சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : சிரியா

Cameron, Hollande meet to discuss military escalation in Syria

சிரியாவில் இராணுவ விரிவாக்கத்தை விவாதிக்க கேமரூன், ஹோலாண்ட் சந்திக்கின்றனர்

By Robert Stevens
24 November 2015

Use this version to printSend feedback

பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் மற்றும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி கேமரூன் இருவருமே நவம்பர் 13 இல் நடந்த பாரிஸ் பயங்கரவாத தாக்குதல்களுக்கு சிரியாவில் இரத்தந்தோய்ந்த போரைத் தீவிரப்படுத்துவதன் மூலமாக விடையிறுக்க முனைந்துள்ள நிலையில், நேற்று அவர்கள் பாரிஸின் எலிசே மாளிகையில் சந்தித்தனர்.

பிரான்ஸ், இப்போது கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் நிறுத்தியுள்ள அதன் சார்ல்ஸ் டு கோல் விமானந்தாங்கி போர்க்கப்பலில் இருந்து இஸ்லாமிய அரசுக்கு (ISIS) எதிராக சிரியாவில் அதன் முதல் குண்டுவீச்சு நடவடிக்கையை நேற்று தொடங்கியது. சிரியாவில் பிரான்ஸ் தற்போது வைத்திருக்கும் போர்விமானங்களின் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமாக, அந்த விமானந்தாங்கி போர்க்கப்பல் 26 போர்விமானங்களை அனுப்பக் கூடியதாகும்.

இன்று ஹோலாண்ட் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவைச் சந்திப்பார், பின்னர் ஒரு வாரத்தில் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினைச் சந்திப்பார்.

ஹோலாண்ட் உடனான கேமரூனின் சந்திப்பு, சிரியாவில் பிரிட்டிஷ் இராணுவ நடவடிக்கைக்கு இங்கிலாந்து நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ஆதரவைப் பெறும் அவரது மூலோபாயத்தை விட ஒருபடி மேலாக இருந்தது. அவரது அரசாங்கம் சிரியாவில் அதன் குண்டுவீச்சு நடவடிக்கைகளைத் "தீவிரப்படுத்துமென" கூறிய ஹோலாண்ட் உடன் இணைந்து பேசுகையில், கேமரூன் பின்வருமாறு தெரிவித்தார், “சிரியாவில் ISIL [ISIS] தாக்குவதற்கு ஜனாதிபதி ஹோலாண்ட் எடுத்துள்ள நடவடிக்கையை நான் உறுதியாக ஆதரிக்கிறேன், மேலும் பிரிட்டனும் அதேபோல செய்யும் என்பதே எனது திடமான நம்பிக்கை.”

சிரியாவில் குண்டுவீசுவதற்கு சைப்ரஸில் உள்ள பிரிட்டனின் ராயல் விமானப்படை (RAF) தளத்தைப் பிரான்ஸ் பயன்படுத்திக் கொள்ள பிரிட்டன் அனுமதிக்கும் என்றார்.

பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இரண்டுமே வெளிநாடுகளில் ஒரு பாரிய இராணுவ நடவடிக்கைகளின் தீவிரப்பாட்டிற்கும் மற்றும் உள்நாட்டில் பொலிஸ் ஒடுக்குமுறைக்கும் அழுத்தமளித்து வருகின்றன.

ஹோலாண்ட் உடனான அவரது சந்திப்பை அடுத்து உடனடியாக, கேமரூன் இலண்டனுக்குப் பயணித்தார் அங்கே அவர் அரசாங்கத்தின் ஐந்தாண்டு கால மூலோபாய இராணுவ மற்றும் பாதுகாப்பு மீளாய்வு குறித்து ஓர் அறிக்கை அளித்தார். அந்த பழமைவாத தலைவர், நாடாளுமன்றத்தில், பிரிட்டன் "அவசியப்படும் இடத்தில் படைகளைப் பிரயோகிக்கும்" என்று அறிவித்து ஓர் இராணுவவாத நிகழ்ச்சிநிரலை தொகுத்தளித்தார்.

இதுவரையில், ஆயுதப்படைகளுக்கு 12 பில்லியன் பவுண்ட் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது, இது அடுத்த தசாப்தத்திற்கான மொத்த இராணுவ செலவை 178 பில்லியன் பவுண்ட்க்குக் கொண்டு சென்றுள்ளது. இதில் "பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான" வரவுசெலவு திட்டக்கணக்கில் 30 சதவீத உயர்வு, அத்துடன் சிறப்பு படை துருப்புகள் மற்றும் நடவடிக்கைகள் மீது கூடுதலாக 2 பில்லியன் பவுண்ட் ஆகியவையும் உள்ளடங்கும்.

இரண்டு புதிய "தாக்குதல் படைகள்" ஒவ்வொன்றும் 5,000 துருப்புகளுடன் உருவாக்கப்படும் என்பதே அந்த மீளாய்வின் மையக்கருவாக இருந்தது. இவை இப்போதிருக்கும் இராணுவ சிப்பாய்களை உலகெங்கிலும் எந்தவொரு இடத்திற்கும் அனுப்புவதைக் கொண்டு நிறுவப்படும். ஏறத்தாழ 600 புதிய கவச வாகனங்கள் இந்த தாக்கும் படைப்பிரிவுகளுக்கும் மற்றும் ஏனைய இராணுவ பிரிவுகளுக்கும் வழங்கப்படும். மொத்தத்தில், அனுப்பப்படக்கூடிய படைகளின் அளவு 30,000 இல் இருந்து 50,000 ஆக உயர்த்தப்படுகிறது.

42 மின்னல்வேக புதிய F-35 கண்டறியவியலா போர்விமானங்கள் விலைக்கு வாங்கப்படுமென கேமரூன் அறிவித்தார், இவற்றில் 24 போர்விமானங்கள் (8 இல் இருந்து 24 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது) 2023 வாக்கில் செயல்பாட்டிற்கு வரவுள்ள இரண்டு புதிய விமானந்தாங்கி போர்க்கப்பல்களில் பயன்படுத்தப்படும். அவை பிரிட்டனின் அணுஆயுத ஏவுகணை அமைப்புமுறை மற்றும் விமானந்தாங்கி போர்க்கப்பல்களைப் பாதுகாக்கும். தயாரிக்கப்பட்டு வரும் புதிய விமானந்தாங்கி போர்க்கப்பல்களில் இரண்டில் ஒன்று, ஆண்டு முழுவதும் உபயோகத்தில் வைக்கப்படும்.

கூடுதலாக இரண்டு டைப்பூன் (Typhoon) போர்விமானப் படைப்பிரிவுகளும் உருவாக்கப்பட உள்ளன—இது மொத்தத்தில் ஏழாகிறதுஒவ்வொன்றும் 12 விமானங்களைக் கொண்டிருக்கும். அந்த படைப்பிரிவுகள் F-35 போர்விமானங்கள் செயல்பாட்டிற்கு வரும் வரையில் தொடர்ந்து நீடித்திருக்கும், அவற்றை 2040 வரையில் செயல்படுத்த முடியும். உளவுவேலைகளில் ஈடுபடுத்தவும், நீர்மூழ்கிக்கப்பல் எதிர்ப்பு மற்றும் மேற்புற கப்பல் எதிர்ப்பு போர்முறையில் ஈடுபடுத்தவும் தகைமை கொண்ட ஒன்பது புதிய போயிங் P-8 கடற்படை ரோந்து விமானங்களும் வாங்கப்படும். நீர்மூழ்கிக்கப்பல் எதிர்ப்பு தகைமை கொண்ட எட்டு வாகனங்கள் உட்பட, குறைந்தபட்சம் 13 புதிய சிறியரக போர்வேவுகலங்கள் கட்டமைக்கப்படும். 20 க்கும் அதிகமான புதிய பாதுகாப்பு டிரோன்கள் வாங்கப்படும், இது எத்தனை ரீப்பர் (Reaper) டிரோன் விமானங்களைப் பிரதியீடு செய்கிறதோ அதை விட இரண்டு மடங்காகும்.

பொதுப் பணத்தில் கூடுதலாக பில்லியன் கணக்கிலான பவுண்டுகள் பாதுகாப்பு செலவினங்களுக்காக வாரியிறைக்கப்பட்டு வருவதில், தனியார் பாதுகாப்புத்துறை உற்பத்தியாளர்களுக்குத் தான் கொண்டாட்டம். அதுவும் இது வெறும் முன்பணம் தான். பாதுகாப்பு அமைச்சகத்தின் வரவு செலவுத்திட்டக் கணக்கு 2020-21 வரையில் ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கத்தை விட 0.5 சதவீத அளவிற்கு அதிகரிக்கப்பட உள்ளது. இங்கிலாந்தின் முப்படை அணுஆயுத பாதுகாப்பு அமைப்புமுறையை புதுப்பிக்கும் செலவு 6 பில்லியன் பவுண்டு அதிகரிக்கப்படும் என்பதையும் கேமரூன் தெரிவித்தார். இது பாதுகாப்பு வரவு செலவு திட்டக்கணக்கின் அவ்வப்போதைய திடீர் செலவுகளில் 10 பில்லியன் பவுண்டு சேர்க்கப்படுவதுடன் சேர்ந்து, மேற்கொண்டும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

பாரிஸ் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஹோலாண்ட் அரசாங்கம் 10,000 பாதுகாப்புத்துறை நியமனங்கள் நிரப்பப்படுமென முன்மொழிந்திருந்தார். 5,000 பொலிஸ் மற்றும் ஆயுதக்காவல் படையினர், 1,000 சுங்கத்தீர்வை முகவர்கள், நீதித்துறை மற்றும் குற்றவியல் அமைப்புமுறையில் 2,500 நியமனங்களும் அதில் உள்ளடங்கும். 2014 இன் 120,000 எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இராணுவத்தினுள் 170,000 புதிய ஆட்களை நியமிக்கும் நோக்கில் அவர்கள் இப்போது ஆயுதப்படைகளுக்குள் நியமனங்களைச் செய்ய சுறுசுறுப்பாக ஊக்கப்படுத்தி வருகிறார்கள். பாரிஸ் தாக்குதலுக்குப் பின்னர் நாளொன்றுக்கு சராசரியாக 1,000 பேர் தொடர்புகொள்ளப்பட்டு வருவதாக ஆயுதப் படைகளுக்கான தகவல் மற்றும் நியமன மையம் தெரிவித்தது.

கடந்த வாரத்தில் பிரான்ஸ் மற்றும் புருசெல்ஸ் மக்கள், ஒட்டுமொத்த நகரப் பகுதிகளையும் ஆயுதமேந்திய சிப்பாய்கள் மற்றும் கலக தடுப்பு படைகள் அவற்றின் கட்டுப்பாட்டில் எடுத்ததைக் கண்டனர். ஒரு பாரிய பொலிஸ் மற்றும் இராணுவ நடவடிக்கை பாரிஸின் புறநகர் பகுதியான செயின்ட் டென்னிஸைக் கட்டுப்பாட்டில் வைத்த பின்னர், கடந்த மூன்று நாட்களாக ஒரு முன்நிகழ்ந்திராத இராணுவ நடவடிக்கைக்கான இடமாக புருசெல்ஸ் மாறியிருந்தது.

இத்தகைய காட்சிகள் அரங்கேறும் இடமாக இங்கிலாந்தும் மாறவிருக்கிறது. “பெரிய பயங்கரவாத தாக்குதல்களைக் கையாள அப்போதைக்கு அப்போது புதிய திட்டங்களுக்கு" அவர் ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும், “... இந்த புதிய நடவடிக்கையின் கீழ், பாரிஸில் நாம் பார்த்ததைப் போன்ற அதிர்ச்சிகரமான பயங்கரவாத தாக்குதல் வகைகளைக் கையாள்வதில் பொலிஸிற்கு ஒத்துழைக்க 10,000 வரையிலான இராணுவ படையினர் இருப்பார்கள்" என்றும் கேமரூன் அறிவித்தார்.

ஆளும் வர்க்கத்தால் அபகரிக்கப்படும் ஒவ்வொரு சல்லிக்காசும் ஒடுக்குமுறைக்காக ஒதுக்கப்படுகிறது. பாதுகாப்புத்துறை அமைச்சகத்திற்கான பண ஒதுக்கீட்டிற்கு அதிகமாக, MI5, MI6 மற்றும் GCHQ பாதுகாப்பு உளவுவேலை வலையமைப்புகளின் 12,700 பலமான பணியாளர்களைக் கொண்டு, இங்கிலாந்து, மக்களுக்கு எதிரான நடவடிக்கையில் இயங்கிவரும் பாரிய அரசு உளவுவேலை வலைப்பின்னலுக்குக் கூடுதலாக 1,900 உளவாளிகளின் ஆதாரவளங்களை ஒப்படைக்க உள்ளன.

தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் சமூக நிலைமைகள் மீதான தாக்குதல்களை, இராணுவ செலவினங்கள் மற்றும் போர் தளவாடங்களின் பாரியளவிலான "முதலீட்டிற்கு" முன்நிபந்தனையாக ஏகாதிபத்திய சக்திகள் வலியுறுத்துகின்றன. பிரிட்டனின் புதிய போர்களுக்கான தயாரிப்பிற்காக ஒதுக்கப்பட உள்ள 12 பில்லியன் பவுண்டு, துல்லியமாக சுகாதார வரவு செலவு திட்டக்கணக்கிலிருந்து அரசாங்கம் கடுமையாக வெட்டி வருகின்ற அதே தொகையாகும்.

ஐந்தாண்டுகளுக்கு முன்னர்சிக்கனத்திட்டத்தின் காலம்" (age of austerity) என்று பிரகடனப்படுத்தி பிரதம மந்திரியான கேமரூன், பின்வரும் தற்பெருமையுடன் அந்த மீளாய்வை அறிமுகம் செய்தார், “நமது நீண்டகால பொருளாதார திட்டத்தில் விடாப்பிடியாக இருந்ததன் மூலமாக, பிரிட்டன் கடந்த இரண்டாண்டுகளில் உலகின் வளர்ச்சி அடைந்துவரும் பிரதான முன்னேறிய பொருளாதாரமாக மாறியுள்ளது. … நாம் இப்போது ஒரு பலமான பொருளாதாரமாக இருக்கிறோம், நமது தேசிய பாதுகாப்பிற்காக—நிறைய கப்பல்கள், நிறைய போர்விமானங்கள், பெரியளவிலான கடற்படை, பெரியளவிலான RAF, ஒரு சிறந்த ஆயுதந்தாங்கிய இராணுவம் ஆகியவற்றுடன், இணையவழி தாக்குதல்கள் விடயத்தில் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டையில் சிறந்த நிலையில் இருக்கஇன்னும் நிறைய முதலீடு செய்வதை, நம்மால், சரியானரீதியில், தேர்வு செய்யவியலும்.”

சிரியாவில் இராணுவ நடவடிக்கைக்கு சாதகமான ஓர் அறிக்கையை கேமரூன் வெளியிடவிருந்த வெறும் மூன்று நாட்களுக்கு முன்னர் தான், பிரிட்டிஷ் ஆளும் உயரடுக்கின் இராணுவ பலத்தின் விரிவாக்கம் வெளியிடப்பட்டது. கேமரூனின் அறிக்கையோடு சேர்ந்து பக்கவாட்டில் பிரசுரிக்கப்பட்ட ஒரு விவரக்குறிப்பு ஆவணத்தில், பாரிஸ் தாக்குதல்கள், சிரியாவில் போரை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்டன: “2014 அக்டோபரில் இங்கிலாந்து [ஆப்கானிஸ்தானில்] தாக்குதல் நடவடிக்கைகளை முடித்துக் கொண்டு, மத்திய கிழக்கில் ISIL க்கு எதிரான நடவடிக்கைகளில் கவனத்தைத் திருப்பி இருந்தது. பாரிஸ் தாக்குதல்கள், சிரியாவில் இங்கிலாந்து இராணுவ தாக்குதல் நடவடிக்கைகளை நீடிக்க வேண்டுமா என்பதன் மீதான விவாதத்தைச் சரியான நேரத்தில் (மூலப்பிரதியில் உள்ளவாறு) புதுப்பித்தது.”

மத்திய கிழக்கிலும் மற்றும் ஏனைய இடங்களிலும் போருக்கான அழுத்தம், ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோ ஆக்ரோஷத்தை அதிகரிப்பதில் பிரிட்டன் வகிக்கும் மத்திய பாத்திரத்துடன் இணைந்துள்ளது. அந்த விபரக் குறிப்பு ஆவணம், 2010 மீளாய்வுக்குப் பிந்தைய புதிய அபிவிருத்திகளோடு சேர்ந்து, “நேட்டோவின் கிழக்கு பக்க தாக்குதல் குறித்து ரஷ்யாவின் தாக்குதல்கள்" மீது கவனத்தைச் செலுத்துகிறது. அது குறிப்பிடுகிறது, “2010 SDSR இல் ரஷ்யா குறித்து அரிதாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது, ஆனால் இந்த முறை அனேகமாக அதன் மீது நிறைய கவனம் செலுத்த வேண்டியிருக்கும். உக்ரேனில் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பரந்த நேட்டோ விடையிறுப்பின் பாகமாக, இங்கிலாந்து 2017 இல் நேட்டோவின் புதிய அதிவிரைவு தயார்நிலை படைக்குத் தலைமை வகிக்கும் என்பதுடன், தசாப்தத்தின் எஞ்சிய காலத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் படைகளுக்கு 1,000 (மூலப்பிரதியில் உள்ளவாறு) சிப்பாய்களை போர்க்களத்திற்கு வழங்க பொறுப்பேற்றுள்ளது.