சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France launches bombing campaign in Syria

பிரான்ஸ் சிரியாவில் குண்டுவீச்சை தொடங்கியது

By Alex Lantier
28 September 2015

Use this version to printSend feedback

பிரெஞ்சு ஜெட் போர்விமானங்கள் சிரியாவினுள்ளே உள்ள இலக்குகளில் குண்டுகளை வீசியதாக ஜனாதிபதி பிரான்சுவா  ஹாலண்ட் அறிவிக்கும் அறிக்கையை ஞாயிறு அன்று, லிசே மாளிகையானது வெளியிட்டது.

ஆரம்ப ஊடக அறிக்கைகள் இலக்குகள் ரக்கா அருகில் உள்ள இஸ்லாமிய அரசின் (IS) படை பயிற்சி முகாம்களாக இருந்தன மற்றும் அந்த தாக்குதல்கள் அண்டைநாடான ஈராக்கில் ஐஎஸ் இலக்குகளுக்கு எதிரான பிரான்ஸ் உள்பட நேட்டோ சக்திகளின் குண்டு வீச்சு நடவடிக்கைகளின் ஒரு நீட்டிப்பாக இருந்தன என்று குறிப்பிட்டன. ஜோர்டானை தளமாகக் கொண்டு ஆறு மிராஜ் ரக ஜெட் போர்விமானங்கள் ஐக்கிய அரபு எமிரேட்களை தளமாகக் கொண்ட ஆறு ராஃபெல் ஜெட் போர்விமானங்கள் தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

தாக்குதல்களின் இலக்குகள் பற்றிய விவரங்களையோ அல்லது அவை விளைவித்த சேதங்கள் பற்றியோ எந்தவித ஸ்தூலமான விவரங்களையும் அரசாங்கம் வெளியிடவில்லை. குண்டுவீச்சுப் பணியானது, “எமது சுதந்திரமான நடவடிக்கையை மதித்து எமது கூட்டணி பங்காளர்களுடனான ஒத்துழைப்பில் இருவாரங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட வான் நடவடிக்கைகளின் பொழுது திரட்டப்பட்ட உளவுத்தகவலை அடிப்படையாககொண்டிருந்தது என்று எலிசே செய்தித்தொடர்பு தெரிவிக்கின்றது.

சிரிய அரசாங்கப் படைகளைத் தாக்குவதற்கு அச்சுறுத்தல் போல காணப்படும் ஒன்றில், வான்தாக்குதலின் குறிக்கோள் குடிமக்களை ஐஎஸ் இடமிருந்து மட்டுமல்லாமல் ”(சிரிய) ஜனாதிபதி பஷர் அல் சதாத்தின் அழிவுகரமான குண்டு வீச்சுகளிலிருந்தும்காப்பாற்றுவதை நோக்கமாகக் கொண்டது என்று செய்தித்தொடர்பு அறிவித்தது.

முன்னாள் பிரெஞ்சுக் காலனியான, சிரியாவில் பிரான்ஸ் குண்டுவீசுவதானது, ஏகாதிபத்திய சக்திகளால் 2011ல் தொடங்கப்பட்ட ஆட்சிமாற்றத்திற்கான பினாமி யுத்தத்தில் இஸ்லாமிய குடிப்படைகளை பயன்படுத்தி அவர்களுக்கு ஆயுதமும் நிதியும் கொடுத்து, அது பரந்த அளவில் தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டதற்கு மத்தியில் வரும் ஒரு போர்நடவடிக்கை ஆகும். இந்த வெடிப்பானது சிரியாவில் இரத்தம் சிந்துவதை அதிகரிப்பதோடு பலலட்சக் கணக்கான சிரிய அகதிகள் மத்திய கிழக்கிலும் ஐரோப்பாவிலும் உள்ள நாடுகளுக்கு பறந்தோடும் ஆற்றொணா நெருக்கடியை உயர்த்தி இருக்கிறது.

இந்த வலியத்தாக்குதல், சிரியாவில் உள்ள அல்கொய்தாவுடன் தொடர்புடைய இஸ்லாமியவாதிகளுக்கு எதிரானபயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்என்பதன் ஒரு பகுதி என்று இதனை நியாயப்படுத்த பிரெஞ்சு சோசலிச கட்சி அரசாங்கத்தால் முன்வைக்கப்படும் வாதங்கள் பொய்களின் ஒரு மூட்டை ஆகும். ஐஎஸ் அதன் அரபு தலைப்பெழுத்துக்களால் Daech என குறித்து, பிரெஞ்சு பிரதமர் மானுவல் வால்ஸ் அறிவித்தார்: “நாங்கள் Daech தாக்குகிறோம் ஏனென்றால் இது சியாவில் இருந்து பிரான்ஸ் மீது தாக்குதல் தொடுக்க தயாராகிவரும் ஒரு பயங்கரவாத இயக்கம் ஆகும்…. எனவே நாம் தற்பாதுகாப்பிற்காக செயல்படுகிறோம்.”

பிரான்சையோ அல்லது அதனது கூட்டாளியையோ தாக்காத நாடான, சிரியாவில் குண்டு வீசுவதில் பிரான்ஸ் அதன் தற்காப்பு உரிமையை செயல்படுத்துகிறது என்ற வாதமானது, எடுத்த எடுப்பிலேயே பொய்யாகும். சிரியாவில் பயங்கரவாதத்தை எதிர்த்து பிரான்ஸ் போராடுகிறது என்ற கூற்றைப் பொறுத்தவரை, அது பிரெஞ்சு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டால் முரண்பாட்டைக் கொள்கிறது, பிரெஞ்சு அரசாங்கமானது அதன் பரந்த நிகழ்ச்சிநிரலை - ஆசாத்தை கவிழ்த்து நவ-காலனித்துவ நேட்டோ ஆதரவு ஆட்சியை சிரியாவில் நிறுவுதலைஅடைவதற்கு இஸ்லாமிய பயங்கரவாத குடிப்படையை பயன்படுத்தி இருக்கிறது.

கடந்த ஆண்டு, ஈராக்கிற்கு உள்ளே உள்ள ஐஎஸ் நிலைகள் மீது பிரான்ஸ் குண்டு வீசுகையில், பிரெஞ்சு அதிகாரிகள் சிரியாவில் ஐஎஸ் நிலைகளை சேதப்படுத்துவது அசாத் ஆட்சியை பலப்படுத்தும் என கூறி, சிரியாவில் ஐஎஸ் நிலைகளை குறிவைக்க மறுத்துவிட்டனர். இந்த அறிக்கையிலிருந்து தப்பிக்க முடியாமல் பெறப்படும் முடிவானது, பாரசீக வளைகுடாவில் எண்ணெய் அரபு ஆட்சிகளுடனும் வாஷிங்டனில் உள்ள செல்வாக்குள்ள கொள்கை வட்டாரங்களுடனும் ஆன ஒரே நிலைப்பாட்டில் இருந்து பாரிஸ் ஆனது, ஆசாத் ஆட்சியை அழிப்பதற்கு ஐஎஸ்- ஒரு மறைமுக சக்தியாக ஆதரித்தது என்பதாகும்.

கடந்த மாதம் ஐஎஸ்ஆல் பயிற்றுவிக்கப்பட்ட துப்பாக்கிதாரி என்று அறிவிக்கப்படும் ஒருவனால் வடக்கு பிரான்சில் தாலிஸ் இரயிலை தாக்கும் பயங்கரவாத முயற்சி முறியடிக்கப்பட்ட பின்னர், பிரெஞ்சு அதிகாரிகள் சிரியாவிற்கு உள்ளே உள்ள ஐஎஸ் படைகளை இலக்குவைக்க தொடங்கி உள்ளனர். ஆனால் பாரிஸ் ஆனது சிரியாவிற்குள் உள்ள இஸ்லாமிய பயங்கரவாத குழுக்களை தொடர்ந்தும் ஆதரிக்கிறது. நேற்று லு மொண்ட், ஐஎஸ் நிலைகளை பிரெஞ்சு ஜெட் போர்விமானங்கள் இப்போது தாக்கினாலும், அவை அல்நுஸ்ரா முன்னணி மீது தாக்குதல் நடத்தாது, அது அமெரிக்க அரசாங்கத்தால் அல்கொய்தாவுடன் தொர்புடைய குழு என வகைப்படுத்தப்பட்டபோதிலும் பாரிசும் வாஷிங்டனும் அதனை ஒரு கூட்டாளியாக பார்க்கிறது என மேற்கோள் காட்டியது.

செப்டம்பர் 18 அன்று, பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் ஜோன்-ஈவ் லு திரியோன், அசாத்துக்கு எதிரான ஆட்சி மாற்றம் சோசலிஸ்ட் கட்சியின் பரந்த நிகழ்ச்சிநிரலுக்கு தீங்கு விளைக்காதவரைக்கும் பிரான்ஸ் ஐஎஸ் மீதான தாக்குதலை ஏற்கும் என்று தெளிவுபடுத்தினார். ஐஎஸ் மீதான தாக்குதல்கள்சுருங்கியிருக்கும் பஷாருக்கு (அல் அசாத்) விசுவாசமான சக்திகளால் கட்டுப்படுத்தப்படும் வெளிப்புற எல்லையாக கருதப்பட முடியும், இன்று, Daech தாக்குவது பஷாருக்கு இராணுவ உதவியை அளிப்பதாக அர்த்தப்படுத்தாதுஎன்று அவர் கூறினார்.

சிரியாவில் புதுப்பிக்கப்பட்ட இராணுவ விரிவாக்கத்திற்கான ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அதிகாரிகளால் இடப்படும் முன்மொழிவுகளானது, பல இலட்சக்கணக்கான சிரிய அகதிகளின் துன்பம் கண்டு ஆளும் வர்க்கம் இரங்காது வன்னெஞ்சம் கொள்வதையும் மத்திய கிழக்கில் ஒரேயடியான போருக்கான ஆபத்தைக் கொண்டிருக்கும் பிரதான ஏகாதிபத்தியங்களின் மோசமான விளைவுகளைப் பற்றி பொறுப்பற்ற தன்மையும் வெளிப்படுத்துகிறது.

பிரான்சும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் ரஷ்யாவுடன் இராணுவ மோதல் மற்றும்முழுஅளவிலான யுத்தத்தையும்எதிர்கொள்ளும் ஆபத்தைக் கொண்டிருப்பதாக பிப்ரவரியில், ஹாலண்ட் எச்சரித்தார். அந்த நேரம், உக்ரேனில் உள்ள நேட்டோ ஆதரவு அரசாங்கத்திற்கும் கிழக்கு உக்ரேனில் உள்ள ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத சக்திகளுக்கும் இடையில் ஜேர்மனியால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை அவர் ஆதரித்தார். அணுஆயுத மூன்றாம் உலகப் போர் பற்றிய பீதிஉருவை எழுப்பிய இந்த எச்சரிக்கை இருப்பினும், ஹாலண்ட் சிலமாதங்களுக்குப் பின்னர், சிரியாவில், அசாத் ஆட்சியின் பிரதானமான சர்வதேச ஆதரவாளரான ரஷ்யாவுடன் ஒரு இராணுவ மோதலைத் தூண்டிவிட அச்சுறுத்தும் கொள்கையைப் பின்பற்றினார்.

மாஸ்கோவானது சிரிய துறைமுக நகரமான லட்டாக்கியா அருகில் உள்ள விமானத் தளத்தை பலப்படுத்தி இருக்கிறது, குறைந்த பட்சம் 30 ஜெட் விமானங்களை ஈடுபடுத்தியுள்ளதாக கூறப்படுகிறது மற்றும் அசாத் ஆட்சிக்கு ஆதரவாக ஐஎஸ் இலக்குகள் மீதாக தனது சொந்த வான்தாக்குதலை நடத்த தயாராகி வருகிறது. அசாத் ஆட்சி ரக்காவிற்கு அருகில் உள்ள ஐஎஸ் இலக்குகளுக்கு எதிராக தொடர்ந்து வான்தாக்குதல்களை நடத்திவரும் நிலையில், ரஷ்ய மற்றும் சிரிய போர்விமானங்களால் கண்காணிக்கப்படும் வான்வெளியில் பிரெஞ்சு ஜெட்கள் போரிடும் என்று தோன்றுகிறது.

ரஷ்ய விமானங்களுக்கும் சிரியாவில் குண்டுவீசும் பிரான்ஸ், அமெரிக்கா அல்லது இதர ஏகாதிபத்திய அரசுகளின் ஜெட்களுக்கும் இடையில் பகைமைகள் எளிதில் வெடிக்கும். அதேவேளை, கியேவில் கடந்த ஆண்டு நேட்டோ ஆதரவு ஆட்சிக் கவிழ்ப்பு சதியால் தூண்டிவிடப்பட்ட உக்ரேனில் நடைபெறும் உள்நாட்டு யுத்தத்திற்குப் பின்னர், நேட்டோ மற்றும் ரஷ்ய படைகள் இரண்டும் கிழக்கு ஐரோப்பாவில் தங்களின் இராணுவ பலத்தை உயர்த்தி இருப்பதுடன் எச்சரிக்கை மட்டத்தை எட்டியுள்ளன.

இந்த வெடிக்கும் தன்மைய சர்வதேச உள்ளடக்கத்தில், பிரெஞ்சு அதிகாரிகளும் ஊடகமும் ரஷ்ய மற்றும் சிரிய படைகளை அச்சுறுத்தும் மூர்க்கமான நிலைப்பாடுகளை எடுக்கின்றன. நேற்று லு மொண்டிடம் பேசிய பாதுகாப்பு அமைச்சர் லூ திரியோன், சிரியாவில் பிரெஞ்சு விமானப்படையால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பிரெஞ்சு, ரஷ்ய மற்றும் சிரிய அதிகாரிகளுக்கிடையில் தகவல் பரிமாற்றம் எதுவும் இருக்காது என்று உறுதி அளித்தார். “ரஷ்யன், சிரியன் ஜெட் போர்விமானங்கள் ஐஎஸ் எதிர்ப்பு கூட்டணி விமானத்திற்கு எதிராக தாக்குதலை நடத்தாதவரைக்கும் அவை இலக்குகளாக தேர்வு செய்யப்படமாட்டாஎன்று லு மொண்ட் கூறியது.

இந்த கூற்றின் தாக்கங்கள் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளன. நேட்டோ கூட்டாளிகளின் ஆதரவுடன் பிரான்ஸ் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வது, பிரெஞ்சு போர்விமானங்கள், ரஷ்ய மற்றும் சிரிய விமானங்களுக்கு இடையில் மோதலுக்கு இட்டுச்செல்லக்கூடும் என்பது தெரிந்ததே. பிரெஞ்சு போர்விமானங்கள், ரஷ்ய விமானங்கள் மீது சுடுவதன் மூலம் ரஷ்யாவுடன் ஒரு போருக்கு தயார் செய்கிறதா, அல்லது ரஷ்யாவுடன் மோதலில் முடிவது எந்த அளவுக்கு போகும் என பிரெஞ்சு நேட்டோ அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனரா என ஒருவரும் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தைக் கேட்கவில்லை..

அண்மைய வாரங்களில், அமெரிக்க, ஐரோப்பிய, ரஷ்ய மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளுக்கிடையில், அவை அனைத்தும் சிரியாவில் அவற்றின் இராணுவ நடவடிக்கைகளை உக்கிரப்படுத்தி வருவதால், தங்களின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் மற்றும் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொள்வதை தவிர்க்கவுமான முயற்சியில் வரிசையாய் உயர்மட்ட கலந்துரையாடல்கள் இருந்தன. ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இன்று ஐநாவில் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சு நடத்தப்போவது, இந்த வார இறுதியின் பின்னர் சிரியா பற்றி பேசுவதற்காக பாரிஸ் செல்வது மற்றும் உக்ரேன் பற்றி பேச இருப்பது, ரஷ்யா சிரியாவின் இஸ்லாமியவாத எதிர்த்தரப்பினருடன் ஒரு அமைதி பேரத்தை எண்ணிப்பார்க்கிறது என்பதை சமிக்கை காட்டுகிறது. அது அசாத்தை இறுதியில் பதவியிலிருந்து இறக்குவதைக் காணும்.

அத்தகைய சிடுமூஞ்சித்தனமான பேச்சுக்கள், அழிவுகரமான மோதலின் வெடிப்பிற்கு எதிராக எந்தவித உத்திரவாதத்தையும் வழங்கா. 1999ல் ரஷ்ய மற்றும் நேட்டோ துருப்புக்கள் சேர்பியாவில் நேட்டோ குண்டு வீச்சின்போது, கொசோவோவில் கூட்டாக தலையீடு செய்தபொழுது, நேட்டோ படைத்தளபதி, அமெரிக்க படைத்தளபதி ஜெனரல் வெஸ்லி கிளார்க், பிரிஸ்டினா விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த ரஷ்யப் படைகளின் மீது ஒரு தாக்குதலுக்கு கட்டளை இட்டார். அவரது ஆணைக்கு கீழ்ப்படியாத கிளார்க்கின் ஐரோப்பிய உதவியாளர்களின் முடிவு மட்டுமே பால்கனில் பிரதான ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான ஒரு போரை தவிர்த்தது. ஹாலண்டின் அறிக்கை காட்டுவது போல, இன்று அத்தகைய ஒரு கட்டளைக்கு ஐரோப்பிய அதிகாரிகள் பணிய மறுப்பார்களா என்பது மிகவும் சந்தேகமே.