சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

கல்வி வெட்டுக்கு எதிராக சோசலிச வேலைத் திட்டத்துக்காகப் போராடுவோம்!

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அரசியலை நிராகரிப்போம்!

Statement of International Student for Social Equality (Sri Lanka)
10
October 2015

Use this version to printSend feedback

மாணவர் போராட்டங்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் அரசாங்கத்தின் பதில், பொலிஸ் தாக்குதல் உட்பட அரச ஒடுக்குமுறையை உக்கிரமாக்குவதே ஆகும். பொருளாதார நெருக்கடி ஆழமடைந்துவரும் நிலைமையில், ஒட்டுண்ணி சர்வதேச நிதி மூலதனத்தின் இலாப வேட்கைக்கு அர்ப்பணித்துக்கொண்டுள்ள இந்த அரசாங்கம், ஏனைய துறைகளில் போலவே கல்விக்கான செலவு வெட்டுக்களையும் தனியார் துறைக்கு வாய்ப்பு ஏற்படுத்துவதயும் மேலும் மேலும் அதிகரிக்கச் செயற்படும்.

அபிவிருத்தியடைந்து வரும் மாணவர் போராட்டமானது முதலாளித்துவம் முன்னெடுக்கும் தாக்குதல்களுக்கு எதிராகப் போராடும் ஒரு புதிய முன்னோக்கு மற்றும் மூலோபாயத்திலும் ஆயுதபாணியாக்கப்பட வேண்டியதன் அவசியம் அவசரமாகத் தோன்றியுள்ளது என சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பு சுட்டிக் காட்டுகின்றது.

எதிர்ப்பு அரசியல்

அனத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் (அ.ப.மா.ஒ.) மாணவர்கள் தொடர்ந்தும் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுத்தப்படுவதன் மூலம் இந்த தாக்குதல்கள் நிறுத்தப்படவில்லை. மாணவர்கள் இந்த தாக்குதல்களை தோற்கடிப்பதற்கு அவசியமான அரசியல் போராட்டத்திற்கு வருவதை தடுப்பதற்காகவே இத்தகைய ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுப்பதை அ.ப.மா.ஒ. பயன்படுத்திக்கொள்கின்றது. மாணவர்களை அவ்வாறு சிறைப்படுத்துவதானது முன்னர் மாணவர் ஒன்றியத்தை இயக்கிய மக்கள் விடுதலை முன்னணியினதும் (ஜேவிபி) இப்போது அ.ப.மா.ஒன்றியத்தை மேலாதிக்கம் செய்யும் முன்னிலை சோசலிசக் கட்சியினதும் (மு.சோ.க.) அரசியலில் இருந்து எடுக்கப்படும் முடிவுகளாக உள்ளன.

மு.சோ.க.யின் ஜனரல பத்திரிகையில் (12 ஏப்பிரல் 2015), “ஆம், நாம் அரசியல் செய்கின்றோம்” என்ற தலைப்பில் வெளியான, அ.ப.மா.ஒ. அழைப்பாளர் நஜித் இந்திக வழங்கியிருந்த பேட்டி ஒன்றில், “எதிர்கால வேலைத் திட்டம் என்ன?” என கேள்வி எழுப்பிய போது, ஒரே வேலைத் திட்டம் “போராட்டம்” என்றே பதில் கூறியுள்ளார். “இலவசக் கல்வியை எடுத்துக்கொண்டால் ‘போராட்டம்’ தான் நடத்தவேண்டியுள்ளது... கல்வி மட்டுமன்றி ஏனைய சகல பிரச்சினைகளையும் போராட்டத்தின் உள்ளேயே வென்றெடுக்க முடியும்... பாராளுமன்றத்தை நாம் நம்பவில்லை. நாம் போராட்டத்தையே நம்புகிறோம். அதன்படியே எமது வேலைத் திட்டம் அமைகின்றது.”

இந்த “போராட்ட” வாய்ச்சவடாலின் அர்த்தம் அடுத்தடுத்து போராட்டம் நட்த்துவதாகும். அதாவது, இது முதலாளித்துவ வர்க்கத்துக்கும் அரசாங்கத்துக்கும் அழுத்தம் கொடுத்து முதலாளித்துவ அமைப்பு முறைக்குள் சலுகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற மாயையை பரப்பும் எதிர்ப்பு அரசியலாகும். முதலாளித்துவ அரசாங்கம் பற்றிய இந்த எதிர்பார்ப்பு, இந்திக மூலம் ஜனாதிபதி சிறிசேனவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்து: “நாங்கள் தங்களுடைய தற்காலிக அரசாங்கத்தினால் ஏதாவதொரு ஜனநாயக சீர்திருத்தம் செய்யப்படும் என எதிர்பார்க்கின்றோம்.”

தாம் 1978 தொடக்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அ.ப.மா.ஒ. கூறிக்கொள்கின்றது. கல்வி வெட்டை நிறுத்துவதற்குப் போதுமானது என கூறிக்கொண்டு 37 ஆண்டுகள் பூராவும் மாணவர்களின்  போராளிக் குணத்தை அடக்கி வைத்திருந்த இத்தகைய அசியலின் தெளிவான பெறுபேறு அந்த தாக்குதல்கள் உக்கிரமாகியது மட்டுமே. மாணவர்கள் உண்மையான அரசியல் போராட்டத்திற்கு வருவதை தடுத்து, அந்த தாக்குதல்களுக்கே வழியமைத்துக் கொடுப்பது சம்பந்தமாக, ஏனைய சந்தர்ப்பவாதிகளைப் போலவே ஜே.வி.பி., மு.சோ.க. மற்றும் அ.ப.மா.ஒன்றியமும் அரசியல் ரீதியில் பொறுப்புச் சொல்ல வேண்டும்.

இலங்கை உட்பட முழு உலக முதலாளித்துவ அமைப்பு முறையும் வராலற்றிலேயே ஆழமான நெருக்கடியில் மூழ்கி, அதன் சுமைகளை தொழிலாள வரக்கம் மற்றும் ஏழைகள் மீது சுமத்தி வருகின்ற, திறந்த சந்தை பொருளாதரக் கொள்கையின் கீழ் மேலும் மேலும் உக்கிரமாக தாக்குதைலத் தொடுத்து வருகின்ற நிலைமையின் கீழேயே அவர்கள் இந்த வேலத்திட்டத்தை இறுக்கமாக கட்டிப்பிடித்துக்கொண்டுள்ளனர். இதன் கீழ் கல்வி, சுகாதாரம் உட்பட சேவைகள் இலாபம் சுரண்டும் வர்த்தகங்களாக ஆக்கப்பட்டுள்ளன.

இலாபத்துக்காக அன்றி, மனித அவசியத்துக்காக உற்பத்தியை ஒழுங்கு செய்யும் சோசலிச அமைப்பு முறையின் கீழேயே, உயர் தரம் வாய்ந்த கல்வி முறையை அபிவிருத்தி செய்வதற்கு அவசியமான கோடிக்கணக்கான நிதியையும் ஏனைய வளங்களையும் ஒதுக்கீடு செய்ய முடியும். இதனாலேயே, முதலாளித்துவ அரசாங்கத்துக்கு எதிராக, சோசலிச வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தொழிலார்களதும் விவசாயிகளதும் அரசாங்கம் ஒன்றை ஆட்சிக்கு கொண்டுவரும் அரசியல் போராட்டத்துக்கு முன்வருமாறு மாணவர்களுக்கு ஐ.வை.எஸ்.எஸ்.இ. அழைப்பு விடுக்கின்றது. இது சர்வதேச சோசலிசத்துக்காக முன்னெடுக்கப்படும் போராட்டமாகும். அ.ப.மா.ஒ. மற்றும் மு.சோ.க. இந்த வேலைத் திட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றன.

நவ-தாராண்மைவாத முதலாளித்துவ கொள்கை பற்றிய மாயை

கல்வி உட்பட மக்களின் நிலைமைகள் மற்றும் உரிமைகள் மீது முதலாளித்துவ அரசாங்கம் தொடுக்கும் தாக்குதல்கள், நவ-தாராண்மைவாத முதலாளித்துவ கொள்கைகளின் “திறந்த சந்தை பொருளாதார திட்டத்தின்” ஒரு பகுதி என்ற பகிரங்க உண்மையை, மு.சோ.க. மற்றும் அ.ப.மா. ஒன்றியமும் மீண்டும் மீண்டும் கூறுகின்றன. அதன் மூலம் அவை, அந்தக் கொள்கையை கைவிட்டால் முதலாளித்துவத்தின் கீழ் கல்வி உரிமைகள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களையும் நிறுத்த முடியும் என்பதைனை நிச்சயமாக சுட்டிக் காட்டுகின்றன. அதே சமயம், நவ-தாராண்மைவாத கொள்கைகளின் தோற்றுவாய் முதலாளித்துவம் என்பதையும் அது முதலாளித்துவ நெருக்கடியினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதையும், இந்த கொள்கைகளை தோற்கடிப்பதானது முதலாளித்துவத்தை தூக்கி வீசும் போராட்டத்துடன் இணைந்துள்ளது என்பதையும் அவர்கள் நிராகரிக்கின்றனர்.

சில முதலாளித்துவ பகுதியினர், புதிய தாராண்மைவாத கொள்கையை முதலாளித்துவத்தின் துஷ்ட தடம்புறள்வாகக் காட்டி, அதை மாற்றிக்கொள்ளுமாறு அதற்கு அழுத்தம் கொடுக்கும் இயக்கங்களுக்குள் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் வறியவர்களை சிறைப்படுத்தி, முதலாளித்துவத்தை பாதுகாக்கும் பல்வேறு போலி-இடது சந்தர்ப்பவாத அமைப்புகள் இலங்கையில் போல் ஏனைய நாடுகளிலும் காணப்படுகின்றன.

மு.சோ.க. மற்றும் அ.ப.மா.ஒ. தலைவர்கள், ஏர்னெஸ்டோ லக்லாவ், ஸ்லவோச் ஜிஜெக் போன்ற பின்நவீனத்துவ மற்றும் பின் மார்க்சிசவாத போதகர்களை பின்பற்றுகின்றனர். நவ-தாராளவாத முதலாளித்துவத்தை விமர்சிக்கும் அவர்கள், பல்வேறு “சமூக இயக்கங்கள்” ஊடாக நெருக்கடியின் சுமையை தணிப்பதற்காக, அழுத்தம் கொடுத்தல் உட்பட விதிமுறைகளை பிரேரிக்கின்றனர். “நவ-தாராண்மைவாத பார்வையின் வடிவம் நெருக்கடிக்கு உள்ளாகி வருவதாக” ஜிஜெக் கூறுகின்றார். அதனால் அவர் உக்கிரமான நெருக்கடிக்குள் மூழ்கிப் போயுள்ள கிரேக்க மக்களுக்கு உள்ள ஒரே மாற்றீடாக, சிரிசா இயக்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருதே, என பிரேரித்தார். இப்போது ஆட்சியில் இருக்கும் முதலாளித்துவத்தை பாதுகாக்க அர்ப்பணித்துக்கொண்ளடுள்ள சிரிசா, எதிர் கட்சியில் இருந்தபோது நவ-தாராண்மைவாத கொள்கைகளை “விமர்சித்து,” ஆட்சிக்கு வந்த பின்னர், திறந்த பொருளாதார கொள்கையை அமுல்படுத்தி வருகின்றது.

 

அவர்கள் அனைவருக்கும் பொதுவானது என்னவெனில், மார்க்சிசம் மற்றும் சோசலிசத்துக்கான போராட்டம் தொடர்பான பகைமையாகும். இந்த நோக்கு மற்றும் அரசியலில் இருந்தே அ.ப.மா.ஒ. மற்றும் மு.சோ.க. நவ-தாராண்மை வாதம் பற்றிய நிலைப்பாட்டை வடித்தெடுத்துள்ளன.

“கல்வியின் தற்கால நெருக்கடி என்ன?” என்று அ.ப.மா.ஒ. 2013ல் எழுதிய கட்டுரை, இந்த நிலைப்பாட்டைச் சுற்றியே சுழல்கின்றது. 1977ம் ஆண்டில் கல்விக்காக மொத்த தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு 6 வீதம் செலவிட்டிருந்தாலும், அந்த ஆண்டின் கடைப் பகுதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்ட நவ-தாராண்மைவாத கொள்கையின் கீழ், அந்த ஒதுக்கீடு விரைவில் வெட்டித் தள்ளப்பட்டுள்ளதை அட்டவணை காட்டியுள்ளது. 1977 தொடக்கம் திறந்த சந்தைக் கொள்கை இடைவிடாது நடைமுறைப்படுத்ப்பட்டது என்பது யாவரும் அறிந்ததே. ஆயினும், 1977 ஆகும் போது, கல்விச் செலவு மொத்த தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு 6 வீதமாக இருந்தது எனக் கூறுவதே ஒரு பொய்யாகும். 1948ல் தன் கைக்கு ஆட்சியைப் பெற்றுக்கொண்ட நாள் முதல், இலங்கையின் முதலாளித்துவ வர்க்கமானது அத்தகைய தொகையை ஒதுக்கீடு செய்திருக்கவில்லை. எவ்வாறெனினும், அந்த ஆண்டுக்கு முன்னர் இருந்த, தேசியவாதத்தின் கீழ் வழிநடத்தப்பட்ட முதலாளித்துவ பொருளாதார அமைப்பு முறையை மிகைப்படுத்திக் காட்டுவதே அ.ப.மா.ஒன்றியத்தின் தர்க்கமாகும்.

இரண்டாம் உலகப் போரின் பின்னர், அமெரிக்க தலைமையின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதாரங்களை தீர்மானிக்கும் கீன்சியக் கொள்கையை நெருக்கடிக்குள் தள்ளி, முதலாளித்துவ நெருக்கடியின் புதிய கால கட்டம் தொடங்கிய நிலைமையின் கீழ், நவ-தராண்மைவாத கொள்கை நடைமுறை ஆரம்பிக்கப்பட்டது. 1970களின் கடைப் பகுதயிலும் விசேடமாக 1980களின் ஆரம்பத்தில் இருந்தே, அமெரிக்க மற்றும் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளின் தூண்டுதல்களிலேயே இது இடம்பெற்றது. நவ-தராண்மைவாத கொள்கையானது முதலாளித்துவ நெருக்கடி தொடர்பான நிதி மூலதனத்தின் நிச்சயமான பிரதிபலிப்பாகும்.

2008 செப்டெம்பரில் அமெரிக்காவில் மாபெரும் நிதி நிறுவன வீழ்ச்சியில் தொடங்கி, உலகம் பூராவும் பற்றிப் படர்ந்த நெருக்கடியில் வெளிக்காட்டப்பட்டுள்ள உலக முதலாளித்துவ வீழ்சியின் மத்தியில் நகர்ந்துகொண்டிருக்கும் காலகட்டத்துக்குள்ளேயே நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இந்த நிலைமையினுள் தொழிலாள வர்க்கத்தின், வறியவர்களின் மற்றும் இளைஞர்களின் உரிமைகள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள் தொடர்ந்தும் உக்கிரமடையவுள்ளது. முதலாளித்துவ நெருக்கடியினால் தோன்றும் அத்தகைய தாக்குதல்களுக்கு எதிராகவே இலங்கை உட்பட எல்லா நாடுகளிலும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்துக்கு தள்ளப்படுகின்றனர். நவ-தாராளவாத கொள்கைகளை தூக்கி வீசி, வரையறுக்கப்பட்ட தேசியவாத கொள்கையை நோக்கி செல்வதற்கு முன்வைக்கப்படும் பிரேரணை கற்பனையானது மட்டுமன்றி, போராட்டத்திற்கு வரும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களை தடம்புரளச் செய்து அந்த தாக்குதல்களுக்கு இரையாக்குவதற்கு செயற்படுவதாகும். இந்த நிலைமையிலேயே அமெரிக்கத் தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகள் மூன்றாம் உலகப் போரை நோக்கி நகரும் இராணுவ ஓட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏன் மாணவர்கள் தொழிலாளர்களின் பக்கம் திரும்ப வேண்டும்?

தாம் எதிர்கொள்ளும் உண்மையான அரசியல் பிரச்சினைகளில் இருந்து மாணவர்களின் அவதானத்தை திசை திருப்புவதற்கு அ.ப.மா.ஒ. மற்றும் மு.சோ.க. தமது போராட்டக் குணாம்சத்தை வானளவு வர்ணிக்கின்றன. இந்த ஆசை காட்டல்களையிட்டு கவனமாக இருக்குமாறு ஐ,வை,எஸ்.எஸ்.இ. மாணவர்களிடம் கேட்டுக்கொள்கின்றது. அபமாஒ இணையத்தில் வெளியிடப்பட்ட “நாளைக்கான போராட்டம் நாளை மறுநாள் அன்றி இன்றே ஆகும்” என்ற தலைப்பிலான கட்டுரையில் பின்வருமாறு கூறப்படுகின்றது: “இத்தகைய காலங்கடந்த கதைகள் நிறைந்த சமூகத்தில், ஆலோசனை கூறவும் விமர்சிக்கவும் ஒரு தொகையினர் உள்ளனர். ஆயினும் உண்மையான போராட்டக் களத்திற்கு வருவதற்கு சில்லறைக்குக் கூட இல்லாத சமூக சூழ்நிலையில், இலங்கை மாணவர் இயக்கம், “கேலி பேச்சாளர்களுக்கு போராடுவது இப்படித்தான் என காட்டுகின்றது”. “(மாணவர்கள்) போராடும் தத்துவத்தை நடைமுறையில் கூர்மைப்படுத்தி வருகின்றனர்” என மோசடியான முறையில் மாணவர்களின் போராளிக் குணத்தை புகழ்ந்தவாறே அந்த கட்டுரை முடிகின்றது.

தொழிலாளர்கள் சில்லறைக்கு கூட கிடைக்காவிட்டாலும் மாணவர்கள் மட்டும் போராடுவர் என தூக்கிப் பிடிக்கும் இந்தப் பிரச்சாரம் முற்றிலும் விஷமத்தனமானதாகும். தொழிலாள வர்க்கம் தொடர்பாக பகைமையை பரப்பி மாணவர்கள் அந்த வர்க்கத்தின் பக்கம் திரும்புவதை தடுத்து தனிமைப்படுத்துவதையே அவர்கள் செய்கின்றனர். தமது போராட்டங்களின் போது, எந்தளவு போராளிக் குணமும் பலமும் வெளிக்காட்டப்பட்டாலும், கல்வி உரிமைகளை வெற்றி கொள்ள வேண்டுமெனில், அழுகிப் போன முதலாளித்துவ அமைப்பு முறையை தூக்கி வீசி சோசலிச முறையில் பொருளாதாரத்தை மறு சீரமைப்புச் செய்ய வேண்டும். அதற்காக மாணவர்கள் தொழிலாள வர்க்கத்துடன் கூட்டாக அதன் தலைமைத்துவத்தைப் பெற்று போராட வேண்டியுள்ளது. கல்வி உரிமைகளை வெற்றிகொள்ளும் போரட்டம் தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்தின் சகல தாக்குதல்குக்கும் எதிராக முன்னெடுக்க வேண்டிய பரந்த போராட்டத்தின் ஒரு பாகமாகும்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் கார்ல் மார்க்ஸ் சுட்டிக் காட்டியவாறு, நடப்பு முதலாளித்துவ அமைப்பு முறைக்குள் உறுதியான புரட்சிகர சக்தி தொழிலாள வர்க்கமே ஆகும். நவீன உற்பத்தி முறைக்குள் தொழிலாள வர்க்கம் வகிக்கும் பிரதான பாத்திரத்தின் காரணமாகவே அது தீர்மானிக்கப்பட்டுள்ளது. மனித குலத்தின் முன்னேற்றத்துக்காக இந்த சமூக அமைப்பு முறையை சோசலிச முறையில் மாற்றி அமைக்கக் கூடிய வேறு ஒரு வர்க்கம் கிடையாது. தொழிலாள வர்க்கத்தை அதன் வரலாற்று பாத்திரத்தில் இருந்து திசை திருப்பி வைப்பதற்காக பயன்படுத்தப்படுகின்ற முதலாளித்துவ சிந்தனை மற்றும் அரசியலின் அழுத்தத்தில் இருந்து அதை சுயாதீனப்படுத்தவதற்காக முன்னெடுக்கப்படும் போராட்டத்துடன் மாணவர்கள் இணைந்துகொள்வது தீர்க்கமானது என்பதை ஐ.வை.எஸ்.எஸ்.இ. சுட்டிக் காட்டுகின்றது.

அதற்கு எதிராக, தொழிலாளர்கள் மற்றும் ஏனைய மக்கள் பகுதியினரை எப்பொழுதும் காட்டிக்கொடுத்து வந்துள்ள தொழிற்சங்க அதிகாரத்துவ வாதிகள், நவ சம சமாஜ கட்சி மற்றும் ஐக்கிய சோசலிச கட்சி போன்ற போலி இடதுகள் உட்பட அமைப்புக்களின் பிரதிநிதிகளை மேடையில் ஏற்றி, அவர்களை “போராடும் சக்திகளாக” சித்தரிக்கும் முயற்சியிலேயே மு.சோ.க. மற்றும் அ.ப.மா.ஒ. தலைவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். கிரேக்கத்தில் போலி இடதுகளும் முதலாளித்துவ குழுக்களும் சேர்ந்து அமைத்துக்கொண்டுள்ள சிரிசா மற்றும் ஸ்பெயினில் பொபேடமொஸ் போன்ற முதலாளித்துவ கூட்டணிகள், தமது செயற்பாடுகள் மூலம் பொறிகளை அமைக்கும் திட்டத்தையே இந்த இரு அமைப்புகளும் முன்னெடுக்கின்றன.

பௌத்த பிக்குகளுக்கு விசேட இடம் கொடுக்க வேண்டும் என முன்னெடுக்கும் பிரச்சாரமானது அ.ப.மா.ஒ. மற்றும் மு.சோ.க. மேற்கொள்ளும் பிற்போக்கு நடவடிக்கையாகும். அதன் பாகமாக அவர்கள் “அனைத்துப் பல்கலைக் கழக பிக்கு முன்னணி” என்ற ஒன்றையும் நடத்தி வருகின்றனர். பௌத்த மதத்தை மிகைப்படுத்தும் இனவாதத்துடன் கட்டுண்டுள்ள மு.சோ.க. மற்றும் அ.ப.மா.ஒ. தலைவர்கள், இதன் மூலம் மதவாத பகுதியினரை ஸ்தாபிப்பதற்கு செயற்படுகின்றனர். இது மாணவர்கள் மத்தியில் பிரிவினையை விதைப்பதற்கே வழிவகுக்கும். மத மற்றும் இன பாகுபாடுகளை தகர்த்துக்கொண்டு மாணவர்கள் மத்தியில் ஐக்கியத்தை ஏற்படுத்துவது, சோலிச வேலைத் திட்டத்துக்கான போராட்டத்தின் பிரிக்க முடியாத பாகமாகும்.

அ.ப.மா.ஒன்றியத்தின் தற்போதைய செயற்பாடுகள், அதன் ஆரம்பத்தில் அடத்தளமாகக் கொண்டிருந்த ஜே.வி.பி. அசியலின் தர்க ரீதியான விளைவாகும். ஜே.வி.பி.யின் அரசியலுக்கு பல்கலைக் கழக மாணவர் சங்கங்களை கீழ்ப்படிய வைக்க தொடங்கிய காலமான 1978ல் அது ஆரம்பிக்கப்பட்டது. ஜே.வி.பி.யின் ஆரம்ப அரசியல், ஸ்ராலினிசத்தின் அரும்பான மாவோ வாதம், காஸ்ட்ரோ வாதம், குவேரா வாதம் மற்றும் சிங்கள இனவாதத்தையும் சேர்த்த கலவையாக அமைத்துக்கொண்ட நோக்கையே அடித்தளமாகக் கொண்டிருந்தது. புரட்சிகர சக்தியை என்ற வகையில் தொழிலாள வர்க்கத்தின் பாத்திரத்தை நிராகரிப்பது அந்த அரசியலுக்கே உரித்தாகியது. அந்த அரசியலின் விளைவாக, மேலும் மேலும் வலது பக்கம் சென்று முதலாளித்துவ வர்க்கத்துக்கு நெருக்கமாகிய இந்தக் கட்சி, இனவாத யுத்தத்தின் போது முன்னணியில் இருந்து ஒத்து ஊதியது. ஜே.வி.பி. இப்போது ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து போன கொழும்பு முதலாளித்துவ ஸ்தாபகத்தின் கட்சியாக மாறியுள்ளது.

மாணவர்கள் மத்தியில் ஜே.வி.பி.யின் சமூகத் தளத்தை வைத்துக்கொள்வதற்கான உபகரணமாக செயற்பட்டதும் அ.ப.மா.ஒன்றியமே ஆகும். போராளிக்குணத்தை வர்ணனை செய்வதன் மூலம் சேகரித்துக்கொண்ட மாணவர்களை, மிகவும் பிற்போக்கான இனவாத பிரச்சாரங்களுக்குள் இயக்குவதற்கும் ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளுக்கு தூண்டி விடுவதற்கும் அ.ப.மா.ஒ. பயன்படுத்தப்பட்டது. இந்த அரசியலை சுதந்திரமாக முன்னெடுப்பதற்காக ஜே.வி.பி. மற்றும் அ.ப.மா.ஒ. தலைவர்கள், குண்டர் நடவடிக்கைகள் மூலம் அரசியல் எதிரிகளை நசுக்குவதை முன்னெடுத்தனர். தமது பிற்போக்கு செயற்பாடுகள் காரணமாக முற்றிலும் அதிருப்திக்கு உள்ளாகும் வரை, ஜே.வி.பி. தலைவர்களாக செயற்பட்ட அவர்களின் ஒரு பகுதியினர், 2012 கடைப் பகுதியில் மு.சோ.க.யை அமைத்த போது அ.ப.மா.ஒ. அதனுடன் சேர்ந்து கொண்டது. புதிய அணிதிரள்வின் பின்னர், கடந்த காலத்தில் இருந்து பிளவுபட்டதாக மிகைப்படுத்துவதற்கு மு.சோ.க. மற்றும் அ.ப.மா.ஒ. தலைவர்கள் முயற்சித்திருந்தாலும், எந்தவொரு அடிப்படை மாற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை.

அ.ப.மா.ஒ., முதலாளித்துவ வர்க்கத்துக்கும் அரசாங்கத்துக்கும் பல்கலைக் கழக நிர்வாகத்துக்கும் மிகவும் பிரயோசனமான செயற்பாட்டையே செய்தது, செய்துகொண்டிருக்கின்றது. அதாவது எதிர்ப்பு போராட்டங்கள் மூலம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நிலவும் எரியும் பகைமையை கரைத்து விடுவதாகும். மாணவ தலைவர்களுடன் ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றும் மாணவர்கள் அடிவாங்குவது, கைது செய்யப்படுவது மற்றும் சிறைவைக்கப்படுவது போன்ற தாக்குதல்கள் இந்த நடவடிக்கைகளை மூடி மறைப்பதற்காக பயன்படுத்திக்கொள்ளப்படுகின்றன. அ.ப.மா.ஒ. அரசியல் ரீதியில் முதலாளித்துவ வர்க்கத்துக்கு ஒரு பாதுகாப்பு வழியாக செயற்படுகின்றது.

அ.ப.மா.ஒ. எந்தவொரு ஜனநாயக அடிப்படையிலும் செயற்படும் அமைப்பு அல்ல. அது, கல்வி உரிமைகள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களை வெற்றிகொள்வது எப்படி, நாட்டில் மற்றும் சர்வதேச ரீதியில் அபிவிருத்தியடையும் அரசியல் எத்தகையது, மாணவர்கள் எடுக்க வேண்டிய அரசியல் பாதை எது, போன்றவை பற்றிய பகிரங்க கலந்துரையாடல்கள் மற்றும் போராட்டத்தின் மூலம், மாணவர்களால் ஜனநாயக முறையில் தேர்வு செய்துகொள்ளப்படும் அமைப்பு அல்ல. அரசாங்கமும் பல்கலைக்கழக நிர்வாகமும் மாணவர் அமைப்புக்களும், பல்கலைக்கழகத்துக்குள் அரசியல் நடவடிக்கைகளை தடை செய்வதை, தமது ஜனநாயக விரோத அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொள்வதற்காகவே அ.ப.மா.ஒ. பயன்படுத்திக்கொள்கின்றது.

அ.ப.மா.ஒ. அரசியலில் இருந்து தீர்க்கமாகப் பிரியாமல் மாணவர்களால் கல்வி உரிமையைப் பாதுகாப்பதற்கு வெற்றிகரமான போராட்டம் ஒன்றை முன்னெடுக்க முடியாது. தொழிலாளர்களை சந்தர்ப்பவாத தலைமைத்துவத்தில் இருந்தும் முதலாளித்துவத்தின் பல்வேறு குழுக்களில் இருந்தும் சுயாதீனமடைய வேண்டிய அவசியத்தைப் பற்றியும், சோசலிச வேலைத் திட்டம் பற்றியும் கலந்துரையாடுவதற்காக வேலைத் தளங்களுக்கும் தொழிலாளர் தங்குமிடங்களுக்கும் அவர்கள் செல்ல வேண்டும்.

சோசலிச கொள்கைகளுக்காக மாணவர்கள் மத்தியில் போராடும் ஒரே அமைப்பு ஐ.வை.எஸ்.எஸ்.இ. மட்டுமே. இந்த கட்டுரையை ஆழமாகக் கலந்துரையாடுமாறும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. உடன் சேர்ந்து இந்தப் போராட்டத்தை அபிவிருத்தி செய்யுமாறும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.