சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய  USSR

US-Russian tensions surge after Turkey downs Russian jet

ரஷ்ய போர்விமானத்தை துருக்கி சுட்டுவீழ்த்திய பின்னர் அமெரிக்க-ரஷ்ய பதட்டங்கள் அதிகரிக்கின்றன

By Alex Lantier
26 November 2015

Use this version to printSend feedback

துருக்கிய F-16 ரக போர்விமானங்கள் சிரிய-துருக்கிய எல்லையை ஒட்டி ஒரு அப்பட்டமான ஆக்ரோஷ நடவடிக்கையாக ரஷ்யாவின் Su-24 ரக குண்டுவீச்சு விமானத்தை சுட்டு வீழ்த்திய அடுத்த நாள், புதனன்று ரஷ்யாவுக்கும் நேட்டோ இராணுவ கூட்டணிக்கும் இடையே முழு-அளவிலான போர் அச்சுறுத்தல் அதிகரித்தது.

செவ்வாயன்று ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் ஆதரிக்கப்பட்ட அந்நடவடிக்கையானது, சிரியா ஜனாதிபதி பஷர் அல் அசாத்திற்கு முட்டுக்கொடுக்கும் ரஷ்யாவின் தலையீட்டை வாஷிங்டன் எதிர்க்கிறது மற்றும் அதை நிறுத்த ரஷ்யாவுடன் போருக்குள் இறங்க விரும்புகிறது என்பதற்கு வாஷிங்டன் மாஸ்கோவிற்கு அளித்த ஒரு நேரடியான சமிக்ஞையாகும்.

ரஷ்ய போர்விமானத்தை அழிப்பதென்ற முடிவு, துருக்கிய அரசின் உயர்மட்டங்களில் எடுக்கப்பட்டிருந்தது. நேற்று துருக்கியின் ஆளும் நீதி மற்றும் வளர்ச்சி கட்சி (AKP) இன் ஒரு கூட்டத்தில், பிரதம மந்திரி அஹ்மெட் தாவ்டோக் Su-24 ஐ சுட்டுவீழ்த்துவதற்கு இட்டுச் சென்ற கட்டளையை பிறப்பித்தற்காக பாராட்டுக்களை ஏற்றுக்கொண்டார். துருக்கிய வான்எல்லையை மீறியதாக ரஷ்யா குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த மாதம் பதட்டங்கள் உருவான பின்னர், அவர், துருக்கிய வான்எல்லையை மீறும் எந்தவொரு விமானத்தையும் சுட்டுவீழ்த்த ஒரு நிலையான கட்டளை (standing order) வழங்கியிருந்ததாக தெரிவித்தார். அதாவது நடைமுறையில், சிரிய-துருக்கிய எல்லையை ஒட்டி இஸ்லாமிய எதிர்ப்பு போராளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவரும் ரஷ்ய போர்விமானங்கள் மீது குண்டுகளைப் பிரயோகிக்க, அந்த அரசாங்கத்தின் உயர்மட்டம் இராணுவத்திற்கு வெற்று காசோலை வழங்கி இருந்தார்.

இத்தகைய ஒரு நிலையான கட்டளை வழங்க எடுத்த முடிவு முதல்முதலில் மிகக் கவனமாக வாஷிங்டன் உடனும் மற்றும் சாத்தியமானளவிற்கு நேட்டோ கூட்டாளிகளின் ஏனைய முன்னணி அங்கத்தவர்களுடனும் விவாதிக்கப்பட்டிருக்கும் என்பதில் அங்கே சிறிதே ஐயமிருக்க முடியும்.

ரஷ்யாவிற்கு எதிரான தூண்டுதலற்ற போர் நடவடிக்கைகளுக்கு துருக்கிய இராணுவத்திற்குப் பச்சை விளக்கு காட்டியதன் மூலமாக, AKP ஒரு மோதல் அபாயத்தைத் தூண்டியுள்ளது என்பதையும் அதில் அதற்கு நேட்டோ மற்றும் குறிப்பாக அமெரிக்காவின் ஆதரவு அவசியப்படும் என்பதையும் அது அறியும். ரஷ்யா உடன் துருக்கி தொடங்கிய ஒரு போரை, அதன் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க கூட்டாளிகள் கண்டிக்கும் ஒரு சூழல் இருந்திருந்தால், அது அதை இராணுவ அன்னியப்படலுக்கு கொண்டு விட்டிருக்கும்.

இந்த சம்பவத்தில், ஒபாமாவும் நேட்டோ பாதுகாப்பு செயலர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க்கும் ரஷ்யாவிற்கு எதிரான துருக்கியின் ஆக்ரோஷத்தை ஆதரித்தனர். ஒட்டுமொத்த நேட்டோ கூட்டணி சார்பாக பேசுகையில், ஸ்டொல்டென்பேர்க் துருக்கியின் நடவடிக்கையை ஆமோதித்து பின்வருமாறு கூறினார்: “நாம் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தி இருப்பதைப் போல, நாம் துருக்கியுடன் ஐக்கியப்பட்டு நிற்கிறோம், நமது நேட்டோ கூட்டாளியான துருக்கியின் பிராந்திய ஒருமைப்பாட்டை ஆதரிக்கிறோம். நாங்கள் நேட்டோவின் தென்கிழக்கு எல்லைகளின் அபிவிருத்திகளை உன்னிப்பாக பின்தொடர்ந்து கவனிப்போம்,” என்றார்.

ஒபாமா நிர்வாகம் துருக்கிய அரசாங்கத்தின் பொறுப்பற்ற நடவடிக்கையை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிப்படை புவிசார் அரசியல் நலன்களுக்காக ஆதரிக்கிறது, அவை சிரியா விவகாரத்தில் ரஷ்யாவுடனும், படிப்படியாக, ஐரோப்பிய சக்திகளுடனும் மோதலுக்குள் இழுத்து வருகிறது. வாஷிங்டன் சிரியாவில் ரஷ்ய தலையீட்டை எதிர்க்கிறது, ஏனென்றால் துருக்கி ஆதரிக்கும் இஸ்லாமிய எதிர்ப்பு சக்திகளை அமெரிக்காவும் ஆதரிக்கிறது, மற்றும் மாஸ்கோ ஆதரித்துவரும் அசாத் ஆட்சியைக் கவிழ்க்க நோக்கம் கொண்டுள்ளது. Su-24 சுட்டுவீழ்த்தப்பட்ட மேற்கு சிரியாவில் இருக்கும் இஸ்லாமியவாத போராளிகள் மீது ரஷ்யா விமானத் தாக்குதல்கள் நடத்துவதை அமெரிக்கா எதிர்ப்பதாக கூறி செவ்வாயன்று ஒபாமா அப்பட்டமாக ரஷ்யாவை எச்சரித்தார்.

அனைத்திற்கும் மேலாக ISIS இன் (ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிக் அரசு) நவம்பர் 13 பாரிஸ் தாக்குதல்களுக்குப் பின்னர், சிரியாவில் உள்ள இஸ்லாமியவாத பயங்கரவாத குழுக்களை எதிர்த்து சண்டையிட மாஸ்கோ மற்றும் வாஷிங்டன் இரண்டையும் உள்ளடக்கிய ஒரு கூட்டணியைக் கட்டமைக்கும் பிரெஞ்சு அரசாங்கத்தின் முயற்சியை வாஷிங்டன் எதிர்க்கிறது. உண்மையில் வாஷிங்டன் —2011 சிரியா போர் தொடங்கியதில் இருந்து இஸ்லாமிய போராளிகள் குழுக்களைச் சார்ந்திருப்பதைப் போலவே இந்த இக்கட்டான நிலையிலும் அசாத்திற்கு எதிரான பினாமி தரைப்படை சக்திகளாக அவற்றைச் சார்ந்துள்ளது.

இதன் மீதான கவலைகள், அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறை எந்திரத்துடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ள ஒரு வாஷிங்டன் சிந்தனைக் குழாமான, மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான அமைப்பால் (CSIS), தயாரிக்கப்பட்ட ஒரு கருத்துரை செய்தியில் செவ்வாயன்று ஒலிபரப்பானது.

ஐரோப்பா, யுரேஷியா மற்றும் ஆர்டிக்கிற்கான மூத்த CSIS துணை தலைவர் ஹீதர் கொன்லெ, பாரிஸ் தாக்குதல்களுக்குப் பின்னர் ISIS க்கு எதிராக அமெரிக்கா மற்றும் ரஷ்யா இரண்டையும் உள்ளடக்கிய ஒரு கூட்டணியைக் கொண்டு வரும் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் இன் திட்டத்தை விமர்சித்தார். “இந்த சிரிய மோதல் ஒரு வஞ்சக கூட்டணியின் அரவணைப்பின் கீழ் ஒரு பல-அடுக்கு பினாமி போராக மாறிவிடும்,” என்று அந்த பெண்மணி எழுதினார்.

அமெரிக்க நலன்களுக்கு முரண்படும் விதத்தில் ஒபாமா நிர்வாகம் சிரியாவில் மாஸ்கோவுடன் ஒருங்கிணைந்த இராணுவ நடவடிக்கையைக் கொண்டு, ரஷ்யா உடனான உறவுகளில் "மோதலைத் தவிர்க்கும்" (de-conflict) எந்த முயற்சிகளையும் CSIS நிராகரிக்கிறது. அது பின்வருமாறு குறைகூறியது: “நடைமுறையில் இது சிரியாவில் அமெரிக்காவின் நடவடிக்கைகளை நிறுத்த கிரெம்ளின் வழிகாட்டுவதற்கு ஒப்பானதாக உள்ளது, அதேவேளையில் இத்தகைய பேச்சுவார்த்தைகளின் மற்றும் மோதலைத் தவிர்ப்பதற்கான தகைமையின் மட்டுப்பாடுகளை எடுத்துக்காட்டி, அது அதன் சொந்த விமானத் தாக்குதல்களை அங்கே நடத்துகிறது (இந்நடவடிக்கையை வாஷிங்டன் மேற்கொள்ளவில்லை).”

ரஷ்ய போர்விமானத்தைச் சுட்டுவீழ்த்தியதன் விளைவு, கொள்கைரீதியில் சிரியாவில் ரஷ்யாவுடன் ஓர் உடன்பாட்டை எட்டுவதற்கு பிரான்ஸ் மற்றும் ஏனைய ஐரோப்பிய சக்திகளின் முயற்சிகளைத் தடுக்கும் என்பதையும் கொன்லெ சேர்த்துக் கொண்டார். “இந்த கனவு கூட்டணியின் அனுமான அங்கத்தவர்கள், மரணகதியிலான விளைவுகளைக் கொண்ட இராணுவ மற்றும் அரசியல் உள்-நோக்கங்களுக்காக செயலூக்கத்துடன் வேலை செய்து வருகிறார்கள் என்ற உண்மையை இப்போது மறைக்க முடியாது என்பதையே இன்றைய சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன,” என்றார்.

யதார்த்தத்தைத் தலைகீழாக திருப்பி கொன்லெ நிறைவு செய்தார். ரஷ்யா "சர்வதேச சட்ட விதிமுறைகளுக்குக் கீழ்படிந்து, முழுமையாக பிராந்திய ஒருமைப்பாட்டு கோட்பாட்டை மதிக்க வேண்டுமென" வலியுறுத்தி அவர் அதை அச்சுறுத்தினார். உண்மையில் அமெரிக்கா தான் சிரியாவில் உள்நாட்டு போரைத் தூண்டியது அத்துடன் மத்திய கிழக்கில் அதன் கட்டுப்பாட்டைப் பலப்படுத்தும் நோக்கில் ஒரு நாடு மாற்றி ஒரு நாட்டின் மீது படையெடுத்துள்ளது.

வாஷிங்டன் மற்றும் அங்காராவின் ஆக்ரோஷ கொள்கைகள் முழு-அளவிலான அணுஆயுத போர் தீவிரப்பாட்டைத் தூண்டிவிட அச்சுறுத்துகின்றன. ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரொவ் வெளியிட்ட அறிக்கை ஒன்று, துருக்கியுடன் ரஷ்யா போருக்குள் இறங்காது என்று அறிவித்த போதினும், அந்த தாக்குதலில் அமெரிக்கா உடந்தையாய் இருந்தமைக்காக அதை குற்றஞ்சாட்டியது.

அச்சம்பவம் "அதிகளவில் முன்கூட்டியே திட்டமிட்ட ஆத்திரமூட்டலைப் போன்று தெரிகிறது" என்று தெரிவித்த லாவ்ரோவ், அதில் அமெரிக்காவும் பொறுப்பேற்றிருக்கிறது என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டினார். அமெரிக்க படைகளுடன் அவர்களது நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க சிரியாவில் அமெரிக்க-தயாரிப்பு இராணுவ விமானங்களைப் பயன்படுத்துமாறு வாஷிங்டன் அதன் கூட்டாளிகளைக் கேட்டுக் கொண்டிருப்பதை அவர் எடுத்துரைத்தார். அவர் தெரிவித்தார்: “அமெரிக்கர்களின் இந்த கோரிக்கை … துருக்கியையும் உள்ளடக்கி இருக்கமோ என்று நான் நினைக்கிறேன். அவ்வாறிருந்தால், துருக்கி அதன் அமெரிக்க-தயாரிப்பு விமானங்களைப் பறக்கவிட மற்றும் சிரியா எல்லையின் மீது பறக்கும் ஒரு விமானத்தை —ஒரு 'அடையாளந்தெரியாத' விமானம் என்றே கூட வைத்துக்கொள்வோம் அதை சுட்டுவீழ்த்த அமெரிக்காவின் அனுமதியைக் கேட்குமா என்பதும் எனக்கு ஆச்சரியமளிக்கிறது,” என்றார்.

லாவ்ரொவ் செவ்வாயன்று நேட்டோ தலைவர் ஸ்டொல்டென்பேர்க் கூறிய கருத்துக்களை மேற்கோளிட்டு கூறுகையில், “துருக்கியர்களால் கூட்டப்பட்டிருந்த ஒரு நேட்டோ கூட்டத்திற்குப் பின்னர் மிகவும் விசித்திரமான கருத்துக்கள் ஒலித்தன, அவை வருத்தமோ அல்லது இரங்கலோ தெரிவிக்கவில்லை, அதற்கு பதிலாக அவை நேற்று துருக்கிய விமானப்படை செய்ததை மூடிமறைப்பதை நோக்கமாக கொண்டிருந்தன. அதேபோன்றவொரு பிரதிபலிப்பு ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்தும் வந்தது,” என்றார்.

ரஷ்ய விமானம் துருக்கிய வான்எல்லையை மீறியது என்பதற்கு லாவ்ரொவ் மீண்டும் மறுப்பு தெரிவித்ததுடன், அவ்வாறு ஒரு சிறிய நேரம் நடந்திருந்தாலும் கூட, அது விமானம் சுட்டுவீழ்த்தியதை நியாயப்படுத்தாது. 2012 இல் அப்போது துருக்கிய பிரதம மந்திரியாக இருந்த (இப்போது ஜனாதிபதியாக உள்ள) ரெசெப் தயிப் எர்டோகனின் கருத்துக்களை அவர் மேற்கோளிட்டார், எர்டோகன் சிரிய வான்எல்லையில் ஒரு துருக்கிய போர்விமானத்தைச் சுட்டுவீழ்த்திய சிரியாவின் முடிவைக் கண்டித்து, ஒரு சிறிய நேர ஊடுருவல் ஒரு தாக்குதலை நியாயப்படுத்தாது என்று கூறியிருந்தார்.

Su-24 துருக்கிய வான்எல்லையை மீறியது மற்றும் சிரியாவிற்குள் திரும்பி செல்வதற்கான எச்சரிக்கைகளை புறக்கணித்தது என்ற வாதங்களை சுட்டுவீழ்த்தப்பட்ட Su-24 இன் இரண்டு விமானிகளில் உயிர்பிழைத்த ஒருவரான கேப்டன் Konstantin Murakhtin உம் மறுத்தார்.

“நிஜமான உண்மை, அங்கே சுத்தமாக எந்த எச்சரிக்கைகளும் இருக்கவில்லை. ரேடியோ மூலமாகவும் இல்லை, அல்லது பார்வைக்கு புலனாகுமாறும் இருக்கவில்லை, ஆகவே தான் நாங்கள் எந்த இடத்திலும் எங்களது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. Su-24 போன்றவொரு தந்திரோபாய குண்டுவீசிக்கும் மற்றும் F-16 போன்ற ஒன்றுக்கும் இடையிலான வேக வித்தியாசத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் எங்களை எச்சரிக்க விரும்பியிருந்தால், எங்கள் இறகின் மீதே அவர்கள் வந்து அமர்ந்திருக்கலாம்,” என்று Murakhtin தெரிவித்தார். “அங்கே என்ன நடந்ததென்றால், திடீரென ஏவுகணை எங்கள் விமானத்தின் பின்பகுதியைத் தாக்கியது. தப்பிக்க தந்திரம் செய்யக்கூட எங்களுக்கு நேரமிருக்கவில்லை.”

அதேநேரத்தில், மாஸ்கோ சிரியாவிலும் மற்றும் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியிலும் கணிசமானளவிற்கு இராணுவ கட்டமைப்புகளை தொடங்கியுள்ளதுடன் துருக்கியுடனான எல்லா இராணுவ தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டுள்ளது. இது ரஷ்ய வெளியுறவு கொள்கையின் திவாலான மற்றும் பிற்போக்குத்தனமான குணாம்சத்தை அடிக்கோடிடுகிறது, அது நேட்டோ சக்திகளின் கோரிக்கைகளுக்கு அடிபணிவதற்கும் மற்றும் உலக போர் அபாயத்தை முன்னிறுத்தும் பொறுப்பற்ற நடவடிக்கைகளுக்கும் இடையே தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

ரஷ்யா, சிரியாவிலும் மத்திய தரைக்கடல் பகுதியிலும் அதன் விமானப் பாதுகாப்பு படைகளை வேகமாக அதிகரித்து வருகிறது. சிரியாவின் லடாக்கியா நகருக்கு அருகில் அது அதன் விமானப்படை தளத்தில் S-400 விமானப் பாதுகாப்பு உபகரண அமைப்பை நிறுவ இருப்பதாக அறிவித்தது. இது, லடாக்கியாவிற்கு அருகிலுள்ள அதன் தளத்திலிருந்து, தெற்கு துருக்கியின் பெரும்பகுதி உட்பட பரந்துபட்ட பகுதிகளில் பறக்கும் விமானங்களைக் கண்டறிந்து சுட்டுவீழ்த்தும் ஆற்றல் கொண்ட ஒரு அதிநவீன ஏவுகணை அமைப்புமுறையாகும். அதுபோன்றவொரு அமைப்புமுறை SU-24 போர்விமானத்தை தகர்த்த துருக்கிய F-16s ஐ சுட்டுவீழ்த்தி விடையிறுத்திருக்கும்.

அது நிலைநிறுத்தப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியை ரஷ்ய விமானப் பாதுகாப்பு கப்பல் Moskva வந்தடைந்தது என்று செவ்வாயன்று அறிவிப்பு வெளியானது. அரசு ஒளிபரப்பு ஸ்தாபனம் Russia Today அறிவிக்கையில், அந்த கப்பல் "தொலைதூர நிலத்திலிருந்து வானில் தாக்கும் ஏவுகணைகளோடு … எந்தவொரு வான் இலக்குகளையும் சுட்டுவீழ்த்த தயாராக" உள்ளது என்று அறிவித்தது.