சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

After the Paris terror attacks: A drumbeat for military escalation and internal repression

பாரீஸ் பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர்: இராணுவ விரிவாக்கம் மற்றும் உள்நாட்டு ஒடுக்குமுறைக்காக முரசு ஒலிக்கிறது

Bill Van Auken
17 November 2015

Use this version to printSend feedback

பாரீஸில் 129 அப்பாவி பொது மக்களின் உயிர்களைப் பலிகொண்ட கொடூர பயங்கரவாத தாக்குதல்களுக்கு பிந்தைய சில நாட்களில், அமெரிக்க அரசியல் ஸ்தாபகம் மற்றும் ஊடகங்களுக்குள் இருந்து வரும் விடையிறுப்பு பிற்போக்குத்தனமானவை என்று அனுமானிக்கத்தக்க அளவில் உள்ளன. ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிக் அரசால் (ISIS) நடத்தப்பட்ட அந்த தாக்குதல்கள் மீதான அதிர்ச்சியை சுரண்டி, பழிதீர்க்கும் ஆசைகளைத் தூண்டிவிட்டு, அரசியல்வாதிகளும் பண்டிதர்களும் மற்றும் ஊடகங்களும் வெளிநாடுகளில் இராணுவ ஆக்கிரமிப்பைத் தீவிரப்படுத்துவதற்கும் மற்றும் உள்நாட்டில் பொலிஸ் அரசு ஒடுக்குமுறை பிரச்சார தாக்குதலுக்கும் முரசு கொட்டத் தொடங்கியுள்ளனர்.

அவர்களில் சிஐஏ இயக்குனர் ஜோன் பிரென்னன், பாரீஸ் தாக்குதல்கள் ஓர் "விளித்தெழும் மணியாக" சேவையாற்ற வேண்டுமென அறிவித்து, மிகவும் அறிவு மழுங்கிய நிலையில் முன்னணியில் உள்ளார். பயங்கரவாதத்தை எதிர்க்கும் பெயரில் நடத்தப்பட்ட அமெரிக்க மற்றும் ஒட்டுமொத்த உலக மக்கள் மீதான பரந்த அரசு உளவுபார்ப்பைக் குறித்து "கையைப் பிசைந்து கொண்டிருப்பதை" முடிவுக்குக் கொண்டு வர அவர் முறையிட்டார்.

ஒபாமா நிர்வாகத்தின் குடியரசுக் கட்சி விமர்சகர்களிடையே, சிரியாவிற்குள் மற்றொரு அமெரிக்க சாகச படையை அனுப்புவதற்கான அழைப்புகள் உட்பட மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ தலையீட்டின் ஒரு கூர்மையான தீவிரப்பாட்டுக்கு கோரிக்கைகள் இருந்தன. முன்னாள் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் மிட் ரோம்னி ஞாயிறன்று வாஷிங்டன் போஸ்டில் பிரசுரமான ஒரு தலையங்க கட்டுரையில், அமெரிக்கா "வெற்றி பெறுவதற்கு என்னென்ன ஆதாரங்கள் தேவையோ அத்தனையும், தரைப்படை துருப்புகளும் கூட, அர்பணிக்க" வேண்டும் என்று கூறி, “ISIS மீதான போருக்கு" அழைப்புவிடுத்தார். அதற்கடுத்த ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், அவர், சிரியாவிற்குள் பத்தாயிரக் கணக்கான துருப்புகளை அனுப்புவதை இது குறிக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தினார்.

துருக்கியின் அன்டால்யா ஜி20 கூட்டத்தில் திங்களன்று பராக் ஒபாமாவின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஊடகங்களின் நடவடிக்கைகள் இன்னும் நிறையவே எடுத்துரைக்கின்றன, அங்கே அமெரிக்க ஜனாதிபதி ISIS ஐ "தீமையின் உருவடிவாக" வர்ணித்து, "இந்த காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத அமைப்பை பலவீனப்படுத்தி இறுதியில் அழிப்பதே" வாஷிங்டனின் நோக்கம் என்று அறிவித்தார்.

பிரதான அமெரிக்க செய்தி நிறுவனங்களின் செய்தியாளர்கள், ஒருவர் மாற்றி ஒருவர், இன்னும் ஆக்ரோஷமான இராணுவவாத கொள்கையை அறிவிப்பதற்காக ஜனாதிபதியை சீண்டிவிட எழுந்தனர்.

CBS: “ஈராக் மற்றும் சிரியாவில் ஓராண்டுக்கும் அதிகமான குண்டுவீச்சு நடவடிக்கை மேற்கில் தாக்குதல்களை தொடங்கியுள்ள ISIS இன் ஆற்றலையும் நோக்கங்களையும் தடுத்துவிடவில்லையே. நீங்கள் அவர்களின் ஆற்றல்களைக் குறைமதிப்பீடு செய்துவிட்டீர்களா? இன்னும் ஆக்ரோஷமான நடவடிக்கை எடுப்பதற்காக அமெரிக்க படைகள் ஈடுபடும் விதிமுறைகளை நீங்கள் விரிவாக்குவீர்களா?”

ABC: “ ...மற்றொரு மத்திய கிழக்கு போரில் நுழைய நீங்கள் தயங்குவதாக உங்கள் விமர்சகர்கள் கூறுகிறார்கள் அதைக் குறித்தும், இராணுவத்தைப் பயன்படுத்துவதில் முன்னுரிமையில் உள்ள உங்களின் இராஜாங்க அணுகுமுறை குறித்தும், எது அமெரிக்காவை பலவீனப்படுத்தி நமது எதிரிகளைப் பலப்படுத்துகிறது என்பதைக் குறித்தும் கூறுங்கள்.”

CNN: “நிறைய அமெரிக்கர்கள், அமெரிக்கா உலகிலேயே மிகப்பெரிய இராணுவத்தைக் கொண்டிருப்பதாக காண்பதில், ஏமாற்றம் அடைந்திருப்பதாக நான் நினைக்கிறேன்… என்னுடைய பிரயோக மொழியை மன்னித்துவிடுங்கள், இந்த அயோக்கியர்களை (bastards) நம்மால் ஏன் தகர்க்க முடியவில்லை என்பது தான் எனது கேள்வியாக நான் உணர்கிறேன்?”

இத்தகைய கேள்விகளின் வேட்கை தெளிவாக உள்ளது. ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் குழப்பம் மற்றும் மனிதகுல படுகொலையில் மூழ்கடித்துள்ள, அமெரிக்காவின் "பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்" 14 க்கும் அதிகமான ஆண்டுகளுக்குப் பின்னர், அமெரிக்க ஆளும் ஸ்தாபகத்தின் ஒரு கணிசமான பிரிவிடமிருந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இன்னும் அதிக மரணகதியிலான வெடிப்புக்கு முறையீடு அதிகரித்து வருகிறது.

இந்த பொங்கிவழியும் போர்வெறியால் திட்டமிட்டு என்ன மறைக்கப்படுகிறது என்றால், பாரீஸ் இல் பயங்கரவாத தாக்குதல்களும், ISIS ஐ அதுவே கூட, இந்த எண்ணெய் வளம்மிக்க பிராந்தியத்தின் மீது அமெரிக்க மேலாதிக்கத்தைத் திணிக்கும் நோக்கில், அண்மித்தளவில் ஒன்றரை தசாப்தகால அமெரிக்க இராணுவ தலையீட்டின் நேரடி விளைபொருள்கள் என்ற உண்மையாகும்.

ஈராக்கிற்கு எதிராக தூண்டுதலற்ற அமெரிக்க ஆக்கிரமிப்பு போர் மற்றும் அதைத் தொடர்ந்து அந்நாட்டில் வகுப்புவாத பிளவுகளைச் சூழ்ச்சி செய்து தூண்டிவிட்ட அமெரிக்காவின் பிரித்தாளும் மூலோபாயம் ஆகியவற்றின் துணைவிளைவுகளாக ISIS எழுச்சி பெற்றது. ஒரு மதசார்பற்ற ஏதேச்சதிகாரியான சதாம் ஹூசைனைப் புஷ் நிர்வாகம் தூக்கியெறிந்ததுடன், ஒபாமா நிர்வாகம்—பிரான்சுடன் சேர்ந்து— லிபியாவில் ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்க-நேட்டோ போரைத் தொடங்கி, மற்றொரு இராணுவ சாகசத்தை மேற்கொண்டது. ஏகாதிபத்தியவாதிகள் ISIS மற்றும் அல் கொய்தா உடன் கூட்டு சேர்ந்த இஸ்லாமிய போராளி குழுக்களை அவற்றின் பினாமி தரைப்படை துருப்புகளாக பயன்படுத்தின.

இரண்டாவது மதசார்பற்ற ஆட்சியாளரான மௌம்மர் கடாபியைப் பதவியிலிருந்து கவிழ்த்து படுகொலை செய்வதில் வெற்றி பெற்று, லிபியாவை தோல்வியடைந்த மற்றும் நிரந்தர உள்நாட்டு போரில் இருக்கும் நிலையில் விட்டதைப் போல, ஒபாமா நிர்வாகம் இதே "வெற்றியை" சிரியாவில் மீண்டும் நடத்த முடிவெடுத்தது, அங்கேயும் அது ஒரு உள்நாட்டு போரைத் தூண்டிவிட்டது. லிபியாவிலிருந்து, கொண்டு செல்லப்பட்ட பரந்த ஆயுத கையிருப்புகளைக் கொண்டு வளர்ந்த அதே இஸ்லாமிய அமைப்புகளையும், அத்துடன் மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா எங்கிலிருந்து அழைத்துவரப்பட்ட வெளிநாட்டு போராளிகளின் ஓர் இராணுவத்தையும் அது பயன்படுத்தியது.

இப்போது, சிரியாவில் சுமார் பாதியளவிற்கும் மற்றும் ஈராக்கில் மூன்றில் ஒரு பங்கையும் கைப்பற்றுவதில் ISIS வெற்றி கண்டுள்ள நிலையில், வாஷிங்டன் இந்த இஸ்லாமிய அமைப்பின் மீது "போரில்" ஈடுபடபோவதாக கூறுகிறது. இந்த கூட்டுவேலையில் சவூதி அரேபியா, கட்டார் மற்றும் துருக்கி ஆகியவை அதன் பிரதான கூட்டாளிகளாக விளங்குகின்றன, அவை மதரீதியிலான-சித்தாந்த தூண்டுதலை, நிதி ஆதாரங்களை மற்றும் ஆயுதங்களையும் வழங்கியுள்ளன, இவை அங்கே ISIS வெற்றி பெறுவதற்கு அனுமதித்துள்ளன.

ஓராண்டு விமான தாக்குதல்களுக்கு பின்னர் ஈராக்கிற்கு ஆயிரக் கணக்கான அமெரிக்க துருப்புகளை அனுப்பியும் மற்றும் இப்போது சிரியாவிற்கு சிறப்புப்படை பிரிவுகளை அனுப்பியும் கூட, இந்த "போர்" ISIS இன் புவியியல்ரீதியிலான பரப்பையோ அல்லது துருப்புகளின் பலத்தைக் குறைப்பதிலோ நடைமுறையளவில் ஒன்றும் செய்யவில்லை என்றால், இது தற்செயலான விடயமல்ல. அப்பிராந்தியத்தில் ஈரான், ரஷ்யா மற்றும் சீனாவின் செல்வாக்கை பலவீனப்படுத்தும் மற்றும் இன்னும் அதிக அபாயகரமான இராணுவ மோதல்களுக்குத் தயாரிப்பு செய்துவரும் ஒரு பரந்த மூலோபாயத்தின் பாகமாக, சிரியாவில் ஆட்சி மாற்றம் செய்வதே வாஷிங்டனின் பிரதான நோக்கமாகும். சிரிய அரசாங்கத்தின் துருப்புகளுக்கு எதிராக ISIS சண்டையிடும் அளவுக்கு, அது அமெரிக்காவின் ஒரு கூட்டாளியாகி நிலைத்திருக்கும்.

பாரீஸ் சம்பவங்களில் ஒபாமா "தீமையின் உருவடிவைப்" பார்ப்பதாக கூறுகின்ற அதேவேளையில், ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் அரசாங்கத்தை ஆதரிப்பதில் சிரிய மத சிறுபான்மையினர்கள் மற்றும் மக்களுக்கு எதிராக ISIS முன்பில்லாத அளவில் இரத்தந்தோய்ந்த அட்டூழியங்களை நடத்திய போது, அங்கே அமெரிக்காவிடம் இருந்தோ அல்லது அதன் கூட்டாளிகளிடம் இருந்தோ எந்த சத்தமும் வரவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் அதிகமாக நடந்துவரும் உள்நாட்டு போரில், சிரியா மக்களின் அன்றாட சராசரி மரணங்களின் எண்ணிக்கை கடந்த வெள்ளியன்று பாரீஸில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.

அனைத்திற்கும் மேலாக, பாரீஸ் தாக்குதல்கள் இஸ்லாமிய குழுக்களின் தொடர்ச்சியான வெளிநாட்டு தாக்குதல்களில் சமீபத்தியது மட்டுமே ஆகும். அக்டோபர் 31 இல் 224 பேர் கொல்லப்பட்ட ஒரு ரஷ்ய பயணிகள் விமானம் சிதறடிக்கப்பட்டதற்கு ISIS தான் பொறுப்பு என்ற ஊகங்கள் நிலவுகின்ற நிலையில், சிரியாவில் அதன் தலையீட்டுக்காக மாஸ்கோ அவமானப்படுவதைப் பார்க்கும் ஆவலுடன், மேற்கத்திய ஊடகங்கள் குரூர திருப்தியுடன் அதை வெளிப்படுத்தியதே தவிர அதற்காக எந்த கோபமும் காட்டவில்லை.

அதேபோல, கடந்த வாரம் தெற்கு பெய்ருட்டில் தொழிலாள வர்க்க புறநகரில் குறைந்தபட்சம் 43 பேர் கொல்லப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பு, ஏறத்தாழ அமெரிக்க ஊடகங்கள் எல்லாவற்றாலும் ஒரு "ஹெஸ்பொல்லாஹ் இரும்புபிடி" மீதான தாக்குதலாக அறிவிக்கப்பட்டது, அசாத் அரசாங்கத்திற்கு ஷியா இயக்கம் ஆதரவளித்ததனால் பலியான அந்த அப்பாவி மக்களுக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்தது என்று மீண்டும் கூறப்பட்டது.

பயங்கரவாதம், உள்ளது உள்ளவாறே, அமெரிக்க ஆளும் ஸ்தாபகத்தின் ஒரு முக்கிய பிரச்சினையாக பார்க்கப்படவில்லை. துருக்கியில் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒபாமா பேசுகையில், அவரது "மிக நெருக்கமான இராணுவ மற்றும் படைத்துறைசாரா ஆலோசகர்கள்" பத்தாயிரக் கணக்கான துருப்புகளை சிரியாவிற்குள் அனுப்புவது சிறப்பானதாக இருக்காது என்று அவருக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாக தெரிவித்தார்.

பாரிய அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறை எந்திரத்திற்குள் உள்ள இத்தகைய கூறுபாடுகளின் நிலைப்பாட்டிலிருந்து பயங்கரவாதம் என்பது வாஷிங்டனின் எதிரிகளுக்கு எதிராக திருப்பி விடப்படும்போது ஒரு பயனுள்ள தந்திரமாகி இருக்கிறது. அதுவே, அமெரிக்காவையும் அதன் கூட்டாளிகளையும் தாக்கும்போது, அது மொத்த கொடுக்கல் வாங்கல் செலவின் சிறியதொரு பாகமாக இருக்கிறது. மேலும் அதை இராணுவவாதத்தை அதிகரிப்பதற்கும் மற்றும் அரசியல் எதிர்ப்பை ஒடுக்குவதற்கும் ஒரு சாக்காக சுரண்டிக்கொள்ள முடிகிறது.

முடிவாக, ஒபாமாவின் "ஆலோசகர்கள்" மிகப்பெரிய விடயங்களை மனதில் கொண்டிருக்கிறார்கள். ஒரு வாரத்திற்கு சற்று முன்னதாக, அமெரிக்க பாதுகாப்பு செயலர் அஷ்டன் கார்ட்டர் உரையாற்றுகையில், வாஷிங்டனின் நலன்களுக்கு பிரதான அச்சுறுத்தலாக இருப்பது, ISIS அல்லது பயங்கரவாதம் அல்ல, ரஷ்யாவும் சீனாவும் தான் என்று வலியுறுத்தினார். அதன் தீர்க்கவியலா நெருக்கடி மற்றும் முரண்பாடுகளால் உந்தப்பட்டு, அமெரிக்க ஏகாதிபத்தியம் மனிதகுல வரலாற்றில் பாரிய பயங்கரமான ஒரு பிரமாண்ட நடவடிக்கைக்கு, அதாவது மூன்றாவது உலக போருக்குத் தயாரிப்பு செய்து வருகிறது.