சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France inaugurates €4.2 billion defence ministry complex

4.2 பில்லியன் யூரோக்கள் செலவில் பாதுகாப்பு அமைச்சக வளாகம் பிரான்சில் திறப்பு

By Kumaran Ira
12 November 2015

Use this version to printSend feedback

நவம்பர் 5-ம் தேதி அன்று, பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட், பாதுகாப்பு அமைச்சர் ஜோன்-ஈவ் லு திரியோன் மற்றும் பல படைத்தளபதிகளும் தெற்கு பாரிஸ்-ன் பலார்ட் பகுதியில் அமைந்துள்ள 4.2 பில்லியன் யூரோக்கள் மதிப்புடைய பாதுகாப்பு அமைச்சக வளாகத்தை தொடங்கி வைத்தனர். புதுக்கட்டிடமான “Hexagone-Balard” பிரெஞ்சு பெண்டகன் ஆகும்.

42 ஹெக்டேரில், கிட்டத்தட்ட 22 கால்பந்தாட்ட மைதானத்திற்கு சமமான பரப்பில் அமைந்துள்ள இக்கட்டிடம், ஏவுகணைத் தாக்குதலை தாங்கக்கூடியவாறு சுவர்கள் வலிமையாக  வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், அதிக பாதுகாப்புக் கொண்ட, நிலவறை நடவடிக்கை அறைகளையும் கொண்டுள்ளது. அது பாதுகாப்பு அமைச்சகம், தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படை உள்பட ஆயுதப்படைகளின் தலைமைகளையும், அதேபோல ஆயுத கொள்வனவு மற்றும் பிரெஞ்சு இராணுவத்திற்கு தேவைப்படும் ஆயுதத்தளவாடங்களை அபிவிருத்திசெய்வதற்கும் வாங்குவதற்குமான மற்றும் திட்ட மேலாண்மைக்கு பொறுப்பான தொழில்நுட்ப முகவாண்மை அனைத்தையும் ஒன்றாய் கொண்டுவந்துள்ளது.

பகட்டான இவ்வளாகம் 9,300 இராணுவ மற்றும் இராணுவமல்லா பணியாளர்களை அமர்த்தக் கூடிய இடவசதி கொண்டது. “பாதுகாப்பு அமைச்சகத்தை பொறுத்த அளவில் இது வரலாற்று அடி வைப்பு, அது இறுதியாக அதன் அனைத்து படைப் பிரிவினரையும் (தரை, வான் மற்றும் கடல்) ஒரே இடத்தில் ஒன்றாய் கொண்டுவந்திருக்கிறதுஎன ஹாலண்ட் அறிவித்தார்.

ஹாலண்ட் கட்டிடம் பற்றி தற்பெருமை பேசிக் கொண்டார், கட்டிடம்பிரான்சில் மிகவும் உயர் பாதுகாப்புக் கொண்டவற்றுள் ஒன்று. காரணங்களை நாம் கட்டாயம் விளங்கிக் கொள்ள வேண்டும்: இங்கு முக்கியமான விஷயம் சம்பந்தப்பட்டுள்ளது, அதாவது நமது நாட்டின் பாதுகாப்பு. இந்த அடுக்குகளின் கீழே பாதுகாப்பு திட்டமிடல் மற்றும் நடவடிக்கைகளுக்கான மையம் இருக்கிறது, சற்றுமுன்தான் நான் அதைப்பார்த்துவிட்டு வந்தேன். ஏனெனில் பலார்ட் எமது இராணுவ நடவடிக்கைகளின் ஆணையிடல் தலைமையகமாகும்.”

அதன் பொருளாதார மற்றும் தொழிற்துறை பலமானது பொறிகையில், பிரெஞ்சு ஏகாதிபத்தியமானது இராணுவ நடவடிக்கைகளையும் போர்களையும் உக்கிரப்படுத்துவதன் மூலமாக தனது நலனைப் பாதுகாத்துக்கொள்ள விழைகிறது. வேலைகள் மற்றும் சமூக செலவினங்களில் அதன் தாக்குதல்களை தொடுத்ததன்மூலம் தமக்குத்தாமே பெரும் அவமதிப்பை தேடிக்கொண்ட ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சி (PS) வெளிநாடுகளில் இராணுவ சாகசங்களில் தீவிரமாய் ஈடுபடுகிறது. அதன் நோக்கம் பிரான்சின் முன்னாள் காலனித்துவ பேரரசில் பெரும்பாலான பகுதிகளில் நவ காலனித்துவ ஆட்சிகளை திணிப்பதும், தேர்தல்களில் ஒருசில இராணுவ வெற்றிகளைக் காட்டி தன்னைத்தானே ஊக்கப்படுத்திக் கொள்ளும் அதேவேளை, அது மேலும் கூடுதலான சமூக தாக்குதல்களை முன்னெடுப்பதும்தான்.

2012ல் ஹாலண்ட் ஆட்சிக்கு வந்தது முதற்கொண்டு, சோசலிஸ்ட் கட்சியானது, மாலி, சாகெல் பிராந்தியம், மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் மத்திய கிழக்கு உள்பட ஆபிரிக்காவில் இராணுவ நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. மத்திய கிழக்கில் ஈராக், சிரியா இரு இடங்களிலும் அமெரிக்காவுடன் சேர்ந்து விமானத்தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது. இந்த ஏகாதிபத்திய கடுந்தாக்குதல் ஹாலண்டை மேலும் மதிப்பிழக்க செய்தது மட்டுமல்ல, பிரெஞ்சு ஆயுதப்படைகள் மீதும் பெரும் நடவடிக்கைக்கான அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் மேற்கோள்காட்டி குறிப்பிட்டார், ”1990களின் தொடக்கத்தில் (ஈராக்கிற்கு எதிராக) வளைகுடாப் போரிலிருந்து, நெருக்கடிகால மேலாண்மைக்காக மேலும் ஒருங்கிணைந்த ஆயுத நடவடிக்கைகளால் குறிக்கப்பட்ட காலகட்டத்தில்…… எமது நடவடிக்கைகளுக்கு உதவ, படைத்தளபதிகளை ஒன்றாய் கொண்டுவர வேண்டிய தேவை, மைய தலைமைகளையும் படைத்தளபதிகளையும் நெருக்கமாக ஒருங்கிணைப்பதற்கான தேவை அடையாளம் காணப்பட்டதை, Hexagone Balard ஸ்தூலமாய் உறுதிப்படுத்தியுள்ளது.”

சோசலிஸ்ட் கட்சி, தரைப்படை, விமானப்படை மற்றும் கப்பற்படை தலைமையகங்கள் ஒன்றாய் கொண்டுவரப்பட்டதை பாராட்டியது. பாதுகாப்பு அமைச்சகத்தின் நிர்வாக செயலதிபர் Jean-Paul Bodin கூறினார், “அது எம்மை ஒவ்வொருவரும் முன்பைவிட மிக எளிதாக தொடர்பில் இருக்ககக்கூடிய வகையில் ஆக்கியுள்ளது மற்றும் தேவைப்பட்டால், தனிநபரும் மிக வேகமாக நகரக்கூடிய வகையில் செய்துள்ளது.”

வெளிநாட்டில் நிகழ்த்தப்படும் இராணுவத் தீவிரம், பிரான்சினுள்ளே நிலையான இராணுவக் கட்டமைப்போடு கைகோர்த்து செல்வதானது, அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. சமூக அதிருப்தியினை ஒடுக்கவும் ஆத்திரமூட்டவும் வடிவமைக்கப்பட்ட போலீஸ் அரசு நடவடிக்கைகளை அரசாங்கமானது திடீரென்று விரிவுபடுத்தியுள்ளது, மற்றும் ஆயுதப்படைகளும் உளவு முகவாண்மைகளும் பிரெஞ்சு அரசியல் வாழ்வில் என்றுமிராத வகையில் பெரும்பங்கு கொள்ளவுள்ளன.

ஹாலண்ட் பயங்கரவாதத்தின் மீதான யுத்தம் என்ற பெயரில் உலகெங்கிலும் உள்ள தனிநபர்களை குறிவைத்து சட்டத்திற்கு புறம்பான வகையில் படுகொலை செய்வதற்கான, அதன் இரகசிய நடவடிக்கைகளைப் பயன்படுத்துவதை முடுக்கிவிட்டுள்ளார்.

அதேவேளை, அரசாங்கமானது சார்லி ஹெப்டோ அலுவலகங்கள் மீதான ஜனவரி 7 தாக்குதலுக்குப் பின்னர், புதிய கொடூர கண்காணிப்பு சட்டம் முழு மக்கள் தொகையையும் உளவறிவதற்கு அரசுக்கு பரந்த அதிகாரங்களை அளித்துள்ளதால், பிரான்ஸ் முழுவதும் 10,000 துருப்புக்களை நிறுத்தி பராமரிக்க திட்டமிட்டுள்ளது.

ஹாலண்டே அப்பட்டமாக பின்வருமாறு கூறினார்,” நம்பிக்கையான ஆயுதப்படைகள் இல்லாமல், நாம் அரசியல்ரீதியாக செயல்படமுடியாது.”

புதிய கட்டிடத்திற்கான பிரதான காரணங்களுள் ஒன்று, “இராணுவ நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்திற்கு அறிவுறுத்துவதும் குடியரசின் ஜனாதிபதிக்கு செயலாக்கமுள்ள தேர்வுகளை முன்மொழிவதுமாகும்என்று பாதுகாப்பு அமைச்சகம் கருத்து தெரிவித்தது.

பகட்டான இராணுவ வளாகம் திறந்து வைக்கப்பட்டதானது, பணம் இல்லாததால் சமூக சேவைகளை வெட்டுகிறோம் என்று கூறும் சோசலிஸ்ட் கட்சி மற்றும் முழு அரசியல் ஸ்தாபகத்தினதும் கூற்றுக்களை, பிற்போக்குத்தனமான பொய்கள் என்று அம்பலப்படுத்தியுள்ளன. உண்மையில், அரசாங்கமானது பிரெஞ்சு மக்களுக்கும் உலக மக்களுக்கும் எதிரான நடவடிக்கைகளை தயாரிப்பதற்காக Hexagone–Balard கட்டிடத்திற்காக 4 பில்லியன் யூரோக்களை செலவழித்துள்ளது.

4.2 பில்லியன் யூரோக்கள் மொத்த செலவுடைய இந்த ஒப்பந்தம், பாதுகாப்பு அமைச்சகத்தால் 2014க்கும் 2041க்கும் இடையில், ஆண்டுக்கு 150 மில்லியன் யூரோக்களாக செலுத்தப்படும். இந்தப் பணமானது சந்தேகத்திற்கிடமில்லாத வகையில், தொழிலாளர்களுக்கான சமூக செலவினங்களை மேலும் வெட்டுவதிலிருந்துதான் கறந்தெடுக்கப்படும்.

Hexagone-Balard திட்டம், 2009ல் முன்னாள் பழமைவாத ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியால் தொடங்கப்பட்ட, ஒரு பெரும் பெருநிறுவன மோசடி ஆகும். இவ்வளாகத்தை கட்டிய குழுமத்தில் தொலைத்தொடர்பு கட்டுமான நிறுவனம் Bouygues, பாதுகாப்பு மற்றும் மின்னணுவியல் நிறுவனமான Thales, Sodexo மற்றும் Axa Real Estate உள்ளடங்குவன, 1500 தொழிலாளர்கள் அளவில் இதில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Hexagone-Balard நிர்மாணத்தை சுற்றி ஊழல் மலிந்திருந்தது. கட்டுமான ஒப்பந்தங்களை ஏலம் எடுப்பதில் வேண்டியவருக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் ஊழல் பற்றிய சந்தேகங்கள் ஒரு விசாரணைக்கு இட்டுச்சென்றதுடன், ஒரு அதிகாரி மற்றும் ஒரு Bouygues நிறுவன அதிகாரி உள்பட மூவர் குற்றச்சாட்டுக்கு ஆளாகினர்.

பொருளாதார இதழான Challenges ஒரு உதராணத்தை மேற்கோள்காட்டியது, “இரண்டு மின்சார ப்ளக்குகளை (Plug) நிறுவுவதற்கான செலவு 2,274 யூரோ ஆனது…. உதாரணமாக இந்த இரு மின்சார ப்ளக்குகளையும் நிறுவுதல், 13,613.21 யூரோ மதிப்புடைய ஒரு பிரிண்டரையும் ஸ்கேனரையும் நிறுவுவதில் ஒரு பகுதியாக இருந்தது.”

Challenges இதழ், “அந்த விலைகளில், ஸ்கேனர் 18 காரட் தங்கத்தினால் அல்லது பிளாட்டினத்தால், வைரங்களால், நீலக்கற்களால், மாணிக்கங்களால் மற்றும் மரகதக்கற்களால் கட்டாயம் அலங்கரிக்கப்பட்டிருந்தாக வேண்டும்என்று ஒரு முகவர் முரண்நகையாக கூறியதை மேற்காள் காட்டியது.