சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan president boasts at UN of “new era of democracy”

இலங்கை ஜனாதிபதி "ஜனநாயகத்தின் புதிய சகாப்தம்" பற்றி ஐ.நா.வில் தற்புகழ்கின்றார்

By K. Ratnayake
5 October 2015

Use this version to printSend feedback

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய கொழும்பு அரசாங்கத்துக்கான சர்வதேச ஆதரவை அதிகரிக்கவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான தனது உறவுகளை வலுப்படுத்தவும் மேற்கொள்ளும் முயற்சிகளின் பகுதியாக கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையின் வருடாந்த கூட்டத்தில் உரையாற்றினார்.

கடந்த ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த இராஜபக்ஷவை தோற்கடித்து பதவிக்கு வந்த பின்னர், சிறிசேன அமெரிக்காவுக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். தான் ஜனாதிபதி பதவியை ஏற்ற பின்னர் இலங்கையில் "நீதி, சுதந்திரம் மற்றும் சமத்துவத்துக்கு வழிவகுக்கப்பட்டு "ஜனநாயகத்தின் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளதாக அவர் கடந்த புதன் கிழமை .நா.வில் கூறினார்.

உண்மையில், சிறிசேன ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டமை, அமெரிக்க ஆதரவுடனா ஒரு ஜனநாயக விரோத ஆட்சி மாற்ற நடவடிக்கையின் விளைவாகும். வாஷிங்டன், இராஜபக்ஷவின் சர்வாதிகார ஆட்சி முறைகளையோ அல்லது பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அவரது யுத்தத்தின் போதான அவரது அரசாங்கத்தின் குற்றங்களையோ எதிர்க்கவில்லை, மாறாக பெய்ஜிங் உடனான அவரது நெருக்கமான உறவுகளாலேய அவரை எதிர்த்தது.

தனது அரசாங்கத்தின் "புதிய கொள்கைகளை" கோடிட்டுக் காட்டிய சிறிசேன, முக்கிய கொள்கை மாற்றம் பற்றி, அதாவது சீனாவை விட்டு விலகி அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற அதன் மூலோபாய பங்காளிகளை நோக்கித் திரும்பியதை பற்றி, எதுவுமே பேசவில்லை. இதன் விளைவாக, அமெரிக்க வெளிவிவகார செயலர் ஜோன் கெர்ரி மற்றும் .நா. பொதுச் செயலாளர் பான் கி-மூனின் பெரும் வரவேற்பைப் பெற்ற சிறிசேன, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவையும் சந்தித்தார்.

.நா.வில் உரையாற்றிய சிறிசேன, தனது அரசாங்கம் "ஜனநாயகத்தை வலுப்படுத்தும் பொருட்டு அரசியலமைப்பில் அவசியமான திருத்தங்களை" அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்ததோடு "அந்த திருத்தங்கள் பன்மைத்துவம் மற்றும் ஜனநாயகத்தையும் பலப்படுத்தி நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள் மூலம் நல்லாட்சிக்கான அஸ்திவாரங்களை வலுப்படுத்தியிருக்கின்றன" என்று மேலும் கூறினார். தனது தனிப்பட்ட தலையீட்டினால் சில நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அதிகாரங்கள் பாராளுமன்றத்திற்கு மாற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இவை அனைத்தும் சோடனைகளாகும். பதவியேற்றபின் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கும் தனது வாக்குறுதியை கைவிட்ட சிறிசேன, தனது அதிகாரங்களில் சிலவற்றை மட்டும் பிரதமருக்கும் அவரது அமைச்சரவைக்கும் மாற்றம் செய்தார். அரசியலமைப்பில் 19 வது திருத்தமானது லஞ்ச ஆணைக்குழு, தேர்தல் ஆனைக்குழு போன்ற "சுயாதீன ஆணைக்குழுக்களை" நியமிப்பதற்கான அரசியலமைப்பு சபையை ஸ்தாபித்தது.

இந்த நடவடிக்கைகள் "நல்லாட்சியை" வலுப்படுத்துவதாக வாஷிங்டன் புகழ்ந்தாலும், இந்த அரசியலமைப்புச் சபையானது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாராளுமன்றத்தினாலும் நியமிக்கப்பட்ட நபர்களையே உள்ளடக்கிக்கொண்டதாகவும் மற்றும் சபாநாயகர் தலைமையிலானதாகவும் இருக்கும். பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரும் பதவி முறை உறுப்பினர்களாக இருப்பர். இது கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தின் கட்டுப்பாட்டிற்குள்ளேயே உறுதியாக இருக்கும் அரச நிறுவனங்களை நவீனப்படுத்துவதாகும்.

கால் நூற்றாண்டு கால கொடூரமான உள்நாட்டு யுத்தத்தின் போது கட்டியெழுப்பிய பொலிஸ்-அரச நிறுவனங்கள் எதுவும் கலைக்கப்படவில்லை. 2009ல் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் ஆயுதப் படைகளின் அளவு வெட்டிக் குறைக்கப்படவில்லை மற்றும் தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் பெரும் பகுதி இறுக்கமான இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக, ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள் மற்றும் இராணுவத்தின் யுத்தக் குற்றங்கள் மூடி மறைக்கப்பட்டு வருகின்றன.

சிறிசேன, தனது "நாட்டிற்கான புதிய நோக்கு, நிலையான வளர்ச்சி மற்றும் நல்லிணக்கமே," என .நா.வில் கூறினார். இந்த வழிமுறைக்கான அடிப்படை, “கடந்த காலத்தை நேர்மையாக கையாள்வதும் உண்மையை எதிர்பார்க்கும், நீதி, நஷ்ட ஈடு மற்றும் மறுநிகழ்வு அல்லாத நிலைமையை நோக்கிய முன்னெடுப்பை" பின்பற்றுவதுமாகும்.

சிறிசேன நியூயோர்க்கில் இருந்த அதேவேளை, அமெரிக்கா மற்றும் இலங்கை அதிகாரிகள், சரியாக ஒரு எதிர்மாறான ஒன்றைச் செய்வதற்காக .நா. மனித உரிமைகள் பேரவை (UNHRC) அமர்வு மூலம் ஒரு தீர்மானத்தை கொண்டுவர ஜெனீவாவில் ஒத்துழைத்துக்கொண்டிருந்தனர். இராஜபக்ஷவை நீக்குவதை திட்டமிட்ட வாஷிங்டன், சர்வதேச மனித உரிமைகள் விசாரணைக்கான தனது கோரிக்கையை கைவிட்டு, போர் குற்றங்கள் புரிந்தவர்களை மன்னித்து விடக்கூடியவாறு இலங்கை அரசாங்கத்தின் ஒரு போலி "உள்நாட்டு விசாரணையை" ஆதரித்தது.

சமீபத்தில் .நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வெளியிட்ட அறிக்கை, போரின் கடைசி கட்டத்தில் ஆயிரக்கணக்கான, இல்லையெனில் பத்தாயிரக்கணக்கான பொதுமக்கள் இராணுவத்தால் படுகொலைகளை செய்யப்பட்டமை, அத்துடன் நீதிக்குப் புறம்பான கொலைகள் மற்றும் காணாமல் போதல்கள் பற்றிய தரவுகளை விரிவாக விளக்கியுள்ளது. சிறிசேன இராஜபக்ஷவின் அமைச்சரவையில் அமைச்சராக மட்டுமன்றி, புலிகளின் தோல்விக்கு முந்தைய வாரங்களில் பதில் பாதுகாப்பு அமைச்சராகவும் செயற்பட்டுள்ளார்.

நியூ யோர்க் டைம்ஸ் வெளியிட்ட ஒரு பேட்டியில், போர் குற்றச்சாட்டுகளை விசாரிக்க இலங்கை நீதிமன்றங்களை நியமிக்கும் என சிறிசேன கூறிய போதிலும், "மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளுடன் கவனமாக ஆலோசனை," செய்த பின்னரே இது மேற்கொள்ளப்படும் என்றார். இந்த பொறிமுறைகள், யுத்த குற்றங்களுக்கு பொறுப்பான அநேகமானவர்கள் அல்லது அனைவரும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படக்கூடியவாறு கவனமாக திட்டமிடப்படும்.

அதே சமயம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான ஆக்கிரமிப்புகளுக்கும் இப்போது சிரியா மற்றும் ஈராக் மீது அமெரிக்க தலைமையிலான போர் விரிவாக்கப்படுவதற்கும் போலிக்காரணமாக இருந்த, அமெரிக்காவின் "பயங்கரவாதத்தின் மீதான போரை" சிறிசேன முழுமையாக ஆதரித்தார். "அனைத்து விதமான போர் மற்றும் பயங்கரவாதமும் மனித குலத்துக்கு ஒரு அவமானம்," என்று கூறிய அவர், "அவர்களது மூல காரணம் எதுவாக இருந்தாலும், மனிதகுலத்திற்கு எதிரான இத்தகைய கொடூரத்தை தோற்கடிக்க வழிகளை கண்டுபிடிப்பதே இந்த சகாப்தத்திலான சவால்கள்" என அவர் மேலும் தெரிவித்தார்.

இராஜபக்ஷவை போல், புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நியாயப்படுத்திய சிறிசேன, "நாம் உலகில் மிகவும் இரக்கமற்ற பயங்கரவாத கருவியை தோற்கடித்தோம்" என பிரகடனம் செய்தார். புலிகள் உள்நாட்டு யுத்தத்தின் போது கொடூரமான வழிமுறைகளை நாடிய அதேவேளை, மோதலுக்கான முக்கிய பொறுப்பு, 1948ல் உத்தியோகபூர்வ சுதந்திரம் பெற்றதில் இருந்தே தமிழர் விரோத இனவாதத்தை தூண்டிவந்த, தீவின் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான பாரபட்ச கொள்கைகளை கடைப்படித்த ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்களையே சாரும்.

சிறிசேன, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் இலங்கையின் ஒத்துழைப்பை வலுப்படுத்த தனது விஜயத்தை பயன்படுத்திக்கொண்டார். .நா. அமைதி காப்பு என்று அழைக்கப்படும் தலைவர்கள் மாநாட்டில் பேசிய அவர், அத்தகைய .நா நடவடிக்கைகளுக்கு இரண்டு போர் போக்குவரத்து நிறுவனங்கள், இரண்டு பொறியியல் படையணிகளின், ஒரு காலாட்படை பிரிவு மற்றும் இரண்டு சிறப்பு படை நிறுவனங்கள் உட்பட சுமார் 5,000 துருப்புக்களை வழங்குவதாக உறுதியளித்தார்.

சிறிசேன தனது அமெரிக்க விஜயத்தின் "வெற்றி" பற்றிய களிப்புடன் இருந்தார். அவருடைய முக்கிய சவால் "சர்வதேச சமூகத்தை வெற்றிகொள்வது" என்றும் "இந்த முயற்சிகள் பலன் தந்துள்ளன" என்றும் நியூ யோர்க் டைம்ஸ்  பேட்டியில் பெருமையாக பேசியுள்ளார். பான் கி-மூன், ஒபாமா மற்றும் ரஷியன் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் போன்ற தலைவர்களுடன் மதிய போசன மேசையில் சிறிசேனவும் அமர்த்தப்பட்டார் என்று அமெரிக்காவுக்கான இலங்கை தூதர் பிரசாத் காரியவசம் குறிப்பிட்டார்.

இலங்கை அரசுக்குச் சொந்தமான news.lk, "ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியை வலுப்படுத்த எடுத்த முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்புக்காக" சிறிசேனவை ஒபாமா பாராட்டினார் என்று தெரிவித்துள்ளது. “சரியான பாதை நோக்கி நாட்டை இட்டுச் சென்றமையால் அவர் உலகத் தலைவர்களின் கிருபையை வென்றார்என பான் கி-மூன் சிறிசேனவிடம் கூறினார். இதுபோன்ற அறிவிப்புகள், கொழும்பில் புதிய ஆட்சிக்கு வாஷிங்டனின் ஒப்புதலுக்கான அறிகுறிகளே அன்று வேறு எதுவும் அல்ல.

தன்னுடைய .நா. உரையின் போது, "ஒத்திசைவான ஆளுகைக்காக" இலங்கையில் "இரண்டு பெரிய அரசியல் கட்சிகளை ஒன்றுபடுத்தியமை" தனது சாதனைகளில் ஒன்று என சிறிசேன புகழ்ந்துகொண்டார். இந்த கூட்டணிஆறு தசாப்தங்களாக நாட்டில் நிலவிய மோதல் அரசியல் கலாச்சாரத்தைமாற்றும் என்று அவர் அறிவித்தார்.

உண்மையில், "தேசிய ஐக்கிய அரசாங்கம்" ஒரு மோசமான பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியின் மத்தியில் தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு நாட்டின் இரு பிரதான கட்சிகளை ஒன்றாக கொண்டு வந்துள்ளது. அரசாங்கம் ஏற்கனவே ஒரு பெரிய கடன் பெற தேவையான சிக்கன நடவடிக்கைகள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதோடு, உழைக்கும் மக்களின் எதிர்ப்பை நசுக்குவதற்கு பொலிஸ்-அரச வழிமுறைகளை பயன்படுத்தத் தயங்காது.

சிறிசேனவால் அமுல்படுத்தப்படவுள்ள, அவரது அனைத்து ஏகாதிபத்திய ஆதரவாளர்களால் நியூ யோர்க்கில் பாராட்டப்பட்ட "ஜனநாயகத்தின் புதிய சகாப்தம்" இதுவே ஆகும்.