சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Employers push to use French state of emergency against workers

முதலாளிகள் தொழிலாளர்களுக்கு எதிராக பிரான்சின் அவசரகால நிலையை பயன்படுத்த தயாராகின்றனர்

By Stéphane Hugues and Alex Lantier 
21 November 2015

Use this version to printSend feedback

பாரிசில் இடம்பெற்ற நவம்பர் 13 பயங்கரவாத தாக்குலுக்கு பின்னர் அமல்படுத்தப்பட்ட அவசரகால நெருக்கடிநிலையால் வழங்கப்பட்ட அதிகாரங்களை, தொழிலாளர்களை கண்காணிக்கவும் ஒடுக்கவும் பயன்படுத்துவதற்கு அழைப்புவிடுக்கும் பிரெஞ்சு முதலாளிகள் கூட்டமைப்பின் பொது அறிக்கையானது, தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு கடும் எச்சரிக்கையைக் கொண்டிருக்கிறது. இஸ்லாமிய அமைப்புக்களுக்கு எதிராக போராடுவதற்கு என்று கூறப்படும், தனக்குத்தானே அரசு வழங்கிக்கொண்ட கொடூரமான அதிகாரங்கள் உண்மையில் தொழிலாள வர்க்கத்தை குறிவைத்தே உள்ளது.

Medef (பிரெஞ்சு முதலாளிகள் கூட்டமைப்பு)-ன் துணைத்தலைவரான Geoffrey Roux de Bézieux, சந்தேகப்படும்படியான கருத்துக்களை அல்லது நடத்தையைக் கொண்டிருக்கும் எந்த தொழிலாளியையும் பொறுப்பில் எடுப்பதற்கு உளவு சேவைகளுக்கும் வர்த்தக முதலாளிகளுக்கும் இடையில் நெருங்கிய ஒத்துழைப்பை ஏற்படுத்துமாறு நேற்று முன்மொழிந்தார்.

யாராவது தீவிர நடத்தையைக் கொண்டிருந்தால், தலைமை நிர்வாக அதிகாரியின் கடமை, மற்ற எந்த குடிமகனைப்போலவே, இந்த நடத்தை பற்றி போலீசிடம் சுட்டிக்காட்டுவதாக இருக்க வேண்டும். ….. வேலைத்தளங்களில் தீவிரப்போக்கு வழக்கமானதைவிட மிகுதியாக இருப்பது பற்றி விழிப்பாக இருக்க எமது உறுப்பினர் நிறுவனங்களுக்கு நான் பரிந்துரைத்துள்ளேன்என அவர் தெரிவித்தார்.

இந்த குறிப்பானது, அவசரகால நெருக்கடிநிலையால் வழங்கப்பட்ட அசாதாரண கண்காணிப்பு நடவடிக்கைகளும் ஒடுக்குமுறை அதிகாரங்களும் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு நேரடி அச்சுறுத்தல் என கோடிட்டுக்காட்டுகிறது.

சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்தின் பொருளாதார சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக எழுந்துவரும் சமூக கோபத்தால் முதலாளிகள் பீதியடைந்துள்ளனர். அவர்கள் ஏர்பிரான்ஸ் தொழிலாளர்கள் மற்றும் பரந்த அளவு ஆட்குறைப்புக்கு தயாரிப்பு செய்துவந்த நிர்வாக அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் ஆகியோருக்கு இடையில் அண்மையில் ஏற்பட்ட மோதலால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிறுவனத்தின் கொள்கையை கண்டனம் செய்து இரு மேலாளர்களின் சட்டைகளைக் கிழித்தெறிந்த பணியாளர்களுக்கு பிரான்ஸ் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் ஆதரவளித்தனர். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்று அழைக்கப்படும் மூடுதிரையின் கீழ், தற்பொழுது பிரான்ஸில் கட்டி எழுப்பப்பட்டுவரும் போலீஸ் அரசை, அத்தகைய தொழிலாள வர்க்க எதிர்ப்பை ஒடுக்குவதற்கு பயன்படுத்த, ஆளும் வர்க்கமானது நோக்கம் கொண்டிருக்கிறது.

முதலாளிகள் எடுத்துக்காட்டாக, வேலைத்தளங்களில், பெண்கள் இஸ்லாமிய பர்தா (முகத்திரை) அணிந்துவருவதை ஒரேயடியாகத் தடைசெய்தல் போன்ற இஸ்லாமிய வெறி நடவடிக்கையை அமல்படுத்த முடியும் என்று De Bézieux சுட்டிக்காட்டினார். De Bézieux படி, “தாக்குதல்களில் இருந்து நாம் இன்னும் அதிர்ச்சியில் இருக்கிறோம் மற்றும் இந்த விஷயம் தொடர்பாக திட்டவட்டமாக எதனையும் செய்யமுடியாது இருக்கிறோம், எப்படியோ அது நிச்சயமாக விவாதத்திற்குரியது.”

தங்கள் தொழிலாளர்கள் இஸ்லாமிய நம்பிக்கையை பின்பற்றுவதிலிருந்து தடுப்பதற்கு சக்திமிக்க வகையில் அனுமதிக்கும், அத்தகைய முடிவானது, தொழிலாளர்களின் மனச்சாட்சிப்படி சுதந்திரம் என்பதன் மீதான கடும், இனவாத தாக்குதலாக இருக்கும். பிரெஞ்சு முதலாளிகளின் உயர்நிலை பிரதிநிதிகள் அத்தகைய தடையை முன்மொழிவது என்ற உண்மையானது, அடிப்படை ஜனநாயக உரிமைகளை செயற்படுத்துவது இனியும் பொருந்திப்போகாத வகையில் சமூகப் பதட்டங்கள் தீவிரத்தின் அளவை எட்டிவிட்டன என்பதை கோடிட்டுக் காட்டுகிறது.

இருந்தபோதிலும் அவசரகால நெருக்கடிநிலையானது தனது நிறுவனத்தில் பர்தாவை தடைசெய்திருக்கும் ஒவ்வொரு முதலாளிக்கும் இந்த முடிவை விமர்சிக்கும் எந்த தொழிலாளியையும் போலீசிடம் பகிரங்கமாக அறிவிக்க வகைசெய்கிறது.

அரசியல் யாப்பில் அவசரகால நெருக்கடிநிலையை உள்சேர்க்கும் PS-ன் மசோதாவின்படி, ஒரு தொழிலாளி அவர் பயங்கரவாதத்தை எதிர்த்தாலும் கூடஅவரது குறிப்புக்களானதுஅவரது நடத்தை, பாதுகாப்புக்கும் பொது ஒழுங்கிற்கும் ஒரு ஆபத்தை கொண்டிருக்கிறது என்று நம்புவதற்கு காரணம்தருவதாக போலீஸ்காரர் முடிவுசெய்யும்வரை, போலீஸ் தொழிலாளியை தடுத்து வைக்க முடியும், அவரது வீட்டில் தேடுதல் வேட்டை நடத்த முடியும் மற்றும் வீட்டிலிருந்து பொருட்களை கைப்பற்ற முடியும், மற்றும் அவரை வீட்டுக்காவலில் வைக்க முடியும்.”

மேலும், Ps-ஆல் தயாரிக்கப்பட்டுவரும் போலீஸ் அரச நடவடிக்கைகள் இஸ்லாமிய நம்பிக்கை உடைய தொழிலாளர்களை மட்டுமே இலக்கு வைத்திருக்கிறது என்று நம்புவது, ஆபத்தானதாகவும் பொய்யாகவும் இருக்கும். பிரான்ஸில் PS அமல்படுத்த விரும்பும் நிரந்தர அவசரகால நெருக்கடிநிலைமையினால் முழு தொழிலாள வர்க்கமுமே அச்சுறுத்துலுக்கு ஆளாகியுள்ளது.

PS ஆல் முன்மொழியப்படும் அரசியல் யாப்பு திருத்தமானது, பயங்கரவாதம் அல்லது இஸ்லாம் பற்றி குறிக்கவில்லை. போலீஸ் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக கருதும் ஒன்றை செய்யும் எந்த தொழிலாளியையும் நசுக்குவதற்கு பாதுகாப்பு படைகளுக்கு அதிக அதிகாரங்களை அது வழங்கும். தானாக வெடித்தெழும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடல், பாலஸ்தீனிய ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றல் ஒரு மேலாளரை முற்றுகை இடல்என தொழிலாளி ஆதரிக்கக்கூடிய அல்லது வரவேற்கக்கூடியவாறு கூறும், ஆனால் போலீஸ் பொது ஒழுங்கிற்கு மாறானது என்று எதிர்க்கும் எந்த ஒரு நடவடிக்கையையும் பற்றிய கருத்தும்கூட, அவரைத் தடுத்து வைக்ககோ வீட்டுக்காவலில் வைக்கவோ போதுமானது.

PS ஆனது, தொழிலாள வர்க்க எதிர்ப்பை நசுக்குவதற்கு குறிப்பாக தாமே கருவிகளை வழங்குவதற்கு இப்பொழுது ஆர்வமாக இருக்கிறது, ஏனெனில் அது பேரளவில் சமூக கோபத்தை தூண்டிவிடும் தொழிலாளர்களது சமூக உரிமைகள் மீது ஆழமான தாக்குதல்களை தொடுக்க முதலாளிகளுடனும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடனும் நெருக்கமாக வேலைசெய்கிறது. ஒரு அவசரகால நெருக்கடிநிலைமை ஊடாக காலவரையறையற்று பிரான்ஸை ஆளுவதற்கு முன்மொழிவதனால், எந்த கோபத்தையும் எதிர்ப்பையும் நசுக்குவதற்கு கொடூரமான அதிகாரங்களை திரட்டுவதற்கு ஹோலண்ட் போலீசை அனுமதிக்கிறார்.

ஏற்கெனவே நவம்பர் தொடக்கத்தில் பிரதம மந்திரி மானுவெல் வால்ஸ், தொழிற்சங்கங்களுக்கும் நிறுவனத்தின் நிர்வாகத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தி ஏற்படுத்தப்பட்ட நிறுவன மட்டத்திலான ஒப்பந்தங்களுக்கான வரவிருக்கும் சீர்திருத்தத்தால், தொழிலாளர் நடத்தை விதியானது முக்கியத்துவம் குறைந்ததாக்கப்படும் என்று அறிவித்தார். மூன்றாண்டுகளுக்கு பின்னர் PS இன் சிக்கனக் கொள்கை, தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரங்களை கீழறுத்து, அரசாங்கமானது நிறுவனங்கள் தொழிலாளர் விதிகளை மூர்க்கத்தனமாக மதிக்காமல் செய்வதை அனுமதிக்க விரும்புகிறது.

ஆயினும், அந்த நேரம் வால்ஸ் கேள்விக்குட்படுத்தாத ஒரு புள்ளி பிரான்சின் பிரதான தொழிலாளர் ஒப்பந்தமான, நிரந்தர ஒப்பந்தம் (Contrat à durée indéterminée -CDI) ஆகும், பெரும்பாலான பிரெஞ்சு தொழிலாளர்கள் இன்னும் வேலையில் அமரத்தப்பட்டிருக்கும் மற்றும் இன்னும் சொல்லப்போனால் பெரும்பாலான ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளில் உள்ள ஒப்பந்தங்களுடன் ஒப்பிடுகையில் ஆட்குறைப்புக்கு எதிராக பலமான பாதுகாப்பைத் தரும் CDI ஆனது, இப்பொழுது முதலாளிகளால் அழிவுக்குள்ளாக்க இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது. CDI- தாக்குவதன் மூலம், ஆளும் வர்க்கமானது உலக பொருளாதார சூழலின் பரிணாம வளர்ச்சியோடு இயைந்த வகையில் பெரும் அளவிலான ஆட்குறைப்பை அமல்படுத்துவதற்கான சூழ்நிலைமைகளை உருவாக்க விரும்புகிறது.

“CDI இன் கட்டமைப்பானது எமது பொருளாதார தேவைகளுடன் இனியும் ஒத்துப்போகாது,” என்று இந்தவாரம், பிரான்ஸ் Hewlett-Packard-ன் தலைமை நிர்வாக அதிகாரி Gerald Karsenti அறிவித்தார். “இங்கு யாரையாவது ஒருவர் வேலைக்கு அமர்த்தும்பொழுது, பொருளாதார நிலைக்கு தேவைப்படுகின்றவாறு ஆட்களை பணியமர்த்தும் மட்டங்களை எங்கும் ஒருவர் வெட்ட இருக்கும்பொழுது ஒருவர் நெகிழ்ச்சியாக இருப்பதில்லை.”

வேலைகளை உருவாக்குவதற்கு, தொழிலாளரை வேலையிலிருந்து நீக்குதல் முக்கிய தடையாக இருக்கும் சூழலில், தொழிலாளர் ஒப்பந்தத்தை மாற்றி அமைத்தல், வேலை உருவாக்குவதை ஊக்கப்படுத்த தீர்க்கமானது,” என்று வாழ்க்கைத் தொழில் குழு (Group of Service Professions -GPS) அறிவித்தது.

வாழ்க்கை முழுவதும் ஒரே நிறுவனத்தில் ஒருவர் வேலைபார்க்க முடியுமா? தெளிவாகவே முடியாது!” என GPS தலைவரும் ஆலோசனை நிறுவனமான Accenture இன் Christian Nibourel அறிவித்தார்.

தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான இந்த பிற்போக்கு தாக்குதலை முதலாளித்துவ வர்க்கம் தயாரிக்கையில், தொழிலாளர்களின் அடிப்படை சமூக உரிமைகளை பாதுகாப்பதற்கு, தொழிலாளர்களின் எந்த அணிதிரள்வையும் எந்த ஆர்ப்பாட்டத்தையும் தடைசெய்கின்ற, அவசரகால நெருக்கடிநிலைமையை எதிர்ப்பது அவசியமாகிறது.