சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French president exploits terror attacks to suspend democratic rights

ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் செய்வதற்கு பிரெஞ்சு ஜனாதிபதி பயங்கரவாத தாக்குதலை பயன்படுத்திக் கொள்கிறார்

By Alex Lantier and Stéphane Hugues
17 November 2015

Use this version to printSend feedback

ஈராக்கிலும் சிரியாவிலும் உள்ள இஸ்லாமிக் அரசால் (ISIS) வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பதில்கொடுக்கும் விதத்தில், வெர்சாய் இல் பாராளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் ஆற்றிய உரையில் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட், ஜனநாயக உரிமைகள் மீதாக முழுவீச்சில் தாக்குதல் தொடுப்பதற்கு அவர் நோக்கம் கொண்டிருக்கிறார் என்பதை தெளிவுபடுத்தினார். ஹாலண்டின் பேச்சானது பிரான்சில் எதேச்சாதிகார வடிவ ஆட்சியை திணிப்பதை நோக்கிய ஒரு முன்னோக்கிய அடிவைப்பை குறித்து நிற்கிறது.

ஹாலண்டினால் முன்மொழியப்பட்ட இந்நடவடிக்கைகள், அரச அதிகாரத்தை பொதுநிர்வாக அமைப்புகளிடமிருந்து இராணுவ அமைப்புக்களுக்கு மாற்றவும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை தற்காலிகமாக இடைநிறுத்தவுமான அதிகாரங்களை தன்னிச்சையாக செயற்படுத்துவதற்ககான உரிமைகளை ஜனாதிபதிக்கு வழங்குகின்றது. பிரெஞ்சு குடியரசு, சம்பிரதாயமாக கலைக்கப்படாவிட்டாலும், ஜனநாயக கோட்பாடுகளை மூர்க்கத்தனமான வகையில் மீறுகின்ற முறையில் தொழிற்படும்.

ஹாலண்ட் வார இறுதியில் நாடுமுழுவதும் ஏற்கனவே ஒரு அவசரகால நெருக்கடிநிலையை அறிவித்துள்ளார். இப்பொழுது, அவர் பிரெஞ்சு சட்டத்தின் கீழ் உள்ள பல்வேறு சட்டரீதியான விதிவிலக்கான நிலையைமாற்றி அமைப்பதற்கு பிரெஞ்சு அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி எழுதுமாறு முன்மொழிகிறார். மூன்று மாதங்களுக்குள் பிரான்சை நிலையான நெருக்கடி நிலைமையின் கீழ் ஆளுவதற்கு அவரை அனுமதிக்கும் ஒரு சட்ட ஆயுதத்தை ஒருங்கிணைத்து அமைத்துக் கொள்வதற்கு அவர் நோக்கம் கொண்டுள்ளார்.

வருகை தந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர் கூறினார்:” நெருக்கடிநிலையை 12 நாட்களுக்கும் அப்பால் மூன்று மாதங்களுக்கு நாம் நீட்டிப்போம், நீங்கள் நீட்டிப்பீர்கள். ஆனால் இந்த அவசரகால நெருக்கடிநிலைக்கு பின்னர், சட்டரீதியான ஆட்சியுடன் இயைந்த வகையில் பயங்கரவாதத்தை எதிர்த்து நாம் போரிடக்கூடிய முறையில் கட்டாயம் இருக்க வேண்டும். அச்சுறுத்தல் நீடித்த ஒன்றாக இருப்பதனால், ISIS க்கு எதிரான போராட்டம் நாட்டிற்கு உள்ளேயும் சரி வெளியேயும் சரி எமக்கு நீண்ட காலத்தை எடுக்கும். நீதிமுறைக்கும் பாதுகாப்பு படைகளுக்கும் இருக்கும் வழிமுறைகளை கணிசமாக வலுப்பபடுத்த நானும்கூட முடிவெடுத்திருக்கிறேன்,”

அதன்படி அரசியல் யாப்பை மாற்றி அமைப்பதற்கு பிரதம மந்திரி மானுவல் வால்சுடன் வேலை செய்யுமாறு பாராளுமன்றத்திற்கு அவர் ஆணையிட்டார். “சூழ்நிலைகளை முற்றிலும் உணர்ந்தவகையில், போர் நடவடிக்கைகளை எதிர்கொள்கையில் பொது நிர்வாக அதிகாரிகள் சட்டத்தின் ஆட்சிக்கு ஒத்துப்போகும் வகையில் நடப்பதற்கு வளர்ச்சிபெறுகிறவாறு எமது அரசியலமைப்பு சட்டத்தை அனுமதிக்க வேண்டும் என நான் கருதுகிறேன். ஆட்சிகள் நன்கு ஒத்துழைக்கமுடியாத வகையில் இரண்டு தற்போதைய வாசகங்கள் இருக்கின்றன.”

ஹாலண்டின் படி, ஜனாதிபதிக்கு முழு அவசரநிலை அதிகாரங்கள் வழங்கியதாக நம்பப்படும் சட்ட ஷரத்து 16 மற்றும் முற்றுகை நிலையை அமல்படுத்தும் சட்ட ஷரத்து 36 இவை நாம் எதிர்கொள்ளும் நிலைமைக்கு பொருத்தமற்றதாகஇருக்கின்றன. அவை, நெருக்கடிநிலைக்கு எந்த உதவியும் கோரவேண்டிய நிலை இல்லாத மற்றும் பொது சுதந்திரத்தை செயற்படுத்தலுடன் சமரசம் செய்துகொள்ளாத, குறிப்பிட்ட காலத்துக்கு, விதிவிலக்கான நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும் ஒரு பொருத்தமான கருவிக்கான வழியை செய்தாக வேண்டும்.

அரசாங்கம் பொது சுதந்திரத்துடன் சமரசம் கொள்ளவிரும்பாத என்ற கடைசி கூற்றானது ஒரு அரசியல் மோசடி ஆகும்.

ஹாலண்ட் பிரான்சில் பல்வேறு வகையான நெருக்கடிநிலையை தேவைப்படி மாற்றுவதற்கு முயல்கிறார், ஏனெனில் அவரது அரசாங்கம், அவை வழங்கும் அபரிமிதமான அதிகாரங்களை காலவரையற்ற காலத்திற்கு பயன்படுத்த நோக்கங்கொண்டிருக்கிறது, ஹாலண்டின் குறிப்புக்கள் ISIS அல்லது வேறு எந்த பயங்கரவாத அமைப்பும் பிரான்சுக்கு அச்சுறுத்தலாக கருதப்படும்வரை நெருக்கடிநிலையை பராமரிப்பதற்காகும். இது சர்வாதிகாரத்தை அமல்படுத்த வழி அமைக்கிறது.

1955 சட்டத்தின் விதிகளின் கீழான அவசரநிலையானது, ஊரடங்குகளை அமல்படுத்தவும், “பத்திரிகை, வானொலி ஊடகங்களை கட்டுப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளை எடுக்கவும், தனிநபர்களது வசிப்பிடங்களில் தேடுதல் மற்றும் கைப்பற்றுதல்களை மேற்கொள்ளவும், கூட்டங்களை தடைசெய்யவும் மற்றும் இராணுவ நீதிமன்றங்களை அமைக்கவும் அரசை அனுமதிக்கிறது.

நேற்று உள்துறை அமைச்சர், பேர்னார்ட் கஸெனேவ் (Bernard Cazeneuve) தனது போர்வெறிப் பேச்சில், நெருக்கடிநிலையால் வழங்கப்படும் அனைத்து சட்ட முறைகளும் முற்றிலும் முழுமையாகவும் பயன்படுத்தப்படவேண்டுமென வலியுறுத்தினார். அவற்றின் முதற் பயன்படுத்தல், “வெறுப்பை பிரச்சாரம் செய்யும் அல்லது வெறுப்பை ஊக்குவிக்கும் மசூதிகளை கலைப்பதாக இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சட்ட ஷரத்து 16 ஆனது, “குடியரசின் அமைப்பு வடிங்கள், தேசத்தின் சுதந்திரம், அதன் எல்லைப்புற ஒருமைப்பாடு, அல்லது அதன் சர்வதேச செயற்பாடுகளை மேற்கொள்வது உடனடியான வகையில் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகும்பொழுது, மற்றும் அரசியலமைப்பு ரீதியாக பொது அதிகாரிகளின் வழமையான செயற்பாடு தொல்லைகளுக்கு ஆளாகும்பொழுது....” முழுமையான மற்றும் எதேச்சதிகாரமான அதிகாரங்களை ஜனாதிபதிக்கு அனுமதிக்கிறது.

ஆயினும், பிரதிநிதிகளும் செனெட்டர்களும், இந்த நிலைமைகளை உண்மையில், சந்தித்தால் ஜனாதிபதியின் பிரகடனத்தை கேள்விக்கு உட்படுத்த அரசியலமைப்பு சபையில் மேல்முறையீடு செய்யலாம். தற்போது, பாரிசில் கொடூரமான சாவு எண்ணிக்கை இருந்தபோதும், ISIS பிரெஞ்சு குடியரசின் அனைத்து ஸ்தாபனங்களுக்கும் அல்லது பிரான்சின் சுதந்திரத்திற்கும் எல்லைப்புற ஒருமைப்பாட்டிற்கும் அச்சுறுத்தலாக இருக்க முடியும் என்று கூறுவது அபத்தமாக இருக்கும்.

பிரெஞ்சு செனெட்டால் வெளியிடப்பட்ட பொது விவரத் தொகுப்புபடி, முற்றுகை நிலையானது, “(1) பொலீஸ் அதிகாரங்களை செயற்படுத்துவதில், பொதுநிர்வாக அதிகாரிகளுக்கு பதிலாக இராணுவ அதிகாரிகளை பதிலீடு செய்வது; (2) இராணுவ அதிகாரிகள் இரவுபகலாக தேடுதல் மற்றும் கைப்பற்றுதல்களை மேற்கொள்கையில், முற்றுகைநிலையில் உள்ள பகுதிகளில் தொடர்நிகழ்வுகளில் குற்றம்சாட்டப்பட்டோர் அல்லது வீடற்றவர் பகுதிகளில் தேடுகையில், ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் பறிமுதல் செய்கையில், மற்றும் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் வெளியீடுகள் மற்றும் கூட்டங்களை தடை செய்வதில் பொலீஸ் அதிகாரிகளை நீட்டிப்பது; (3) அரசு பாதுகாப்புக்கு, அமைப்புக்களுக்கு அல்லது பொது ஒழுங்கிற்கு எதிரான பாதகச்செயல்களில் ஈடுபடல் அல்லது சிறுகுற்றங்களில் ஈடுபடல் போன்றவற்றில் குற்றம் சாட்டப்பட்ட குடிமக்களை இராணுவ தீர்ப்பாயங்கள் விசாரிக்கும் திறன் ஆகியவற்றால்பண்பிடப்படுகிறது.

ஆயினும், தற்போதைய பிரெஞ்சு சட்டப்படி, முற்றுகை நிலையானது தேசத்தின் மண்ணின் ஒரு பகுதியானது போர் அல்லது ஆயுத எழுச்சி நிலைமைகளின் கீழ் உள்ளபோது மட்டுமே பொருந்தும். இந்த நிலைமைகள் ISIS போன்ற, கிட்டத்தட்ட பிரான்சில் சில நூறு உறுப்பினர்களையே கொண்டிருக்கும் இரகசிய பயங்கரவாத குழுக்கு எதிரான ஒரு போராட்டத்திற்கு தெளிவாகவே பொருந்தாது.

வேறு வழிகள் இல்லாது அத்தகைய நடவடிக்கைகளை நாடுவது பற்றிய அதிகாரபூர்வமான விவாதங்கள், பிரான்சிலும் ஐரோப்பாவிலும் உள்ள முதலாளித்துவ ஆட்சிகள் ஒட்டுமொத்தமும் நெருக்கடியில் நுழைந்துள்ளன என்பதையே கோடிட்டுக்காட்டுகின்றன. முதலாளித்துவ ஜனநாயகம் என்பது பொறிந்துபோன நிலையில் உள்ளது.

சிரிய ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக தொடுக்கப்பட்ட யுத்தத்தில், பிரான்ஸ் உட்பட்ட நேட்டோ ஏகாதிபத்திய வல்லரசுகள் நிதியும் ஆயுதங்களும் வழங்கிய இஸ்லாமிய பயங்கரவாத குழுப்படைகளில் இருந்துதான் ISIS உருவாகியது. இந்த யுத்தத்திற்கான நிலைமைகள் ஐரோப்பாவிற்கும் சர்வதேச ரீதியாகவும் பரவுவதற்கு அவை சூழ்நிலைமைகளை உருவாக்கின. ISIS-ஐ பராமரித்துவரும் நவகாலனித்துவ யுத்தத்தை கைவிடுவதிலிருந்து விலகி, இப்பொழுது ஏகாதிபத்தய வல்லரசுகள் ஜனநாயக உரிமைகள் மீதாக ஒரேயடியான தாக்குதல்களை நடத்துவதற்கு பாரிசில் இடம்பெற்ற துயரத்தை சுரண்டிக்கொள்கின்றன.

இந்த நடவடிக்கைகளை எண்ணிப்பார்க்கும்பொழுது சில வரலாற்று முன்நிகழ்வுகள் காணக்கிடைக்கின்றன. கடந்த காலத்தில் முழு தேசிய எல்லைப் பகுதிகளிலும் அனைத்து அதிகாரங்களும் நெருக்கடிநிலையில் பயன்படுத்தப்பட்டது, விடுதலைக்கான அல்ஜீரிய மக்களின் போராட்டத்தை இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்க பிரெஞ்சு ஏகாதிபத்தியம் முயற்சிக்கையில், 1954-1962 அல்ஜீரிய போரின் பொழுது இது பிரயோகிக்கப்பட்டது.

ஆயினும், இச்சட்டத்தின் ஷரத்துக்கள் செயல்படுத்தப்பட்டது, 2005ல் புறநகர்ப்பகுதியில் ஏற்பட்ட பெரும் கலவரத்திற்கு எதிராக அவசரகாலநிலை பிறப்பிக்கப்பட்ட பொழுதாகும். Zyed Benna மற்றும் Bouna Traoré எனும் இரு இளைஞர்கள் பொலீசிலிருந்து தப்புகையில் கொல்லப்பட்டதை தொடர்ந்து ஏழ்மைமிக்க இந்த புலம்பெயர் சமூகத்தில் இந்த கிளர்ச்சிகள் எழுந்தன.

கடந்த நூற்றாண்டில் பிரெஞ்சு அரசின் தலைவருக்கு இருமுறை மட்டுமே இவ்வாறான முழு அதிகாரங்கள் வழங்கப்பட்டன. 1940ல் விச்சியில் நாஜி ஒத்துழைப்பு சர்வாதிகாரம் நிறுவப்படுகையில் மார்ஷல் பெத்தானுக்கு (Pétain) வழங்கப்பட்டது, மற்றும் அல்ஜீரியாவில் பிரெஞ்சு ஆட்சியின் நெருக்கடியின் உச்சநிலையில் 1961ல் தளபதிகளின் படுகொலையில்ஜெனரால் டு கோலுக்கு வழங்கப்பட்டது.

இத்தகைய வரலாறுகளுடன் சேர்த்துப் பார்க்கையில், இன்று இந்த கொள்கைகளை திணிப்பதானது பிரான்சிலும் ஐரோப்பா முழுமையிலும் சமூகப் பதட்டங்கள் வெடிக்கும் மட்டங்களை அடைந்து கொண்டிருக்கின்றன என்ற உண்மையை கோடிட்டுக்காட்டுகின்றது. ஐரோப்பிய முதலாளித்துவமானது உக்ரேன் முதல் மத்திய கிழக்கு மற்றும் மாலி வரை அதன் என்றுமிராத வகையிலான பரந்த யுத்தங்களை பின்பற்றுவதுடன் சேர்ந்து, அதன் சிக்கன கொள்கைகளாலும், சமூக சமத்துவமின்மையின் விரைந்த வளர்ச்சியாலும் அவப்பெயர் பெற்றுள்ளது. அதிகரித்த அளவில் ஏழ்மை அடைந்துள்ள மற்றும் அவதிக்குள்ளான மக்களுக்கு வழங்குவதற்கு அவற்றிடம் ஒன்றுமில்லை.

பிரெஞ்சு அரசால் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் ISIS-ஐ குறிவைப்பதாக மேலோட்டமாக தோன்றினாலும், ஹாலண்டால் வடிவமைக்கப்பட்டவாறான எதேச்சாதிகார ஆட்சியை நிறுவுவதற்கான பிரதான காரணம், மக்களில் பெரும்பான்மையாக உள்ள தொழிலாள வர்க்கத்தை ஒடுக்குவதற்காகும்.

முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி, “தற்போது உளவு ஆவணத் தொகுப்பில் இருக்கும் 11,500 பேர்களைஅவர்கள் ஆபத்தானவர்களா என மதிப்பிடுவதற்கு நமக்கு கால அவகாசம் அளிக்க, அவர்களுக்கு மின்னணுவியல் வளையமிட்டு வீட்டுக்காவலில் வைக்குமாறு ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளார். அவரது வலதுகரமான லோரோன் வோக்கியே (Laurent Wauquiez), “அரசியல் காரணங்களுக்காக போரின்பொழுது தடுத்துவைக்கும் தடுப்புக்காவல் முகாம்களைகட்டுமாறு அழைப்பு விடுத்தார்.

கடுமையான அரசியல் எச்சரிக்கைகள் தேவையாக இருக்கின்றன. செய்திஊடகத்தில் ஹாலண்டின் பேச்சுக்கும் முதலாளித்துவ எதிர் கட்சிகளின் போர்வெறிக் கூச்சல்களுக்கும் அபரிமிதமான சாதகமான பதில்நிலைமை இருப்பதானது, ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவாக ஆளும் வர்க்கத்தில் பரந்த ஒருமித்த கருத்து இருப்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது. ஜனநாயகத்திற்கான உண்மையான சமூகத் தளம் தொழிலாள வர்க்கமாகும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் கீழ் சுயாதீனமாக அணிதிரளவேண்டும்.