சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The media and the Paris terror attacks

ஊடகங்களும் பாரீஸ் பயங்கரவாத தாக்குதல்களும்

Barry Grey
18 November 2015

Use this version to printSend feedback

கடந்த வெள்ளியன்று பாரீஸில் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள், பீதியைத் தூண்டுவதற்கும் மற்றும் மத்திய கிழக்கு போர்களின் தீவிரமயப்படுத்தலை நியாயப்படுத்துவதற்கும் மற்றும் அமெரிக்காவிற்குள்ளும் ஐரோப்பாவிற்குளும் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் ஒரு சர்வதேச ஊடக பிரச்சாரத்தைத் தூண்டியுள்ளன.

ஸ்தாபக ஊடகங்கள் அரசியல் அதிகாரிகளின் சகல வாதங்களையும், அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவர்களின் எரிச்சலூட்டும் அனுதாப அறிக்கைகளையும் மற்றும் கொன்றவர்களைத் தீமையின் உருவடிவமாக கண்டிக்கும் அவர்களது சுய-சேவைக்கு உதவும் கண்டனங்களையும் எவ்வித விமர்சனமின்றி ஏற்றுக் கொள்கின்றன. இது, முந்தைய பயங்கரவாத அட்டூழியங்களையும் மற்றும் இப்போதையதையும் உருவாக்கிய போர்கள் மற்றும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளைச் சட்டப்பூர்வமாக்கும் வகையில், சமீபத்திய தாக்குதலைப் பயன்படுத்திக் கொள்ள வேலை செய்கிறது, அதேவேளையில் பரந்த போர்கள் மற்றும் நேரடியான சர்வாதிகாரத்திற்குக் களம் அமைக்கிறது.

சிரியாவிற்கு கூடுதல் துருப்புகளை அனுப்புவதற்கும் மற்றும் குண்டுவீச்சுக்களுக்குமான அழைப்பு மற்றும் இன்னும் அதிக பரந்தளவிலான அரசு உளவுவேலைகள், புலம்பெயர்வோருக்கு எதிரான கடுமையான கொள்கைகள் மற்றும் ஏனைய ஜனநாயக-விரோத நடவடிக்கைகளுக்கு விடுக்கப்படும் அழைப்புகளுக்கும் எவரொருவரையும் காப்பாற்றுவதற்கும் அங்கே எந்த சம்பந்தமும் இல்லை. அவை மத்தியக் கிழக்கின் எண்ணை ஆதாரவளங்களைக் கைப்பற்றவும் மற்றும் ஏகாதிபத்திய நாடுகளுக்குள் மக்கள் எதிர்ப்பை ஒடுக்கவும் நடைமுறைப்படுத்தப்படும் முன்கூட்டிய திட்டங்களாகும்.

சான்றாக CNN, செனட் உளவுத்துறை குழுவின் ஜனநாயக கட்சி பதவியில் உள்ள டியான் ஃபைன்ஸ்டைனின் ஒரு காணொளி காட்சியைத் திரும்ப திரும்ப ஒளிபரப்பி, செப்டம்பர் 11, 2001 பயங்கரவாத தாக்குதலுக்கு சற்று முன்னர் அவர் முன்கூட்டியே உணர்ந்ததைப் போலவே அவர் இப்போதும் பேரழிவு பற்றி முன்னுணர்ந்திருந்தத்தாக அறிவிக்கிறது.

வாஷிங்டன் போர்ஸ்ட், சிரியாவில் ஜனாதிபதி ஒபாமாவின் கொள்கையை போதுமானளவிற்கு ஆக்ரோஷமாக இல்லையென்று கண்டித்து, செவ்வாயன்று ஒரு தலையங்கம் வெளியிட்டது. அது இந்த மாதம் தொடக்கத்தில் ஒபாமா அறிவித்த அளவை விட அதிகமாக, சிறப்புப்படை துருப்புகளை அதிகரித்தளவில் அனுப்பவும், டிரோன் ஏவுகணைகளைப் பயன்படுத்தவும் மற்றும் சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்தைக் கவிழ்க்கும் ஒரு நடவடிக்கைக்கு களம் அமைக்கும் விதமாக "பாதுகாப்பு பிராந்தியங்கள்" என்றழைக்கப்படுவதை அமைக்கவும் அழைப்புவிடுத்தது.

போஸ்ட் இன் அதே பதிப்பு, “இனியும் அரைகுறை நடவடிக்கைகள் வேண்டாம்" என்று தலைப்பிட்டு, புஷ் நிர்வாகத்தின் முன்னாள் அதிகாரி ஜேம்ஸ் ஜெஃப்ரி இன் ஒரு கட்டுரையைப் பிரசுரித்தது. அது சிரியாவில் ஒரு முழு அளவிலான மரபார்ந்த தரைப்படை போருக்கு கோரிக்கைவிட்டது.

இன்றியமையாதரீதியில் அதே வரி, போஸ்ட் மற்றும் நியூ யோர்க் டைம்ஸில் ரிச்சார்ட் கோஹன் மற்றும் ரோஜர் கோஹன் போன்ற "தாராளவாத" விமர்சகர்கள் என்றழைக்கப்படுபவர்களால் ஊக்குவிக்கப்பட்டது.

அதேநேரத்தில், அரசு அதன் குறியீட்டு முறைகளை (encryption systems) நிறுத்த அனுமதிக்கும் வகையில் அரசு உளவுபார்ப்பு அதிகாரங்களை அதிகரிக்குமாறு இணைய பதிப்புகள், கேபிள் செய்தி சேனல்கள் மற்றும் பத்திரிகை நிறுவனங்களும் உளவுத்துறை மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு விடுக்கப்படும் அழைப்புகளை ஊக்குவித்து வருகின்றன. திங்களன்று, சிஐஏ இயக்குனர் ஜோன் பிரென்னன் கூறுகையில், ISIS அமெரிக்காவைத் தாக்கக்கூடும் என்று கூறியதுடன், பரந்த அரசு உளவுவேலை அதிகாரங்கள் குறித்து "கையைப் பிசைந்து கொண்டிருப்பதை" நிறுத்த பாரீஸ் சம்பவங்கள் ஒரு "எச்சரிக்கை மணியாகும்" (wake-up call) என்று அழைப்புவிடுத்தார்.

வாஷிங்டன் போஸ்ட் செவ்வாயன்று, தேசிய உளவுத்துறை தலைமை நிர்வாகியின் அலுவலக ஆலோசனைக்குழுவினை சேர்ந்த ரோபர்ட் லிட் கடந்த ஆகஸ்டில் அனுப்பிய ஒரு உள்அலுவலக மின்னஞ்சலை மேற்கோளிட்டது. “பலமான குறியீட்டு முறை சட்ட ஒழுங்கிற்கு இடையூறாக இருப்பதாக காட்டக்கூடிய அளவிலான ஒரு பயங்கரவாத தாக்குதல் அல்லது குற்றகரமான சம்பவம்", குறியீட்டு முறையை நீக்க அனுமதிக்கும் சட்டம் நிறைவேற்றுவதற்கு ஒரு நல்வாய்ப்பாக இருக்குமென அது வாதிட்டது.

ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா மற்றும் யேமனில் பெரிதும் நிராயுதபாணியான மக்களுக்கு எதிராக சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு நடைமுறையளவில் இடைவிடாத போர்கள் நடத்தப்பட்டுள்ளன. இத்தகைய போர்கள் பனாமா, ஈராக், சோமாலியா, பொஸ்னியா மற்றும் சேர்பியாவில் அமெரிக்க ஏகாதிபத்திய தலையீடுகளுக்காக நடத்தப்பட்டன, அத்துடன் பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் ஒடுக்குமுறைக்கும் மற்றும் அதன் அரபு அண்டை சமூகத்தவர்களுக்கு எதிரான அதன் ஆக்ரோஷ போர்களுக்கும் அமெரிக்க இராணுவ மற்றும் அரசியல் ஆதரவும், அதனுடன் சேர்ந்து எகிப்து மற்றும் பாரசீக வளைகுடாவில் இரத்தந்தோய்ந்த சர்வாதிகாரங்களுக்கு அமெரிக்காவின் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளன.

இத்தகைய ஏகாதிபத்திய போர்கள் மில்லியன் கணக்கானவர்களைக் கொன்று, ஒட்டுமொத்த நாடுகளையும் சீரழித்து பத்து மில்லியன் கணக்கான மக்களை அகதிகளாக்கி உள்ளன. பிரெஞ்சு ஜனாதிபதி ஹோலாண்ட் மற்றும் அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மன், இதர பிறவற்றில் உள்ள அவரைப்போன்ற தலைவர்களும், பாரீஸ் தாக்குதல்களை "ஒரு போர் நடவடிக்கையாக" அறிவிக்கின்றனர். ஆனால் அந்நாட்டு மக்கள் மீது இரக்கமற்ற போர் நடத்துவதைத் தவிர, அவர்களே என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

பழிவாங்கும் வெறுப்பும் வேட்கையும் கொண்ட ஒரு சூழநிலையை உருவாக்காமல் அத்தகைய குற்றங்களை உங்களால் நடத்த முடியாது. இது தான் 9/11 தொடங்கி கடந்த பதினைந்து ஆண்டுகால பயங்கரவாத தாக்குதல்களின் நிஜமான வேர்கள்.

ஆனால் ஏகாதிபத்திய அரசாங்கங்களின் அடித்தள கொள்கைகளின் சட்டபூர்வதன்மையை கேள்விக்குட்படுத்தாமல், பாரீஸ் சம்பவங்களை குறித்த மழுங்கிபோன ஊடக செய்திகளில் இதுதொடர்பாக நடைமுறைரீதியாக காண்பதே சாத்தியமில்லை. மிகவும் முக்கியமாக, ஊடக விமர்சகர்களும் மற்றும் அரசியல்வாதிகளும் ஈராக் படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பு போன்ற அட்டூழியங்களை வெறுமனே ஒரு "தவறு" என்று உரைக்கின்றன. அவை அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளால் உண்டாக்கப்பட்ட கொடூரங்களை அவற்றின் சரியான பெயரைக் கொண்டு, அதாவது போர் குற்றங்கள் என்று அழைப்பதில்லை.

அவர்களது தார்மீக சீற்றம் எப்போதும் கவனமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அல் நுஸ்ரா போன்ற இஸ்லாமிய ஜிஹாதிஸ்ட் குழுக்களும் மற்றும் ISIS உம் பல ஆண்டுகளாக சிரியாவில் பொதுமக்கள் மீது பாரிய படுகொலைகளை நடத்தி வந்துள்ளன, ஆனால் பதவியிலிருந்து நீக்குவதற்காக இலக்கில் வைக்கப்பட்ட அசாத் ஆட்சிக்கு எதிராக அத்தகைய நடவடிக்கைகள் திருப்பிவிடப்படும்வரையில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள் அவ்வாறான நடவடிக்கைகளை பெரிதுபடுத்தவில்லை அல்லது அதுபோன்ற நடவடிக்கைகளை அரவணைத்துக் கொண்டன.

9/11 இல் தொடங்கி, மேற்கில் நடந்த ஒவ்வொரு மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலும், ஏகாதிபத்திய அரசாங்கங்கள் யாருடன் சேர்ந்து இயங்கியதோ அத்தகைய சக்திகளால் நடத்தப்பட்ட திருப்பித்தாக்கும் சம்பவத்தின் குணாம்சத்தைக் கொண்டுள்ளன. இத்தகைய குற்றங்களுக்கு உடந்தையாய் இருந்தவர்களை உளவுத்துறை மற்றும் பொலிஸ் அமைப்புக்கு நன்கு தெரியும் மற்றும் அவர்கள் பல வழக்குகளில் பின்தொடரப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தவர்களாக இருக்கிறார்கள்.

பாரீஸூம் அதுபோன்றவொரு விடயம் தான். ISIS அதுவே ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பின் மற்றும் சுன்னி மற்றும் ஷியைட் மக்களுக்கு இடையே வகுப்புவாத போர்முறையைத் தூண்டிவிட வாஷிங்டனால் பயன்படுத்தப்பட்ட "பிரித்தாளும்" கொள்கையிலிருந்து உருவான பேரழிவுகரமான உருவாக்கமாகும். ISIS மற்றும் அல் நுஸ்ராவின் முன்னோடி அமைப்புகள் உட்பட அல் கொய்தா உடன் தொடர்புபட்ட இஸ்லாமிய ஜிஹாதிஸ்ட் சக்திகள், லிபியாவில் ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்க-நேட்டோ போரில் பினாமி தரைப்படை சக்திகளாக பயன்படுத்தப்பட்டிருந்தன மற்றும் சிரியாவிலும் நியமிக்கப்பட்டுள்ளன. அல் கொய்தா அதுவே கூட 1980களில் ஆப்கானிஸ்தானில் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான அதன் பினாமி போரில் அமெரிக்கா ஆயுத உதவி வழங்கிய மற்றும் அணித்திரட்டிய இஸ்லாமிய சக்திகளிலிருந்து உருவானதாகும்.

பாரீஸ் தாக்குதல்களின் சூத்திரதாரியாக குற்றஞ்சாட்டப்படும் ISIS செயற்பாட்டாளர் அப்தெல்ஹமீத் அபௌத் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமாக ஐரோப்பாவில் தொடர்ச்சியாக பல தடுக்கப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புபட்டிருந்ததாகவும், ஒரு கொலை பட்டியலில் இடம் பெற்றிருந்ததாகவும் பரந்தளவில் செய்திகள் தெரிவிக்கின்றன. அப்படி இருந்தாலும் குறுக்கீடு இல்லாமல் அவரால் சிரியா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையே போய் வர முடிந்ததாக, ஒரு ISIS காணொளியில், அபௌத் பெருமையாக கூறிக்கொள்கின்றார்.

ஒவ்வொரு ஏகாதிபத்திய நாட்டிலும் மற்றும் உலகின் ஏனைய பெரும்பாலான பகுதியிலும் ஒட்டுமொத்த உலக மக்கள் மீதான பரந்த உளவுபார்ப்பு நடக்கின்ற நிலைமைகளின் கீழ், மற்றும் குற்றங்களுக்கு உடந்தையாய் இருப்பவர்களில் குறைந்தபட்சம் சிலர் கண்காணிப்பில் இருந்ததாக ஒப்புக்கொள்ளப்படுகின்ற நிலையில், ஊடகங்களோ இன்னும் அதிகமாக ஊடுருவிய உளவுபார்ப்பு அதிகாரங்கள் அவசியப்படுவதாக பிதற்றுவது அர்த்தமற்றுள்ளது. ஆனாலும் அது இன்னும் முழுப்பலத்துடன் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

பாரீஸ் தாக்குதல்களும் மற்றும் அவற்றைப் பின்தொடர்ந்து நடந்தவையும் இப்போது ஒரு நிரந்தரமான வடிவமாக மாறியுள்ளன. அமெரிக்க தலைமையிலான போர்கள், ஏகாதிபத்தியவாதிகளாலேயே இயக்கத்திற்குக் கொண்டு வரப்பட்ட சக்திகளால் ஏகாதிபத்திய நாடுகளிலேயே பயங்கரவாத தாக்குதல்களுக்கு இட்டுச் செல்கின்றன. அதற்கு உடந்தையாய் இருந்தவர்கள் அரசுக்கு நன்கு தெரிந்தவர்கள் மற்றும் பல வழக்குகளில் பின்தொடரப்பட்டு வந்தவர்கள் என்பது தெரியவருகின்றது. அப்படி இருந்தாலும், ஏதோவிதத்தில், உளவுத்துறையும் பொலிஸ் அமைப்புகளும் அதுபற்றி முன்கூட்டிய அறிய முடியாமல் இருந்துள்ளனர்.

வெளிநாடுகளில் கூடுதல் இராணுவ ஆக்ரோஷத்தை நியாயப்படுத்த மற்றும் உள்நாட்டில் ஜனநாயக உரிமைகளை இல்லாதொழிப்பதற்காக, பாதுகாப்பின்மை மற்றும் பீதியான ஒரு சூழலை உருவாக்கவும் மற்றும் மக்கள் அதிர்ச்சியைச் சுரண்டவும் ஊடகங்கள் நடவடிக்கைக்குள் இறங்கியுள்ளன.

பொது மக்கள் மத்தியில் அத்தகைய சம்பவங்களின் அரசியல் புரிதலைக் குறித்தோ அல்லது எந்தவிதமான விமர்சனப்பூர்வ மதிப்பீடோ செய்வதைத் தடுப்பதற்காக, இத்தகைய வரலாற்று வடிவம் மறைக்கப்படுகின்றது. இருந்தபோதினும் போர் மற்றும் ஜனநாயக-விரோத நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவு குறித்த ஊடகங்கள் காட்டும் பிம்பத்திற்கும், பரந்த பெருந்திரளான மக்களின் நிஜமான உணர்வுக்கும் இடையே அங்கே ஒரு பரந்த இடைவெளி நிலவுகிறது. பாரீஸ் படுகொலை போன்ற சம்பவங்கள், அவர்கள் ஆதரித்திராத, மத்திய ஆசியா மற்றும் மத்தியக் கிழக்கு போர்களுடன் முழுவதுமாக பிணைந்துள்ளன என்பதை அவர்கள் அறிந்துள்ளனர்.

ஒட்டுமொத்த ஸ்தாபக ஊடகமும், வெளிநாட்டு போர் குற்றங்களுக்கும் மற்றும் உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு குற்றகரமான தாக்குதல்களுக்கும் உடந்தையாய் இருந்துள்ளது. “செய்தி" என்ற போர்வையில் அரசு பிரச்சாரத்தைப் பரப்பும், வாரிவழங்கப்பட்ட போலி-இதழாளர்களும் செய்தி வாசிப்பாளர்களும், அவர்களது பெருநிறுவன எஜமானர்களுடன் சேர்ந்து, சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் இதற்கு பொறுப்பேற்க செய்யப்படுவர்.