சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Oregon school shooting and Americas brutal society

ஓரேகான் பள்ளி துப்பாக்கிசூடும், அமெரிக்க சமூகத்தின் மிருகத்தனமும்

Niles Williamson
3 October 2015

Use this version to printSend feedback

ஓரேகானின் ரோஸ்பர்க்கில் உள்ள Umpqua சமூக கல்லூரியில் 26 வயதான கிறிஸ் ஹார்பர்-மெர்செரால் வியாழனன்று ஒன்பது மாணவர்கள் சுட்டுகொன்றமை மற்றும் ஏனைய ஏழு பேர் காயமடைந்தமை மீண்டுமொருமுறை ஏதோவொன்று அமெரிக்க சமூகத்தில் ஆழ்ந்து செயலிழந்திருப்பதை அம்பலப்படுத்தியுள்ளது.

ஹார்பர்-மெர்செர் அந்த வளாகத்திலிருந்த சின்டெர் அரங்கத்தின் பல்வேறு வகுப்பறைகளில் நுழைந்து மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அதன் பின்னர் அந்த அரங்கத்திற்கு வெளியே நடந்த பொலிஸூடனான துப்பாக்கிசூட்டில் அவர் கொல்லப்பட்டார்.

வியாழக்கிழமை சம்பவங்களுக்கு இட்டுச் சென்ற குறிப்பிட்ட உளவியல் நோக்கங்கள்மற்றும் வியாதிகுறித்து வரவிருக்கும் நாட்களில் நிறைய செய்திகள் வெளியாகலாம். சில விபரங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. ஹார்பர்-மெர்செர் வலதுசாரி தேசியவாத கருத்துக்கள் மீது ஒரு குழப்பமான கருத்துக்களைக் கொண்டிருந்ததாக அவரைக் குறித்த சமூக ஊடக விபரங்கள் தெரிவிக்கின்றன. அவரது Myspace பயனர் கணக்கு ஒன்று அயர்லாந்து குடியரசு இராணுவத்தின் அங்கத்தவர்களைப் பெருமைப்படுத்தும் எண்ணிறைந்த படங்களைக் கொண்டுள்ளது. இணையவழி டேட்டிங் வலைத்தளத்திற்கு அவர் தேர்ந்தெடுத்திருந்த பெயரான IRONCROSS45 என்பது மிக வெளிப்படையாக நாஜிக்களால் வழங்கப்பட்ட ஒரு விருதைக் குறிக்கிறது. அவரது அந்த டேட்டிங் வலைத்தள விபரங்களில் அவர் தான் ஒரு பழமைவாத குடியரசு சார்பாளராக அடையாளப்படுத்தி உள்ளார், ஆனால் அவர் விரும்பாதவற்றில் ஒழுங்கமைக்கப்பட்ட மதமும் ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆகஸ்ட் மாதம் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பின் போதே இரண்டு செய்தியாளர்களைக் கொன்ற போது வெஸ்டர் ஃப்ளானகனுக்குக் கிடைத்த கவனஈர்ப்பிற்காக அவர் குதூகலமடைந்ததாக ஹார்பர்-மெர்சர் ஒரு சமீபத்திய வலைப்பதிவில் பதிவு செய்திருந்தார். பின்னர் அவர், ஒரு சிறிய காணொளி தான் என்றாலும் நன்றாக உள்ளது, என்று கூறி, ஃப்ளானகன் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்த அந்த கொலை செய்யும் வீடியோவைப் பார்க்குமாறு வாசகங்களை ஆர்வமூட்டி இருந்தார்.

தோற்றப்பாட்டளவில் தொடர்ச்சியான முடிவில்லா கொடூர பயங்கரங்களில், Umpqua சமூக கல்லூரி படுகொலை சமீபத்தியதாகும். 2013 இல் இருந்து அமெரிக்காவில் மக்கள் மீதான துப்பாக்கிச்சூடுகளை ஆய்வு செய்துவரும் shootingtracker.com எனும் வலைத்தளம், இதுவரையில் இந்தாண்டு மட்டும் குறைந்தபட்சம் 296 சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், அந்த துப்பாக்கிசூடுகளில் பல்வேறு மக்கள் கொல்லப்பட்டு அல்லது காயப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகிறது.

ஹார்வர்டு ஆராய்ச்சியாளர்களான அமெ கோஹன், டெபோரா அஜ்ரால் மற்றும் மாத்தீவ் முல்லர் ஆகியோரது சமீபத்திய ஆய்வு ஒன்று, 1982 மற்றும் 2011 க்கு இடையே நான்கு பேருக்கு அதிகமானவர்கள் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த பொதுமக்கள் மீதான துப்பாக்கிச்சூட்டுக்கு இடையிலான சராசரி கால இடைவெளியை 200 நாட்களென கண்டறிந்துள்ளது. 2011 க்குப் பின்னரில் இருந்து துப்பாக்கிச்சூடு நடக்கும் நாட்களுக்கு இடையிலான சராசரி எண்ணிக்கை 64 ஆக குறைந்துள்ள நிலையில், படுகொலை நிகழ்வுகளின் விகிதம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்பதே இதன் அர்த்தம்.

இந்த பாரிய கொலையாளர்களின் பட்டியலில் உள்ளடங்குபவர்கள்: ஜனவரி 8 இல் அரிஜோனா பிரதிநிதி கேப்ரியல் ஜிஃபோர்டிஸ் மற்றும் ஆறு பேரைச் சுட்டுக்கொன்ற 22 வயது ஜரெத் லீ லொஃப்னர்; ஜூலை 20, 2012 இல் ஒரு திரையரங்கில் 12 பேரைக் கொன்று 58 பேரைக் காயப்படுத்திய 24 வயதான ஜேம்ஸ் ஹோல்ம்ஸ்; டிசம்பர் 14, 2012 இல் சாண்டி ஹூக் தொடக்கப்பள்ளியில் 20 முதல் நிலை மாணவர்களையும் ஆறு பருவ வயதினரையும் சுட்டுக்கொன்ற 20 வயதான ஆதம் லான்ஜா; மே 23, 2014 இல் UC சாண்டா பார்பாரா வளாகத்தில் ஏழு பேரைக் கொன்று ஏழு பேரைக் காயப்படுத்திய 22 வயதான எலியாட் ரோட்ஜர்ஸ்; இந்தாண்டின் ஜூன் 18 இல் தெற்கு கரோலினா சார்லெஸ்டன் தேவாலயத்தில் ஒன்பது பேரை சுட்டுக்கொன்ற 21 வயதான டைலன் ஸ்டோர்ம் ரூஃப் ஆகியோர்.

இந்தளவிற்கு மட்டுப்பட்ட கணக்குகளே கூட, உண்மையில் சீரழிந்துபோன ஒரு சமூகத்தின் சித்திரத்தை வழங்குகின்றன. அமெரிக்காவில் பொதுமக்கள் கொல்லப்படும் எண்ணிக்கை மற்றும் இடைவெளி அளவுக்கு, பொருளாதாரரீதியில் முன்னேறிய எந்தவொரு நாடும் நெருக்கமாக கூட இல்லை.

வியாழக்கிழமை துப்பாக்கிச்சூட்டை அடுத்து உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு திடீர் பத்திரிகையாளர் கூட்டத்தில், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அவர் பதவி வகிக்கும் போதே நடந்துள்ள மக்கள் மீதான மற்றொரு துப்பாக்கிச்சூட்டுக்கு விபரமளிக்க தடுமாறினார். ஏதோவிதத்தில் இது வழக்கமாகிவிட்டது, என்றவர் ஊழ்வினைவாத தொனியில் தெரிவித்தார். இத்தகைய செய்திகள் வழமையாக வருகின்றன. இங்கே இந்த அரங்கத்தில் என்னுடைய விடையிறுப்பு, இந்த வழக்கம் முடிவுக்கு வர வேண்டும் என்பது தான். அதுகுறித்த உரையாடல் எல்லாம் அதற்குப் பின்னர் தான். நாம் இதற்கு மரத்துபோய்விட்டோம். அதற்கடுத்த நாள் பத்திரிகையாளர் கூட்டமொன்றில் அவர், விளக்கமளிக்க தவறிய ஒன்றை மீண்டும் வலியுறுத்தினார், அவர் மூடநம்பிக்கையோடு எல்லா வன்முறைக்கும் "மனிதருக்குள் இருக்கும் மிருகத்தனத்தைக்" காரணமாக்கினார்.

ஒபாமா முன்னர் பல முறை செய்ததைப் போலவே, அவரளவிற்கு ஏதோவொரு விளக்கமளிக்க, தேசிய துப்பாக்கிக் கட்டுப்பாட்டு சட்டங்கள் தளர்வாக இருப்பதாக குறைகூறினார். ஒரு சரியான சட்டம் நிறைவேற்றுவதன் மூலமாக இப்பிரச்சினையைத் தீர்க்கவியலுமென அவர் தெரிவித்தார். நிறைய துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டங்களைக் கொண்டிருக்கும் மாநிலங்களில், துப்பாக்கிச்சூடு சாவுகள் மிகக் குறைவாக இருப்பதை நாம் அறிவோம். ஆகவே துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டங்கள் வேலைக்காகாது என்ற கருத்தோ, அல்லது குடிமக்களை மற்றும் குற்றவாளிகளைச் சட்டத்திற்குக் கீழ்படிந்து நடக்க செய்வது மிகவும் கடினமானது என்ற கருத்தோ, ஆதாரநபர்களைக் கொண்டு அவர்கள் அப்போதும் துப்பாக்கிகள் வாங்குவார்கள் என்பதை உறுதிப்படுத்தாது, என்றவர் வாதிட்டார்.

மக்கள் மீதான சுப்பாக்கிச்சூட்டுக்கு ஒபாமா பரிந்துரைக்கும் தீர்வுக்கும்இது பிரதானமாக அரசு மற்றும் பொலிஸ் அதிகாரங்களை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டிருக்கிறதுமீண்டும் மீண்டும் அத்தகைய துயர சம்பவங்கள் நடக்க அனுமதிக்கும் சமூகத்தின் அடியிலுள்ள பிரச்சினைகளுக்கும் உண்மையில் எந்த சம்பந்தமும் இல்லை.

ஒவ்வொரு துப்பாக்கிச்சூடு சம்பவமும் அதற்கதற்குரிய தனித்துவங்களைக் கொண்டிருந்தாலும், ஒரேசீராக நிகழ்கிற அத்தகையவொரு இயல்நிகழ்வு ஆழ்ந்த காரணங்களைக் கொண்டிருக்க வேண்டும். எந்த சமூக சூழல் அவற்றை உருவாக்குகின்றன? வர்க்க போராட்டத்தைத் தசாப்தகாலமாக ஒடுக்கியமையும், தனிநபர்வாதத்தை (individualism) ஊக்குவித்தமையும் ஆகும். ஒருவரது தோல்விகள் அல்லது வெற்றிகளை அவரது தனிமனிதவியல்பின் விளைபொருளாக விளங்கப்படுத்தும் ஒரு சித்தாந்தம், ஆழ்ந்த ஏமாற்றம் மற்றும் அன்னியப்படுதலுக்கு இட்டுச் செல்கிறது.

ஒரு பொதுவான நம்பிக்கையிழந்த உணர்வு இளம் தலைமுறையிடையே மேலோங்குகிறது, அவர்கள், கல்லூரிக்குச் செல்லுமளவிற்கு போதிய அதிருஷ்டசாலிகளாக இருந்தால், ஒரு நல்ல வாழ்க்கை நிலைமையை அளிக்கும் கண்ணியமான சம்பளத்துடனான ஒரு வேலை வாய்ப்பு அவர்களுக்கு இல்லாத நிலையில், அவர்கள் மீது ட்ரில்லியன் கணக்கிலான டாலர் கல்விக் கடன் சுமை ஏற்றப்பட்டுள்ளது.

எங்கிலும் பரவியுள்ள வன்முறையைப் பொறுத்த வரையில், இது முதலும் முக்கியமுமாக அதைக் கட்டுப்படுத்துகிற மாநிலம் மற்றும் ஆளும் வர்க்கத்திற்கே பொருந்துகிறது. கடந்த இரண்டரை தசாப்தங்களில், அண்மித்தளவில் ஹார்பர்-மெர்செரின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் இக்காலக்கட்டத்தில் தான் உள்ளடங்குகிறது என்ற நிலையில், அமெரிக்கா கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ தொடர்ச்சியாக ஒரு நாடு மாற்றி ஒரு நாட்டில் போரில் ஈடுபட்டிருந்தது, இதில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள் மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்த்தப்பட்டிருக்கிறார்கள். அச்சவுணர்வு மற்றும் அவநம்பிக்கையான சூழலைப் பேணுவதற்கும் மற்றும் அரசின் சகல விதமான வன்முறை நடவடிக்கைகளை நியாயப்படுத்தவும் ஆளும் வர்க்கத்தால் பயன்படுத்தப்பட்ட "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" காலக்கட்டத்தில் தான் அந்த துப்பாக்கிச்சூடு நடத்திய அந்நபர் வளர்ந்துள்ளார்.

ஒபாமாவின் டிரோன் படுகொலை திட்டத்தின் கீழ், பகிரங்கமான படுகொலை என்பது உத்தியோகப்பூர்வ அமெரிக்க அரசாங்க கொள்கையாக மாறியுள்ளது. ஜனாதிபதியும் ஏனைய அரசாங்க அதிகாரிகளும் அமெரிக்க குடிமக்கள் உட்பட அவர்களது கொலை பட்டியலில் இருப்பவர்களைக் "கலைவது" குறித்து பகிரங்கமாக பெருமைபீற்றுகிறார்கள். டிரோன்களைக் கொண்டு அமெரிக்க அரசாங்கம் எத்தனை பேரைக் கொன்றுள்ளது என்பதை அது இரகசியமாக வைத்துள்ள போதினும், பொது செய்திகள் அடிப்படையில் அமைந்த குறைமதிப்பீடுகளே வழக்குகளோ அல்லது குற்றச்சாட்டுக்களோ இல்லாமல் கூடுதல் அதிகாரத்தின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றன.

உள்நாட்டில், பொருளாதார சமத்துவமின்மை அதிகரித்து சீரழிந்துள்ள ஒரு சமூகம், அதேநேரத்தில் அதிகரித்தளவில் இராணுவமயமாக்கப்படுகிறது, சாத்தியமான ஒவ்வொரு தருணத்திலும் இராணுவ சேவையே தேசத்தின் உயர்ந்த சேவையாக புகழப்படுகிறது. பொலிஸ் படைகளோ கவச வாகனங்களோடு பீதியூட்டும் ஆயுதமேந்தியுள்ளன, அதன் தானியங்கி துப்பாக்கிகள் இராணுவ பிரிவுகளிலிருந்து அவற்றை பிரித்தறிய முடியாதவாறு செய்கின்றன. படுகொலை மற்றும் காட்டுமிராண்டித்தனம் வழமையாகியுள்ளது, இந்தாண்டு இதுவரையில் பொலிஸ் கொலையில் அண்மித்த 900 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மரண தண்டனை விதிக்கும் பொருளாதாரரீதியில் முன்னேறிய நாடுகளிலேயே அமெரிக்கா கடைசியில் உள்ளது. 1976க்கு பின்னரில் இருந்து, 1,416 பேர் மிகக் குரூரமாக, மனிதத்தன்மையின்றி மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தாண்டு இதுவரையில் அங்கே அதுபோன்ற அரசு-அனுமதித்த இருபத்தி இரண்டு படுகொலைகள் நடந்துள்ளன.

இத்தகைய துப்பாக்கிச்சூடுகளை அடுத்து முன்னெடுக்கப்படும் வழமையான தீர்வு நடவடிக்கைகளுக்கும், பாரிய படுகொலை காரணங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, ஏனெனில் அவை, இறுதி பகுப்பாய்வில், அமெரிக்காவின் கொடூர சமூகத்தன்மையில் வேரூன்றியுள்ளன.