சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

“Workers are beginning to see through the lies”

Autoworkers hail “no” vote at Fiat Chrysler, cite role of WSWS Autoworker Newsletter

தொழிலாளர்கள் பொய்களினூடாக பார்க்க தொடங்கியுள்ளனர்"

வாகனத் தொழிலாளர்கள் பியட் கிறைஸ்லரில் "வேண்டாமென்ற" வாக்குகளை வரவேற்பதுடன், WSWS வாகனத் தொழிலாளர்கள் சிற்றிதழின் பாத்திரத்தை மேற்கோளிடுகின்றனர்

By our reporters
1 October 2015

Use this version to printSend feedback

ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கம்-பியட் கிறைஸ்லர் உடன்படிக்கைக்கு கிடைத்த "வேண்டாமெனும்" வாக்குகளை நாடெங்கிலுமான வாகனத் தொழிலாளர்கள் வரவேற்றுள்ளனர். UAW (ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கம்) அழுத்தமளிக்கும் அந்த உடன்படிக்கைக்கு அதிகரித்தளவில் எதிராக வாக்களித்த உள்ளூர்பிரிவுகளின் நீண்ட பட்டியலில் இடம்பிடிக்க இலினோய்ஸின் பெல்விடேர் வாக்கு முடிவுகளும் வந்திருந்த நிலையில், புதனன்று கடைசி இரண்டு பிரதான உற்பத்தியாலைகளிலும் வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டன.

அந்த ஒப்பந்தம் வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டமை எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது, ஏனென்றால் தொழிலாளர்கள் நிகழவிருப்பதை உணர்ந்து கொள்ள தொடங்கியிருக்கிறார்கள் என்பதையே இது அர்த்தப்படுத்துகிறது,” பியட் கிறைஸ்லர் (FCA) வடக்கு ஜெஃபர்சன் உற்பத்தியாலை தொழிலாளர் உலக சோசலிச வலைத் தளத்திற்குத் தெரிவித்தார்.

எப்படியிருந்தாலும் அவர்களுக்கு வழங்கப்பட்டது உண்மையில் ஓர் உயர்வே கிடையாது. இப்போது செயல்திறன் சார்ந்த சம்பள உயர்வுகளைக் குறித்து அவர்கள் பேசுகிறார்கள், ஆண்டு சம்பள உயர்வைக் குறித்து அறிந்துள்ள எங்களுக்கு இது ஏதோ மிகவும் வித்தியாசமாய் இருக்கிறது. இதில்லாமல் உங்கள் மீது கூட்டுறவு காப்பீட்டு முறையும் (insurance co-op) இருக்கும், UAWக்கு பெரும் வருவாய் கிடைக்கும்.”

தொழிலாளர்கள் பொய்களினூடாக பார்க்க தொடங்கியிருக்கிறார்கள் என்ற உண்மை தான் என்னை மிகவும் ஊக்கப்படுத்துகிறது. அவர்கள் அந்த ஒப்பந்தத்தின் சுருக்க வரைவை மீளாய்வு செய்ய நேரமெடுத்து கொண்டதுடன், உண்மையிலேயே எங்களில் சிலர் அந்த ஒப்பந்தத்தை வாசித்தார்கள். UAW பேரம்பேசிய அவ்வுடன்படிக்கை, அது என்னவாக இருக்கிறதென்பதை அதுவே அம்பலப்படுத்துகிறது, பியட் கிறைஸ்லரை விட UAW ஒரு ணிக கூட்டுஸ்தாபனமாக மிகவும் பெருநிறுவனத்தன்மையுடையதாக  இருக்கிறது.”

அத்தொழிலாளர் WSWSஇன் வாகனத் தொழிலாளர் சிற்றிதழின் பாத்திரத்தைப் பாராட்டினார்: “ஆலையிலுள்ள தொழிலாளர்களுக்கு உங்களது ஆவணங்களை வினியோகித்தும், அவர்களுக்குத் தொடர்ந்து தகவல்கள் வழங்கியும் நீங்கள் சிறந்த வேலையைச் செய்துள்ளீர்கள்.”

கொலோராடோவின் ஜெனரல் மோட்டார்ஸ் பாகங்கள் தயாரிப்பாலை தொழிலாளர் ஒருவர் கூறுகையில், “பியட் கிறைஸ்லர் வாகனத் தொழிலாளர்கள் ஐயத்திற்கிடமின்றி சரியாக வாக்களித்துள்ளனர்,” என்றார்.

போர்ட் அல்லது ஜெனரல் மோட்டார்ஸ் மீது கவனம் செலுத்தி கொண்டே, FCA இல் ஒப்பந்தத்தை நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து UAWக்குள் விவாதங்கள் நடக்கின்றன. “என்னைப் பொறுத்த வரையில், கிறிஸ்லைரில் ஓர் உடன்பாடு ஏற்படாவிட்டால், போர்ட் அல்லது ஜெனரல் மோட்டார்ஸில் எவரொருவரும் "வேண்டுமென்று" தான் வாக்களிப்பார்கள்,” என ஜிஎம் தொழிலாளர் ஒருவர் கூறினார்.

தொழிலாளர்கள் இப்போது உத்வேகமடைந்திருக்கிறார்கள். பெருநிறுவனங்களோ அல்லது தொழிற்சங்கங்களோ அல்ல, அவர்களே கவனத்தை ஈர்த்துள்ளனர். மக்களே செய்வார்கள். உங்களுக்கு அதுமாதிரியான துணிச்சல் வந்திருக்கும் போதே, அத்துணிச்சலின் உச்சக்கட்டத்திலிருந்து செய்யாமல் விட்டதை செய்துவிட வேண்டுமென கூறுவதுண்டுஅது தான் நடந்து வருகிறதென நினைக்கிறேன். கோபம் அதிகரித்து வருகிறது.

நீங்கள் வாகனத் தொழிலாளர்களுக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த அமெரிக்காவிற்காகவே, ஒரு முக்கிய பாத்திரம் வகித்துள்ளீர்கள்,” இதை அவர் WSWS வாகனத் தொழிலாளர் சிற்றிதழ் குறித்து தெரிவித்தார். “அந்த உடன்படிக்கை நிறைவேறாமல் போனால், அதுவும் அதற்கு முந்தைய ஒப்பந்தங்களைப் போலவே அதேமாதிரியாக சிதைந்து போய், நடுத்தர வர்க்கத்தின் மீது ஒரு புதிய தாக்குதலுக்கு களம் அமைக்கும்.”

நீங்கள் வகித்த பாத்திரத்தை நீங்கள் வகிக்காமல் இருந்திருந்தால், அந்த உடன்படிக்கை நிறைவேறி இருக்கும்.” உலக சோசலிச வலைத் தளத்தின் வாகனத் தொழிலாளர் சிற்றிதழ் "மக்களைக் கல்வியூட்டுவதில், விடயங்களை வெளியே கொண்டு வருவதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தது. நீங்கள் ஒன்றும் செய்யாமல் இருந்திருந்தால், அந்த உடன்படிக்கை நிறைவேறியிருக்கும் என்றே நான் நம்புகிறேன்.”

UAW அழைப்புவிடுக்கக்கூடிய ஒரு மட்டுப்பட்ட வேலைநிறுத்தத்தின் சாத்தியக்கூறு குறித்து அத்தொழிலாளர் கூறுகையில், “அவர்களது நடத்தையை மூடிமறைக்க, அவர்கள் அதுபோன்ற விடயங்களைச் செய்கிறார்கள். அதேவேளையில் [வேலைநிறுத்த நிதியத்திலிருந்து] பணம் வெளியேறுவதையும் அவர்கள் விரும்புவதில்லை. அவர்கள் அப்பணத்தைக் கொண்டு என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்யாமல், செய்யக்கூடாததைச் செய்கிறார்கள்.”

வேண்டும்" என்று வாக்களித்த ஒரேயொரு மிகப்பெரிய உற்பத்தியாலையான வாரென் டிரக்கின் ஒரு தொழிலாளர் கூறுகையில், “என்னால் நிச்சயமாக கூற முடியும் அந்த வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது. அந்த ஆலையில் மிக அதிகளவில் சர்வதேச UAWஇன் பிரசன்னம் உள்ளது. உள்ளூர் பிரிவு தலைவரே பேரம்பேசும் குழுவில் உள்ளார், அந்த உடன்படிக்கை நிறைவேறியிருந்தால் அவருக்கு தான் நல்லது நடந்திருக்கும்.

மற்றொரு வாரென் டிரக் தொழிலாளர் கூறுகையில், “அந்த 'வேண்டுமென்ற' வாக்குகள் அதிர்ச்சிகரமாக வந்தன. முதலில் வாக்கெடுப்பு சரியாக நடந்ததாக கருதியதால் வாக்களித்தேன், ஆனால் மறுவாக்குப்பதிவுக்கு செல்லவில்லை,” என்றார். இவர் முதல் வாக்கெடுப்பில் தவறுகள் நடந்ததையும், அதன் விளைவாக அது செல்லாது போனதால், ஒரு பகுதியான பகுதியான மறுவாக்கெடுப்பது நடத்தப்பட்ட உண்மையைக் குறிப்பிடுகிறார். “அதில் முறைகேடு நடந்திருக்கிறது என்பதில் உடன்படுகிறேன்,” என்றார்.

எனக்கு தெரியும் [மிச்சிகன்] வேலை செய்வதற்கான உரிமை வழங்கும் மாநிலம் தான், ஆனால் எங்களின் [மருத்துவ காப்பீட்டின்] மீது அவர்கள் கட்டுப்பாட்டைப் பெறுகிறார்கள் என்றால், பின்னர் நாங்கள் UAW இன் பாகமாக இருக்க விரும்பவில்லை என்றாலும் அது அவர்களுக்கு ஒரு அக்கறையான விடயமாக இருக்காது. அப்போதும் அவர்கள் எங்களது சலுகைகள் மீது கட்டுப்பாட்டை கொண்டிருப்பார்கள், அவர்கள் விரும்பியதை அவர்களால் செய்ய முடியும்.

அவர் தொடர்ந்து கூறினார், “நீங்கள் அச்சிற்றிதழைக் கொண்டு நிச்சயமாக மிகப்பெரிய பணியைச் செய்திருக்கிறீர். நீங்கள் அவற்றை வெளியிடாமல் இருந்திருந்தால் எனக்கு தகவலே கிடைத்திருக்காது. அதில் நான் பார்த்தவாறு, சாமானிய தொழிலாளர் குழுக்களைக் கட்டமைப்பது தான் நாங்கள் செல்ல வேண்டிய வழியென்று நினைக்கிறேன். நிஜமாகவே விடயங்கள் தொழிலாளர்களுக்கு மிகவும் மோசமடைந்துள்ளன.

இந்நேரத்தில் நான் 100 சதவீதம் உங்களோடு இருக்கிறேன். அதற்காக என்ன இழந்தாலும் பரவாயில்லை. இந்நிறுவனத்தில் நான் இருந்தால், அதை தான் நான் விரும்புகிறேன் என்றாலும், இங்கே என்ன மாதிரியான நிலைமைகளில் எனது குழந்தைகள் வேலை செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேனோ அதை குறித்து நான் யோசிக்க வேண்டாமா? நான் வீதியில் வாழ வேண்டியிருந்தால், அதற்கும் நான் தயாராய் இருக்கிறேன்,” என்றார்.

மற்றொரு வடக்கு ஜெஃபர்சன் தொழிலாளர் கூறினார், “இரண்டு விடயங்கள் தான் நடக்க முடியும், ஒன்று அவர்கள் திரும்பி சென்று பேரம்பேச வேண்டும் அல்லது நாங்கள் வேலைநிறுத்தத்தில் இறங்க வேண்டும். UAW போராடுமென தனிப்பட்டரீதியில் நான் நினைக்கவில்லை. தலைவர் டென்னிஸ் வில்லியம்ஸ் அங்கத்தவர்களுக்காக அல்ல, அவருக்காகவே இதில் இருக்கிறார். அவர்களை நீங்கள் அம்பலப்படுத்தி இருப்பதால், அவர்கள் வாகனத் தொழிலாளர் சிற்றிதழை கண்டிக்கிறார்கள்.”

“UAW பேரம்பேசியிருப்பதன் மீது நான் மிகவும் ஏமாற்றமடைகிறேன், அதை எதிர்க்கிறேன்,” இது மூன்றாவது ஜெஃபர்சன் தொழிலாளர் கூறியது. “இரண்டு-அடுக்கு ஊதிய முறை அந்த ஆலை முழுவதிலும் ஒழுக்கப்பாங்கை இல்லாதாக்கிவிட்டது என்று கூறினாலும் மிகையாது. துல்லியமாக ஒரே மாதிரியான வேலையைச் செய்து கொண்டிருக்கும் அவர்களுக்கு, வெவ்வேறு கூலிகளை வைத்திருக்கிறீர்கள்.

வேலையிலிருக்கும் அனைவரும் சமமான சம்பளம் பெறுமாறு செய்வதற்கு பதிலாக, UAW தொழிலாளர்களுக்கு வெவ்வேறு ஊதிய அடுக்குகளையும், குறைந்த ஊதியங்களையும் நிறுவ நிறுவனத்துடன் சேர்ந்து வேலை செய்கிறது. வெவ்வேறு ஊதிய அடுக்கு இருப்பதென்பது தொழிலாளர்களிடையே கடுமையான பதட்டங்களை உண்டாக்குகிறது, மொத்தத்தில் அது நியாயமே இல்லை.

ஆலையிலிருக்கும் பல தொழிலாளர்கள் UAW இல் இருந்து விலகுவதைக் குறித்து பேசி வருகிறார்கள். உங்களைப் பிரதிநிதித்துவம் செய்யாதவர்களுக்கு சந்தா செலுத்துவதில் என்ன அர்த்தமிருக்கிறது? என் பெற்றோர்கள் தொழிற்சங்கங்களை மிகவும் உறுதியாக நம்பினார்கள், அதையே செய்யுமாறு எனக்கும் கற்று கொடுத்தார்கள், ஆனால் இந்த அமைப்புகள் காலப்போக்கில் மாற்றிவிட்டிருக்கின்றன.

நான் WSWS வலைத்தளத்துடனே வாழ்கிறேன். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் குறித்து அறிந்து கொள்வதற்காக எனது தொலைபேசியிலேயே சிற்றிதழைப் பெறுகிறேன். இது தகவல்களுக்கான பெரும் ஆதாரமாக உள்ளது.”

சமீபத்திய ஊடக ஒருங்குவிப்புடன் சேர்ந்துள்ள நிலையில், தொழிலாளர்கள் விரும்பவில்லை என்பதை தெரிந்து கொண்டே, அதை அவர்கள் மீது திணிப்பதற்கு அங்கே எந்த வழியும் இல்லை,” FCA டொலிடோ ஜீப் ஆலையிலிருந்து ஒரு தொழிலாளர் தெரிவித்தார்.

வேலைத் தரங்களை நிறைவேற்றவில்லையென கருதினால், நிறுவனம் அதன் தண்டனைகளை அதிகரிக்கும் என்ற செய்திகளைச் சுட்டிக்காட்டி, “வடக்கு ஜெஃபர்சனில், கடுமையான வேலையை திணிக்கவுள்ளனர்,” என்றவர் தெரிவித்தார். “அவர்கள் 'வேண்டுமென்று' வாக்களிக்காவிட்டால், வாகன உற்பத்தி குறைந்துவிடுமென வாரென் டிரக் அச்சுறுத்தி இருந்தது. இப்போது சரியான விடயத்தைச் செய்ய நாம் தயாராக வேண்டும்.”

ஊதிய அடுக்குகள் நீக்கப்பட்ட ஓர் ஒப்பந்தம் இருந்தால், அது நிறைவேறும் என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார். அதுபோன்றவொரு உடன்படிக்கையை UAW கொண்டு வருமென அவர் நினைக்கிறாரா என்று கேட்ட போது, அவர் கூறினார், “நிச்சயமாக இல்லை. அவர்கள் எங்களை மீண்டும் சக்கையாக பிழியப் போகிறார்கள் என்பதை போதுமானளவிற்கு பலமாக என்னால் உணராமல் இருக்க முடியவில்லை. நான் மூச்சை இழுத்துப்பிடித்திருக்க போவதில்லை என்ற சேதி அவர்களுக்குக் கிடைத்திருக்குமென நான் நினைக்கிறேன்,” என்றார்.

UAW ஆல் கண்டிக்கப்பட்ட, “தவறான தகவல்களைப்" பரப்ப உதவுவதில் சமூக ஊடகங்கள் வகிக்கும் பாத்திரம் குறித்தும் அந்த டொலிடோ தொழிலாளர் பேசினார்.

உடனுக்குடன் தகவல் பரிமாறிக் கொள்வதற்கு இப்போது நமக்கு சாத்தியக்கூறு இருக்கிறது. கலிபோர்னியா, ஜோர்ஜியா, கென்டக்கி, இலினோய்ஸ், மிச்சிகன், ஓகியோ, இண்டியானாவில் உள்ள போர்டு மற்றும் ஜிஎம் தொழிலாளர்களில், நான் பேசியுள்ள 25 நபர்களில் யாரையேனும் என்னால் இப்போது அழைக்க முடியும். நாங்கள் தொடர்பு கொண்டு வருகிறோம்.

நாங்கள் பியட் கிறைஸ்லரைக் கடந்து அதற்கு அங்காலும் எங்களுக்குள் பேசி வருகிறோம். இங்கே ஓர் ஒப்பந்தம் நிறைவேறுகிறதென்றால், போர்டு மற்றும் GM தொழிலாளர்களும் பிழியப்படுவார்கள். போர்டு மற்றும் GM தொழிலாளர்களிடமிருந்து எங்களுக்கு நிறைய ஆதரவு கிடைத்துள்ளது.

கான்சாஸ் நகரிலுள்ள ஒரேயொரு போர்டு ஆலையில் UAW வேலைநிறுத்தம் நடத்தக்கூடுமென UAW துணை தலைவர் ஜிம்மி செட்டில்ஸின் அறிவிப்பைக் குறித்து அவர் கூறுகையில், “அது பெரும் புகையாகவே தெரிகிறது. அவர் தனது பெயருக்காக செய்து கொண்டிருக்கிறார். அதுவொரு நல்ல ஒழுக்கப்பாங்கு தான். நாங்கள் கடந்த வந்த அதே அசிங்கத்தைப் போர்ட் தொழிலாளர்கள் பார்த்து வருகிறார்கள். UAW அதற்கு ஆதரவளிக்க விரும்புகிறது. அவர்களுக்கு ஒரு ஒப்பந்தத்தை அவர்கள் வழங்கினால், அவர்களும் "வேண்டாம்" என்று தான் கூறுவார்கள். இப்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றால், "நானும் சற்று தோரணை காட்டப் போகிறேன்" என்று தனது முகத்தைக் பாதுகாக்க முயற்சிக்கிறார். என்னைப் பொறுத்த வரையில், சீட்டில்ஸ் இதை தான் செய்ய முயன்று கொண்டிருக்கிறார்.”

கட்டுரையாளரின் ஏனைய பரிந்துரைகள்:

After workers defeat Fiat Chrysler deal, UAW and auto bosses plot counter-attack