சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

இலங்கை: கல்வி வெட்டை நிறுத்துவதற்கு சோசலிச கொள்கைகளுக்காக போராடுவோம்

By the International Youth and Students for Social Equality (Sri Lanka)
24 November 2015

Use this version to printSend feedback

அரச கல்வியை விற்பதை நிறுத்து! சகல தனியார் பல்கலைக்கழகங்களை இரத்து செய்!” என்ற கோஷங்களை சூழ அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (..மா..) நவம்பர் 23 அன்று பேராதனையில் இருந்து கொழும்பு வரை ஆரம்பித்துள்ள ஊர்வலம் இப்போது இடம்பெற்று வருகின்றது. இந்த பிரச்சாரமானது மாணவர்கள் மத்தியில் மட்டுமன்றி பரந்த வெகுஜனங்கள் மத்தியிலும் கல்வி உரிமையை வெட்டுவதற்கும் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்கும் எதிராக வளர்ச்சியடைந்து வரும் ஆழமான எதிர்ப்பின் மத்தியிலேயே முன்னெடுக்கப்படுகின்றது.

அரசாங்கத்தால் தூண்டிவிடப்பட்ட பொலிஸ் தாக்குதல்கள் உட்பட ஒடுக்குமுறை நடவடிக்கைகளையும் எதிர்கொண்டு இடம்பெறும் இந்த எதிர்ப்பு பிரச்சாரம், மாணவர்கள் மத்தியில் வளர்ச்சியடைந்து வரும் போராளிக் குணத்தை உயர்ந்த மட்டத்தில் வெளிப்படுத்தியுள்ளது. எவ்வாறெனினும், கல்வியை வெட்டும், தனியார் பல்கலைக் கழங்களுக்கு இடம் கொடுக்கும் அரசாங்க்தின் கொள்கையை தோற்கடிக்க வேண்டுமெனில், தற்போதைய பிரச்சாரத்தை ஏற்படு செய்துள்ள ..மா.. வேலை திட்டத்திற்கு முற்றிலும் மாறான அரசியல் வேலைத் திட்டம் ஒன்று பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் அவசியமாகும்.

..மா.ஒன்றியத்தின் சாதனைகள்

இம்முறை ஊர்வலத்துக்கு அழைப்பு விடுத்து ..மா.. வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: “மாணவர்கள் ஆட்சியாளர்களின் கல்வி தனியார்மயப்படுத்தல் கொள்கைகளுக்கு எதிராக 1978ல் இருந்தே ..மா.ஒன்றியத்தில் அணிதிரண்டு போராடி வருகின்றனர்.” பிரசுரம் இவ்வாறு கூறுகின்றது: “2008ல் மாலபே கள்ள பட்டமளிப்புக் கடை திறக்கப்பட்ட நாளில் இருந்தே அதற்கு எதிராக மாணவர்கள் பல்வேறு போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர், அறிவுறுத்தினர். ஆனாலும் அரசாங்கம் தனது தனியார்மயமாக்கல் நடவடிக்கையை சுருட்டிக்கொள்ளத் தயார் இல்லை.” 2012 செப்டெம்பர் 24-28 வரை நடந்த ஊர்வலம் அண்மைய அனுபவம் என ..மா.. அறிவிக்கின்றது. இப்போது, “போராட்டம் இன்றி வெற்றி இல்லை என்ற நம்பிக்கைக்குள்இந்த எதிர்ப்பு பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேல்குறிப்பிட்ட விபரங்களை பற்றி கொஞ்சம் திரும்பிப் பார்த்து சிந்திக்கும் எந்தவொரு மாணவருக்கும் அல்லது தொழிலாளிக்கும், கல்வி வெட்டுக்கும் தனியார்மயமாக்கத்துக்கும் எதிராக வெறுமனே எதிர்ப்பு பிரச்சாரம் செய்யும் வேலைத் திட்டத்தின் முழு திவால் தன்மையும் தெளிவாகும். நான்கு தசாப்தங்களாக மேலும் மேலும் உக்கிரமடைந்து வரும் எதிர்ப்புகள் இடம்பெற்ற போதும், தனியார்மயப்படுத்தல் மற்றும் கல்வி வெட்டுக்கள் மேலும் மேலும் உக்கிரமாக்கப்படுவது ஏன் என்ற கேள்விக்கு ..மா.. பதில் அளிக்க வேண்டும்.

முதலாளித்துவ வர்க்கத்தின் தாக்குதல்

உலக அளவில் முதலாளித்துவ நெருக்கடி உக்கிரமடையும் அளவுக்கு, அரச கல்வியை தூக்கி வீசி அதை இலாபமிக்க தொழிற்துறையாக மாற்றும் தாக்குதல்கள் எல்லா நாடுகளிலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் பூராவும் தொழிலாளர்களும் வறியவர்களும் இப்போது 2008 செப்டெம்பரில் அமெரிக்க பிரதான வங்கிகளின் வீழ்ச்சியில் குறிக்கப்பட்டு ஆழமடைந்து வரும் நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார பின்னடைவில் மூழ்கியிருக்கும் முதலாளித்துவத்தின் பொறிவு நிலைக்குள் வாழ்கின்றனர். உலக பொருளாதாரத்தின் மீது ஒட்டுண்ணித்தனமான அதிகாரத்தை ஸ்தாபித்துக்கொண்டுள்ள நிதி மூலதனமும் பெரும் கூட்டுத்தாபனங்களும், பொருளாதாரத்தை எல்லா மூலைகளிலும் திறந்துவிட்டு, இலாபம் சுரண்டும் புதிய நிலைமைகளை உருவாக்குமாறு கோருகின்றன.

அரச செலவுகளை வெட்டுவதற்கு கட்டளை இட்டுக்கொண்டு சர்வதேச நாணய நிதியமானது அந்த பூகோள தேவைகளுக்கு பொருத்தமான விதத்தில் சமூக உரிமைகளை நசுக்கித் தள்ளும் சமூக எதிர்ப்புரட்சியின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு ஆணையிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தின் பின்னர் இப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கமும் இந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. பிரதமர் விக்கிரமசிங்க நவம்பர் 5 அன்று வாசித்த அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையிலும் கடந்த வாரம் நிதி அமைச்சர் முன்வைத்த வரவு செலவுத் திட்டத்திலும் இந்த வேலைத் திட்டமே முன்வைக்கப்பட்டுள்ளது. கல்வித் துறையை எடுத்துக்கொண்டால், பல்கலைக்கழகங்களுக்கு வவுச்சர் முறையை அறிமுகம் செய்வதற்கும், சிறிய மற்றும் மத்திய அளவிலான தொழிற்துறைகளை சார்ந்த உயர் கல்வி பாடவிதானங்களுக்கும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் இடம் கொடுப்பதற்காகவும் விரிவான ஒரு தாக்குதலுக்காக அரசாங்கம் திட்டங்களை வகுத்துள்ளது.

எதிர்ப்பு அரசியல்

சர்வதேச நிதி மூலதனத்தின் தேவைகளினால் தீர்மானிக்கப்பட்டுள்ள முதலாளித்து வர்க்கத்தின் வேலைத்திட்டங்களை வெறும் எதிர்ப்புக்களை காட்டுவதன் மூலம் இரத்துச் செய்ய முடியும் என்ற ..மா.. வேலைத் திட்டமானது மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் வளர்ச்சியடையும் எதிர்ப்பை தணிப்பதற்காக திட்டமிடப்பட்ட ஒன்றாகும். மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பீ.) தலைமைத்துவத்தின் கீழ் 1978 தொடக்கமும், முன்னிலை சோசலிசக் கட்சியின் (மு.சோ..) கீழ் 2012ல் இருந்தும் ..மா.. செயற்படுகின்றது. இந்த இரு கட்சிகளும் முதலாளித்துவ சார்பு கட்சிகளாகும். ..மா.. மற்றும் இந்தக் கட்சிகளதும் தலைவர்கள், இடது மற்றும் போர்க்குணம் மிக்க வார்த்தைகளுக்குள் ஒழிந்துகொண்ட முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுத்து, அவற்றின் கொள்கைகளை மாற்றச் செய்து மாணவர்களுக்கும் மக்களுக்கும் சாதகமான வகையில் முதலாளித்துவத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்ற மாயையை பரப்புகின்றனர்.

மாணவர்களை வங்குரோத்து வேலைத்திட்டத்தின் ஊடாக அரசியல் ரீதியில் நிராயுதபாணிகளாக்கி, பொலிஸ் மற்றும் குண்டர்களின் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர், இரத்தம் வடிதலை சுட்டிக் காட்டி கூச்சல் போடும் பூச்சாண்டி கதைகளின் மூலம் தமது முதலாளித்துவ சார்பு வேலைத் திட்டங்களுக்கு மாணவர்களை கீழ்ப்படுத்திக்கொள்ளும் ..மா..-மு.சோ.. தலைவர்களின் இருப்புக்கு இடம் கொடுக்கக் கூடாது.

சோசலிச வேலைத் திட்டம்

சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் அவற்றின் இளைஞர் அமைப்புகளான இளம் சோசலிஸ்டுகள் மற்றும் இப்போதை சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (.வை.எஸ்.எஸ்..) அமைப்பினதும் கல்வி வேலைத் திட்டம் இதுவே ஆகும்:

பெருந்தோட்டங்கள், வர்த்தகங்கள் மற்றும் வங்கிகளை தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயப்படுத்தும், வெளிநாட்டுக் கடன்களை இரத்துச் செய்யும் சோசலிச வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தொழிலாளர்களின் அரசியல் இயக்கம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு மாணவர்களும் தமது பங்களிப்பை வழங்குவதற்கு முன்வர வேண்டும். அனைத்துலக சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக, முதலாளித்துவ வர்க்க ஆட்சியை தூக்கி வீசி, இலங்கைக்குள் தொழிலாளர்களின்-விவசாயிகளின் அரசாங்கத்துக்காகப் போராடுவோம். மாணவர்கள், தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்பி, புரட்சிகர தலைமைத்துவத்தை கட்டியெழுப்ப ஒன்றிணைவோம்!”

நாம் உண்மையை பேச வேண்டும். ..மா.. அதன் ஜே.வி.பீ. மற்றும் மு.சோ.. போதகர்கள் இந்த வேலைத் திட்டத்தை கடுமையாக எதிர்த்து, மாணவர்களை எதிர்ப்புப் பிரச்சாரங்களுக்குள் சிறைப்படுத்தி நிகழ்கால தாக்குதல்களுக்கு கதவுகளைத் திறந்துவிடும் துரோக வகிபாகத்தை இட்டு நிரப்புகின்றனர்.

சிரிசா அனுபவம்

..மா.. மற்றும் மு.சோ.., கிரேக்கத்தில் சிரிசா இயக்கத்தை புகழ்கின்ற அதே வேளை, தாமும் அதே போன்ற ஒரு இயக்கத்தை இலங்கையில் கட்டியெழுப்ப வேண்டும் என சபதம் செய்கின்றன. சிரிசா என்பது இடது முகமூடி அணிந்த முதலாளித்துவ இயக்கமாகும். அது கடந்த ஜனவரியிலும் பின்னர் செப்டெம்பர் மாதமும் கிரேக்கத்தில் ஆட்சிக்கு வந்து சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்ற முக்கூட்டின் கொடூரமான சுரண்டல் கொள்கையை தொழிலாளர்கள் மீது திணிக்கின்றது.

மாற்றுத் தலைமைத்துவம்

பல்கலைக்கழக மாணவர்கள் ..மா.. மற்றும் மு.சோ.. கொள்கைகளை முழுமையாக நிராகரிக்க வேண்டும். அவர்கள் தமது அறிவையும் பலத்தையும் சோசலிச வேலைத் திட்டத்தை அமுல்படுத்தும் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக அவசியப்படும் புரட்சிகர மார்க்சிஸ தலைமைத்துவத்தை கட்டியெழுப்ப திருப்ப வேண்டும் என .வை.எஸ்.எஸ். கேட்டுக்கொள்கின்றது. மாணவர்கள் தொழிலாளர்களின் பக்கம் திரும்பி, முதலாளித்துவத்தினதும் அரசாங்கத்தினதும் கொள்கைகளை தோற்கடிப்பதற்கு, வேலை நிறுத்தம் மற்றும் வர்க்க நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யுமாறு கோரி தலையீடு செய்ய வேண்டும். அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ள போலி இடதுகள், தொழிற்சங்கங்கள் மற்றும் பல்வேறு சந்தர்ப்பவாத குழுக்களை தோற்கடித்து புரட்சிகர சோசலிச வேலைத் திட்டத்துக்காகப் போராடும் தலைமைத்துவத்தின் அடிப்படையிலேயே வெற்றி தங்கியுள்ளது.

பல்கலைக்கழகத்துக்குள் ..மா.ஒன்றியத்தில் இருந்து பிரிந்து மாணவர்கள் தமது வேலைத்திட்டங்களை கட்டியெழுப்ப வேண்டியது அவசியமகும். இந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நின்று போராடும் .வை.எஸ்.எஸ்.. உடன் இணையுமாறு அனைத்து மாணவர்களுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.