சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

US-Sri Lankan resolution to UN human rights body to cover up war crimes

.நா. மனித உரிமைகள் சபைக்கான அமெரிக்க-இலங்கை தீர்மானம் யுத்தக் குற்றங்களை மூடி மறைக்கவுள்ளது

By Saman Gunadasa
29 September 2015

Use this version to printSend feedback

கொழும்பு அரசாங்கம் இணை-அனுசரணை வழங்கிய இலங்கை தொடர்பாக அமெரிக்கவினால் வரையப்பட்ட தீர்மானம், ஜெனீவாவில் .நா மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) கடந்த வியாழன் முன்வைக்கப்பட்டது. "இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்," என்ற தலைப்பிலான அது, தீவின் 26 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தில் இராணுவமும் இலங்கையில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களும் இழைத்த போர்க் குற்றங்கள் மற்றும் அட்டூழியங்களை மூடிமறைக்கும் ஒரு வஞ்சத்தனமான முயற்சியாகும்.

இந்த தீர்மானம், செப்டெம்பர் 16 அன்று இலங்கை மீதான .நா. மனித உரிமைகள் விசாரணை ஆணையாளர் அலுவலகத்தினால் (OSIL) வெளியிடப்பட்ட அறிக்கையை தொடர்ந்து வந்துள்ளது. அந்த அறிக்கை அதிகமாக போரின் இறுதி கட்டத்துக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த அதேவேளை, எவரதும் பெயரையும் குறிப்பிடாமல், அட்டூழியங்களின் அளவை விவரித்துள்ளது. முந்தைய .நா. மதிப்பீட்டின்படி, 2009 மேயில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் முடிவுக்கு வந்த யுத்தத்தின் கடைசி மாதங்களில் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

வரைவுத் தீர்மானத்தின் முகவுரை, "ஜனநாயக ஆட்சியை ஊக்குவிப்பதில் அதன் பங்களிப்புக்கள்," மனித உரிமைகளை மதிப்பதற்கு அது எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் "கடந்த கால மீறல்கள் மற்றும் வன்முறைகளை திருத்திக்கொள்வதற்கான" ஒரு பொறிமுறையை அமைக்க வேண்டிய தேவையை அது அங்கீகாரத்துள்ளமை தொடர்பாக இலங்கை அரசாங்கத்தை பாராட்டியுள்ளது. இலங்கை அரசாங்கத்தை பாராட்டுவதற்கும், மனித உரிமைகள் தொடர்பான அதன் நிலைப்பாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, ஏனெனில், ஜனவரியில் மஹிந்த இராஜபக்ஷவை ஜனாதிபதி பதிவியில் இருந்து அகற்றியதில் இருந்து, சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வெளியுறவுக் கொள்கையை பெய்ஜிங்கில் இருந்து வாஷிங்டன் பக்கம் தீவிரமாக திருப்பியுள்ளனர்.

கடந்தகால மீறல்களை திருத்திக்கொள்வதற்கான நுட்பமானது போர் குற்றங்களுக்கு எவரும் பொறுப்பாளிகள் ஆக்கப்பட்டால் அவர்கள் ஒரு சிலராகவே இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு கவனமாக செதுக்கப்பட்டுள்ளது. கொழும்புடனான கலந்துரையாடலின் பின்னர், எந்தவொரு விசாரணையினதும் கணிசமான கட்டுப்பாட்டை இலங்கை அரசாங்கம் தக்க வைத்துக்கொள்வதை உறுதிசெய்வதற்காக, வாஷிங்டன் அதன் தீர்மானத்தின் முதல் வரைவை திருத்தியது. ஒரு புதிய பிரிவானது சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்குவது சம்பந்தமான முந்தைய குறிப்பை அகற்றி, "பொதுநலவாய அலுவலகத்தின் சிறப்பு ஆலோசகர்கள் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளும் இலங்கை நீதித்துறை பொறிமுறையில் பங்குவகிப்பதன் முக்கியத்துவத்தை," அரசாங்கம் உறுதிபடுத்துகிறது, என்று அறிவிக்கின்றது.

இரு காரணங்களுக்காக அரசாங்கத்துக்கு இந்த மாற்றங்கள் தேவைப்படுகின்றன: முதலாவது, இராணுவம் போர்க் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளாது என அதற்கு உறுதி செய்வது மற்றும் இரண்டாவது, சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியும் (.தே..) தமது அடித்தளமாகக் கொண்டுள்ள சிங்கள இனவாத பகுதியினரை திருப்திபடுத்துவதாகும். சிறிசேன மற்றும் விக்கிரமசிங்க இருவரும் இதில் உடந்தையானவர்கள்: சிறிசேன போரின் இறுதி இரண்டு வாரங்களில் இராஜபக்ஷ அரசாங்கத்தில் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர், விக்கிரமசிங்க 1983ல் யுத்தத்தை தொடங்கி வைத்த .தே.. அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தவர்.

தீர்மானம் இறுதி வடிவமானது, விக்கிரமசிங்க மற்றும் தீவின் தமிழ் முதலாளித்துவத்தை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் (TNA) சம்பந்தப்பட்டு மூடிய கதவுகளுக்குள் திட்டமிடப்பட்ட சதியின் விளைவாகும். சண்டே டைம்ஸ் பத்திரிகையின் படி, விக்கிரமசிங்க, கொழும்பில் உள்ள இங்கிலாந்து உயர் ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ்சை சந்தித்து, பின்னர் இலங்கைக்கான அமெரிக்க தூதர் அதுல் கெஷாப்புடன் ஜெனீவாவில் இருந்து தொலைத்தொடர்பில் கலந்துரையாடி, புதிய பிரிவை சேர்க்குமாறு அவர்களை கேட்டுக்கொண்டார். “இது இடம்பெற்ற அதே வேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம். . சுமந்திரன் [கட்சியின் தலைவர்களில் ஒருவர்], .நா. அமெரிக்க துணைத் தூதர் (இலங்கைக்கான முன்னாள் தூதர்) மிஷேல் ஜே. சைசெனை சந்திக்க நியூயோர்க் பறந்தார்... அந்த உள்நடவடிக்கைகள் இறுதி தீர்மானத்தின் மீது ஒரு உடன்பாட்டை ஸ்தாபித்தன."

தீர்மானத்தை பற்றி தெளிவாக சந்தோசப்பட்ட விக்கிரமசிங்க, இது "சர்வதேச உறவுகளில் ஒரு முக்கியமான மைல்கல்", மற்றும் "இனி இலங்கை [சர்வதேச] அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டியதில்லை," என்று அவர் பிரகடனம் செய்தார். பெய்ஜிங்கில் இருந்து இராஜபக்ஷவை தூர விலக நெருக்குவதற்கான வழிமுறையாகவே பிரதானமாக மனித உரிமைகள் மீது வாஷிங்டன் "அழுத்தம்" கொடுத்தது. போரின் இறுதி மாதங்கள் வரை, அமெரிக்க இராஜபக்ஷவின் யுத்தத்தை ஆதரித்ததோடு இராணுவத்தின் அட்டூழியங்களை கண்டும் காணாதது போல் இருந்தது.

அழுத்தம் தோல்வியடைந்தபோது, அமெரிக்கா ஏனைய நடவடிக்கைகளில் இறங்கியது. அது உடனடியாக ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் இராஜபக்ஷவை நீக்க திரைக்குப் பின்னால் சூழ்ச்சியில் ஈடுபட்டதுடன் அவர் கடந்த மாதம் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் பிரதமராக மீண்டும் வரமல் இருப்பதை உறுதிப்படுத்தவும் செயற்பட்டது. ஒரு சர்வதேச விசாரணையை விட பெரிதும் உள்நாட்டு "மனித உரிமை மீறல் விசாரணைக்கு" வாஷிங்டன் விருப்பம் கொண்டமை, புதிய அமெரிக்க-சார்பு அரசாங்கத்திற்கு ஒரு நன்கொடையாகும்.

தீர்மானமானது, "இலங்கையர்கள் சொந்தமகாவே மற்றும் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடனும் ஈடுபாடுபாட்டுடனும் ஒரு நம்பகமான நீதி செயல்முறை நோக்கி நகர்வதில் ஒரு முக்கியமான அடியெடுப்பு," என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி அறிவித்தார். உண்மையில், இது பிரதானமாக போரால் பாதிக்கப்பட்ட தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்கள் மற்றும் வறியவர்களுக்கு எதிரான ஒரு சதியாகும் மற்றும் அமெரிக்கா தனது நலன்களுக்கு பொருந்தும் விதத்தில் எவ்வாறு "மனித உரிமைகள்" பிரச்சினையை கையாள்கின்றது என்பதற்கு மற்றொரு உதாரணம் ஆகும்.

ஞாயிறன்று டெயிலி மிரர் பத்திரிகையின் படி, விக்கிரமசிங்க ஏற்கனவே நீதித்துறை பொறிமுறை நிறுவப்பட்டவுள்ளது பற்றி கொழும்பை தளமாகக் கொண்ட செய்தி ஊடகத் தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார். குறிப்பிட்ட வழக்குகளை விசாரிக்க சிறப்பு ஆலோசகராக இலங்கையர் ஒருவர் நியமிக்கப்படுவார். இலங்கையின் உயர் நீதிமன்றம் ஒப்புதல் கொடுத்தால் மட்டுமே பொதுநலவாய நீதிபதிகள் தலையிடுவர். அரசாங்க பாதுகாப்பு படை உறுப்பினர்கள் "பலிக்கடாக்களாக" ஆக்கப்பட மாட்டார்கள் என விக்கிரமசிங்க குறிப்பாக அறிவித்தார்.

தென்னாபிரிக்கவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (TRC) வழியில் ஒரு "உண்மை அறியும் ஆணைக்குழுவும் ஒரு கருணை ஆணைக்குழுவும்" (Truth Commission and a Compassionate Council) அமைக்கப்படும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். சிறப்பு வக்கீலால் விசாரணைக்கு அடையாளம் காணப்படும் வழக்குகள், இந்த ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படும்.

தென் ஆபிரிக்காவின் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம், நிறவெறி ஆட்சியின் கீழ் நடந்த குற்றங்கள் குறித்து ஆய்வு செய்ய, 1995ல் இந்த டி.ஆர்.சி.யை அமைத்தது. அதன் உண்மையான நோக்கம், அங்கு சாத்தியமானளவு "நல்லிணக்கம்" என்ற பெயரில் கடந்தகால கொடுமைகளை மூடிமறைத்து, எவரும் குற்றம்சாட்டப்படாமல் இருக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த நிவாரணமும் அல்லது இழப்பீடும் வழங்காமல் இருப்பதையும் உறுதி செய்வதாகும். இந்த. டி.ஆர்.சி., ஆபிரிக்க தேசிய காங்கிரசின் கீழ் றுப்பு முதலாளித்துவ ஆட்சியை மற்றும் ஆளும் தட்டுக்களை பலப்படுத்தும் ஒரு பொறிமுறையாக இருந்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஆபிரிக்க தேசிய காங்கிரசிற்கு சமமான பாத்திரத்தை ஆற்றவுள்ளது. அது, "கடந்த காலத்தில் இருந்து வியத்தகு மாற்றம், மற்றும் தண்டனையில் இருந்து விலக்களிப்புக்கு முடிவுகட்டுவதற்கான ஆரம்பம் என்று கட்டியம் கூறலாம்," என தீர்மானத்தைப் பாராட்டியுள்ளது. தீர்மானம் "மோதலில் பாதிக்கப்பட்ட அனைவரையும் திருப்திபடுத்தாது," ஆனாலும், நல்லிணக்கத்துக்கான "ஒரு ஆக்கபூர்வமான தொடக்க புள்ளியாக இருக்கும்" என்று கூட்டமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது. நல்லிணக்கம் என்பதன் மூலம், கூட்டமைப்பானது கொழும்புடனான ஒரு புதிய அதிகாரப் பகிர்வு ஒழுங்கின் ஊடாக தமிழ் முதலாளித்துவ தட்டுக்களின் நலன்களை பாதுகாப்பதேயாகும்.

பிரிட்டன், ஆஸ்திரேலியா, அயர்லாந்து மற்றும் மாண்டினீக்ரோ உட்பட பல நாடுகள் ஏற்கனவே தீர்மானத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையே நியூயோர்க்கில் நடந்த ஒரு கூட்டத்திற்குப் பின்னர் இந்தியா தன்னுடைய ஆதரவை சமிக்ஞை செய்துள்ளது. தீர்மானம் வாக்கெடுப்பு இன்றி கூட நாளை நிறைவேற்றப்படும் வாய்ப்பு உள்ளது.