சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

The way forward in the struggle against austerity in Greece

கிரீஸில் சிக்கனத்திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் முன்னோக்கிய பாதை

Alex Lantier
13 November 2015

Use this version to printSend feedback

கிரீஸில் சிக்கனத்திட்டத்திற்கு எதிரான நேற்றைய ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் பரந்தளவில் நூறாயிரக் கணக்கானவர்கள் பங்குபற்றியமை, தொழிலாள வர்க்கம் ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் சிரிசா (தீவிர இடது கூட்டணி) அரசாங்கத்திற்கு எதிராக போராட தொடங்கியுள்ளது என்பதற்கான ஒரு சமிக்ஞை ஆகும்.

சிரிசா அதன் ஜனவரி தேர்தல் வாக்குறுதிகளைக் காட்டிக்கொடுத்த பின்னர், சிக்கனத் திட்டங்கள் மீதான அதன் ஜூலை 5 வெகுஜன வாக்கெடுப்பில் "வேண்டாமென்ற" பிரமாண்ட வாக்குகள் கிடைத்த பின்னரும், எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. கீழ்நிலை கப்பல் பணியாளர்கள் (Seamen), துறைமுக தொழிலாளர்கள், ரயில் மற்றும் சுரங்கப்பாதை தொழிலாளர்கள், மருத்துவமனை மற்றும் மருந்துத்துறை தொழிலாளர்கள், ஆசிரியர்கள் அனைவரும் அந்த வேலைநிறுத்த அழைப்பைப் பின்தொடர்ந்தனர். உயர்நிலை பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் சிரிசாவின் திட்டமிட்ட சமூக வெட்டுக்களுக்கு எதிராக கிரீஸ் எங்கிலுமான நகரங்களில் பாரிய அணிவகுப்புகளை நடத்தினர்.

வேலைநிறுத்தங்களுக்கு அழைப்புவிடுத்த தொழிற்சங்கங்களுடனான அதன் நீண்டகால கூட்டணியின் அடிப்படையில், சிரிசா, அர்த்தமற்ற விதத்தில் அதன் சொந்த கொள்கைகளுக்கு எதிரான ஒரு வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாளராக காட்டிக் கொண்டது.

தொழிலாளர்கள் மற்றும் பொதுவாக அணிதிரண்ட உழைக்கும் மக்களின் கோரிக்கைகள் குறிப்பாக முக்கியமானதாக மாறிவருகிறது, அவை நவ-தாராளவாத கொள்கைகளுக்கு எதிராகவும், கிரீஸிற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள பொருளாதார மற்றும் அரசியல் மையங்களின் பாகத்தில் நடக்கும் கொள்ளைகளுக்கு எதிராகவும் திரும்ப வேண்டும், என்று சிரிசாவின் தொழிலாளர் கொள்கை துறை அறிவித்தது. நமது மக்களால் எதிர்க்கப்படுகின்ற அதீத நவ-தாராளவாத கொள்கைகளுக்கு எதிரான போராட்டம் இன்னும் அதிக தீவிரத்துடன் தொடர வேண்டும். அனைவருக்கும் வீட்டுவசதி, திருப்திகரமான சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியங்கள், மருத்துவ கவனிப்புகள் மற்றும் கல்விக்காக" சண்டையிட அது சூளுரைத்தது.

என்னவொரு மோசடி! சிரிசாவும் ஐரோப்பிய ஒன்றியமும் 20ஆம் நூற்றாண்டில் தொழிலாள வர்க்கத்தால் வென்றெடுக்கப்பட்ட சகல அடிப்படை சமூக உரிமைகள் மீதும் தாக்குதல் நடத்த ஒருமித்து இயங்கி வருகின்றன. அனைவருக்குமான மருத்துவ பராமரிப்பு இப்போது கிரீஸில் இல்லவே இல்லை, மேலும் சிரிசா அடமானக் கடன்கள் கட்டமுடியாமல் இருக்கும் குடும்பங்களைப் பாரியளவில் வெளியேற்றவும், குறைந்தபட்ச ஓய்வூதியங்களை மாதத்திற்கு 392 யூரோ என்ற அற்பத்தொகைக்கு வெட்டவும் மற்றும் கல்வி நிதி ஒதுக்கீட்டில் புதிய வெட்டுக்களைத் திணிக்கவும் அச்சுறுத்தி வருகிறது.

சிரிசா, தொழிலாள வர்க்கத்தின் ஓர் இரக்கமற்ற எதிரி என்பதற்கு ஒவ்வொரு நாளும் புதிய புதிய ஆதாரங்களைக் கொண்டு வருகிறது. ஒரு "தீவிர இடது" கட்சியாக, அது மக்களைத் தாக்க பொலிஸை பயன்படுத்தாது என்று அது அறிவித்திருந்தது. ஆனால் புதனன்று Giannena இல் Spider General மறுசுழற்சி ஆலையில் வேலைநீக்கங்கள் மற்றும் ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை தாக்கவும் கைது செய்யவும் பொலிஸை அனுப்பியது. நேற்று "புதிய மற்றும் பழைய சிக்கனத்திட்ட புரிந்துணர்வுகள் வேண்டாம்" என்று எழுதிய பதாகைகளை அசைத்து ஏதென்ஸ் சதுக்கத்தில் போராடிவந்த போராட்டக்காரர்களைக் கலைக்க அது பொலிஸைப் பயன்படுத்தியது.

சிரிசாவிற்கு எதிரான சமூக போராட்டத்தின் மேலெழுச்சி, மிக அவசரமாக தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த அரசியல் மற்றும் மூலோபாய மீள்நோக்குநிலையின் தேவையை மட்டுமே உயர்த்துகிறது. சிரிசா அரசாங்கத்தின் வெற்றி, நேற்றைய ஒருநாள் வேலைநிறுத்தம் போன்ற சமூக அணிதிரள்வு வடிவங்கள் தோல்வியடையும் என்பதற்கு ஒரு கூர்மையான எச்சரிக்கையாகும்.

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றிய சிக்கனத்திட்ட தாக்குதல் தொடங்கியதிலிருந்து, கிரேக்க தொழிலாளர்கள் 41 தடவை ஒரு நாள் தேசிய வேலை நிறுத்தத்திற்குக் குறைவில்லாமல் நடத்தி உள்ளனர், இவை மிகவும் சாதகமான கொள்கைகளை ஏற்க அரசாங்கத்திற்கு அழுத்தமளிப்பதற்காக என்று கூறப்பட்டது. இவை அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த பசோக், புதிய ஜனநாயகம் மற்றும் சிரிசா அரசாங்கங்களின் சிக்கனத் திட்ட கொள்கைகளை மாற்றவோ அல்லது சொல்லக்கூடிய அளவிற்கு கூட மெதுவாக்க கூட இல்லை. ஒட்டுமொத்தமாக அவை கிரேக்க தொழிலாளர்களின் வாழ்க்கை தரங்கள் மீது இரண்டாம் உலக போரின் நாஜி ஆக்கிரமிப்பிற்குப் பிந்தைய மிகப்பெரியளவில் தாக்குதலை நடத்தியுள்ளன.

தொழிற்சங்க போராட்டங்களை கட்டுப்பாட்டில் கொண்டுள்ள கட்சிகள்அதாவது பசோக் மற்றும் அத்துடன் தன்னைத்தானே "தீவிர" கட்சிகள் என்று அறிவித்துக்கொள்ளும் சிரிசா போன்ற கட்சிகள்சிக்கனத்திட்டத்தை  ஆதரிக்கின்றன என்பது சிரிசா அரசாங்கத்துடனான அனுபவத்திற்குப் பின்னர், பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு தெளிவாகி உள்ளது. அவை யூரோ, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவுடன் அதன் உறவுகளைப் பொறுப்பேற்றுள்ளதும் மற்றும் மில்லியன் கணக்கான வேலையற்றோருக்கு புதிய வேலைகளை உருவாக்க இலாயகற்று, மரணப்படுக்கையில், அதன் கடன்சுமையால் முடமாகி கிடக்கும் கிரேக்க முதலாளித்துவத்துடன் தொழிலாள வர்க்கத்தைப் பிணைக்கின்றன.

இன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு, கிரீஸில் சிரிசா காட்டுக்கொடுப்பின் அரசியல் படிப்பினைகள்" எனும் விளக்கமான அறிக்கை ஒன்றை பிரசுரிக்கிறது, அது இந்த பிற்போக்குத்தனமான அரசியல் ஸ்தாபகத்திற்கு எதிராக போராட முனையும் தொழிலாளர்கள், இளைஞர் மற்றும் சோசலிச-சிந்தனை கொண்ட புத்திஜீவிகளுக்கு முன்னால் உள்ள பாதையை விளக்கும்.

கிரேக்க கடன் நெருக்கடியை மீள ஆராய்ந்தும் மற்றும் அதன் கொள்கைகளை நியாயப்படுத்துவதற்கான சிரிசாவினது வாதங்களை மறுத்தும், அந்த அறிக்கை சிரிசா ஒரு பிற்போக்குத்தனமான, தொழிலாள வர்க்க விரோத கட்சி என்பதை அம்பலப்படுத்துவதன் வரலாற்று மற்றும் அரசியல் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டுகிறது. தொழிலாள வர்க்கம் "இடது" முதலாளித்துவ அரசாங்கங்களை தேர்ந்தெடுப்பதன் மூலமாக, முன்னொருபோதும் இல்லா இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்தும் மற்றும் ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்தின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களில் இருந்தும் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியாது.

அக்டோபர் 1917 இல் ரஷ்ய தொழிலாளர்கள் விளாடிமீர் லெனின் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கியின் போல்ஷிவிக் கட்சி தலைமையிலான ஒரு புரட்சியில் முதலாளித்துவத்தை தூக்கியெறிய ஏன் நிர்பந்திக்கப்பட்டது என்பதை தொழிலாள வர்க்கத்திற்கு நினைவூட்ட வேண்டியுள்ளது. புரட்சிகர பாதையன்றி அங்கே வேறு முன்னோக்கிய பாதை எதுவும் கிடையாது. இதற்கு முதலாளித்துவ வர்க்கத்தின் மீதான ஒரு தாக்குதல், அதன் சொத்துக்களைப் பறிமுதல் செய்தல், தொழிலாள வர்க்கத்தால் வங்கிகள் மற்றும் பிரதான உற்பத்தி சக்திகள் கைப்பற்றப்படுதல், ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் சோசலிச கொள்கைகளைப் பின்பற்றுவதற்காக தொழிலாளர் அரசுகளை உருவாக்குதல் ஆகியவை அவசியமாகும்.

அத்தகைய புரட்சிகர போராட்டங்களில் தொழிலாள வர்க்கத்திற்குத் தலைமை கொடுக்க கிரீஸ் மற்றும் சர்வதேச அளவில் எந்த அரசியல் மற்றும் வரலாற்று அடித்தளத்தில் கட்சிகளைக் கட்ட வேண்டும் என்பதையும் அந்த அறிக்கை விளங்கப்படுத்துகிறது. அது சிரிசா உடனான ஒட்டுமொத்த குட்டி-முதலாளித்துவ கட்சிகளின் சர்வதேச சகோதரத்துவம் மற்றும் அதன் மீதான மார்க்சிச-விரோத கல்வியாளர்களின் அனுதாப வட்டங்களால் சிரிசாவின் கொள்கைகளுக்கு வழங்கப்பட்ட நியாயப்படுத்தும் விளக்கங்களிலிருந்து சிரிசா மீதான ICFI இன் ட்ரொட்ஸ்கிச விமர்சனத்தைப் பிரித்துக்காட்டும் வர்க்க இடைவெளியை அது பகுத்தாராய்கிறது.

இத்தகைய அரசியல் சக்திகள் சிரிசாவைப் புகழ்ந்துரைத்ததுடன், அது தேர்ந்தெடுக்கப்பட்டமை சிக்கனத் திட்டத்திற்கு எதிரான ஒரு மிகச் சிறந்த முன்னோக்கிய படி என்று தவறாக முன்கணித்து, தொழிலாள வர்க்கத்தின் மீதான அதன் தாக்குதல்களை அலட்சியப்படுத்தி பிரதிபலிப்பு காட்டின. அவர்களது தனிச்சலுகை கொண்ட வர்க்க நலன்களில் வேரூன்றியிருந்த அவர்களின் கண்ணோட்டம், மறைந்த பேராசிரியர் Ernesto Laclau இன் பகுத்தறிவற்ற, "மார்க்சிசத்திற்குப் பிந்தைய" பிரகடனங்களில் அதன் மிகவும் வக்கிரமான வெளிப்பாட்டைக் கண்டன. தொழிலாள வர்க்கம் ஓர் அரசியல் சக்தியாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்பது சிரிசாவிற்குள் பாரியளவில் செல்வாக்கு செலுத்துவதாக அவர் வலியுறுத்தினார். இன்றோ, அத்தகைய சக்திகள் அரசியல் பிற்போக்குவாதிகளாக, கிரேக்க மக்கள் மீதான சிரிசாவின் தாக்குதல்களில் உடந்தையாளர்களாக அம்பலப்பட்டு நிற்கின்றன.

ட்ரொட்ஸ்கிசத்தின் கோட்பாடுகள் மற்றும் வரலாற்று தொடர்ச்சியை அது பாதுகாப்பதன் அடிப்படையில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே சிரிசாவை எதிர்த்ததுடன், அது தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துமென எச்சரித்தது. அந்த அறிக்கை சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ மீட்சியின் போதிருந்த முதலாளித்துவ-சார்பு கட்சிகளுக்குள் சிரிசாவின் பல்வேறு ஸ்ராலினிச மற்றும் முன்னாள்-மாணவர் தீவிர கன்னைகள் பரிணமித்ததை குறித்த ICFIஇன் பகுப்பாய்வை தொகுத்தளிக்கிறது. சிரிசாவைக் குறித்த தனித்துவமான மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய எச்சரிக்கைகளை விடுக்க அதுபோன்ற பகுப்பாய்வுகள் ICFI ஐ அனுமதித்தது, அது புரட்சிகர மார்க்சிச முன்னோக்கைப் பாதுகாக்கும் தசாப்தகால போராட்டத்தின் ஒரு வரலாற்று நிரூபணமாக நிற்கிறது.

இந்த மரபியத்தின் அடித்தளத்தில் தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு கிரீஸிலும் மற்றும் உலகெங்கிலும் புதிய கட்சிகளைக் கட்டமைக்க முயல்கிறது. அந்த அறிக்கையை வாசித்து விவாதிக்குமாறும், சிரிசா அனுபவத்தின் படிப்பினைகளை வரைந்து, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமையாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைக் கட்டமைக்க போராடுமாறும் நாம் எமது கிரீஸ் மற்றும் உலகெங்கிலும் உள்ள உலக சோசலிச வலைத் தள வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.