சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Workers revolt against mass layoffs at Air France

ஏர் பிரான்ஸில் பாரிய வேலைநீக்கங்களுக்கு எதிராக தொழிலாளர்கள் கிளர்ச்சி செய்கின்றனர்

By Alex Lantier
6 October 2015

Use this version to printSend feedback

ஏர் பிரான்ஸின் பாரிய வேலைநீக்கங்களுக்கு எதிராக நேற்று வேலைநிறுத்தக்காரர்கள் கலகத்தில் ஈடுபட்டனர். நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் பாரீஸிலுள்ள சார்லஸ் டு கோல் விமான நிலையத்திற்கு அருகிலிருந்த நிறுவன தொழிலாளர் கவுன்சில் (comité central d'entreprise - CCE) கூட்டத்திற்குள் புகுந்தனர், அங்கே நிர்வாகமும் தொழிற்சங்கங்களும் அந்நிறுவனத்திலிருந்து 2,900 வேலைகளை வெட்டும் ஒரு மறுசீரமைப்பு திட்டத்தைக் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தன.

பல ஆண்டுகளாக, ஏர் பிரான்சின் 63,000 பலமான தொழிலாளர் சக்தியிலிருந்து ஒரு கால்பகுதியை அல்லது 15,000 வேலைகளை நீக்கியுள்ள நான்காவது நேரடியான பாரிய மறுசீரமைப்பு திட்டத்தின் மீது கோபம் வெடித்தது. CCE கூட்டத்திற்குள் திடீரென புகுந்த தொழிலாளர்கள், “இவ்விடம் எங்களது" என்றும், ஏர் பிரான்ஸ்-KLM இன் தலைமை செயலதிகாரி அலெக்சாண்டர் டு ஜூனியாக்கை குறிப்பிட்டு “டு ஜூனியாக் இராஜினாமா செய்" என்றும் கோஷமிட்டனர்.

CCE கூட்டம் கலைக்கப்பட்டு, ஏர் பிரான்ஸ் தலைமை செயலதிகாரி Frédéric Gagey உடனடியாக அவ்விடத்திலிருந்து தப்பியோடினார். “இராஜினாமா செய், இராஜினாமா செய்" போன்ற கூச்சல்களுக்கு இடையே, வேலைநிறுத்தக்காரர்கள் ஏர் பிரான்ஸ் மனிதவள நிர்வாக அதிகாரி Xavier Broseta ஐ மற்றும் ஏர் பிரான்சின் தொலைதூர செயல்பாடுகளுக்கான தலைவர் Pierre Plissonnier ஐ சுற்றி வளைத்து, அவர்களது சட்டைகளைக் கிழித்தனர். (இங்கே காணொளியைக் காணலாம்)

அக்கூட்டத்தில் பங்குபற்றியிருந்த ஸ்ராலினிச பொது கூட்டமைப்பு CGT இன் துணை பொது செயலர் Mehdi Kemoune பத்திரிகைகளுக்குத் தெரிவிக்கையில், அவர் Broseta ஐ காப்பாற்ற முயன்றதாகவும், ஆனால் தொழிலாளர்கள் பலவந்தமாக அவரைப் பிடித்து தள்ளிவிட்டதாகவும் தெரிவித்தார். Broseta “மயிரிழையில் கொல்லப்படும் நிலைக்கு வந்திருந்தார்" என்று மற்றொரு CGT நிர்வாகி TF1 தொலைக்காட்சியில் முறையிட்டார்.

சட்டையின்றி, Broseta மற்றும் Plissonnier உம் பாதுகாப்பு வேலியைத் தாண்டி குதித்து, அவ்விடத்திலிருந்து தப்பியோடுவதற்கு பொலிஸ் உதவி செய்யும் புகைப்படங்களைப் பத்திரிகைகள் பிரசுரித்தன.

பிரான்ஸின் சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கமும், ஏர் பிரான்ஸ் நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களும் ஒருமித்து வேலைநிறுத்தக்காரர்களைக் கண்டித்தன. அவை அனைத்துமே ஏர் பிரான்சின் "பிளான் B” என்றழைக்கப்படும் வெட்டுக்களின் திட்டம் மூலமாக, மீண்டும் அந்நிறுவனத்தை பில்லியன் கணக்கிலான யூரோ இலாபமீட்டச் செய்ய பெரும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளன. அத்திட்டம் தொலைதூர செயல்பாடுகளில் 10 சதவீதம் குறைப்பதற்கும், புதிய போயிங் 787 விமானங்களின் கேட்பாணைகளை இரத்து செய்வதிலிருந்து 1.4 பில்லியன் யூரோ சேமிப்பதற்கும், 300 விமானிகள், 900 விமானப்பணியாளர்கள் மற்றும் 1,700 தரைச்சேவை (ground crew) பணியாளர்களின் வேலைகளை வெட்டுவதற்கும் அழைப்புவிடுக்கிறது.

ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்ஜோ அபே ஐ சந்திக்க சென்றுள்ள பிரதம மந்திரி மானுவேல் வால்ஸ், ஜப்பானிலிருந்து அவரது "அதிர்ச்சியை" வெளியிட்டதுடன், ஏர் பிரான்ஸ் நிர்வாகத்திற்கு அவரது "முழு ஆதரவையும்" சூளுரைத்தார். அதேவேளையில் போக்குவரத்துத்துறை மந்திரி Alain Vidalies வேலைநிறுத்தக்காரர்களின் நடவடிக்கைகள் "தண்டிக்கப்பட வேண்டும்" என்றார்.

நிறுவனம் தொடர்ந்து அதன் மறுசீரமைப்பு திட்டங்களை முன்னெடுக்கும் என்றும், வேலைநிறுத்தக்காரர்களின் "ஆக்ரோஷமான தாக்குதல்களுக்காக" நிறுவனம் அவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமென்றும் குறிப்பிட்டு ஏர் பிரான்ஸ் அறிக்கை வெளியிட்டது.

ஆனால் வேலைநிறுத்தக்காரர்களின் மீது உறுதியான கண்டனங்கள் தொழிற்சங்கங்களிடமிருந்து வந்தன. பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பு (CFDT) வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அது வேலைநிறுத்தக்காரர்களின் "வெட்கக்கேடான வன்முறையை எந்தவித தயக்கமின்றி, மிகவும் உறுதியோடு கண்டித்தது", அத்துடன் ஏர் பிரான்ஸ் நிர்வாகத்துடன் உடனடியாக பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க அழைப்புவிடுத்தது.

CFDT தலைவர் லோரண்ட் பேர்ஜெர், “சிக்கல்களின்றி, வன்முறையைச் சமாளிக்க பிரத்யேக பேச்சுவார்தைகளுக்கு" அழைப்புவிடுத்தார், “அது தான் தொழிற்சங்கவாதம்" என்றார்.

ஆத்திரமூட்டும் விதமாக சோசலிஸ்ட் கட்சிக்கு ஆதரவான CFDT ஐ விட மிகவும் "எதிர்ப்புத்தன்மை" கொண்ட தொழிற்சங்கமாக மதிப்பைப் பெற முயலும் ஸ்ராலினிச CGT உம் விமர்சித்தது மற்றும் அப்போராட்டத்திலிருந்து தன்னைத்தானே தூர விலக்கிக் கொண்டது. CGT மற்றும் ஏர் பிரான்ஸ் நிர்வாகத்திற்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பை வலியுறுத்திய Kemoune, “CCE மீது படையெடுப்பதை நாங்கள் விரும்பவில்லை,” என்று AFPக்குத் தெரிவித்தார். அவர் கூறுகையில், CGT தொழிலாளர்களின் மனோபாவம் குறித்து நிர்வாகத்தை "எச்சரித்திருந்தது" என்றும், வேலைநிறுத்தக்காரர்களுக்கு எதிராக CCE ஐ பாதுகாக்க பாதுகாப்பு படைகளைப் பலப்படுத்துமாறு அவர்களுக்கு அவசரமாக அழைப்பு விடுத்திருந்ததாகவும் தெரிவித்தார்.

வேலைநிறுத்தக்காரர்களுக்கு எதிராக பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படைகளைப் பலப்படுத்துவற்கு CGT அளித்த முறையீடுகளுக்கு செவிசாய்க்காததற்காக Kemoune நிர்வாகத்தைக் கடிந்து கொண்டார். “வழக்கம் போல, அவர்கள் செவிசாய்க்கவில்லை, இப்போது அதற்கான விளைவுகளை அவர்கள் அனுபவிக்கிறார்கள்,” என்றார்.

இவ்வாறு பொதுவான முதலாளித்துவ வர்க்க கருத்துக்களுக்கு கோழைத்தனமாக மண்டியிடுவதும் மற்றும் தொழிற்சங்கங்கள் நிர்வாகத்திற்குள் முழுமையாக ஒருங்கிணைந்திருப்பதும், உடனடியாக தொழிலாளர்கள் CGT மற்றும் அதன் இணைப்புபெற்ற தொழிற்சங்கங்களின் கரங்களிலிருந்து போராட்டத்தின் தலைமையைத் தங்களின் கரங்களில் எடுக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.

தொழிலாளர்களின் எதிர்ப்பு தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டை மீறி வெடிப்பதை தடுக்கும் மற்றும் திசைதிருப்பிவிடும் நோக்கத்துடன் தான், உண்மையில் அவை நேற்றைய ஏர் பிரான்ஸ் வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்திருந்தன. ஆனால் CCE கூட்டத்தில் வேலைநிறுத்தக்காரர்களின் கோபம் வெடித்ததற்கு அவர்கள் காட்டிய குரோதமான பிரதிபலிப்பு, ஏர் பிரான்ஸின் மறுசீரமைப்பு நிகழ்ச்சிநிரலை அச்சுறுத்தும் எந்தவொரு வேலைநிறுத்த நடவடிக்கைக்கும் அவர்கள் விரோதமாக இருப்பார்கள் என்பதற்கு சமீபத்திய எச்சரிக்கையாக மட்டுமே விளங்குகிறது.

ஏர் பிரான்ஸ் தொழிலாளர்களிடையே கோபம் வெடித்தமை, பல ஆண்டுகால சூழ்ச்சிகள் மற்றும் தொழிலாளர்களது போராட்டங்களைக் கீழ்தரமாக விற்றுத்தள்ளியதன் விளைவாகும். நிர்வாகத்துடனும் லூஃப்தான்சா மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் போன்ற அவர்களது எண்ணிறைந்த போட்டி விமானச்சேவை நிறுவனங்களுடன் சேர்ந்து, தொழிற்சங்கங்கள் ஏர் பிரான்ஸைக் காப்பாற்ற முயன்று வருகின்றன, சர்வதேசரீதியில் செலவு குறைந்த, மலிவு-கூலி விமானச்சேவை நிறுவனங்களில் மேலோங்கியுள்ள சம்பளங்கள் மற்றும் வேலையிட நிலைமைகளைப் போன்று அதேமாதிரியாக நிலைமைகளுக்கு இத்தொழில்துறையின் தரங்களைக் கொண்டு வருவதே அவற்றின் அடியிலுள்ள நிலைப்பாடாகும்.

ஏர் பிரான்ஸில் பலவீனமான நிதி நிலைமையும் மற்றும் தொடர்ச்சியான நஷ்டங்களும் நிலவுகின்ற நிலையில், வேலைநிறுத்தக்காரர்களே பலமான நிலைமையில் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு இரண்டு வாரகால விமானிகள் வேலைநிறுத்தம் ஏர் பிரான்ஸை திவால்நிலைமையின் விளிம்பில் கொண்டு வந்தது, அத்துடன் அண்மித்தளவில் நிர்வாகம் அதன் மறுசீரமைப்பு திட்டத்தைக் கைவிடவும் மற்றும் தொழிற்சங்கங்கள் திடீரென வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொண்ட போது அவசர நிதியுதவி கோரி சோசலிஸ்ட் அரசாங்கத்திடம் முறையிடவும் நிர்பந்திக்கப்பட்டது. வேலைநிறுத்த நடவடிக்கைகள் தொடர்ந்தால், அந்நிறுவனத்திற்கு "திரும்ப பெறவியலாத" நிதியியல் பாதிப்புகளை உண்டாக்கும் அபாயமிருப்பதைத் தொழிற்சங்கங்களே ஒப்புக்கொண்டன.

ஆனால் ஏர் பிரான்சின் நிதியியல் பலவீனத்தைப் பயன்படுத்தி அதை அடிபணிய நிர்பந்திப்பதற்குப் பதிலாக, அவை அதையொரு போலிக்காரணமாக பயன்படுத்தி ஒரு மகத்தான வெற்றியைத் தடுத்து வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தன, ஏர் பிரான்ஸ் மற்றும் சோசலிஸ்ட் கட்சி மதிப்பிழந்து சரிவதிலிருந்து காப்பாற்றின, இது நடந்திருந்தால் ஐரோப்பா எங்கிலுமான விமானச்சேவை நிறுவனங்களிலும் தொழில்துறைகளிலும் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான வேலைநிறுத்தங்களை அது ஊக்குவித்திருக்கும். டிசம்பரில் வேலைநிறுத்த அபாயம் நசுக்கப்பட்டதும், தொழிற்சங்கங்கள் ஏர் பிரான்சின் ஆழ்ந்த கூலி வெட்டுக்களுக்கு ஒப்புக்கொண்டன மற்றும் அவை பிரதிநிதித்துவம் செய்வதாக கூறும் தொழிலாளர்கள் மீது அடுத்தக்கட்ட தாக்குதலுக்கும் அவை திட்டமிட்டன.

அதுபோன்ற ஆத்திரமூட்டும் காட்டிக்கொடுப்புகள் தொழிலாளர்களின் கோபத்தைத் தூண்டிவிட்டது, அவர்கள் ஏர் பிரான்ஸ், தொழிற்சங்கங்கள் மற்றும் சோசலிஸ்ட் கட்சிக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் என்பதை அவர்களுக்கு எதிராக திருப்பிவிடப்பட்ட ஒரு பிற்போக்குத்தனமான சூழ்ச்சியாக உணர்கிறார்கள்.

தொழிலாள வர்க்கத்தைப் பரந்தளவில் ஒன்றுதிரட்டுவதே போராட்டத்திற்கு முன்னால் உள்ள ஒரே பாதையாகும். ஏர் பிரான்ஸிற்கு எதிரான ஒரு போராட்டத்தை ஒருங்கிணைக்க, தொழிலாளர்கள் சுயாதீனமான அமைப்புகளை ஏற்படுத்தும் பணியை முகங்கொடுக்கிறார்கள், இறுதியில் அது சோசலிஸ்ட் கட்சி, தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தின் சிக்கன நிகழ்ச்சிநிரலுக்கு எதிரான ஓர் அரசியல் போராட்டமாக மட்டுமே நடத்தப்பட முடியும்.

சோசலிஸ்ட் கட்சி, ஏர் பிரான்ஸ் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு இடையிலான பேச்சுவார்த்தைகளிலிருந்து கிடைக்கும் பலன்களைக் குறித்த நப்பாசைகளை ஊக்குவிக்கும் முயற்சிகள், ஒரு பிற்போக்குத்தனமான மோசடியாகும். நேற்றைய எதிர்ப்பிற்குக் காட்டப்பட்ட கண்டனங்கள், தொழிற்சங்க பேரம்பேசல்களிலிருந்து அவை "வெட்கக்கேடாக" விலகி நிற்பதற்கு உதாரணமாக திகழ்கின்றன. இது தான் பிரான்ஸ் எங்கிலும் CCE இன் நடவடிக்கைகளாக உள்ளன, அங்கே ஆளும் வர்க்கம், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஓர் அரசியல் குற்றம் செய்துள்ள கொழுத்த தொழிற்சங்க நிர்வாகிகளின் வாழ்க்கை நடைமுறைகளுக்கு உதவ, பத்து மில்லியன் கணக்கான யூரோவை சட்டவிரோத மானியங்களாக வழங்கி, தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களுக்காக குட்டி-முதலாளித்துவ அதிகாரத்துவவாதிகளின் ஆதரவை பெறுகின்றன.