சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

After Paris attacks, French government steps up police state measures

பாரிஸ் தாக்குதலுக்கு பின்னர், பிரெஞ்சு அரசாங்கம் பொலீஸ் அரச நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது

By Kumaran Ira
16 November 2015

Use this version to printSend feedback

வெள்ளிக்கிழமை பாரிசில் பயங்கரவாத தாக்குதல் பற்றி விசாரணை சற்றுமுன்தான் தொடங்கியபோதும், பிரான்ஸ் சோசலிசக் கட்சி (PS) அரசாங்கம் தற்போதைய நெருக்கடி நிலையை மூன்றுமாதங்களுக்கு நீட்டிக்கவும் அல்லது மத்திய கிழக்கில் போர்களை இன்னும் உக்கிரப்படுத்துதற்குமாக கொடூரமான பொலீஸ் அதிகாரங்களை கோருகிறது.

நேற்று லிசே ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டத்தின்பொழுது, பிரான்சுவா ஹாலண்ட் 1955ம் ஆண்டு நெருக்கடி நிலை சட்டத்தை திருத்தி அமைக்குமாறு தேசிய சட்டமன்றம் மற்றும் செனட் இரண்டையும் கேட்டுக்கொண்டார். நெருக்கடிநிலையை மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க விரும்புவதாகவும் அதனை மேலும் நீட்டிப்பதற்கு தயாரிப்பு செய்து கொண்டிருப்பதாகவும் அவர் அறிவித்தார். நெருக்கடி நிலையை நெறிப்படுத்தும் 1955ம் ஆண்டு சட்டத்தை அதன் பயன்பாட்டு பொருத்தத்தையும் தாக்குதலுக்குப் பிந்தைய சூழலில் காலவரையறை பற்றியும் திருத்துவதற்கு இரு அவைகளின் சட்ட குழுக்களையும் தான் கேட்டுக் கொள்ளப்போவதாகக் கூறினார்.

அந்த வகையான மசோதா ஒன்று தயாரிப்பில் இருப்பதாகவும் புதன்கிழமை அன்று அமைச்சரவையில் வைக்கப்படப்போவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கணிசமான காலம் தயாரிப்பில் இருந்த எதேச்சாதிகார ஆட்சியை திணிக்க முழு அரசியல் நிறுவனமும்  பயங்கரவாத தாக்குதலைப்  பயன்படுத்திக்கொள்வது அடிப்படை ஜனநாயக உரிமைகளை மிதித்து துவைப்பதாக இருக்கிறது. இது பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டை என்று கூறப்படுகின்ற ஆபிரிக்கவிலும் மத்திய கிழக்கிலும் பிரதான யுத்தங்களை முன்னெடுப்பதற்கு கையோடுகைகோர்த்து செல்கிறது.

நெருக்கடி நிலையை  நீட்டிப்பதற்கான அழைப்பனாது, ஒட்டுமொத்த மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான முழுவீச்சிலான தாக்குதல்களுக்கான ஒரு முன்னோடியை அமைக்கிறது. நெருக்கடிநிலையானது ஊரடங்கை அமல் செய்ய, தனியார் இல்லங்களில் எந்த நேரமும் தன்னிச்சையாக தேடுதல்வேட்டை நடத்த, பத்திரிகைகளை தணிக்கை செய்ய, இராணுவ நீதிமன்றங்களை நிறுவ, விசாரணை எதுவுமின்றி தனிநபர்களை வீட்டுக்காவலில் வைக்க, பொதுஇடங்களை மூட மற்றும் தனிநபரது ஆயுதங்களை சேகரிக்க பிரெஞ்சு அதிகாரிகளுக்கு அனுமதியளிக்கிறது.

தேசிய ஐக்கியம்எனும் சாக்கில், ஹாலண்ட் நேற்று நவபாசிச தேசிய முன்னணி (FN), வலதுசாரி  ரிபப்ளிகன்ஸ் (LR), மையவலது ஜனநாயக இயக்கம் (MoDEM), மற்றும் சோசலிஸ்ட் கட்சி தொடர்புள்ள இடது முன்னணி தலைவர்களை சந்தித்தார். இச்சக்திகள் அனைத்தும் நெருக்கடிநிலைக்கு தமது முழு ஆதவையும் தெரிவித்தன மற்றும் ஹாலண்டின் போர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான ஆழமான தாக்குதலின் பரந்த நிகழ்ச்சிநிரலுக்கும் ஆதரவு தெரிவித்தன.

 “எமது வெளிவிவகார கொள்கையில் ஒரு விலகல், மற்றும் எமது உள்நாட்டு பாதுகாப்புக் கொள்கைகளில் பெரும் மாறுதல் என, பொருத்தமான பதிலளிப்பு நமக்குத்தேவைஎன்று பழமைவாத முன்னாள் ஜனதிபதி நிக்கோலா சார்க்கோசி (LR) கூறினார்.

பிரான்சின் உள்நாட்டு ஆட்சிக்கான பெரும் மாறுதல் திட்டமிடப்பட்டு வருகின்றன என்பதன் அரசியல் உள்ளடக்கம், FN தலைவர் மரின் லூ பென் எலிசே மாளிகைக்கு உத்தியோகபூர்வ வரவேற்பை மீண்டும் பெற்ற ஹாலண்டின் முடிவால் வெளிச்சம்போட்டுக் காட்டப்பட்டுள்ளது. ஹாலண்ட் உடனான சந்திப்புக்கு பின்னர், மரின் லூ பென், “தேசிய ஐக்கியத்திற்கும்” “உறுதியான முடிவுகளுக்கும்அழைப்பு விடுத்தார்.

நெருக்கடிநிலை மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்படுவதை ஆதரித்து அவ்வம்மையார் குறிப்பிட்டார், “நாங்கள் உடன்பாடு கொள்வதில் பொதுநியதிகளைக் கொண்டுள்ளோம்.” பிரான்சின் புறநகர்ப்பகுதிகளில் சமூக நெருக்கடிகள் ஆழமடைய, அவற்றில் பெரும்பாலானோர் 21 சதவீதத்திற்கும் மேல் வேலையின்மையில் இருக்க, லூ பென், நெருக்கடிநிலையானது, “புறநகர்ப்பகுதிகளை நிராயுதபாணியாக்க, தேடுதல்வேட்டைகளை மேற்கொள்ள, நிக்கோலா சார்க்கோசியின் கீழ் எங்கும் ஏற்கனவே வைக்கப்பட்ட ஆயுதங்களை கண்டறிய பயன்படுத்தப்படவேண்டுமென கேட்டுக்கொண்டார்.

பிரான்சின் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பரந்த அளவில் நற்கருத்து இல்லாத நிலைக்கு மத்தியில், சிக்கன நடவடிக்கைகளுக்கும் யுத்தத்திற்கும் பெருகிவரும் வேலை இன்மைக்கும் வளர்ந்து வரும் எதிர்ப்பானது, ஆளும் வர்க்கத்தை, சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்த வைக்கும், கொள்கைகளை மேலும் வலதுபுறம் நகர்த்துவதை தவிர்த்து அதனால் வேறு ஒன்றும் வழங்கமுடியாது.

லூ பென்னின் நவ பாசிச சினப்பேச்சுக்கள் அரசாங்கத்தின் ஸ்தாபக கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட வெளிப்படையான எதேச்சாதிகார முன்மொழிவுகளால் எதிரொலித்தன.

LR பொதுச்செயலாளர் Laurent Wauquiez, பிரெஞ்சு மண்ணில் வசிக்கும், தங்களது பயங்கரவாத தொடர்புகளின் காரணமாக உளவு கோப்புகளை கொண்டிருக்கும் 4000 பேர்களை, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு போரின்போது அரசியல் காரணங்களுக்காக சிறைவைக்கும் முகாம்களில் வைக்க வேண்டும்என்று அழைப்பு விடுத்தார்.

உளவு சேவைகளால் அவர்கள் பயங்கரவாதத்துடன் சில தொடர்புகளை கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வதன் அடிப்படையில் மட்டுமே, பெரும் எண்ணிக்கையிலான மக்களை போரின்பொழுது அரசியற்காரணங்களுக்காக வைக்கும் முகாமில் சிறை வைப்பது என்ற முன்மொழிவு என்பது, சர்வாதிகாரத்திற்காக வழங்கப்படும் ஒரு வெற்றுக்காசோலையாகும்.

சனிக்கிழமை அன்று, பிரதமர் மானுவல் வால்ஸ் TFI தொலைக்காட்சிக்கு, “நாம் செயல்படுவோம், நாம் தாக்குவோம், அழிப்பதற்காக இந்தப் பகைவரை தாக்குவோம்…. குடியரசின் பகைவர்களை அழித்தொழிப்போம், இந்த அனைத்து தீவிரப்போக்குடை இமாம்களையும் வெளியே தள்ளுங்கள், நாம் ஏற்கனவே செய்துவருவதுபோல், தங்களின் தேசிய அடையாளத்தின் பிரெஞ்சு உணர்வை கேவலப்படுத்தும் அவர்களை தோலுரியுங்கள்.”

வெள்ளிக்கிழமை நடைபெற்ற துயரமானது, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா முழுதுமான ஏகாதிபத்திய யுத்தங்களின் கொடூரமான விளைவாகும். பயங்கரவாதத்தை எதிர்த்து சண்டை இடுவதாக சிடுமூஞ்சித்தனமாக கூறிக்கொள்ளும் அதேவேளை, நேட்டோ அரசுகள் பாரிசில் தாக்குதலை நடத்திய அதே பிற்போக்கு இஸ்லாமிய சக்திகளைத்தான், லிபியாவிலும் சிரியாவிலும் ஆட்சிமாற்றத்திற்கான யுத்தத்தில் பினாமிகளாக பயன்படுத்துகின்றன. இந்த இஸ்லாமிய சக்திகள் உள்நாட்டுப்போர்களை கொளுந்துவிட்டு எரியச்செய்யவும் கொடுமைகளை புரியவும் மேற்கத்திய உளவுநிறுவனங்களாலும் அவர்களின் பாரசீக வளைகுடா கூட்டாளிகளாலும் நிதியூட்டப்பட்டு ஆயுதம் அளிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆரம்ப விசாரணைகள், பயங்கரவாதிகள், Charlie Hebdo மற்றும் the Hyper Cacher க்கு எதிரான ஜனவரி தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட Amedy Coulibaly மற்றும் Kouachi சகோதரர்கள் போன்ற முந்தைய துப்பாகிதாரிகளை போலவே இவர்களும் மேற்கத்திய உளவுநிறுவனங்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்று கூறுகின்றன.

இருப்பினும், பாரிஸ் தாக்குதல்களானது பல சீரிய பிரச்சினைகளை எழுப்புகிறது, அதாவது பல வருடங்களாக உளவு சேவைகளுக்கு சந்தேகத்திற்குரியவர்களாக தெரிந்திருந்த, இந்நபர்கள், பயணம்செய்து, ஆயுதம் பெற்று மற்றும் வெள்ளி அன்று நன்கு திட்டமிட்ட ஒரு தாக்குதலை தயாரித்ததுபிரெஞ்சு, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க புலனாய்வு பிரிவுகளின் கண்ணில் படாமல் முற்றிலும் தப்பியதுபோன்று தெரிவது எப்படி சாத்தியம் என்ற கேள்வியை எழுப்புகிறது. வெள்ளிக்கிழமை தாக்குதலில் சம்பந்தப்பட்ட ஏழு துப்பாக்கிதாரிகளில், மூன்று பேர் பிரெஞ்சு குடிமகன்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர், குறைந்த பட்சம் அவர்களுள் ஒருவர் உளவு சேவைகளுக்கு அறிந்தவராக இருந்தார்.

Bataclan தியேட்டர் தற்கொலை குண்டுவெடிப்பாளர் 30 வயது Ismaël Omar Mostefaï, கறுப்பு போலோ காரில் வந்து  தியேட்டரில் தாக்குதல் நடத்திய மூன்றபேர்களில் ஒருவர். இவர் 2004 மற்றும் 2010க்கு இடையில் சிறுசிறு குற்றங்களுக்காக தண்டனைபெற்றவர், அவரது இஸ்லாமிய தீவிரத்தின் காரணமாக பிரெஞ்சு உளவுத்துறையால் கண்காணிக்கப்பட்டு வந்தவர். 2010ல் அவர், தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக கருதப்பட்ட தனிநபர்களுக்காக சட்ட அமலாக்கத்துறையால் பயன்படுத்தப்படும் ஒருஎஸ்கோப்பில் சேர்க்கப்பட்டிருந்தார். அவர் 2013க்கும் 2014க்கும் இடையில் சிரியாவுக்கு பயணம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஏனைய இருவர் பெல்ஜியத்தில் வசித்தவர்கள். முப்பத்தொரு வயதான Ibrahim Abdeslam இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட சீட் வாகனத்தை வாடகைக்கு அமர்த்தியவர் மற்றும் Comptoir Voltaire café இல் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டவர் என்று அரசு வழக்குத் தொடுப்பாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய இன்னொருவர் Bilal Hadfi பெயர்கொண்ட இவர், சிரியாவில் ISIS க்காக சண்டையிட்டவர் என்று நம்பப்படுகிறது.

பிரெஞ்சு மற்றும் பெல்ஜியம் போலீசார் வார இறுதியில் திடீர் சோதனைகளை நடத்தி, தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று அப்தேஸ்லாம் சகோதரர்கள் உள்பட டசின் கணக்கானோரை கைது செய்துள்ளனர். Bataclan தியேட்டரில் தாக்குதல் நடத்திய குழுவால் பயன்படுத்தப்பட்ட கறுப்புநிற வோல்க்வாகன்  போலோ காரை வாடகைக்கு எடுத்ததாக கருதப்படும் 26 வயதான சலாஅப்தேஸ்லாம்-க்கான சர்வதேச கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெல்ஜியம் அதிகாரிகள் பாரிஸ் தாக்குதல்களுடன் தொடர்புடையதாக தாங்கள் சந்தேகப்படும் ஏழுபேர்களை கைதுசெய்துள்ளதாக கூறினர். பிரெஞ்சு தற்கொலை குண்டுவெடிப்பாளர்களில் இருவர் வசிக்கும் புருஸ்ஸெல்சின் Molenbeek-Saint-Jean மாவட்டத்தில் ஐவர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு பெல்ஜியம் யூத அருங்காட்சியகத்தின் மீதான தாக்குதலில் நான்குபேரைக் கொன்ற Mehdi Nemmouche யும்கூட இந்தப் பகுதியில்தான் வசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெல்ஜியம் அதிகாரிகள் இந்த பகுதியில்நெருக்குதலுக்குஅழைப்புவிடுத்த பிறகு, பிரதம மந்திரி சார்லஸ் மிக்கேல் பின்வருமாறு கூறினார், “அது கிட்டத்தட்ட எப்போதும் Molenbeek உடன் தொடர்புடையதாக இருப்பதாக நான் பார்க்கிறேன். அங்கு பெரும் பிரச்சினைஅண்மைய மாதங்களில் தீவிரமயமாக்கலுக்கு எதிரான போராட்டத்தில் பல முன்முயற்சிகள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்கின்றன, ஆனால் மேலும் ஒடுக்குமுறை நமக்கு தேவைப்படுகிறது. உள்ளூர் அதிகாரிகளுடன் தீவிரமாக நாம் வேலைசெய்வோம்.”