World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Official justifications for Brussels lockdown unravel

பிரஸ்ஸெல்ஸை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கான உத்தியோகபூர்வ நியாயப்படுத்தல்கள் வெளிவருகின்றன

By Alex Lantier 
24 November 2015

Back to screen version

பிரஸ்ஸெல்ஸ் தொடர்ந்து பொலீஸ் முற்றுகையில் இருப்பதற்கும் தேசிய எச்சரிக்கை நிலை இருப்பதற்குமான உதியோகபூர்வ நியாயப்படுத்தலில் முரண்பாடுகள் குவிந்ததால் நேற்று பெல்ஜியம் முழுவதும் வெகுஜன அதிருப்தி பரவின.

நேற்று அச்சுறுத்தல் ஆய்வு ஒருங்கிணைப்புக்கான அரசாங்க அமைப்பு (OCAM), அடுத்த திங்கட்கிழமை வரை பெல்ஜியத்தின் 1 முதல் 4 வரையிலான எச்சிரிக்கை அளவீட்டில் உயர்மட்டத்தை, அதாவது எச்சரிக்கை மட்டம் 4-, பராமரிக்கப்போவதாக அறிவித்தது. ஆயினும், இந்த வார தொடக்கத்திலிருந்து மூடப்பட்டிருந்த சுரங்கப்பாதைகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் புதன்கிழமை அன்று திறக்கப்படும் என்று அது முடிவு செய்தது.

தாக்குதலுக்கு (பயங்கரவாதிகள் தாக்குதல்களுக்கு) ஆளாகக்கூடிய இலக்குகள் நேற்று நாம் பட்டியலிட்ட அதேதான்,” என்று வணிக மாவட்டங்கள் மற்றும் பேரளவிலான போக்குவரத்துள்ள இடங்களை சுட்டிக்காட்டி, மிஷேல் திங்கட்கிழமை அறிவித்தார், அதிகாரிகள் தங்களை திறக்க அனுமதித்தனர் என்றாலும், இதற்கான காரணம், “நாட்டில் அவற்றை மூடுவதன் மூலம் பயங்கரவாதிகள் வெல்வதற்கு நாம் அனுமதிக்க விரும்பவில்லை.”

உண்மையில், பெல்ஜிய அரசாங்கமானது அனைத்து ஜனநாயக உரிமைகளையும் அடிப்படைரீதியாக நிர்மூலமாக்கும் அசாதாரமாண நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பயங்கரவாத தாக்குதல் பற்றிய அச்சுறுத்தலை பயன்படுத்துகிறது. துணைநிலைப் படையினர் பிரெஸ்ஸல்ஸின் வீதிகளில் வெள்ளமென பெருக்கெடுத்ததுடன், சந்தேகத்திற்குரியவர்கள் என அறிவிக்கப்படும் தனிநபர்களை தடுப்புக்காவலில் வைக்கவும் தேடுதல்வேட்டை நடத்தவும் வரையற்ற அதிகாரங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் பிரன்சில் எடுக்கப்பட்டதற்கு இணையானது, அங்கு அரசாங்கத்திற்கு அசாதாரணமான அதிகாரங்களை வழங்கும் “நெருக்கடிநிலை” மூன்றுமாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

பிரெஸ்ஸெல்ஸின் அடுத்தடுத்த பகுதிகள் பலவற்றில் ஞாயிறு இரவு அன்று நடத்தப்பட்ட பொலீஸ் மனிதவேட்டை உருப்படியான பலன் எதனையும் கொடுக்கவில்லை. மனிதவேட்டைக்குப் பின், பிடித்து வைக்கப்பட்ட 16 பேர்களில் 15 பேர் எந்த குற்றச்சாட்டும் இன்றி விடுவிக்கப்பட்டனர். பெல்ஜியம் மத்திய அரசுவழக்கறிஞர் அலுவலகத்தின்படி, ஒருவர் “பயங்கரவாத தாக்குதலில் மற்றும் பயங்கரவாத குழுவின் நடவடிக்கைகளில் பங்கேற்றதாக குற்றம் சாட்டப்பட்டார்.” எவ்வாறாயினும், பிரெஸ்ஸெல்ஸ் திடீர் சோதனையில் இலக்காக கூறப்படும் —பாரிஸில் நவம்பர் 13 அன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் திட்டம்தீட்டியவரும் தப்பியோடியவருமாக கருதப்படும, சலாஹ் அப்தேஸ்லாம்— பிடிக்கப்படவில்லை.

பிரெஸ்ஸல்ஸில் திங்கட்கிழமை காலை ஐவர் கைதுசெய்யப்பட்டனர், ஆனால் இருவர் நேற்று இரவு விடுவிக்கப்பட்டனர். மேலும் விசாரிப்பதற்காக மூவர் இன்னும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.

ஞாயிறு இரவு 22 பொலீஸ் தேடுதல்கள் மற்றும் 16 பேர் கைதிலிருந்து சிறிது வெளிப்பட்ட பின்னர் அரசு வழக்கறிஞர் அலுவலகம் அதன் நடவடிக்கைகளை நியாயப்படுத்துமாறு நிர்பந்தப்படுத்தப்பட்டது. “ஞாயிறு நடவடிக்கை போன்ற பெரிய அளவிலான நடவடிக்கையின் அர்த்தத்தில், பலர் விரிவான விசாரணைக்காக அல்லது சில பகுதிகளில் ஏன் அவர்கள் இருந்தனர் என்று விளக்கம் தருவதற்கு கொண்டு செல்லப்பட்டனர் என்பது வழக்கத்திற்கு மாறானது அல்ல” என்று அறிவிக்கும் அறிக்கையை அது வெளியிட்டது.

இந்த அறிக்கையானது முட்டாள்தனமானது. பிரெஸ்ஸல்ஸ் பொலீஸ், அதன் நடவ்வடிக்கையின்போது பல அப்பாவி மக்களை தடுத்துக் காவலில் வைக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கலாம். ஆயினும், ஒரே ஒரு தனிநபருக்காக முழுநகரமும் பலநாட்களாக முற்றுகையிடப்படுவதும் தனித்தனியான அடுத்தடுத்த பகுதிகளில் பன்முக பொலீஸ் மனிதவேட்டையாடலும் நிச்சயமாக வழக்கத்திற்கு மாறானதாக இருக்கிறது.

பெல்ஜிய அரசின் பல்வேறு மட்டங்கள், மக்களுக்கு முரண்பாடான அறிவுறுத்தல்களை வழங்கின. பெல்ஜிய கல்வி அமைச்சர் Joëlle Milquet மற்றும் பெல்ஜிய பிரதமர் Rudi Vervoort சிறார் பராமரிப்பு மையங்கள் திறந்திருக்குமா என்பது பற்றி வேறுபட்ட அறிக்கைகளை வழங்கினர், அதேபோன்று ஆரம்ப படாசாலைகள்  திறக்குமா என்பதிலும் அதேபோன்ற உத்தியோகபூர்வ குழப்பங்கள் இருந்தன.

அதன் விளைவாக, பொலீஸ் அரச நடவடிக்கைக்கு ஆளும் தட்டில் ஒருமித்த கருத்து நிலவினாலும், முற்றுகை பற்றி குறிப்பாக எதிர்க்கட்சியினரிடமிருந்தும் ஊடகங்களிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன.

பசுமைக் கட்சி மற்றும் சோசலிஸ்ட் கட்சி பொறுப்பாளர்கள், அரசாங்கமானது அதன் கொள்கைகளுக்காக அதன் விளக்கங்களை மாற்றியிருக்க வேண்டும் என எச்சரித்தனர். “ஒன்றும் மாறவில்லை, ஆனால் பள்ளிக்கூடங்களும் சுரங்கப்பாதைகளும் புதன்கிழமை மீண்டும் திறக்கின்ன்றன. இனிமேலும் மக்கள் மீது நாம் திணிக்க முடியாத செய்திகளும் இருக்கின்றன,” என்று பெல்ஜியம் பசுமைக் கட்சியின் துணைத்தலைவர் ஜக்கியா கட்டாபி எச்சரித்தார்.

OCAM பரிந்துரைகளுக்கு சுயாதீனமான வகையில், பிரெஸ்ஸெல்ஸ் மீது முற்றுகையை அமல்படுத்தும் முடிவானது அரசியல் ரீதியானது என்று ஒருவர் இன்றிரவு தெளிவாகவே காணமுடியும்” என அவ்வம்மையார் கூறினார்.

கட்டாபி வழிஅடைப்பிற்கு எதிர்ப்பை கோரவில்லை, மாறாக, இப்பொழுது “சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு …….. விளக்கங்கள் தேவைப்படுகின்றன” என்று அதனை விவரித்து, செய்யததற்கான இன்னும் நம்பத்தகுந்த விளங்கங்களை வழங்குவதற்கு, மிஷேலை அழைத்தார்.

மிஷேலின் வலதுசாரி சீர்திருத்த இயக்கத்திற்கும் (MR), லியேஜ் நகரத்தின் சோசலிஸ்ட் கட்சி மேயர் Willy Demeyer க்கும் இடையில் பதட்டங்கள் எழுந்தன. “உண்மையில் எல்லாம் கட்டுப்பாட்டில் இருக்கிறதா” என MR உறுப்பினர்கள் கேட்டபிறகு, பெல்ஜிய தேசிய அதிகாரிகளால் வழங்கப்பட்ட உளவுத்தகவலை அடிப்படையாகக் கொண்டு Demeyer, “நகராட்சி எல்லைக்குள் எந்த குறிப்பான அச்சுறுத்தலும் இல்லை” என்று ஒரேயடியாய் பதிலிறுத்தார்.

Demeyer  லியேஜ் இல் கணிசமான பொலீசார் இருப்பதற்கு பாராட்டு தெரிவித்தார், 750,000 யூரோக்களுக்கு ஆயுதங்களும் குண்டுதுளைக்காத ஆடைகளும் வாங்கப்பட்டது நகரத்தில் பெரிய அளவில் பொலீஸை நிறுத்த வழிவகுத்தது என தற்பெருமை பீற்றிக்கொண்டார்.

La Libre Belgique  முற்றுகையினால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சுட்டிக்காட்டி, “இவை அனைத்தும் முன்வைக்கப்பட்ட மற்றும் விளக்கமளிக்கப்பட்ட முறையானது மக்களை மறுஉத்திரவாதப்படுத்துவதற்கு நிச்சயமாய் ஏற்றதல்ல” என்று தலையங்கத்தில் எழுதியது.

சர்வதேச ஊடகங்களில் பெல்ஜியம் “ஜிகாதிசத்தின் ஒரு மையம்” அல்லது ஒரு “தோல்வியுற்ற அரசு” என போடப்பட்ட கருத்துக்களைக் குறிப்பிட்டு, அவை “எமது நாட்டிற்கு முதலீட்டாளர்களையும் பயங்கரவாதிகளையும் ஈர்ப்பதற்கு உண்மையில் சிறந்த வழி அல்ல” என்று புகார்கூறியது. நகரின் சுற்றுலா தொழில்துறைக்கான பிரெஸ்ஸெல்ஸ் கிறிஸ்துமஸ் பொருட்காட்சி, குளிர்கால மகிழ்விடவசதி இரண்டும் இரத்துசெய்யப்படும் சாத்தியமுள்ள “அழிவுகர” பாதிப்பு பற்றி அது எச்சரித்தது.