சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : சிரியா

Washington divided over Syrian debacle

சிரிய தோல்வி மீது வாஷிங்டன் பிளவுபடுகிறது

By Patrick Martin
5 October 2015

Use this version to printSend feedback

சிரியாவின் போர்களத்தில் மேலும் மேலும் நாடுகள் நுழைந்து வருகையில், அமெரிக்க ஆளும் உயரடுக்கு ஜனாதிபதி பஷர் அல்-அசாத் அரசாங்கத்தைத் தூக்கியெறியும் அதன் முயற்சிகளையும் மற்றும் மத்திய கிழக்கில் மேலாதிக்கம் பெறும் அதன் உந்துதலையும் எவ்வாறு தொடர்வது என்பதில் அதிகரித்தளவில் பிளவுபட்டுள்ளது.

ஒபாமா நிர்வாகத்திற்கும் மற்றும் காங்கிரஸில் உள்ள குடியரசு கட்சி விமர்சகர்களுக்கும் இடையேயும், ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகள் இரண்டுக்குள்ளும், இராணுவ-உளவுத்துறை எந்திரத்திற்குள்ளும் கடுமையான பரஸ்பர குற்றச்சாட்டுக்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தினது பெரும் வீழ்ச்சிக்கு அடையாளமாக ஆகியுள்ளன.

2016ல் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராக முன்னணியில் உள்ள முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டனின் வியாழக்கிழமை அறிக்கையும், வாஷிங்டனில் இந்த சமீபத்திய சரமாரியான பாய்ச்சலில் கலந்தது. அவர், அசாத் அரசாங்கத்துடன் சண்டையிட்டு வரும் அமெரிக்க ஆதரவிலான இஸ்லாமிய படைகளைப் பாதுகாக்க, "விமானம் பறக்க தடைசெய்யப்பட்ட பகுதியை" நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவு தெரிவித்தார்.

அசாத்தின் இரும்புபிடியில் உள்ள சிரியாவின் லடாகியா துறைமுக நகரத்திற்கு அருகே, புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட ரஷ்ய விமானத்தளத்திலிருந்து அதன் போர்விமானங்கள் வான்வழிதாக்குதல்களை தொடங்கிய அடுத்த நாள், கிளிண்டன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஜோர்ஜ் டபிள்யு. புஷ்ஷின் கீழ் அமெரிக்க அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட மற்றும் ஒபாமாவினால் தொடரப்பட்ட வார்த்தைகளையே பிரயோகித்து, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் கூறுகையில் இந்த வான்வழி தாக்குதல்கள் சிரியா மற்றும் ஈராக்கிற்கான இஸ்லாமிய அரசையும் மற்றும் "பயங்கரவாதிகள்" என்று அவர் முத்திரை குத்திய ஏனைய இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களையும் அழிப்பதை நோக்கமாக கொண்டது என்றார்.

சிஐஏ மூலமாக நேரடியாகவோ அல்லது சவூதி அரேபியா மற்றும் கட்டார் போன்ற அமெரிக்க கூட்டாளிகள் மூலமாகவோ அமெரிக்க ஆயுதங்கள் மற்றும் ஏனைய உதவிகளைப் பெற்றுள்ள பல்வேறு இஸ்லாமிய குழுக்களும் மற்றும் ISIS உம், இரண்டுமே ரஷ்ய குண்டுகளின் இலக்குகளில் உள்ளடங்குகின்றன. அந்த பல்வேறு இஸ்லாமிய குழுக்களில், அசாத்துடன் சண்டையிட்டுவரும் அமெரிக்க-ஆதரவிலான "கிளர்ச்சி" இராணுவ படையின் பாகமாக உள்ளதும் மற்றும் அல் கொய்தாவுடன் இணைப்பு கொண்ட ஒரு சக்திவாய்ந்த குழுவான அல்-நுஸ்ரா முன்னணியும் உள்ளது.

2011-2012 இல் சிரிய உள்நாட்டு போரின் ஆரம்ப கட்டங்களில் கிளிண்டன், மிகவும் ஆக்ரோஷமான அமெரிக்க தலையீட்டை ஆதரித்திருந்தார், ஆனால் அந்நேரத்தில் ஒபாமா அதை ஏற்கவில்லை. வியாழனன்று போஸ்டன் தொலைக்காட்சி நிலையம் WHDH-TV க்கு அப்பெண்மணி கூறுகையில், அவர் இப்போது வெளியுறவுத்துறை தலைமையில் இருந்திருந்தால், “தரைப்படைகளைக் கொண்டும் மற்றும் விமான தாக்குதல்கள் மூலாமகவும் மக்கள் சாகடிக்கப்படுவதை நிறுத்தும் முயற்சியில், நான் தனிப்பட்டரீதியில் விமானம் பறக்க தடைசெய்யப்பட்ட பகுதியை மற்றும் மனிதாபிமான பகுதிகளை (humanitarian corridors) இப்போது அறிவுறுத்தியிருப்பேன்,” என்றார்.

ஆனால் ரஷ்ய இராணுவ தலையீடு அதுபோன்றவொரு கொள்கைக்கு ஒரு புதிய பரிமாணத்தை வழங்கிவிடுகிறது. "விமானம் பறக்க தடைவிதிக்கப்பட்ட பகுதி" ஒன்று வெறுமனே அசாத் விமானப்படையின் நொருங்கிய எச்சசொச்சங்களின் மீது மட்டுமின்றி, மாறாக லடாகியாவிற்கு அருகே அதன் புதிய தளத்தைச் சுற்றி நவீன விமான-எதிர்ப்பு ஆயுதங்களை நிறுத்தியுள்ள ஒரு அதிநவீன இராணுவ சக்தியான ரஷ்யாவிற்கு எதிராகவும் கூட நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும். அதுபோன்ற எந்தவொரு நடவடிக்கையும் அணுஆயுதமேந்திய சக்திகளான ரஷ்யா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே ஓர் உடனடி இராணுவ மோதல் அபாயத்தை முன்நிறுத்தும்.

ஒபாமா வெள்ளியன்று அவரது பத்திரிகையாளர் கூட்டத்தில், சிரியா மீதான அமெரிக்க கொள்கை மீது காங்கிரஸ் விமர்சகர்களிடமிருந்து வரும் “அரை-வேக்காடு யோசனைகள்" மற்றும் "புரிந்துகொள்ள முடியாத கருத்துக்களைக்" முதலில் கடிந்துரைத்த பின்னர், பகிரங்கமாக கிளிண்டனின் அறிவுரையை நிராகரித்தார். அந்த "அரை-வேக்காடுகளில்" கிளிண்டனும் உள்ளடங்குவாரா என்று கேட்டபோது, இல்லையென்று அவர் பதிலளித்தார், ஆனால் "விமானம் பறக்க தடைசெய்யப்பட்ட பகுதியையோ" அல்லது மோதலைத் தீவிரப்படுத்தும் ஏனைய இராணுவ நடவடிக்கையையோ அவர் ஆதரிக்கவில்லையென்பதை அறிவித்தார்.

“நாங்கள் சிரியாவை, அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான ஒரு பினாமி போராக மாற்றப் போவதில்லை. அது நமது பாகத்தில் ஒரு மோசமான மூலோபாயமாக இருக்கும்,” என்றார். அதேநேரத்தில், ISIS தான் அமெரிக்க தலையீட்டின் பிரதான இலக்கு என்ற அவரது பாசாங்குத்தனத்தை எடுத்துரைத்து, அசாத் ஆட்சியை அதிகாரத்திலிருந்து நீக்குவதே நிர்வாகத்தின் இலக்கு என்பதையும் அழுத்தந்திருத்தமாக தெரிவித்தார்.

சிரியாவில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கு அதிகரித்துவரும் போர்முரசில் வெறுமனே கிளிண்டனும் சேர்ந்திருந்தார், அதில் காங்கிரஸில் உள்ள பல ஜனநாயக கட்சியினரும் மற்றும் பெரும்பாலான குடியரசுக் கட்சியினரும் உள்ளடங்கியுள்ளனர்.

செனட் ஆயுத சேவைகள் கமிட்டியின் ஒரு சமீபத்திய விசாரணையில், முன்னாள் சிஐஏ இயக்குனரும் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான முன்னாள் தளபதியுமான டேவிட் பெட்ரீயஸ்—சிரியாவில் அமெரிக்க போர்விமானங்கள் அன்றாடம் வீசும் பெரும் குண்டுகளை விட மிக மிக குறைந்த சக்திவாய்ந்த எளிய—பீப்பாய் குண்டுகள் (barrel bombs) என்றழைக்கப்படும் குண்டுகள் வீசுவதை அசாத் நிறுத்த வேண்டும் என்றும், அதற்கு அசாத் மறுத்தால் விமானம் பறக்க தடைசெய்யப்பட்ட பகுதிகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அசாத்திற்கு இறுதி எச்சரிக்கை விடுக்கவும் பரிந்துரைத்தார்.

ஜனநாயக தேசிய கமிட்டியின் முன்னாள் தலைவரும் வேர்ஜினியாவின் செனட்டருமான டிம் கெய்ன், மற்றும் ஜனநாயக கட்சியுடன் ஒரு அதிருப்தி கருத்துக்களைக் கொண்டு தனி செனட்டராக உள்ள மெய்னின் அன்கஸ் கிங் உட்பட அக்கமிட்டியின் பல ஜனநாயகக் கட்சி அங்கத்தவர்கள் விமானம் பறக்க தடைசெய்யப்பட்ட பகுதிக்கு அவர்களது ஆதரவைத் அறிவித்தனர். சிறுபான்மை கொறடாவாக விளங்கும் இலினோய்ஸின் செனட்டர் ரிச்சார்ட் டுர்பினும் அதை ஆதரித்துள்ளார்.

ஜனநாயகக் கட்சியினரின் இந்த மாற்றத்தால் உத்வேகமடைந்திருக்கும் செனட்டில் உள்ள முன்னணி குடியரசு கட்சியினர் வெள்ளை மாளிகை மீது அவர்களது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர். செனட்டின் வெளியுறவு விவகாரங்களுக்கான கமிட்டி தலைவர் Bob Corker அறிவிக்கையில், சிரியாவில் ரஷ்ய தலையீட்டிற்கு அமெரிக்க விடையிறுப்பு குறித்து விளக்கமளிக்க அடுத்த வாரம் வருமாறு வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரிக்கு அவர் உத்தரவு அனுப்பவிருப்பதாக அறிவித்தார்.

அவர் MSNBCக்குத் தெரிவித்தார், “ஒபாமா நிர்வாகத்தில் தலைமைபண்பு இல்லாதிருப்பதால், அமெரிக்காவின் பின்அழுத்தம் குறித்து அச்சமின்றி புட்டின் அவர் என்ன விரும்புகிறாரோ அதை செய்கிறார், இப்போது ரஷ்யா மனிதாபிமான நெருக்கடியை தீவிரப்படுத்துகின்ற விமானத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.”

செனட்டில் உள்ள மிக முக்கிய போர்வெறியரான ஆயுத சேவை கமிட்டியின் தலைவர் ஜோன் மெக்கெயின் ஞாயிறன்று அறிவிக்கையில், சிரியாவில் ரஷ்யாவுடன் ஓர் பினாமி போருக்கான கொள்கையை ஒபாமா தட்டிக்கழித்தாலும், அமெரிக்கா ஏற்கனவே அதுபோன்றவொன்றில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின், "அமெரிக்காவை அலட்சியத்துடனும், அவமதிப்போடும் கையாள்கிறார்" என்று CNN இன் "State of the Union" நிகழ்ச்சியில் தோன்றிய அந்த முன்னாள் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தூபமிட்டார். புட்டின் விமான தாக்குதல்களை நடத்தி வருவதுடன், “1973 இல் அவர்களை அன்வர் சதாத் தூக்கியெறிந்ததற்கு பின்னரிலிருந்து ரஷ்யா நுழையவே இல்லை என்பதைப் போல மத்திய கிழக்கிற்குள் தன்னைத்தானே நுழைத்துக் கொள்கிறார்,” என்று மெக்கெயின் தெரிவித்தார்.

ஆனால் மெக்கெயின், 2016 குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் உள்ள தற்போதைய தலைவரான பில்லியனர் டோனால்ட் ட்ரம்ப், ஞாயிறன்று காலை பல நேர்காணல் நிகழ்ச்சிகளில் தோன்றி சிரியாவிலிருந்து விலகியிருக்க விடுத்த அழைப்புடன் முரண்படுகிறார். சிரியாவிலுள்ள போராளிகள் அவர்களுக்குள்ளேயே ஒருவரையொருவர் கொல்ல அனுமதிப்பதில் தான் அமெரிக்காவின் நலன்கள் உள்ளது என்று டோனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். “ISIS உம் மற்றும் சிரியாவும் சண்டையிடட்டும்”, "ரஷ்யா ISIS ஐ கவனித்துக் கொள்ளட்டும்" என்றவர் தெரிவித்தார்.

அப்பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களை ஒபாமா நிர்வாகம் பின்தொடர்ந்து வருவது, தந்திரோபாய கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் அதன் விமர்சகர்களை விட மூர்க்கத்தனத்தில் ஒன்றும் குறைந்ததில்லை. அது டிரோன் படுகொலைகள், விமான தாக்குதல்கள், இராணுவ பயிற்சிகள், சவூதி அரேபியா மற்றும் கட்டார் போன்ற பினாமிகள் மூலமாக ஆயுத தளவாடங்கள் அனுப்புவதைச் சார்ந்துள்ளது. இதற்கு முந்தைய நிர்வாகமோ, நூறு ஆயிரக் கணக்கான அமெரிக்க தரைப்படை துருப்புகளை நேரடியாக அனுப்புவதில் தங்கியிருந்தது. இரண்டு தந்திரோபாயங்களுமே மத்திய கிழக்கை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிய செய்வதில் வெற்றியடையவில்லை, ஆனால் அதேவேளையில் பயங்கரமான பேரழிவுகளுடன், நூறு ஆயிரக் கணக்கான உயிரிழப்புகளை உண்டாக்கி, பத்து மில்லியன் கணக்கான அகதிகளைத் தான் உருவாக்கியுள்ளது.

சிரியா (ஈராக் மற்றும் ஏனைய இடங்களில் ஏற்பட்ட) தோல்வியால் உருவாகியுள்ள அபாய நிலைமை, நிதியியல் பிரபுத்துவத்தின் இரண்டு அரசியல் கட்சிகளினூடாக மட்டும் பயணிக்கவில்லை, மாறாக இராணுவ-உளவுத்துறை எந்திரத்தூனூடாகவும் செல்கிறது. இந்த எந்திரத்தின் ஒரு கன்னைக்காக பெட்ரீயஸ் பேசுகின்ற நிலையில், தற்போதைய பெண்டகன் தலைமையோ மத்திய கிழக்கிற்கு அதிகளவில் கூடுதலான அமெரிக்க படைகளை ஒதுக்க விடாப்பிடியாக எதிர்க்கிறது, ஏனென்றால் ரஷ்யா மற்றும் குறிப்பாக சீனாவுடன் நிகழவிருக்கின்ற மோதல்களுக்கு தயாரிப்பு செய்ய வேண்டிய அவசியமிருப்பதனால் ஆகும்.

அசாத்திற்கு எதிராக போராடும் இஸ்லாமிய படைகளுக்குப் பயிற்சியளிக்க சிஐஏ அதன் மொத்த வரவு செலவு திட்டத்தில் 10 சதவீதத்தை செலவிட்டு வருவதாக கூறப்படுகின்ற நிலையில், சிரியாவில் மிக அதிகளவில் பொறுப்பேற்றுள்ள மத்திய உளவுத்துறைக்கும் (CIA) மற்றும் சிரிய "கிளர்ச்சியாளர்களுக்கு" பயிற்சியளிக்கும் ஒரு முன்முயற்சியை மட்டுமே நடத்தி வருகிற பெண்டகனுக்கும் இடையே ஒரு கூர்மையான மோதல் நிலவுவதாக வாஷிங்டன் போஸ்டில் சனிக்கிழமை வெளியான ஒரு செய்தி குறிப்பிட்டது.

போஸ்ட் குறிப்பிட்டது: “தாக்குதல்களுக்கு விடையிறுக்கவோ அல்லது சிஐஏ-பயிற்சியளித்த பிரிவுகளுக்கு ஆதரவளிக்கவோ அமெரிக்கா தவறுவது, மிதமான போராளிகள் குழுக்களுக்கு வழங்கும் ஆதரவு அளவின் மீது வெள்ளை மாளிகை கட்டுப்பாடுகளைத் திணித்ததால் பல ஆண்டுகளாக கொதித்துபோயுள்ள அப்பிராந்தியத்தின் சிஐஏ துணைஇராணுவப்படை குழுக்களைக் கோபமூட்டக்கூடும் என்று ஒரு முன்னாள் மூத்த அமெரிக்க உளவுத்துறை அதிகாரி தெரிவித்தார்.”

கட்டுரையாளரின் ஏனைய பரிந்துரைகள்:

சிரியாவில் அமெரிக்க-ரஷ்ய மோதலும், போர் அபாயமும்