சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : சிரியா

After Paris attacks, NATO powers press for military escalation in Syria

ாரிஸ் தாக்குதல்களுக்கு பின்னர், நேட்டோ சக்திகள் சிரியாவில் இராணுவ நடவடிக்கை விரிவாக்கத்திற்கு நெருக்குதலளிக்கின்றன

By Alex Lantier
18 November 2015

Use this version to printSend feedback

பாரிஸில் இஸ்லாமிக் அரசு (IS) அமைப்பு வெள்ளியன்று நடத்திய பாரிய பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர், சிரியாவில் நேட்டோ சக்திகளாலும் ரஷ்யாவினாலும் இராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் செயலானது, இரத்தக்கறை கொண்டதாயும் அடாவடித்தனமானதாகவும் இருக்கிறது

ந்தத் தாக்குதலை, ISக்கு எதிராக நேட்டோ, அதன் மத்திய கிழக்கு கூட்டாளிகள், மற்றும் ரஷ்யா உள்ளிட புதிதாக ஒன்றுபட்டிருக்கும் ஒரு சர்வதேச ஐக்கிய முன்னணி உருவாகியிருப்பதன் விளைபொருளாய் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் சித்தரிக்கிறார். ISக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட ஒருபெரும் கூட்டணிஉருவாக தான் எதிர்பார்ப்பதாக திங்களன்று ஹாலண்ட் தனது உரையில் அறிவித்திருந்த நிலையில், ஒபாமாவையும் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினையும் சந்திக்க அடுத்த வாரத்தில் ஹாலண்ட் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

ண்மையில், ஹாலண்டின் ISக்கு எதிரான கூட்டணியாக சொல்லப்படுவது ஒரு அரசியல் கற்பனையாகும்: ஏனென்றால் கூட்டணி உறுப்பினர்களது வெளியுறவுக் கொள்கைகள் ஒன்றுக்கொன்று கடுமையான மோதல்நிலையில் இருப்பவை என்பதோடு, இவற்றில் பலவும் IS அல்லது அதன் கூட்டாளிகளை ஆதரிக்கின்றன. சிரியாவில் ஆட்சியை மாற்றவும் சிரிய ஆட்சியின் மிகச் சக்திவாய்ந்த கூட்டாளியான ரஷ்யாவின் உலகளாவிய செல்வாக்கை பலவீனப்படுத்தவுமான ஒரு மறைமுகப் போரில் நேட்டோ சக்திகள் இஸ்லாமியப் போராளிகளை ஆதரித்திருக்கின்றன.

IS்கு எதிராக தொடுக்கப்படுவதாக தோற்றமளிக்கும் புதிய போர் நடவடிக்கையானது, IS மீது இணைந்து குண்டுவீசும் படைகள் அவை ஒன்றின் மீது மற்றொன்று குண்டுவீசத் தொடங்கும்பட்சத்தில், அது சிரியாவைத் தாண்டிப் பரவி விடக் கூடிய ஆபத்து மிக அதிகமாய் இருக்கிறது. பிரான்ஸ், குறைந்த பட்சம் காகிதத்தில் என்றாலும், கிழக்கு ஐரோப்பாவிலும் மற்றும் உக்ரேனிலும் ரஷ்யாவுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இராணுவப் பெருக்கத்திற்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறது, அதேசமயத்தில் சிரியாவில் ரஷ்யாவுடன் ஒரு இராணுவக் கூட்டணிக்கும் எதிர்பார்த்திருக்கிறது. போரின் மிகப்பெரும் அபாயம் சிரிய மக்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகத்திற்கும் எதிராக நின்று கொண்டிருக்கிறது என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.

ேற்று, பிரெஞ்சு மற்றும் ரஷ்யப் படைகள் சிரியாவில் IS இன் இலக்குகளின் மீது எண்ணற்ற தாக்குதல்களை தொடுத்தன. காலையில், சிரியாவில் ISஇன் கைவசம் இருக்கும் பிராந்தியத்தின் தலைநகரான ரக்கா மீது பிரெஞ்சு படையினர் தாக்குல் நடத்தினர். ஒரு இராணுவச் சாவடி உள்ளிட்ட IS இலக்குகளின் மீது 16 குண்டுகள் வீசப்பட்டன. நேற்றிரவில் இன்னொரு பிரெஞ்சுத் தாக்குதலும் ரக்கா மீது நடத்தப்பட்டதாக ஆரம்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன

ிரியாவில் ரஷ்யா மற்றும் பிரான்சின் இராணுவத் தலைமை மற்றும் உளவுச் சேவைகள் இடையே நெருக்கமான உறவுகள் மற்றும் கூட்டு நடவடிக்கைகள்குறித்து விவாதிக்க ஹாலண்ட் மற்றும் புட்டின் ஒருவரை ஒருவர் அழைத்துப் பேசிக் கொண்டனர் என்று கிரெம்ளின் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஷ்யா, ரக்கா மீது நீண்டதூரம் பறந்துசென்று தாக்கும் ஏவுகணைகளை வீசியதோடு அதன் மூலோபாய குண்டுவீச்சுப் படை இடத்தில் நிறுத்தப்படுவதையும் அறிவித்தது. இப்போது சிரியாவின் லடாகியா துறைமுகத்தில் இருந்து இயங்கி வரும் ரஷ்யப் போர்க்கப்பல்களை பிரான்ஸ் துறைமுகத்தில் இருந்து கிளம்பி நாளை கிழக்கு மத்திய தரைக்கடலுக்கு வந்துசேரவிருக்கும் பிரான்சின் விமானந்தாங்கிக் கப்பலான சார்லஸ் டு கோலின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்குமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளார்.  

"ிமானந்தாங்கிக் கப்பலின் தலைமையில் பிரான்சின் கடற்படை குழு விரைவில் உங்கள் நடவடிக்கை பகுதிக்கு வந்துசேரும். நாம் அதனுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதும் அதனை ஒரு கூட்டாளியாக நடத்துவதும் அவசியமாகும். கடல்வழி மற்றும் வான்வழி நடவடிக்களுக்கு ஒரு கூட்டான செயல்திட்டத்தை உருவாக்குவது நமக்கு அவசியமானதாகும்என்று புட்டின் நேற்று தெரிவித்தார்.

இது, ரண்டு வருட இடைவெளிக்குள், பிரெஞ்சு மற்றும் ரஷ்ய இராணுவங்களுக்கு இடையிலான உறவுகளில் ஏற்பட்டிருக்கக் கூடிய 180 பாகை மாற்றமாகும். 2013 செப்டம்பரில், சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் ஆட்சிக்கு எதிரான அமெரிக்காவின் போர் உந்துதலை பின்பற்றி வந்திருந்த பிரான்ஸ், குண்டுவீச்சு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பாகத்தான் அது கைவிடப்பட்டிருந்த நிலையில், மத்திய தரைக்கடலில் பிரெஞ்சு போர்க்கப்பல்கள் அசாத்தைப் பாதுகாக்க முயற்சித்துக் கொண்டிருந்த ரஷ்யாவின் போர்க்கப்பல்களுக்கு நேரெதிராய் நின்று கொண்டிருந்தன.

ஆயினும் இப்போதைய மாற்றத்தில் பிரான்சினை முழுமையாக பின்பற்றுவதற்கு அமெரிக்கா தயாரிப்புடன் இல்லை என்பதாகவே தோன்றுகிறது. ராய்ட்டர்ஸ் செய்திநிறுவனத்திடம் நேற்று பேசுகையில் ஒரு பெயர் கூறவிரும்பாத அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி வெளிப்பட இவ்வாறு கூறினார், “ரஷ்யாவுடன் அல்லது சிரியாவிலான அதன் நடவடிக்கைகளுடன் நாங்கள் எந்தவிதத்திலும் ஒன்றுபடுவதில்லை அல்லது ஒத்துழைப்பதில்லை.” 

ேற்று பாரிஸில் எலிசே ஜனாதிபதி மாளிகையில் ஹாலண்டை சந்தித்துப் பேசிய அமெரிக்க வெளியுறவுச் செயலரான ஜோன் கெர்ரியும் கூட ரஷ்யாவுடனான இராணுவ ஒத்துழைப்பு எதனையும் ஆதரிக்க மறுத்துவிட்டார். இதற்கு, முதலில் போரில் ஒரு அரசியல் உடன்பாடு அவசியமாக இருக்கிறது என்று அவர் வலியுறுத்தினார். சிரியாசிந்தித்துப் பார்க்கத்தக்க ஒரு மிகப் பெரும் உருமாற்றத்தில் இருந்து சில வாரங்களே தள்ளி இருக்கக் கூடும் என்று கெர்ரி தெரிவித்தார்.

ுக்கியமானதாய், பிரெஞ்சு அரசாங்கத்தின் மூலோபாயத்தை நிராகரித்த அமெரிக்காவின் தலைமை இராஜதந்திர அதிகாரி, பெரும் சக்திகளுக்கு இடையில் சண்டை மூளும் அபாயம் குறித்து வெளிப்படையாக சுட்டிக்காட்டிப் பேசினார்.

ந்த சமயத்தில், நாம் சரியான இலக்குகளையே தாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதையும், இது நமக்குள்ளேயே மோதல் உருவாகக் கூடிய எதனையும் நாம் செய்து கொண்டிருக்கவில்லை என்பதும் நிச்சயப்படுத்திக் கொள்கின்ற விடயமாகும்என்று அவர் கூறினார். “ஆனால், அரசியல் நிகழ்வுப்போக்குகள் இன்னும் அதிக வேகத்தில் நகருமானால், அப்போது தகவல் பரிமாற்றத்தின் மட்டம் இன்னும் உயரத்திற்குச் செல்வது சாத்தியமாக இருக்கும். ... ஆகவே எத்தனை வேகமாய் ரஷ்யாவும் ஈரானும் இந்த நிகழ்வுப்போக்குக்கு உயிர் கொடுக்கின்றனவோ, அத்தனை வேகமாய் வன்முறை குறைந்து, நாம் [IS] மற்றும் அல் நுஸ்ராவைத் தனிமைப்படுத்தி, நமது இலக்கு, என்ன செய்யத் தொடங்கப்பட்டதோ அதனைச் செய்யத் தொடங்க முடியும்.”   

சாத் ிரியாவில் இஸ்லாமிய எதிர்ப்புப் போராளிக்குழுக்கள் சிலவற்றுடன் ஒரு அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டை செய்து கொள்வதன் மூலம் அக்குழுக்கள் ISக்கு எதிராக ஒன்றுபடும்படி செய்ய, அசாத்துக்கு தன்னால் நெருக்குதலளிக்க முடியும் என்று புட்டின் சமிக்கையளித்ததை தொடர்ந்து நேட்டோ சக்திகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நடைபெற்று வருகின்ற தொடர்ச்சியான இராஜதந்திர முன்முயற்சிகளையே கெர்ரி குறிப்பிட்டார் என்பது வெளிப்படையானதாகும். சனிக்கிழமையன்று, வியன்னாவில் ஜி-20 உச்சிமாநாட்டின் பக்கவாட்டில் நடந்த பேச்சுவார்த்தைகளின் போது ஒபாமாவும் புட்டினும் சிரியப் போரை முடிவுக்குக் கொண்டுவரசிரிய தலைமையிலான சிரியா மூலமான அரசியல் மாற்றம்ஒன்றின் மீது கருத்தொற்றுமையை எட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.

திங்களன்று, புட்டின் அறிவித்தார்: “சிரிய எதிர்ப்பாளர்களின் ஒரு பகுதி, ரஷ்ய விமானப் படைகளின் உதவியுடன் ISக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை தொடங்குவது சாத்தியமெனக் கருதுகிறது, அந்த உதவியை செய்வதற்கு நாங்கள் தயாராய் இருக்கிறோம்.” எதிர்ப்பாளர் படைகளும் அசாத் ஆட்சியும் ISக்கு எதிரான தமது முயற்சிகளைவலுப்படுத்தவேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்

உண்மையில், ிரியாவில் அசாத்திற்கு எதிராய் நேட்டோ தொடுத்திருக்கும் மறைமுகப் போருக்கு எந்த முற்போக்கான தீர்வையும் காணத் திறமற்றதாக நேட்டோவும் ரஷ்யாவும் இருக்கின்றன. அம்மக்கள் அதிகரித்துச் செல்லும் புவி-மூலோபாய மற்றும் பொருளாதார மோதல்களால் பிளக்கப்பட்டு, கால் மில்லியன் உயிர்களைக் காவு வாங்கியதோடு 10 மில்லியனுக்கும் அதிகமான மக்களை வீடிழந்தவர்களாக ஆக்கியிருக்கக் கூடிய ஒரு போருக்கு முகம் கொடுத்து நிற்கின்றனர். 1980களில் சோவியத்-ஆதரவு ஆப்கான் ஆட்சிக்கு எதிரான போர் மற்றும் 2011 இல் லிபிய கேர்னல் மும்மார் கடாபியின் ஆட்சிக்கு எதிரான போர் உட்பட அமெரிக்க தலைமையிலான தலையீடுகளால் குறிவைக்கப்பட்ட இத்தகைய ஆட்சிகளின் மீதான முந்தைய போர்கள் நாட்டை உள்நாட்டுப்போருக்குள் மூழ்கடிப்பதிலேயே முடிந்திருக்கின்றன.   

ஏகாதிபத்திய சக்திகளின் ேட்டோ போர்க் கொள்கைகளுக்கு ஆதரவளிக்க ரஷ்யா வேலைசெய்து கொண்டிருக்கும் நிலையில், அக்கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் அணிதிரளுவதே தொழிலாள வர்க்கத்தின் முன்னிருக்கக் கூடிய ஒரேயொரு பாதையாகும். உலகெங்கும் இப்போது தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கக் கூடிய சிரியாவில் இருக்கும் இஸ்லாமியப் போராளிக் குழுக்களுக்கு ஆதரவளித்ததன் மூலம் ஒரு பெருநாசத்தை அக்கொள்கைகள் உருவாக்கின என்பது மட்டுமல்ல, தாயகத்தில் ஜனநாயக உரிமைகள் மீது ஆழமான தாக்குதல்களை நெருக்குவதற்கும் அதனை சுரண்டிக் கொண்டிருக்கின்றன.

ிரான்சினை காலவரையறையின்றி அவசரகால நெருக்கடி நிலை ஒன்றில் வைப்பதற்கு பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டை அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் பிரான்சின் அரசியல் சட்டத்திற்கான உத்தேச மாற்றங்களை முன்வைப்பதை பிரெஞ்சு அதிகாரிகள் இன்று தொடங்க இருக்கிறார்கள்.

ேற்றிரவு, ஜேர்மனி மற்றும் டச்சு தேசிய அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த ஒரு காட்சி ஆட்டத்தை, ஒரு வெடிகுண்டு மிரட்டலின் காரணத்தால் ஜேர்மன் அதிகாரிகள் இரத்து செய்தனர். இந்த விளையாட்டுப் போட்டியின் போது தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இருப்பது குறித்து பிரெஞ்சு உளவுத் துறையும் கூட ஜேர்மன் அதிகாரிகளை எச்சரித்திருந்ததாகக் கூறப்படுகிறது. வெடிகுண்டினைத் தேடி போலிஸ் இந்தப் பகுதியில் ஒரு பாரிய பாதுகாப்பு நடவடிக்கையில் இறங்கியதை அடுத்து விளையாட்டு மைதானம் மூடப்பட்டிருந்தது.

ரு டிரக் வெடிகுண்டாக பயன்படுத்தப்படும் வகையில் வெடிபொருட்கள் நிரப்பிய ஒரு ஆம்புலன்ஸ் வண்டியை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்ததாக கூறி முன்னதாக செய்தித்தாளில் வந்திருந்த ஒரு செய்தியை அதிகாரிகள் மறுத்து விட்டதன் பின்னர், இன்று அதிகாலை வரையிலும், அங்கு வெடிகுண்டு ஏதும் உண்மையில் இருந்ததா என்பது குறித்த தகவல் ஏதும் கிடைக்கவில்லை

வசரமாகக் கூட்டப்பட்ட ஒரு செய்தியாளர் சந்திப்பில் ஜேர்மன் உள்துறை அமைச்சரான தோமஸ் டு மைசியேர் பேசினார், ஆனாலும் என்ன நடந்தது என்பது குறித்த எந்த விபரங்களையும் அளிக்க அவர் முற்றுமுழுதாய் மறுத்து விட்டார்.

ின்னணி என்ன, என்ன நடந்திருக்கக் கூடும், ஏன் நாங்கள் ஆட்டத்தை கைவிட வேண்டி வந்தது, எதனால் அந்த முடிவு மிகத் தெளிவாக எடுக்கப்பட்டது என்பவை தொடர்பான கேள்விகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறதுஎன்றார் டு மைசியேர். “இந்த கேள்விகளை என்னால் புரிந்து கொள்ள முடிந்தாலும், பதிலளிக்க என்னால் இயலாது என்பதைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்... நான் ஜேர்மன் மக்களைக் கேட்டுக் கொள்வதெல்லாம், எங்களை, உள்துறை அமைச்சகத்தை நம்புங்கள், இந்த முடிவை எடுப்பதற்கு நியாயமான காரணங்கள் இருந்தன, ஆனாலும் எந்த மேலதிக விபரங்களையும் வழங்க முடியாத நிலையில் நாங்கள் இருக்கிறோம்.”