதும்-பேசப்பட்டு வந்த சூ கி, குறிப்பாக பர்மாவை சர்வதேச அளவில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முன்னிறுத்தவும் மற்றும் பர்மிய மக்களை ஏமாற்றவும் இரண்டு விதத்திலும் பயன்பட்டுள்ளார்.

இராணுவத்தின் பகாசுர நிறுவனங்களில் ஒன்றுக்கும் ஒரு சீன பெருநிறுவனத்திற்கும் இடையிலான ஒரு கூட்டு திட்டமான Letpadaung தாமிர சுரங்கத்திற்கு எதிராக வெடித்த போராட்டங்களைத் தணிப்பதில் 2012 இல் சூ கி கருவியாக இருந்தார். பொலிஸ் அந்த போராட்டங்களை ஒடுக்க தவறிய பின்னர், NLD தலைவர் முன்னால் வந்து, எதிர்ப்பை முடித்துக் கொள்ள முறையிட்டார். அதுபோன்ற உடன்படிக்கைகள் நிச்சயமாக மக்கள் நலன்களுக்காக இருக்கவில்லை என்ற போதினும், அவர் கூறினார், அவர்கள் முன்னேற வேண்டியிருக்கிறது "அவ்விதத்தில் தான் நாட்டின் பிம்பம் பாதிக்கப்படாமல் இருக்கும்,” என்றார். (பார்க்கவும்: “பர்மா இராணுவம் தாமிர சுரங்க போராட்டத்தை ஒடுக்குகிறது")

கூடுதல் சந்தை-சார்பு கொள்கைகள் மூலமாகவும் அமெரிக்க மற்றும் சர்வதேச தடையாணைகளை மேற்கொண்டு குறைக்க ஊக்கப்படுத்துவதன் மூலமாகவும், NLD அரசாங்கம், பர்மாவை வெளிநாட்டு மூலதனத்திற்குத் திறந்துவிடுவதை அதிகரிக்குமென இராணுவம் தெளிவாக எதிர்பார்க்கிறது. “சில நாடுகளின் வியாபார மக்கள் சிலருக்கு"—குறிப்பாக இராணுவத்துடன் நெருக்கமாக பிணைந்துள்ளவர்களுக்குஎதிரான அமெரிக்க தடையாணைகளால் முதலீடு முடமாகி இருப்பதாக பல அமெரிக்க நிறுவனங்கள் கூறுகின்றன" என்று நேற்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அறிவித்தது.

ஜனாதிபதி ஒபாமா அடுத்த வாரம் தென் கிழக்கு ஆசியாவிற்கான அவரது பயணத்தின் பாகமாக ஜனாதிபதி ஒபாமா ஆச்சரியமூட்டும் வகையில் பர்மாவில் இறங்கி செல்வது குறித்து NLD அதிகாரிகள் வெள்ளை மாளிகையிடம் இந்த வாரம் கருத்து கேட்டிருந்தனர். எவ்வாறிருந்த போதினும் தேர்தல் முடிவுகளுக்கான வாஷிங்டனின் பிரதிபலிப்பு எச்சரிக்கையாக இருந்தது. கிழக்கு ஆசியாவிற்கான அமெரிக்க துணை வெளியுறவுத்துறை செயலர் டேனியல் ரஸ்செல் அதை "ஒரு கடுமையான தொடக்கம்" என்று வர்ணித்தார், ஆனால் "இப்போது தான் கடுமையான பகுதி வருகிறது" என்பதையும் சேர்த்துக் கொண்டார்அதாவது அமெரிக்க புவிசார்-அரசியல் திட்டங்களுடன் ஒரு ஆட்சியை வரிசையில் கொண்டு வருவதை அது குறிக்கிறது.

வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கையில், NLD போதிய நாடாளுமன்றயைப் பெறும் போக்கில் இருப்பதாக தெரிகிறது. “தேசிய நல்லிணக்கத்திற்கான" அனைவரையும் உள்ளடக்கிய ஓர் அரசாங்கத்தை அவர் விரும்புவதாக சூ கி ஏற்கனவே சுட்டிக்காட்டி உள்ளார்வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இராணுவ கூறுபாடுகளை அதில் உள்ளடக்குவது. சூ கி இன் ஓர் ஆலோசகரான ஆஸ்திரேலிய கல்வியாளர் சீன் டர்ன்புல் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்குக் கூறுகையில், NLD தற்போதைய அரசாங்கத்தின் சில கொள்கைகளைப் பேணும் என்றார். வெளிநாட்டு ஆலோசகர் ஒருவர், “குறைந்தபட்சம் இடைமருவு காலக்கட்டம் வரையிலாவது, தற்போதைய [இராணுவ] அரசாங்கத்தின் சில முக்கிய நபர்களைத் தக்க வைத்திருக்க நாங்கள் விரும்புகிறோம்,” என்று கூறுமளவிற்குச் சென்றார்.

ஐயத்திற்கிடமின்றி, சூ கி தற்போதைய ஜனாதிபதி மற்றும் இராணுவ தலைவர்களுடன் இந்த விடயங்களைக் குறித்து அவரது விவாதங்களில் ஆதரவு திரட்டுவார். ஒரு மூத்த NLD அங்கத்தவரும் சூ கி ஆலோசகருமான Win Htein செவ்வாயன்று ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில் இராணுவத்துடனான உறவுகளைக் கட்டமைப்பதற்கான கட்சியின் மூலோபாயம் "உயர்மட்ட இரகசியம்" என்றார். “அது நாம் இப்போது விவாதிக்கக்கூடிய ஒன்றல்ல. அது மிகவும் உணர்வுப்பூர்வமான விடயம் மற்றும் அதுமட்டுமின்றி தோற்றவர்களின் உணர்வுகளையும் நாம் மதிக்க வேண்டியுள்ளது,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

NLD-இராணுவ உறவுகளில் மிகவும் உணர்வுப்பூர்வமான பிரச்சினை தோற்றுப்போன இராணுவ வேட்பாளர்களின் உணர்வுகள் பாதிக்கப்படும் என்பதல்ல, மாறாக இராணுவத்தின் ஒடுக்குமுறை ஆட்சியை NLD முடிவுக்குக் கொண்டு வரும் என்ற நம்பிக்கையில் NLD ஐ ஆதரித்த வாக்காளர்களின் பிரதிபலிப்பு சம்பந்தப்பட்டதாகும். இராணுவத்துடன் உறவுகளை ஒருங்கிணைப்பதற்கான NLD இன் தீர்மானம் அனைத்திற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக திருப்பிவிடப்பட்டுள்ளது. அதன் சந்தை-சார்பு நிகழ்ச்சி நிரலை அது நடைமுறைப்படுத்துகையில், வாழ்க்கை தரங்கள் மீதான அதன் தாக்குதல்களுக்கு எந்தவித எதிர்ப்பையும் நசுக்க புதிய அரசாங்கம் அதிகரித்தளவில் பாதுகாப்புப் படைகளின் மீது தங்கியிருக்கும்.