சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Summer schools of France’s Socialist and Left Parties prepare swing to the right

பிரான்சின் சோசலிஸ்ட் மற்றும் இடது கட்சிகள் வலதுக்கு ஊசலாட தயாராகின்றன

By Francis Dubois
3 September 2015

Use this version to printSend feedback

தங்களது சிக்கன பொருளாதாரக் கொள்கைகள் மீதாக வளர்ந்து வரும் கோபத்தை எதிர்கொள்கையில், ஆளும் சோசலிஸ்ட் கட்சியும் (Parti socialiste - PS) அதன் சுற்றுவட்டத்தில் உள்ள இடது முன்னணியும் (Front de gauche - FG) ஆளும் செல்வந்த தட்டு தொழிலாள வர்க்கத்தின் மீது அதன் தாக்குதல்களை தீவிரப்படுத்துவதற்கு அனுமதிக்கும் அரசியல் பொறிமுறையை ஸ்தாபிப்பதற்கு முயற்சிக்கின்றன.

கடந்தவாரம் லா ரோஷெல் (La Rochelle) மற்றும் துலூஸ் (Toulouse) நகரங்களில் நடைபெற்ற PS மற்றும் FG கோடை பள்ளிகளின்பொழுது, இரண்டு கட்சிகளும் வலதுசாரி அரசியல் அடிப்படையில் புதிய கூட்டுகளின் வடிவத்தில் அரசியல் மறுகுழுக்கூடலுக்கான செயற்திட்டங்களை முன்வைத்தன.

ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டால் ஆதரிக்கப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கையின் கொடூரத்தை மட்டுமல்லாமல், இடது முன்னணியின் கூட்டாளியான சிரிசாவால் தலைமைதாங்கப்படும் கிரேக்க அரசாங்கத்தின் பிற்போக்கு குணாம்சத்தையும் கூட அம்பலப்படுத்திய, கிரேக்கத்தில் ஏற்பட்ட நெருக்கடிக்கு மத்தியில் இந்தப் பள்ளிகள் இடம்பெற்றன. கிரேக்க பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் (Alexis Tsipras) கிரேக்க தொழிலாளர்கள் மீது மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளை திணித்துள்ளார்.

சோசலிஸ்ட் கட்சியின் கோடை பள்ளி முழுவதும், கட்சியின் தலைவர்கள் சோசலிசத்தோடு தொடர்புள்ளதாக எதையும் காட்டும் இந்த பெருவணிகக் கட்சியின் வெற்று, செல்வாக்கிழந்துபோன நடிப்புக்களிலிருந்து தொடர்ந்து தள்ளியே வைத்துக்கொண்டனர்.

லா ரோஷெல் இல் PS பொறுப்பில் உள்ளவர்களால் கைதட்டி வரவேற்ற பேச்சொன்றில், பிரதமர் இமானுவல் வால்ஸ் அரசாங்கத்தின்இடதின்” “மதிப்புக்கள்பற்றிய வெற்று வாய்ச்சவடாலுடன், சிக்கனக் கொள்கைகளையும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களையும் நியாயப்படுத்தினார். அவர் தொழிலாளர்களை முதலாளிகள் சுரண்டுவதன் மீதுள்ள மிச்சசொச்ச கட்டுப்பாடுகளையும் அகற்றுவதற்கு அற்ப வாக்குறுதிகளால் தனது கட்சியின் சிக்கன பொருளாதாரக் கொள்கைகளை சுற்றிப் போர்த்தினார். வால்ஸ் கூறினார், “இன்னும் பாதுகாத்துக்கொண்டு, அதேவேளை இந்தக் கட்டுப்பாடுகளில் இருந்து நாம் விடுபடமுடியும், அதுதான் இடது!”

ஜனவரி 11” என்ற தனது முன்னுரிமைகளை (சார்லி ஹெப்டோ துப்பாக்கிச்சூடுகள் அதற்கு அவரது அரசாங்கம் இராணுவத்தைக் கொண்டுவந்துபயங்கரத்தின் மீதான யுத்தம்என்ற பெயரில் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல்தொடுத்ததை) மற்றும்வளர்ச்சிக்கு திரும்புவதை” (அதாவது, தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு நலன்களை வெட்டுவதற்கான புதிய சிக்கனப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு திரும்புவதை) தொகுத்து சுருங்கக் கூறினார்.

தொழிலாளர் விதிகளை நிறுத்தி வைத்து பிரெஞ்சு முதலாளிகள் கூட்டமைப்பான Medef மற்றும் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும்நிறுவன உடன்படிக்கைகளைதிணிப்பதை வால்ஸ் நியாயப்படுத்தினார். இவை வேலை அளிப்போரால் முன்மொழியப்படும்  குரோத நடவடிக்கைகள் ஊடாக தொழிலாளர்கள் மீது கட்டற்ற சுரண்டல் மேற்கொள்வதற்கு அனுமதிக்கிறது.

தேசிய பேரினவாதத்துக்கு (chauvinism) வேண்டுகோள் விடுவதுடன் இவற்றை வால்ஸ் சேர்த்துக்கொள்கிறார் அவரின்படி, “தேசத்திற்காக, தாயகத்திற்காக மற்றும் மதசார்பின்மைக்காக போராடும்மற்றும்பாதுகாப்பு விஷயத்தில் எவரிடமிருந்தும் படிப்பினையை எடுப்பதற்கு இல்லாதஇந்த இடது பற்றி ஒருவர் பெருமைப்பட வேண்டும்.” பிரெஞ்சு அரசின் உளவறிதல் அதிகாரத்தை அதிகரிக்கும் சமீபத்திய சட்டங்களை ஆதரிக்க மறுப்பதன் மூலம் தேசபக்தி குறைவாய் இருப்பதற்காக நவபாசிச தேசிய முன்னணியை அவர் வலது பக்கத்தில் இருந்து விமர்சித்தார்.

கிரேக்கத்தில் சிரிசாவால் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன பொருளாதாரக் கொள்கைககள் திணிக்கப்படுவதைஐரோப்பா முழுமையும் உள்ள அனைத்து இடதுகளுக்குமான அரசியல் மற்றும் அறவழி படிப்பினைஎன்று அவர் புகழ்ந்தார். “பிரச்சினையை விட்டு ஒதுங்கி இருப்பதைக் காட்டிலும் சீர்திருத்துவதற்கான தேர்வினை செய்ததற்காக” “அலெக்சிஸ் சிப்ராஸ்க்கு தனது முழு ஆதரவும் உண்டுஎன அவர் உறுதி அளித்தார்.

PS இன் கோடைப் பள்ளி பற்றி Mediapart செய்தி தளத்தில் வந்த கட்டுரை ஒன்று, சோசலிசம், சமூகப் பிரச்சினைகள், அல்லது சீர்திருத்தவாதம் பற்றி எந்த குறிப்புக்களும் இல்லாததை வலியுறுத்திக் காட்டியது.

லா ரோஷெலில் PS தலைவர்கள், நடப்பில் உள்ள கட்சியின் சுற்றுவட்டத்தில் உள்ள கட்சிகளுக்கு மட்டுமல்லாமல், வலதுசாரி கட்சிகளுடனும் கூட ஒரு கூட்டுக்கான வழியைத் திறந்து விட்டனர். PS பொதுச்செயலாளர் ஜோன்-கிறிஸ்தோப் கம்படெலிஸ்பரந்த மக்கள் கூட்டணிஒன்றுக்கான ஒரு திட்டத்தை வைத்த அதேவேளை, வால்ஸ்அனைத்து முற்போக்கினரின் அணிதிரளல்என்பதை முன்வைத்தார்.

ஜோன் லூக் மெலோன்சோனின் இடது கட்சியும் (Parti de gauche -PG) அது பகுதியாக இருக்கும் இடது முன்னணியும் (Front de gauche -FG) சிரிசாவுக்கு ஆதரவளித்ததால் பெரிதும் செல்வாக்கிழந்திருக்கிறது. ஜனவரியில் கிரேக்க பாராளுமன்ற தேர்தலில் அது அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் சிரிசா காட்டிக்கொடுத்தது, இறுதியில் முக்கூட்டின் அனைத்து ஆணையிடல்களையும் அது நடைமுறைப்படுத்தியது.

சிப்ராஸ் மற்றும் அவரது கட்சி பற்றி இன்னும் பிரமைகளைப் பரப்பிக் கொண்டு, மெலோன்சோனும் இடது கட்சியும் மக்கள் ஐக்கியம் (Popular Unity) குழுவுக்கு ஆதரவு அளிப்பதை நோக்கி நழுவிச்செல்கின்றனர், இது அண்மையில்தான் சிரிசாவிலிருந்து தோன்றியது, தொழிலாளர்கள் மீதான சிரிசாவின் தாக்குதல்களில் முழுமையாக பங்கேற்றுக் கொன்டிருந்தது.

மெலோன்சோன் முன்னாள் கிரேக்க நிதி அமைச்சர் யானிஸ் வாருஃபாக்கியையும் சிக்கன நடவடிக்கையின் ஒரு எதிராளி போல காட்டுதற்கு முயல்கிறார். மெலோன்சோன் இன்னும் இருவார காலத்தில் வாருஃபாக்கி மற்றும் ஜேர்மனியின் இடது கட்சியின் முன்னாள் தலைவர் ஒஸ்கார் லாபொன்டைன் ஆகியோருடன் கம்யூனிஸ்ட் கட்சியின் “Fête de l’Humanité” நிகழ்வில் ஒரு விவாதத்தை அறிவித்துள்ளார்.

சிரிசா சிக்கன நடவடிக்கை பொதியை மீளப் பேச்சுவார்த்தை நடத்தும் என்று பிரமைகளை தொடர்ந்து பரப்பும் அதேவேளை, மெலோன்சோன்திட்டம் பிபற்றிய ஒரு மாற்று முன்னோக்கை முன்வைத்தார். அதில் பிரான்ஸ் யூரோவை விட்டு விலகி பிரெஞ்சு நாணயமான பிராங்க் இற்கு திரும்புவது சம்பந்தப்பட்டுள்ளது.

மெலோன்சோன், பிரெஞ்சு தேசிய இறையாண்மையை முன்னிலைப்படுத்தும் ஒரு முன்னோக்கை என்றுமிராத வகையில் மிக வெளிப்படையாக முன்னே கொண்டு வருகிறார், அது அவரை நவபாசிஸ்டுகள் மற்றும் முன்னாள் சோசலிஸ்ட் கட்சி அலுவலர் Jean-Pierre Chevènement மற்றும் வலதுசாரி Nicolas Dupont-Aignan போன்றஇறையாண்மைவாதிகள்உடன் நெருக்கமாகக் கொண்டுவரும்.

யூரோவில் வெளியேறுவது மட்டுமே யூரோவில் தங்கி இருப்பதைவிட குறைந்த அளவான சிக்கன நடவடிக்கையை கொண்டிருப்பதாக அர்த்தப்படுத்தாது. மெலோன்சோனின்திட்டம் பி”, நாட்டின் உள்ளும் வெளியும் மூலதனத்தின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும், எல்லைகளை மூடும் மற்றும் பாதுகாப்புப் படைகளின் அணிதிரட்டலையும் குறிக்கிறது. கிரீசில், அத்தகையதிட்டம் பி தயாரித்திருந்தது வாருஃபாக்கிதான்.

மெலோன்சோன் சோசலிஸ்ட் கட்சியின் சுற்றுவட்டத்தை மறுஒழுங்கமைக்கப்பதற்கான ஒரு திட்டத்தையும் கூட முன்வைத்தார். சோசலிஸ்ட் கட்சியின் கிளர்ச்சியாளர்களுடன் – PS இல் உயர்பதவியில் உள்ள அவர்கள், தேசியவாத நிலைப்பாட்டிலிருந்து பேர்லின் கொள்கைக்கு மிக குரோதமாக இருக்கும் அதேவேளை, ஹாலண்டின் சிக்கனக் கொள்கைக்கு ஆதரவளிக்கின்றனர்சுற்றுச்சூழலியல் கட்சி (ஐரோப்பிய சூழலியல் கட்சியான பசுமைக் கட்சி, ஒரு ஆண்டுக்கு முன்னர்வரை PS உடன் அரசாங்கத்தில் அங்கம் வகித்தது) மற்றும் இடது முன்னணியில் உள்ள இடது கட்சியின் பிரதான பங்காளி ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி ஆகியோருடன் ஒரு கூட்டுக்கு அழைத்தார்.

வரவிருக்கும் தேர்தல் சுழற்சிக்கான ஒரு தற்காலிக கூட்டை வெறுமனே கூட்டுதல் என்பதற்கும் அப்பால், மெலோன்சோன் கிரேக்கத்தில் உள்ள சிரிசா அல்லது ஸ்பெயினில் உள்ள பொடெமோஸ் போன்றவற்றை ஒத்த ஒரு அமைப்பை உருவாக்குதற்கு பரிசீலித்து வருகிறார்.

கோடைப் பள்ளிக்கு முன்னர் அவர் கூறினார்: ”இதனை கட்சிகளின் கூட்டுக்கு விடுவதைக் காட்டிலும், ஸ்பெயினில் பொடெமோஸ் செய்ததைப்போல பட்டியல்கள் மற்றும் வேலைத்திட்டங்களை தயாரிப்பதில் நேடியாக தொடர்புடைய குடிமக்கள் அவையை விரும்புகிறோம். எந்தவகையிலும், சோசலிஸ்ட் கட்சி உடனான பட்டியிலில் இடது கட்சியின் உறுப்பான்மை இருக்காது.”

லுமொண்ட் படி மெலோன்சோன் இந்த முன்முயற்சிக்குள் கம்யூனிஸ்ட் கட்சியை கொண்டுவர விரும்புகிறார்: “இந்த ஒப்பந்தங்கள் கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் கட்டாயம் செய்யப்படக்கூடாது, என்று திரு மெலோன்சோன் வலியுறுத்தினார், ‘ஆனால் கம்யூனிஸ்ட்டுக்கள் கட்டாயம் முயற்சி செய்ய வேண்டும்என்று இந்த ஞாயிறு மேடையில் அவர் நழுவினார்.”

ஹாலண்டால் திணிக்கப்பட்ட நிதிய பிரபுத்துவத்தின் சிக்கன கொள்கைகளுக்கு ஒரு எதிர்ப்பாக, சோசலிஸ்ட் கட்சி தொடர்பாக இல்லாததன்மையை இருப்பதாக நினைத்து அமைப்பு ரீதியாக தவிர்த்தல் அரசியல் சூழ்ச்சி ஆகும்.

பொடெமோஸை ஒரு மாற்றீடாக முன்வைப்பது முற்றிலும் கலப்படமற்ற மோசடி ஆகும். பொடெமோஸ் சிரிசாவை ஒத்த வேலைத்திட்டத்தை கொண்டுள்ள ஒரு போலி-இடது ஆகும். இரண்டுமே தொழிலாள வர்க்கத்திடமிருந்து கறந்தெடுக்கப்படும் இலாபங்களில் பெரிய இன்னும்நியாயமானபங்கை விரும்பும் வசதியான நடுத்தரவர்க்கத்தின் நலன்களை பிரிதிநிதித்துவம் செய்கின்றது. பொடேமோஸ் சிரிசாவை ஆரம்பம் முதல் முடிவுவரை ஆதரித்திருந்தது.

யூரோவிலிருந்துகட்டுப்படுத்தப்பட்டவாறுவெளியேறுதல் மற்றும் தேசிய நாணயத்தை மீள ஏற்படுத்துதல் எனும் கொள்கையின் அடிப்படையில், அதே தொழிலாளர் விரோத அரசியலை அபிவிருத்தி செய்ய முயற்சிகள் செய்யும், அதே சமூக அடுக்கின் நலன்களை மெலோன்சோன் பிரான்சில் பிரதிநிதித்துவம் செய்கிறார். “இடது எதிர்ப்பின் ஐக்கியம்” (union de l’opposition de gauche) ஒன்றுக்கான அவரது முன்னிலைப்படுத்தல் கம்படெலிசின்பரந்த மக்கள் கூட்டணி” (grande alliance populaire) என்பதையும்விட குறைந்த பிற்போக்குத்தனம் கொண்டதல்ல.